நாள் : 22,23 ஷஃபான் 1432 (23,24 ஜூலை 2011)
சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)
இடம் : J.K. மஹால், துறை மங்களம், பெரம்பலூர்
பிறை 22 சனி காலை 10 மணியிலிருந்து பிறை 23 ஞாயிறு ளுஹர் வரை ஆய்வரங்கப் பயிற்சி முகாம் இடம் பெறும்.
பிறை 23 ஞாயிறு மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை கருத்தரங்கம் நடைபெறும். (இன்ஷா அல்லாஹ்)
அறிவியல் முன்னேற்றம் அளித்துள்ள கணினி கணக்கீட்டின் மூலம் பல ஆண்டுகளின் மாதங்களின் தலைப்பிறையைத் துல்லியமாகக் கணக்கிட்டு, சரியான சந்திர நாள் காட்டி தயாரிக்க முடியும்; ஒவ்வொரு மாதமும் 29ல் முடிகிறதா? 30ல் முடிகிறதா என சந்தேகம் என்ற “ஷக்’ இல்லாமல் திட்டமாக அறிய முடியும் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் பல சகோதரர்கள், மவ்லவிகள், ஆலிம்கள், ஷேக்குகள், மார்க்கப் பண்டிதர்கள் என மார்தட்டும் மதகுருமார்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், சத்தியத்திலிருந்து அசத்தியத்திற்குத் திசை திருப்பும் தீய நோக்கோடு கேட்கும் இடக்கு மடக்கான கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல் திணருகின்றனர்.
அப்படிப்பட்ட சகோதரர்களுக்குப் பிறை பற்றிய அனைத்து சர்ச்சைகள், நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறதா? மஃறிபில் ஆரம்பிக்கிறதா? என்ற ஐயம் மற்றும் அனைத்து விதமான ஐயங்களுக்கும் தெளிவான பதில்களைத் தரும் அளவில் செயல் முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்பயிற்சியில் கலந்து கொண்டு தங்களின் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள விரும்பும் சகோதரர்கள், தங்களின் பெயர்களை முழு முகவரியுடனும் செல்பேசி எண்ணுடனும் 15 -ஷஃபான் 1432 (16.07.2011)க்குள் முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். அவர்களுக்குத் தங்கும் வசதி, உணவு, பயிற்சிப் பொருள்கள் ஏற்பாடு செய்ய வேண்டி இருப்பதால் முன் பதிவு அவசியமாகிறது.
23 ஷாஃபான் ஞாயிறு 3 மணியிலிருந்து 5 மணி வரை கருத்தரங்கம் நடைபெறும். அதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு : 9500794544
இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி
ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மர்கஸ்
வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி-627 103. நெல்லை மாவட்டம்.
————————————————
* முஸ்லிம் சமுதாயத்தில் நிலவி வரும் தலைப் பிறையை தத்தம் பகுதியில் கண்ணால் பார்த்துத் தீர்மானிப்பதா?
* உலகின் எப்பகுதியிலாவது பிறையைக் கண்ணால் பார்த்து தீர்மானிப்பதா?
* கணினி கணக்கீட்டின் மூலம் முன்கூட்டியே பல வருடங்களுக்குத் தலைப்பிறையைக் கணக்கிடலாமா?
* அமாவாசை அல்லது சூரிய கிரஹணம் ஆரம்பித்து முடிந்த பின்னர்தான் தலைப்பிறையைக் கணக்கிட வேண்டுமா?
* சங்கமத்தின் (CONJUNCTION) போது உலகின் கிழக்குப் பகுதியுள்ள சில நாடுகள் பஜ்ரை தாண்டிவிட்டால் அவர்களுக்கும் அன்று தலைப்பிறையா? நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறதா? ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறதா?
* ஹாஜிகள் அரஃபாவில் கூடுவது அரபு நாட்டு அரசாங்கம் துல்ஹஜ் பிறை 9 என்று அறிவிக்கும் நாளில்தான் உலகின் எப்பகுதியிலிருந்து சென்றிருந்தாலும், எந்த முறைப்படி தலைப்பிறையைத் தீர்மானித்தாலும் அரசு அறிவிக்கும் துல்ஹஜ் பிறை 9-ல் தான் அரஃபாவில் கூட முடியும். அப்படியானால் உள்ளூர்களிலும் அரபு நாட்டு அரசு அறிவிக்கும் ஹிஜ்ரி பிறை கணக்கை ஏற்று செயல்பட்டால் என்ன?
* இந்த அனைத்து ஐயங்களும் முறையான ஆதாரங்களுடன் ஆய்வு செய்யப்பட்டு அல்லாஹ் அங்கீகரிக்கும் சரியான முறையை அறிய ஒரு நல்ல சந்தர்ப்பம். சத்தியத்தை அறிய ஆவலுள்ளோர் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளவும்.
ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.