ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2015 நவம்பர்

MTM முஜீபுதீன், இலங்கை

 

அக்டோபர் 2015 தொடர்ச்சி……
இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் :
அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக இறைவன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியா னும் இறைத் தூதருமாவார்கள் என நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இறை விசுவாசியும், அல்குர் ஆன் மீதும் நம்பிக்கை கொள்வது அவசியமாகும். அதாவது இது அல்லாஹ்வினால் ஜிப்ரீல்(அலை) என்ற வானவர் மூலம் முஹம்மது(ஸல்) அவர்க ளுக்கு அரபு மொழியில் இறக்கி அருளப்பட்ட இறுதி இறைநெறி என நம்பிக்கை கொள்வது அவசி யமாகும். அதாவது இது அல்லாஹ்வினால் ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் மூலம் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அரபு மொழியில் இறக்கி அருளப் பட்ட இறுதி இறைநெறி என நம்பிக்கை கொள்வது அவசியமாகும். இதன் பின் சகல மனித சமுதாயமும் அல்லாஹ்வின் நேர்வழியை அறிந்து கொள்ளக் கூடிய ஒரே இறைநெறி நூல் அல்குர்ஆன் மட்டுமே என நம்புதல் வேண்டும்.

அல்குர்ஆன் இறுதி நெறிநூலாக அருளப்பட்ட பின் ஏனைய வேதங்கள் அல்லாஹ்வினால் ரத்துச் செய்யப்பட்டு விட்டன. ஆகவே இதன் பின் அல்குர் ஆன் மூலம் ஒவ்வொரு மனிதனும் நன்மையையும், தீமையையும் பிரித்து அறிந்து, இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடப்பதே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்குரிய வழி ஆகும்.

அல்குர்ஆன் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு 23 வருடங்களில் சிறிது சிறிதாக அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்ட இறைநெறி ஆகும். இது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கட்டளைக் கமைய 114 ஸூராக்கள் என்னும் அத்தியாயங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை எந்தக் கூட்டலும், குறைவுகளும் இன்றி அல்லாஹ்வினால் பாதுகாக்கப்படுகின்றது. அல்குர் ஆன் என்பதன் பொருள் மீண்டும் மீண்டும் படித்தல் என்பதாகும். அல்குர்ஆனுக்குப் பல பெயர்கள் உண்டு. அதற்கு அல்ஃபுர்கான் (பிரித்தறிவிப்பது), அல்கிதாப் (இறைநெறி நூல் அல்லது வேத நூல்) அல்ஃபுர்ஹான் (தெளிவான அத்தாட்சி) ஹப்லுல் லாஹ் (அல்லாஹ்வின் கயிறு), அத்திக்ரு (நினைவு றுத்தல் நிறைந்தது), அல்அரபிய்யு (அரபி மொழியி லுள்ளது), அல்பUர் (நன்மாராயம் கூறுவது), அந்நதீர்(அச்சமூட்டுவது), அல்ஹுதா (நேர்வழி), அல்ஹக்கு (சத்தியம்) அர்ரூஹ் (ஜீவனுள்ளது), அர்ரஹ்மத்(அருட்கொடை), அத்திக்ரா (நல்லுப தேசம்), அல்முபின் (தெளிவானது), அல்அஜப் (ஆச்சரியமிக்கது), அல்முஹய்மின் (பாதுகாவலன்) இவ்வாறு அநேக பெயர்கள் அல்குர்ஆனுக்கு உண்டு.

அல்குர்ஆனுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள பெயர்கள் அல்குர்ஆனின் பண்புகளை வெளிப் படுத்துவதாக உள்ளன. அல்குர்ஆன் மனித வாழ்வுக் குத் தேவையான எல்லா விசயங்களையும் உள்ள டக்கி உள்ளது. அதில் அல்லாஹ்வின் பண்புகளும், அல்லாஹ்வின் படைப்புகளிலிருந்து அவனை வேறு டுத்தும் இயல்புகளும் வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் வானவர்கள், ஜின்கள், வானங்களினதும், பூமி யினதும் படைப்பும், அதன் இயக்கமும், மனிதன், வேறு ஜீவராசிகளின் படைப்பின் இயல்புகளும், இரகசியங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. இன் னும் இறைத்தூதர்கள் அவர்களில் சிலரின் வரலாறு களும், இறைநெறி நூல்கள் பற்றிய விபரங்களும், அல்லாஹ்வுக்கு இணைவைத்தலுக்கு எதிரான இறைத்தூதர்களின் போராட்டங்களும், அல்லாஹ் வின் உதவியால் நிகழ்த்திய அற்புதங்களும், மறுமை நாள் பற்றிய உண்மைகளும், இறப்பு, கப்ரு வாழ்க்கை பற்றிய விபரம், சுவர்க்கம், நரகம், இறுதி நாள் பற்றிய உண்மைகளும், கலா கத்ர் பற்றிய செய்திகளும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய் திகளும் விளக்கப்படுகின்றன. மேலும், அல் லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும். அல்லாஹ் வுக்கு இணைவைப்பதன் பாவங்களும், தண் டனைகளும், இறுதி இறைத்தூதரின் சொல் செயல் அங்கீகாரம் மட்டும் நேர்வழி என்ற விபரங்களும் விளக்கப்படுகிறது. அது போல், தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளின் முக்கியத்துவ மும், அவை சார்ந்த சட்டதிட்டங்கள், வாழ்க்கை யில் எடுத்து நடக்கக் கூடிய நன்மையான கருமங் களும், மனிதன் தவிர்த்து வாழவேண்டிய தீமை களும், இவை சம்பந்தமான சட்டதிட்டங்களும், வாழ்க்கைக்குத் தேவையான சகல விபரங்களையும் எந்த முரண்பாடுகளும், கூட்டல் குறைவுகள் இன்றி அல்லாஹ் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளிய வாழ்க்கை நெறியான அல்குர்ஆன் மூலம் மக்கள் மத்தியில் முன் வைக்கப்படுகின்றது.

அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் ஏன் இந்த உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்? இவை பற்றிய செய்திகள் முன்னைய வேதத் தொகுப்புக ளில் இல்லையா என கேட்க முடியும். முன்னைய வேத நூல்களில் இவை பற்றிய செய்திகள் காணப் படுகின்றன. ஆனால், அவற்றில் தெளிவில்லாதுள் ளது; முரண்பாடுகள் நிறைந்துள்ளது. சத்தியத்தை அறியமுடியாதுள்ளது. அவதானியுங்கள்.

முன்னைய வேதங்களில் ஏக இறைவனை மட் டுமே வணங்கி வழிப்படவேண்டும் என்ற செய்திக ளும் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் படைப்பு களை இறைவனுடன் இணையாக்கும் சிலை வணக் கம் புனிதமாக்கப்பட்ட செய்திகளும் உள்ளன. வானவர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின் றன. ஆனால் வானவர்களை அல்லாஹ்வின் மனைவியாக கற்பனை செய்கின்ற நடைமுறைக ளும், வானவர்கள் மனிதர்களுடன் தவறான உறவு கொள்கின்ற செய்திகளும் நிறைந்து, கற்பனை கதை களாக்கப்பட்டுள்ளன. அதுபோல் ஜின்களையும் ஷைத்தான்களையும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் ஷைத்தான் ஜின்களினால் மனிதன் வழி கெடுக்கப்படுகின்ற செய்திகள் நிறைந்துள்ளது. சகல மனிதர்களும் ஆதம், ஹவ்வா ஆகியோரின் சந்ததி கள் எனவும் உள்ளது. ஆனால் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி பற்றிய செய்திகளும் உள்ளன.

ஆனால் அவர்களிடம் இறைதூதர்கள் இறை வேத நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. ஆனால் இறைத் தூதர்களை இறைவனின் வடிவமாக சித்த ரித்து வணங்கும் வழிமுறைகளும் காணப்படுகின் றது. அத்துடன் இறைநெறி நூல்களில் மனித கற் பனைகள் உள் நுழைந்து சரியான முடிவை அடைய முடியாத தடுமாற்றமும், சந்தேகமும் உருவாக்கப் பட்டுள்ளன. இதனால் விஞ்ஞான உண்மைகளு டன் அவர்களின் வேதத் தொகுப்புகள் முரண்படு கின்றன. இதனால் குருமார்களால் காலத்துக்கேற்ப திருத்தி அதன் இயற்கைத்தன்மை குலைக்கப்பட் டுள்ளது.
இதுபோல் மறுமையில் மனிதன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் செய்திகள் உண்டு. ஆனால் ஷைத்தானின் சதியால், மனிதன் பூமியில் அவர்கள் செய்யும் தவறுகளுக்கேற்ப மிருகங்களாக பிறப்பார் கள் என்ற நம்பிக்கைகளும், மனிதன் இறந்த பின் பேய் பிசாசுகளாக அலைவதாக நம்பிக்கைகளும் செய்திகளாக உள்ளன. இதனால் சூனியம், தாயத்து, மந்திரித்தல், நரபலிச் சடங்குகள், நல்ல நேரம் பார்த் தல் கெட்ட நேரம் பார்த்தல், சோதிடம் பார்த்து திட்டமிட்டு செயற்படும் அறிவை மங்கச் செய்யும் நடைமுறைகள் மக்களிடம் மலிந்துள்ளன. சொர்க் கம், நரகம் பற்றிய செய்திகள் அந்த வேதத் தொகுப் புகளில் உண்டு. அதில் தெளிவின்மை காணப்படு கின்றது. எல்லாம் இறைவனின் விதியின்படி நடக் கும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் விதியை சோதி டத்தின் மூலம் அறியலாம் என்ற மூட நம்பிக்கைகளி னால், மனிதன் செயலிழப்பதற்கும், விஞ்ஞான ஆய்வுகள் செய்வதற்கும் தடைகள் காணப்படுகின் றன. துறவறம் மேலோங்கிக் காணப்படுகிறது. மடமைகள் மலிந்துள்ளன.

வெற்றியும், தோல்வியும் அல்லாஹ்வின் அரு ளில் உள்ளன; அதனை முன்கூட்டியே மனிதன் அறிய முடியாததால், மனிதன் இயற்கையை அவதா னித்து ஆய்வு செய்து முயற்சித்தால் அல்லாஹ் நமக்கு வைத்துள்ள வெற்றியின் பக்கம் செயல்பட முடியும் என அல்குர்ஆன் கூறுகின்றது. இந்த நம்பிக் கைகான வழிகள் முன்னைய வேத நூல்களில் மூடப் பட்டுள்ளன. தொழுகை, தானதர்மம், நோன்பு, ஹஜ் செயல்பாடுகள் உண்டு. ஆனால் அவற்றில் மெளட்டீகவும், இறைவனுக்கு இணை வைத்தலும் கலந்துள்ளது. நன்மை, தீமை பற்றிய சட்டங்கள் உண்டு. ஆனால் அவை வலுவிழந்து, செய்தால் நன்மை, செய்யா திருந்தால் தீமையில்லை அல்லது செய்யாதிருந்தால் நல்லது. ஆனால் செய்தால் குற்ற மின்மை என்ற தெளிவின்மை காணப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு நாட்டு ஆட்சியாளர்களும் தமக்குச் சாதகமான விதத்தில் சட்டமியற்றி குழப் பத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த வேதத் தொகுப் புகளில் காணப்படும் குழப்பங்களை நீக்கவே அல்லாஹ் இறுதி இறை நெறியாக அல்குர்ஆனையும் இறுதி இறைத் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை யும் அனுப்பி நேர்வழி காட்டியுள்ளான். சிந்திப் போர் உண்டா? அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறு வதை அவதானியுங்கள்.

இது, (அல்லாஹ்வின்) இறைநெறி நூலாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியு டையோ ருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல்குர்ஆன்:2:2)

இந்த குர்ஆன் ரமழான் மாதத்தில் அல்லாஹ்வி னால் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப்பட்டது.
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டி யாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாக வும் (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது.
(அல்குர்ஆன்:2:185)

அல்குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்படு வதற்கு முன் அவர் வேதங்களைத் தெரிந்தவராக இருக்கவில்லை. அவர் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாக இருந்தார். அரபி மொழி மட்டுமே பேசத் தெரிந்தவராக இருந்தார். அவதானியுங்கள்.

ஹா, மீம் விளக்கமான இவ்(இறை) நெறி நூலின் மீது சத்தியமாக, நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். இன்னும் நிச்சயமாக, இது நம் மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக் கிறது. (இதுவே இறைநெறி நூல்களில்) மிக்க மேலா னதாகும். ஞானம் மிக்கதுமாகும். (அல்குர்ஆன் : 43:1-4)
அல்லாஹ்வின் நல்லடியார்களே இது அல்லாஹ் அருளிய அல்குர்ஆன் ஆகும். இது மக்களை நன்மை யின்பால் செல்வதற்கும், தீமையின் விளைநிலம் நரகம் என எச்சரிப்பதாகவும் இறக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடை யோனிடமிருந்து இறக்கியருளப்பட்டது. அரபு மொழியில் அமைந்த இந்த குர்ஆனுடைய வச னங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.
(இது) நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர். அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்குர்ஆன்41:2-4)

இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது ஆகும். ஆனால் பலர் அதனை நம்பவில்லை. அவ் வாறான மக்களுக்கு அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது. அவதானியுங்கள்.
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாரா லும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட இறைநெறி (நூல்)களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விபரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனா கிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமே யில்லை.
இதை(நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) நீர் கூறும். நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர் களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள் ளுங்கள்! என்று,
அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யாக்கிறார்கள். இவர்க ளுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித் தார்கள். ஆகவே இந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்கு வீராக. (அல்குர்ஆன் : 10:37-39)

எழுதப் படிக்கத் தெரியாத, முன்னைய வேதங் களை படித்துப் பார்த்திராத நபிக்கு எவ்வாறு முன் னைய இறைத் தூதர்களின் வரலாறுகள் தெரிந்தி ருக்க முடியும். சிறிது சிந்தித்துப் பார்ப்பின் அல்குர் ஆன் அல்லாஹ்வினால் இறக்கப்பட்டது என்ற உண் மையை உணர முடியும். இந்த உண்மை தெரிந்தும் அல்குர்ஆனைப் பொய்ப்பிக்கின்ற மக்கள் மீது அல் லாஹ் இவ்வாறு சவால் விடுகிறான். அல்குர்ஆனை ஆராய்ந்து பார்க்கும் மக்களுக்கு இது அல்லாஹ்வி டம் இருந்து வந்தது என தெளிவாக விளங்க முடி யும். அறிவுடைய மக்களே! சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டப் போதுமானவன் என் பதை அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விளங்குவதற்காகவே சிறிய சிறிய பகுதிகளாக அல் குர்ஆனை இறக்கியுள்ளான். அத்துடன் அல்குர் ஆனைப் போன்ற இறைநெறி நூலை மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும் கொண் டுவர முடியாது என அல்லாஹ் சவால் விடுகிறான். அவதானியுங்கள்.
இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இதுபோன்ற ஒன்றை அவர்கள் கொண்டுவரமுடியாது என்று (நபியே!) நீர் கூறும். நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக் காக சகல விதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விபரித்துள்ளோம் எனினும், மனிதர் களில் மிகுதியானவர்கள் (இதை) நிகாரிக்காது இருக்கவில்லை. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள். நீர் எங்களுக்காக பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம்மீது நாங்கள் நம்பிக்கை கொள்ளமாட்டோம். அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைச் செடிகளும் (நிரம்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகள் நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும். அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்கு முன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.

அல்லது ஒரு தங்க மாளிகை உமக்கு இருந்தா லன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்) அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும். (அங் கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக்கூடிய ஒரு (இறைநெறி) நூலை நீர் கொண்டுவந்து தரும் வரை யில், நீர்(வானத்தில்) ஏறியதையும் நாம் நம்பமாட் டோம் என்று கூறுகின்றனர். என் இரைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கிறேனா? என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.
அல்குர்ஆன் :17:88-93)

அல்லாஹ் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அல் குர்ஆனை இறக்கி வைத்தான். அதை அந்த மக்க ளுக்கு படித்துக்காட்டும்படி வேண்டினான். அவர் கள் அதனை அந்த மக்களுக்கு படித்துக்காட்டிய போது அநேகமானவர்கள் அதை விசுவாசம் கொள் பவர்களாக இருக்கவில்லை. அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். பல அற்புதங்களை செய்து காட்டும்படி வேண்டினார்கள். அதற்கு அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் கொடுக்கும் பதில்கள் மேலே உள்ள வசனங்களில் அடங்கியுள்ளன. இதற்கு முன் பல இறைத் தூதர்கள் வந்தபோது பல அற்புதங்களை அவர்களிடம் அல்லாஹ்வின் கட்ட ளைக்கமைய செய்து காட்டியபோதும் பெரும் பான்மையானவர்கள் அல்லாஹ்வின் இறை நெறி களை நிராகரித்தே வந்தனர். அவர்களுடன் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆன் இறக்கப் படுவதற்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களை மக்கள் அல்அமீன்(நம்பிக்கைக்குரியவர்) என்றே அழைத்தனர். ஆனால் அல்லாஹ்விடம் இருந்து சத்திய வாழ்க்கை இறைநெறி அல்குர்ஆன் வந்த போதே மக்கள் நம்ப மறுக்கின்றனர். அவ்வாறு நிராகரித்தவர்களுக்கு அல்குர்ஆன் மூலம் கொடுக் கும் பதிலை அவதானியுங்கள்.

Previous post:

Next post: