21-ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சியாக இருப்பது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் செய்தித்தாள்கள் மூலம் அறியும் அவலங்களாகும். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் முஸ்லிம் நாடுகளில் நடந்து வரும் கலவரங்கள் உலகம் அறிந்த இரகசியமாகும். இஸ்லாம் கூறும் சாந்தியும், அமைதியும் தவழும் நாடாக ஓர் இஸ்லாமிய நாட்டையேனும் சுட்டிக்காட்டி பெருமைப் பட, உதாரணமாகக் காட்ட முடியாத நிலை. இத்தனைக்கும் உலகளாவிய அளவில் 40 நாடுகளுக்கு மேல் முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. 125 கோடிக்கு மேல் முஸ்லிம்கள் வாழந்து கொண்டிருக்கின்றனர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? முஸ்லிம்களின் அழிவிற்கும், சீரழிவிற்கும் முஸ்லிம் அல்லாத யாரும், எந்த இனத்தாரும் காரணமாக இருக்க முடியாது; முஸ்லிம்களே தங்களை அழித்துக் கொள்கின்றனர் என்ற உண்மையை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றனர். எதார்த்த நிலையை அதற்கு மருந்து கொடுப்பது எப்படி சாத்தியமா? எனவே முஸ்லிம்களை இன்று பீடித்திருக்கும் நோய் என்ன என்பதை கூர்ந்து நோட்டமிட முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதை விட்டு மதப் புரோகிதர்களையும்,அரசியல் புரோகிதர்களையும் நம்பி அவர்கள் தங்களின் அற்ப சுய நலங்களுக்காக, இயற்கையாக மனிதர்களிடமுள்ள பலகீனங்களை – உணர்வுகளை தூண்டி விடுவதற்கேற்றவாறு முஸ்லிம்கள் ஆடினால் இன்னும் சீரழிவு நிச்சயம் என்பதை உணர வேண்டும். முஸ்லிம்களை மாற்றர்களுக்கெதிராக தூண்டி விடுவதால், கிளர்ந்தெழுவதால் முஸ்லிம்களுக்கு நன்மை விளையும் பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை. முஸ்லிம்கள் அனைவரும் இது விஷயத்தில் ஒன்றுபட்டாலும் சரியே. உதாரணமாக முஸ்லிம்கள் ஒன்றுபட்டு போராடி பாகிஸ்தானைப் பெற்றார்கள். விளைவ அவர்களுக்குள்ளேயே அந்த போராட்டம் வெடித்து பங்காளதேஷ் முளைத்தது. இன்று முஸ்லிம்களிடையேயுள்ள போராட்டம் பாகிஸ்தானிலும் ஓய்ந்தபாடில்லை; பங்காளதேஷிலும் ஓய்ந்த பாடில்லை.
பெரும் போராட்டங்கள் நடத்தி, எண்ணற்றகிறோமா? என்பதை அவர்களின் உள்ளத்தையே தொட்டுக் கேட்டுக் கொள்வார்களா. முஸ்லிம்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்; அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்; முஸ்லிம்களிடையே ஒற்றுமை இல்லை; முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும் என்றெல்லாம் கோஷமிடத்தான் செய்கிறார்கள் இந்த கூப்பாட்டில் முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரும் விதிவிலக்குப் பெற்றவர்களாயில்லை. ஒற்றுமை ஒற்றுமை என்று ஒப்பாரி வைத்துவிட்டால் மட்டும் அந்த ஒற்றுமை ஏற்பட்டு விடுமா? ஒரு போதும் ஏற்படாது. மேலும் மேலும் பிளவுகளையும், பிரிவுகளையும் தான் முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். காரணம் என்ன? வேற்றுமைக்குரிய வழியாகக் காட்டுவதாலும், இவர்களும் அதை அப்படியே நம்பி கண் மூடிச் செய்வதாலுமே இன்று முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிளவுகளையும், பிரிவுகளையும், இயக்கங்களையும்,அமைப்புகளையும் கண்டு வருகிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் செயல்பாடுகள் பற்றி சந்தோசப்பட்டுக் கொள்கின்றனர். ஷைத்தான் ஒவ்வொருவரினதும் செயல்பாட்டை அழகாக்கிக் காட்டுகிறான். இவர்களும் அதில் மயங்குகிறார்கள். அதனால் மற்றவர்களை இழிவாகவும், கேவலமாகவும் நினைக்கும் மமதை ஏற்பட்டு விடுகிறது. அது கிண்டலும், நையாண்டியுமாக வெளிப்பபடுகிறது.அதனால் பிளவும்,பிரிவும் இயற்கையாகவே உருவாகி வடுகிறது. மத்ஹபுகளும், தரீக்காக்களும், இயக்கங்களும், அமைப்புகளும் இருக்கும் வரை இவை இருந்தே தீரும்.
அப்படியானால் என்ன செய்வது? எல்லோரும் ஒரே மத்ஹபாக ஆகிவிட முடியுமா? எந்த மத்ஹபில் இணைவது? ஒரே தரீக்காவில் இணைய முடியுமா? எந்த தரீக்காவில் இணைவது? ஒரே இயக்கத்தில் இணைய முடியுமா? எந்த இயக்கத்தில் இணைவது! ஒரே அமைப்பில் இணைய முடியுமா? எந்த அமைப்பில் இணைவது? ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மத்ஹபு, தரீக்கா, இயக்கம்,அமைப்பு சிறந்தது என்று இறுமாந்திருக்கும் போது அதை விட்டு விட மனம் இடம் தருமா? அதிலும் அவர்கள் இழிவாகக் கருதிய ஒரு மத்ஹபில், தரீக்காவில், இயக்கத்தில்,அமைப்பில் இணைய மனம் வருமா? எதிர்பார்க்கவே முடியாது. அப்படியானால் முஸ்லிம்களுக்குள் ஒற்றுமைக்கு வழியே இல்லையா? இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது. அல்லாஹ்வினது ரசூலின் சொல்லைப் பற்றிப் பிடித்தால் நிச்சயமாக வழி பிறந்துவிடும். அல்லாஹ்வினது ரசூலின் நேரடிக் கட்டளை இதோ!
“”எல்லாப் பிரிவினைக் கூட்டங்களையும் விட்டு நீங்கி விடுவீர்களாக; ஜமாஅத்துல் முஸ்லிமீனுடனும் அதன் தலைமையுடனிருப்பீர்களாக. ”
ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்றால் இன்று அவர்களிடமும் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான செயல்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் அவர்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறோம் என்பதே அவர்களின் பதிலாக இருந்தது. ஆக ஒவ்வொருவரும் மற்றவர்களை இழிவாகக் கருதியே தனித்தனிப் பெயர்களில் செயல்படுகின்றனர். ஆகவே மனிதர்கள் உருவாக்கிய எந்த பெயரிலும் முஸ்லிம்களை ஒன்றிணைக்க முடியவே முடியாது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டு நடைமுறைப்படுத்திக் காட்டிய ” ஜமாஅத்துல் முஸ்லிமீனை” தங்களது சிறந்தது, உயர்ந்தது என்று எந்தப் பிரிவினரும் சொல்லத் துணியார். அப்படியானால் அதில் தங்கள் அனைவரையும் இணைத்துக் கொள்ள தடை என்ன இருக்கிறது? முஸ்லிம்கள் அனைவரும் சுதந்திரமாகச் செயல்பட்டால் இதற்குத் தயாராகி விடுவார்கள்.
ஆயினும் முஸ்லிம்களை இப்படி பல்வேறு பிரிவினர்களாகப் பிரித்து அற்ப உலக ஆதாயம் அடையும் புரோகித மவ்லவிகள்தான் அதற்குத் தடையாக தங்கள் தந்திரங்கள் பலிக்காது, தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுவதால், அதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். அதனால்தான் தனித்தனிப் பெயர்களில் செயல்படுவதிலுள்ள கெடுதிகளை உணர்ந்து ஒன்றுபடும் காலம் கனிந்து வரும் வேளையில் இன்றைய அரசியல் நிகழ்வுகளை பூதாகாரப்படுத்திக் காட்டி முஸ்லிம்களின் இன உணர்வைத் தூண்டிவிட்டு அரசியல்வாதிகள், பரேல்வி, தேவ்பந்தி, முகல்லிது, முஸ்லிம் சமுதாயத்தை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதையும் பார்க்கலாம். இதனால் அவர்கள் ஆதாயம் அடையலாமே அல்லாமல் முஸ்லிம்களுக்கு அணுவளவும் இவ்வுலகிலும் ஆதாயம் இல்லை; முஸ்லிம்கள் உணர்ந்து இந்த மத, அரசியல் புரோகிதர்களிடமிருந்து விடுபட வேண்டும். சுய சிந்தனையோடு செயல்பட வேண்டும். எப்படி தங்கள் தொழில், வியாபாரம், விவசாம் போன்ற காரியங்களை சுய சிந்தனையோடு சொந்த முயற்சியில் செய்து வருகிறார்களோ அதுபோல் மார்க்க காரியங்களையும் சுயசிந்தனையுடன் சொந்த முயற்சியில் செய்ய முற்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களுக்கு விடிவு காலம் ஏற்படும். முஸ்லிம்கள் என்றாலே அவர்களுக்கு ஒரே இறைவன்; ஒரே வழிகாட்டி (நபி(ஸல்)), ஒரே ஜமாஅத்,ஒரே அமீர். இதற்கு மாற்றமான ஒரு நிலை முஸ்லிம்களுக்கு இருக்க முடியாது. இருந்தால் அது அவர்களுக்கு கேடுதான்.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நம் இந்திய நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பெரும் பான்மையினரிலுள்ள சிறுபான்மையினரின் தூண்டுதலின் காரணமாக எண்ணற்ற துன்பங்கள், இடர்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விடப்படுகின்றன. இதனால் இந்திய முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி குறைந்த முஸ்லிம்களை வஞ்சிக்கிறான். ஷைத்தானின் வஞ்சக வலையை அரசியல்,மதப் புரோகிதர்கள்; தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலக ஆதாயம் அடைகிறார்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்று நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத்துல் முஸ்லிமீனில் முஸ்லிம்கள் அனைவரும் போய் சேர்ந்து கொண்டு ஒரே தலைமையில் ஓரணியில்; ஒன்று படுவோம். குர்ஆன், ஹதீஸ் வரையறைக்குள் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒழுக்கமிக்க தூய வாழ்க்கையை கடைபிடிக்க முன்வருவோம். ஏற்படும் பிரமிக்கதக்க மாறுதலை எழுத்தில் வடிக்க முடியாது. பெரும்பான்மையினரான முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்ல; முஸ்லிம்களை கருவறுக்க கங்கணம் கட்டிச் செயல்படும் அந்த பெரும்பான்மையினரிலுள்ள சிறுபான்மையினரும் வெட்கித் தலை குனிந்து முஸ்லிம்களுக்கு சலாம் போடும் நிலை ஏற்படும்.
தாங்கள் பெரும்பான்மையினர், தங்கள் பெரும்பான்மை பலத்தாலும் படை பலத்தாலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களை துவசம் செய்து விடலாம் என துணிந்து படையெடுத்து வந்து போரிட்ட அன்றைய பெரும் பெரும் வல்லரசுகளுக்கு வெற்றி கிடைத்ததா? முஸ்லிம்கள் ஒன்று பட்டு ஒரே சமுதாயமாக இருக்கும் வரை அவர்கள் தங்களை எதிர்த்த எதிரிப்படையினரின் எண்ணிக்கையில் 10% இல்லாத நிலையில் பெரும் வெற்றி பெறவில்லையா? எதிரிப்படையினர் இந்த மிகச் சிறுபான்மை முஸ்லிம்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற இயலாமல் புற முதுகுகாட்டி பிடரில் பின்னங்களால்கள் அடிபட வெருண்டு ஓடியதாகத் தான் வரலாறு. முஸ்லிம்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை தங்களை விட மிகப் பெரும்பான்மையினரை எல்லாம் மிக எளிதாக வெற்றி கொண்ட சம்பவங்கள் சரித்திரத்தில் விரவிக்கிடப்பதைப் பார்க்கலாம்.
முஸ்லிம்கள் ஒன்றுபட்ட நிலையில் அவர்கள் சிறுபான்மையினர் என்பதால், மற்றவர்கள் அவர்களை வெற்றி கொள்ளும் நிலை ஏற்பட்டால் “”நீங்கள் அஞ்ச வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நீங்கள் (அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தலைமையிலிருக்கும் உண்மை) முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் உயர்வானவர்கள் ” (அல்குர்ஆன் 3:139) என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்து விடும். முஸ்லிம்கள் என்று தங்களுக்குள் சண்டையிட்டுப் பல பிரிவினர்களாகப் பிரிந்தார்களோ அன்றிலிருந்துதான் அவர்களுக்கு வீழ்ச்சிப்படலம் ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் தங்களைப் பீடித்துள்ள வியாதியைக் கண்டறிய முற்படாமல், வரட்டு ஜம்பம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆக இன்றைய உலகின் படுநாசத்திற்கும், இந்திய நாட்டின் அழிவிற்கும், குறிப்பாக முஸ்லிம்களின் சீரழிவிற்கும் முஸ்லிம்கள் தங்களது பொறுப்பபையும், கடமையையும மறந்து மனோ இச்சைக்கு வழிபட்டு ஆளுக்கொரு கட்சி, நாளுக்கொடு இயக்கம் என்று பிரிந்து சின்னாப்பின்னப்பட்டு கிடப்பதே முழு முதல் காரணமாகும். இத்தகைய முஸ்லிம்கள் அல்லாஹ்வையும், அவனது ரசூலையும், இறுதி வேதத்தையும் ஒப்புக் கொள்ளாத மாற்று மதத்தினரைப் பார்த்து குற்றப் பத்திரிகை வாசிப்பது “சாத்தான் வேதம் ஓதும்” செயலேயன்றி வேறில்லை.
பிரதான கடமையான ஐங்கால தொழுகைகளை தொழாமல் பாழ்படுத்துவது கொண்டு, இஸ்லாத்தின் பிரதான தூணையே உடைத்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம், முஸ்லிமால்லாத ஒருவன் அந்த தொழுகைக்குத் தேவையான (அது காட்சிப் பொருளுமல்ல, மாற்றாரைப் போல் வரலாற்றுச் சின்னமும் அல்ல) ஒரு மஸ்ஜிதின் கல்கட்டிடத்தை இடித்ததற்காக அவன் மீது குற்றப் பத்திரிகை வாசிப்பது “”சாத்தான் வேதம் ஓதாமல் வேறு என்னவாம் ” தொழுகையே இல்லாத ஒருவன் அந்தத் தொழுகைக்காகவுள்ள பள்ளிக்காகக் போராட முன் வந்தால் அது ஈமானின் உறுதி காரணமாக எழுந்த செயலா? அல்லது முஸ்லிம் என்ற இன வெறி காரணமாக எழுந்த செயலா? இனவெறி காரணமாக போராடி மடிகிறவன் இறைப் பொருத்தம் பெற முடியும் என்று எங்கே சொல்லப் பட்டிருக்கிறது? இந்த அரசியல், மதப் புரோகிதர்கள் இந்திய முஸ்லிம்களை எங்கே அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்? சுயமாக சிந்தித்து விளங்குவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது நீங்காத கடமையாகும். இதனை முஸ்லிம்கள் ரமழான், ஈத் சிந்தனையாகக் கொள்வார்களாக. அல்லாஹ் சத்தியத்தை விளங்கி சத்தியபாதையில் முஸ்லிம்கள் செல்ல அருள் புரிவானாக.