ஐயமும்! தெளிவும்!!

Filed under 2015 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!! by

ஐயம் : நபி(ஸல்) எந்த சந்தர்ப்பத்திலாவது எந்த ஒரு நபி தோழரையாவது சபித்ததுண்டா?
யஹ்யா, காரைக்கால்

தெளிவு : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக-அருட்கொடையாகவே யன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் : 21:107). இவ் இறை வசனத்தை நிரூபிக்கும் நபிமொழியையும் பாரீர் : அல்லாஹ்வின் இவ்வருள் வாக்குப்படி நபி (ஸல்) அருட்கொடையாக இருந்தார்களேயன்றி சபிப்பவராக இருந்ததில்லை. தமது நபித்தோழர் களில் எவரும் தவறு செய்துவிட்டால், அதனை பலர் அறிய, அல்லது தவறு செய்தவர் மனம் வருந்தும்படிக் கூட கூறமாட்டார்கள். தாம் பொது பயான் (குத்பா) செய்யும்போது உங்களில் ஒரு சிலர் இந்தத் தவறு செய்வதைக் காண்கிறேன்.(பெயர் குறிப்பிடமாட்டார்கள்) அது தவறு என உபதேசிப் பார்கள். (இப்னு ஹிஷாம்) எனவே யாமறிந்த வரை நபி(ஸல்) எந்த ஒரு நபிதோழரையும் சபித்ததாக காண முடியவில்லை. ஆனால் செயல் அடிப்படை யில் அல்லாஹுவின் ஆணைக்கு மாறு செய்பவர் களை மொத்தமாக சபித்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதனையும் அல்லாஹ்வின் ஆணைப் படியே செய்தார்கள். Continue Reading »

No responses yet

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

Filed under 2015 நவம்பர் by

ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி-620 007. செல் : 9176699684

இன்னும், நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் மனைவியரை படைத் திருப்பதும் உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனு டைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் : 30:21

அழகிய முகமன் : வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். உங்கள் இல்லங்களில் நுழையும்போது ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸலாம் சொல்லுங்கள். உங்கள் இல்லங்களில் பரகத்(வளமை) ஏற்படும் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஸலாம் சொல்வது நபி மொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட, அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி “முஸாபஹா’ செய்யலாம். வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்து விட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள். Continue Reading »

No responses yet

சமுதாய மயம்!

Filed under 2015 நவம்பர் by

விமர்சனக்குழு, அந்நஜாத்

ஏகன் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால், சிறு, பெரும் வி­யங்கள் என்ற பாகுபாடின்றி, எல்லாவற்றிலும் இஸ்லாத்தை அடைவதை இலட்சியமாக்கி, இஸ்லாத்தை இஸ்லாமாய்க் காட்டும் இஸ்லா மிய இலட்சிய இதழாய் ஏகன் அல்லாஹ், ஏப்ரல் 1986 முதல் அந்நஜாத்தை மலரச் செய்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால், அதுவரை தமிழ் முஸ்லிம்கள் கவனத்துக்குக் கொணரப்படாத பல மார்க்கக் கருத்துக்களையும் அவைகளுக்குரிய சரியான மார்க்கத் தீர்வையும் “அந்நஜாத்’ தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. அந்நஜாத் வெளிவர உறுதுணையாக இருந்த பல முன்னணியாளர்கள் தடுத்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம் பெற்று வருவதும் குறிக்கத்தக்கது. கோடிட்டு கொள்க. Continue Reading »

No responses yet

நேர்வழி எது?

Filed under 2015 நவம்பர் by

A.மெஹருன்னிசா,
தஞ்சை

முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், கலிமாவை ஏற்று இஸ்லாத்தில் அடியயடுத்து வைத்த நாம் ஒரு கையில் இறைபோதமும் மறு கையில் நபி போத மும் கொண்டு நாம் செல்ல வேண்டிய இடம் எது என்று தெரியுமா? எந்தக் கண்ணும் பார்த்திடாத எந்த காதும் கேட்டிடாத அழகிய சுவனத்தை அல்லவா! ஆனால் நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் நேர்வழிதானா? என்ற சிந்தனை யில் சில வி­யங்களை நாம் சிந்திப்போம் நேர் வழி எது? இந்த கேள்விக்கு பதிலை தேடுவோமா முதலில்?
மீலாது நபி (நபிகளின் பிறப்பு) Continue Reading »

No responses yet

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

Filed under 2015 நவம்பர் by

MTM. முஜீபுதீன், இலங்கை

அக்டோபர் 2015 தொடர்ச்சி……
இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் :
அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக இறைவன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியா னும் இறைத் தூதருமாவார்கள் என நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இறை விசுவாசியும், அல்குர் ஆன் மீதும் நம்பிக்கை கொள்வது அவசியமாகும். அதாவது இது அல்லாஹ்வினால் ஜிப்ரீல்(அலை) என்ற வானவர் மூலம் முஹம்மது(ஸல்) அவர்க ளுக்கு அரபு மொழியில் இறக்கி அருளப்பட்ட இறுதி இறைநெறி என நம்பிக்கை கொள்வது அவசி யமாகும். அதாவது இது அல்லாஹ்வினால் ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் மூலம் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அரபு மொழியில் இறக்கி அருளப் பட்ட இறுதி இறைநெறி என நம்பிக்கை கொள்வது அவசியமாகும். இதன் பின் சகல மனித சமுதாயமும் அல்லாஹ்வின் நேர்வழியை அறிந்து கொள்ளக் கூடிய ஒரே இறைநெறி நூல் அல்குர்ஆன் மட்டுமே என நம்புதல் வேண்டும். Continue Reading »

No responses yet

குர்ஆன், ஹதீஸே நேர்வழி

Filed under வீடியோ by

வீடியோ
Continue Reading »

No responses yet

K.M.H VARAGANERI 27 06 15

Filed under வீடியோ by

வீடியோ Continue Reading »

No responses yet

இஸ்லாத்தில் முஸ்லிம்களின் நிலை!

Filed under வீடியோ by

வீடியோ Continue Reading »

No responses yet

குர்ஆன், ஹதீஸைப் பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்

Filed under வீடியோ by

வீடியோ

Continue Reading »

No responses yet

குர்ஆனை விளங்க தகுதியுடையோர் பாமரர்களே!

Filed under வீடியோ by

வீடியோ Continue Reading »

No responses yet

இஹ்சான் – மனிதநேயம்

Filed under வீடியோ by

வீடியோ Continue Reading »

No responses yet

ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா?

Filed under ஜகாத்,வீடியோ by

வீடியோ: ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா? 

ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா? Part 1 Continue Reading »

No responses yet

“எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை

Filed under 2015 நவம்பர் by

 

எஸ். ஹலரத் அலி. திருச்சி-7.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான். Continue Reading »

One response so far

பெருமையடிப்பவரின் நாளைய நிலை!

Filed under 2015 நவம்பர் by

சதீஸ்குமார், மதுரை, 7094516303

பெருமை அடிக்கும் மக்களை இறைவன் கண்டிக்கிறான். இதை நபி(ஸல்) அவர்களும் கண்டிக்கிறார்கள். இஸ்லாம் கூறும் பண்பு உண்மை, நிதானம், தூய்மை, நம்பிக்கை, வணிகம் போன்ற இவை யாவும் நற்பண்பு அனைத்துமே ஒருவனை எல்லா வகையிலும் பண்படுத்தக்கூடியவை.
இறைவன் கூறுகிறான்:

என்னை அழையுங்கள் உங்களுக்கு பதில ளிக்கிறேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். அல்குர்ஆன் : 40:60 Continue Reading »

No responses yet

இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

Filed under 2015 நவம்பர் by

அல்குர்ஆன் கூறும்
இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

அபூபக்கர், அதிரை

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும், கட லிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சம யத்தில்) எங்களை இதை விட்டுக் காப்பாற்றி விட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்து வோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக் கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்று கின்றவன் யார்? (6:63)

இதிலிருந்தும் இன்னும் மற்றெல்லாத் துன் பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே, பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே என்று கூறுவீராக!
(6:64) Continue Reading »

No responses yet

முஸ்லிம்களுக்கு விமோசனம் உண்டா?

Filed under 2015 நவம்பர்,தலையங்கம் by

1450 வருடங்களுக்கு முன்னர் இப்றாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷ்கள் எப்படி நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தனரோ (பார்க்க 3:103) அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் நரக விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல அற்பமான இவ்வுலகிலும் நாயிலும் கேடான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்குக் காவியினரோ, யூதர்களோ, கிறித்தவர்களோ, பெளத்தர்களோ, இவை போல் ஏனைய மதத்தினரோ காரணம் அல்லவே அல்ல. முஸ்லிம்களே முழுக்க முழுக்கக் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். இதை நாம் கூறவில்லை. முஸ்லிம்கள் அனுபவித்து வரும் அனைத்துத் துன்பங்களும் அவர்கள் தங்கள் கைகளால் தேடிக் கொள்பவையே என்று 2:95,195, 3:182, 4:62, 8:51, 28:47, 30:36,41, 42:30,48, 59:2, 62:7 இறைவாக்குகளே கூறுகின்றன. Continue Reading »

No responses yet

ஜுமுஆ தினத்தில் இமாம்……….

Filed under 2015 நவம்பர் by

ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும்
அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரகாஅத் தொழக்கூடாதா?
எம்.அப்துல் ஹமீத், திருச்சி

ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும் அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரக்அத் தொழுவதற்கு தடை ஏதும் இல்லை. அதேபோல அதானுக்கு பதில் கூறி விட்டு துஆவும் செய்து விட்டு 2 ரக்அத் தொழுவதற்கும் தடை ஏதும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் இந்த இரண்டிற்குமே தடை விதிக்காததால், தொழக் கூடாது என்று தடை விதிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. தடை ஏதும் இல்லை என்றாலும் மேற்கண்ட இரண்டில் சிறந்தது எது என்பதை கவனிப்போம்.
Continue Reading »

No responses yet

அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

Filed under 2015 நவம்பர் by

அபூபக்கர், அதிரை

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும், கட லிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சம யத்தில்) எங்களை இதை விட்டுக் காப்பாற்றி விட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகின்றவன் யார்? (6:63)

இதிலிருந்தும் இன்னும் மற்றெல்லாத் துன் பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே, பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே என்று கூறுவீராக!
(6:64) Continue Reading »

No responses yet

மிகமிக அற்பமான இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கையே!

Filed under 2015 நவம்பர் by

சென்ற அக்டோபர் இதழில் “”இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு இடம் அணுவளவும் இல்லவே இல்லை”. மதகுருமார்களை, இயக்கத்தலைவர்களை, அரசியல் தலைவர்களை வழிகாட்டிக ளாகக் கொள்வது 9:31 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத ´ஷிர்க்-இணை வைத்தல் எனும் பெருங்குற்றம் என்பதை எண்ணற்ற குர் ஆன் வசனங்களைக் கொண்டு விளக்கி இருந்தோம். Continue Reading »

No responses yet

இஸ்லாத்தில் இடைத்தரகருக்கு இடம் அணுவளவும் இல்லவே இல்லை!

Filed under 2015 அக்டோபர்,புரோகிதம் by

இஸ்லாத்தில் இடைத்தரகருக்கு இடம் அணுவளவும் இல்லவே இல்லை!

No responses yet

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Filed under 2015 அக்டோபர் by

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

No responses yet

ஐயமும்! தெளிவும்!!

Filed under 2015 செப்டம்பர்,ஐயமும்! தெளிவும்!! by

 ஐயம் : சுப்ஹு தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும்போது, சுன்னத்து தொழலாமா?
ஜைனுல் ஆபிதீன், இளங்காகுறிச்சி

தெளிவு : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அறி வித்துள்ளார்கள். சுப்ஹு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்பொழுது சுன்னத்துத் தொழுகை இரண்டு ரகாஅத்துகளைத் தொழ ஒருவர் ஆரம்பித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரது ஆடையைப் பிடித்திழுத்து, சுப்ஹு தொழுகையை நான்கு ரகாஅத்துகளாக்க நீர் கருதுகிறீரோ? என்று கேட்டார்கள். (அஹ்மத்) Continue Reading »

No responses yet

சுற்றுச் சூழலை காக்க…, காகம் கற்றுத் தந்த பாடம்

Filed under 2015 அக்டோபர் by

 எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7.

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும்  மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. உயிரினங்களில் மனிதன் மட்டுமே இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகின்றன.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரையிலான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கி உள்ளது. இறந்த சடலங்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமை. இதே போல் யூத, கிறிஸ்தவ மதங்களிலும் எரிப்பதை விடப் புதைப்பதே பின்பற்றப்படுகின்றது. இந்து மதத்தில் எரிப்பதும் புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. பார்சி மதத்தவர்கள் இறந்த உடல்களை அப்படியே உயரமான கோபுரத்தில் வெட்டவெளியில் கழுகுகள், மற்றும் பறவைகளுக்கு உணவாக போட்டு விடுகின்றனர்.
Continue Reading »

No responses yet

அதிகாலை ஆண்கள்!

Filed under 2015 செப்டம்பர் by

அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதி காலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும், தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள், மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக! (அபூதாவூத்)

முஹமத் நபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.
Continue Reading »

No responses yet

வேதங்களில் இறுதி இறைத்தூதர் பற்றி முன் அறிவிப்புகள்!

Filed under 2015 அக்டோபர் by

இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் “”கல்கி அவதாரம்” குறித்து அவர் பூமியில் குழப்பங்களும், கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார் எனவும் நம்பப்படுகிறது. இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை. ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார். யார் அவர்? ஓர் ஆய்வுப் பார்வை, எப்போது வருவார் கல்கி அவதார்? ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும் கடைசி அவதாரமான கல்கி, இறைத்தூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார். இதை நான் சொல்லவில்லை. சமீபத்தில் ஹிந்து மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. Continue Reading »

No responses yet

Older Entries »