தலையங்கம் : முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்? அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பொதுவாக இன்று நம்மைப் போன்ற முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும். முஸ்லிம் என்ற பெயரில் வழிகேட்டிலிருக்கும் ஈரான் சியாக்களையா? அல்லது அல்லாஹ்வாலும் நபிமார்கள், மலக்குகளாலும் சபிக்கப்பட்ட சியோனிச யூத இஸ்ரேலியர் களையா? என்ற கேள்விக்கு சரியான பதில். இன்று நேர்மையின் பக்கமும், அப்பாவி பாலஸ்தீனர்கள் பக்கமும் நிற்கும் சியா முஸ்லிம்கள் ஈரானை ஆதரிப்பதும், துவா செய்வதுமே நமது கடமை! தொடர்ந்து அநியாயமும், அக்கிரமும், அப்பாவி ஆண், […]
அழைப்புப் பணி! – அபூ அப்தில்லாஹ் நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான நபிமார்கள், செய்துவந்த தூய பணியான, அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி. இந்த உம்மத்தின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தமது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள். “நம்பிக்கை கொண்டு சாலிஹான அமல்கள் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் எடுத்துச்சொல்லி அதனால் […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 ஜூன் தொடர்ச்சி… “முஹம்மது(ஸல்) அவர்கள் புரோகிதத்தின் வசிகர வலையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்தெறிந்துவிட்டார்கள். அல்குர் ஆனின் ஞானபோதனைகள் மூலமே ஒவ்வொருவரும் இறைவனுடன் நேரடித் தொடர்புகொள்ள உரிமை ஏற்பட்டுவிட்டது. இதன்மீது எந்தப் புரோகிதக் குழுவினரும் எப்படிப்பட்ட தடை உத்திரவையும் பயன்படுத்த வழி இல்லாமல் போய்விட்டது” என்று டாக்டர் ஜூலியஸ் ஜெர்மான்ஸ் என்பவர் கூறுகிறார். கைசேதமே ஒருமுஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தையும், அல்குர்ஆனையும் விளங்கி வைத்திருக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம்! அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நியமானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்” என்பதை நாம் பரவலாய், வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோசமாய் மாறிவிடாமல், நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறதா? இல்லையே! ஒரு சில விசயங்கள் நீங்கலாய்…!? […]
வருமுன் காப்போம்….. சர்க்கரையும்… அக்கறையும்… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2025 ஜூன் மாத தொடர்ச்சி…. (2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் “வருமுன் காப்போம்‘ கட்டுரை வருவது வாசகர்கள் அறிந்ததே. மார்க்க ரீதியாக மக்கள் எவ்வாறு எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை கடந்த 40 ஆண்டு களாக மக்களிடையே அதன் உண்மை தன்மையை அந்நஜாத் தெளிவுபடுத்தி வைப்பதுபோல் மருத்துவ ரீதியாக மக்கள் விழிப்புணர்ச்சி அடைய நாம் எழுதி வருவது வாசகர்களிடையே மற்றும் சில மருத்துவர்களிடையே கூட நல்ல வரவேற்பை […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1 எதை நாம் மீறமாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான்? வாக்குறுதி. அல்குர்ஆன் 3:9 2. அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் சித்தப்பா யார்? அபூலஹப். அல்குர்ஆன் 111:1-5 3. இன்று மீலாது விழா கொண்டாடுவோர் யாரைப் பின்பற்றி கொண்டாடுகிறார்கள்? அபூலஹபை. 4. நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய முதல் பெண் யார்? அபூலஹபின் அடிமைப் பெண். ஸுவைபிய்யா ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 75 5. […]
நபி(ஸல்) விட்டுச் சென்ற ஜமாத்துல் முஸ்லிமீன் எங்கே? S.H. அப்துர் ரஹ்மான் ஜமாத்துல் முஸ்லிமீன் நபி(ஸல்) விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையிலான ஜமாஅத், கலிமாவை ஏற்ற முந்தியவர்கள், மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிக்கள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) அனைவரும் ஒன்றாக இருந்த ஒரே தலைமையில் ஆன அல்ஜமாத். (ஹிஜ்ரி 1 -11 வரை) ஜமாத்துல் முஸ்லிமீன் நான்கு கலிபாக்கள் விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையில் ஆன ஜமாத், கலிமாவை ஏற்ற மூமின்கள், […]
ஸிஜ்ஜீன் என்றால் என்ன? எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (அளவையிலும், எடையிலும், மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக! அவர்கள் எத்தகையோரென்றால், (தங்களுக்காக) மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து) வாங்கிக் கொள்கின்றனர். (ஆனால்) மற்ற மனிதர்களுக்கு அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் மோசடி செய்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர். அத்தகையோர் நிச்சயமாக, தாம் (மறுமை யில் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில் லையா? மகத்தான ஒரு நாளைக்காக, அதாவது […]
இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்)…? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல் முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான சொல்லாகும். எவ்வாறு “மாஷா அல்லாஹ்” என்ற சொல் பிரபலமானதாக இருக்கிறதோ அதைவிட பன்மடங்கு பிரபலமான சொல்லாகும் இது. அதாவது முஸ்லிம்களாக இருக்கக் கூடிய ஆண், பெண் இரு வகுப்பாரும் தன் வாழ்நாளில் பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய சொல்லாகும். “இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல்லை உபயோகப்படுத்தாத முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு இது ஒவ்வொரு முஸ்லிம்களின் வாழ்வுடன் […]
பாவமன்னிப்பு கேட்டால்… இறைவன் மன்னிப்பானா? தண்டிப்பானா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “மனிதர்களின் தவறுகளுக்காக அவர்களை (உடனுக்குடன்) இறைவன் தண்டிப்பதாக இருந்தால் எந்த உயிரினத்தையும் பூமியின் மீது இறைவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் நிர்ணயிக்கப்பட்ட நாள் வரை திருந்துவதற்காக அவர்களுக்கு அவகாசமும் வழங்குகிறான். அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட நாள் வந்து முடிந்ததும் (தண்டிக்கவும் செய்யலாம், மன்னிப்பும் வழங்கலாம். தன் அடியார்களை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். அ.கு. 35:45 மேற்கண்ட வசனத்தில் இறைவன் மூன்றுவித கருத்தை கூறுகிறான். முதலாவது: தன்னுடைய […]
பொய்க்கு மட்டும் பச்சைக் கொடியா? A.N. Trichy. போர் என்று வந்தால் அதில் முதலில் பலிகடாவாக ஆவது “உண்மை‘. அந்நாளில் (முதல் உலக போர், மற்றும் இரண்டாம் உலகப்போர்) வதந்திகள் வாய் வார்த்தை யாகத்தான் பரவின. ஆனால் இப்போது மீடியா மூலம் அது இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதிலும் இந்தியா–பாகிஸ்தான் போர் என்றால் இந்தியா மீடியாக்கள் பல வதந்திகளை பரப்புவதில் முழுமூச்சாக இருக்கின்றன. உ.ம். : கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பஹ்லகாம் தாக்குதலுக்கு பின்பு […]
அடையாள அட்டை…. N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு. இன்றைய நவீன உலகில் உலகிலுள்ள 95 சதவீத மக்களுக்கு அடையாள அட்டை உள்ளது. நமது இந்திய நாட்டிலும் ஆதார் கார்டு, பான்கார்டு, வோட்டர் கார்டு, ரேன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் கார்டு, மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு போன்ற பல அடையாள அட்டை சுமார் 90 சதவீத மக்களுக்கு உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை கொண்டு அவர் பெயர் என்ன, அவர் பிறந்த தேதி என்ன, அவருடைய முகவரி என்ன, […]
எளிமையான சொற்கள்! வலிமையான பலன்கள்!! M. சையத் முபாரக், நாகை. அல்லாஹ்விற்கு ஏற்ற, அவன் விரும்புகின்ற, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தச் சொற்களை (திக்ர்களை) நாம் சொல்லும்போது அதற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். அவைகளைப் பற்றித் தெரிந்தும் நாம் அவைகளைக் கூறாமல் தவிர்த்து விடுகிறோம். அதற்குக் காரணம், அதன் மதிப்பு இம்மையில் தெரியாததே. நாளை ஃபஜ்ர் தொழுகைக்கு பள்ளிவாச லுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 தரப்படும் என்று அறிவிப்புச் செய்தால், […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : சொர்க்கத்தில் ஆண்களுக்கு துணையிருப்பது போல் பெண்களுக்கு துணை உண்டா? N.ஆயிஷா மர்யம், தஞ்சாவூர். தெளிவு : இறைவனைத் தவிர மற்ற எல்லா உயிர்களுக்கும் இணைகள்/துணைகள் தேவை. இந்த நியதிக்கேற்ப உலகிலும் சரி, மறு உலகிலும் (சுவர்க்கத்திலும்) சரி, ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவைப்படும். ஆனால் குர்ஆன் மொழிப் பெயர்ப்பாளர்கள் சிலர் கீழ்கண்ட வசனங்களில் “அஸ்வாஜீன்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ள (இணை/துணை) என்பதை /துணைவியர்கள், மனைவியர்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். […]
தலையங்கம் : முஸ்லிம் சமுதாயம் 73 கூட்டமாக பிரியும்! – ஹதீத் விளக்கம்! உண்மையான தேசபக்தி… பிரிவும் பிளவும் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்(சமூகம்) 73 பிரிவுகளாகப் பிரியும் அவற்றில் ஒரு பிரிவு தவிர மற்றவை நரகத்தில் இருக்கும். நபித்தோழர்கள் கேட்டார்கள் : அந்த (விடுதலை பெற்ற) பிரிவு எது இறைத் தூதரே? நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அவர்கள் என்னையும் என் தோழர்களையும் பின்பற்றுவோர்கள். (அறிவிப்பு : சுனன் அபூதாவூத் 4596, சுனீன் திர்மிதி […]
சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : 2025 மே மாத தொடர்ச்சி…. உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்ட மதகுருமார்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதித்து மக்களை ஏமாற்றி நரகில் தள்ளுவார்கள் என்றே கூறுகிறோம். அதுவும் குர்ஆன் கூறுவதையே எடுத்து வைக்கிறோம். இதற்கு ஆதாரமாக அ.கு.33:66-68, 34:31-33, 37:26-34, 38:55-64, 40:47-49, 41:29, 43:36-45 போன்ற பல குர்ஆன் வசனங்களையே […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 மே தொடர்ச்சி… அதனால்தான் இறைவன் இணை வைப்பதற்கு அடுத்த பெருங்குற்றமாக, முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பிடுகின்றான். இன்னும் சொல்லப்போனால், இதையும் தனக்கு இணை வைப்பதாகவே குறிப்பிடுகின்றான். “இவர்கள் அல்லாஹ்வை யன்றித் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீகையும், (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும், ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, இவர்கள்(யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அடிபணிவதற்குரிய நாயன், அவனையன்றி வேறெவனும் இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவற்றைவிட்டு அவன் […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025 மே மாத தொடர்ச்சி… தீஹ் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்தார்கள் : எனது சமுதாயத்தாரே! உங்களுக்கென்றே அல்லாஹ் எழுதிவைத்துள்ள தூய்மையான (பைத்துல் மக்திஸின்) இந்தப் பூமியில் நுழையுங்கள். (அடக்குமுறையாளர்களான அங்குள்ள “அமலேக்கியர்” எனப்படும் எதிரிகளை அஞ்சி) புறமுதுகிட்டு ஓடாதீர்கள். (அவ்வாறு ஓடினால்) நீங்கள் இழப்புக்குள் ளானவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் கூறினார்) […]
வாழ்க்கையில் வெற்றி பெற….? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெற ஆசைப்படாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவதுமாகும். ஆனால் அந்த வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்த உண்மையான வெற்றியும் கூட பல சோதனைகளுக்கு பிறகே கிடைத்ததாகும். மேலும் உலகில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் இளம் வயதில் வெற்றி எனும் கனியை சுவைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல செல்வந்தர்களாக இருப்பவர்கள் எல்லோரும் வெற்றி […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாரம்லா அவர்கள் யாருடைய மகள்? மக்காவில் சக்தி வாய்ந்த காபிர்களின் தலைவன் அபஸுஃப்யான் அவர்களின் மகள். ஆதாரம்: முஹம்மது என்ற நூலில் பக்கம் 577. 2. பார்வை இல்லாமல் இருந்து பார்வை பெற்ற நபி யார்? யாஃகூப் (அலை). 12:93 3. இப்லீஸிடம் மரியாதைக்குரியவர் யார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துபவர். முஸ்லிம்: 5418 4. […]