இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்.
மறுமையை (நம்ப வேண்டிய விதத்தில்) நம்பா மல், நமது வசனங்களைப் பொய்யாக்கியவர்களின் விருப்பு, வெறுப்புகளைப் பின்பற்றாதீர்கள். அவர் கள் தம் இறைவனுக்கு (தங்களையே) சமமாக்கிய வர்கள். 6-150
காரிஜியா என்றால் புரட்சியாளர் என்று பொருள். இவர்களின் கொள்கை என்னவென்றால், ஒட்டகப் போரிலும் ´ப்பியூன் போரிலும் கலந்து கொண்ட அனைவரும் காஃபிர்கள், தலைவர்களை எதிர்த்துக் கலகம் செய்யலாம். கொலையும் செய்ய லாம், பெரும் பாவம் செய்பவர்கள் காஃபிர்கள். இந்த நம் கொள்கையை ஏற்காதவர்களைக் கொல்ல லாம் இதுதான் அவர்கள் கொள்கை.
குர்ஆனில் ஜிஹாத் பற்றி பேசும் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுக்கப்பட்டுத்தான் இவர்கள் உருவாக்கப்பட்டார்கள். இந்த கொள்கையும் உரு வாக்கப்பட்டது. தவறு செய்யும் ஆட்சியாளரை எப் போது எதிர்க்க வேண்டும் என்பதற்கு ரசூல்(ஸல்) வழிகாட்டியிருக்க, அந்த வழிகாட்டுதலை இவர் கள் மறைத்தார்கள், மறந்தார்கள். அந்த வழிகாட்டு தலை இவர்களுக்கு நினைவூட்டியபோது குர்ஆன் மட்டும் போதும் என்ற புதிய கொள்கையை உரு வாக்கினார்கள். ஏனென்றால் தலைவருக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கட்டளையயல்லாம் ஹதீஃத்களில் இருப்பதனால், அவையயல்லாம் இவர்களின் மனோ இச்சைக்கு ஒத்துவராததால் ஹதீஃத்களை நிராகரிக்கும் நிலையை எடுத்தார்கள்.
குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர்கள் இவர்கள் தான். ஆக இவர்கள் ஐந்து புதிய கொள்கையை உண்டாக்கினார்கள். அவர்கள் அழிந்தும் போனார் கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற கொள்கை அழியவில்லை. அந்த ஐந்தையும் ஒருசேர இல்லா விட்டாலும் ஒவ்வொன்றாகவோ, இரண்டிரண் டாகவோ இன்றும் சில பேர் வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டி யது என்னவென்றால், பெயரளவுக்கு இஸ்லாமிய ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் அதன் தலைவரை எதிர்த்து யுத்தம் செய்வது ஜிகாதா? இதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்பது பற்றித்தான். எனக்கு பிறகு (ஆட்சியாளர்களிடம் நிறைய சுய நலப் போக்கை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் வெறுக் கும்படியான பலவற்றையும் காண்பீர்கள் என்று நபி(ஸல்) சொன்னார்கள். அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், குடிமக்கள் என்ற முறையில் நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்து வாருங்கள். உங்களுடைய உரிமையை அல்லாஹ்விடத்தில் கேளுங்கள் என்று சொன்னார்கள். புகாரி:7052
அதாவது யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் தைக் கொடு அல்லது வேறு நல்ல ஆட்சியாளரைக் கொடு என்று கேட்கச் சொல்கிறார்கள். ஏன் இப்படி சொல்கிறார்கள் தெரியுமா? நீங்கள் கஷ்டப்பட்டு உண்டாக்கிய இந்த கட்டமைப்பை, (உரிமையை கேட்கிறோம் என்ற பெயரில் தப்பும், தவறுமாக எதையாவது செய்து) நீங்களே உடைத்தால் முஸ்லிமாகவே வாழ விடாதவன், இஸ்லாத்தை சொல்லவே விடாதவன் எவனாவது அந்த இடத்தில் வந்து அமர்வான். பிறகு நீங்கள் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்ளவே முடியாத நிலை உண்டாகி விடும். அந்த நிலையை நீங்களே உண்டாக்கி விடாதீர்கள் என்று சொல்கிறார்கள்.
உங்களுடைய ஆட்சியாளர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய கடமையைக் கொடுத்து விடுங் கள்; அவர் தன்னுடைய பொறுப்பில் எப்படி நடந்து கொண்டார் (உங்களின் உரிமையை பறித் தாரா இல்லையா) என்பது பற்றியயல்லாம் (பார்த்து கவனிக்க வேண்டிய விதத்தில் அவனை) அல்லாஹ் கவனித்துக் கொள்வான் என்று நபி(ஸல்) கூறினார் கள். புகாரீ : 3455
காரிஜியாக்கள் நபி(ஸல்) அவர்களின் இந்த எச் சரிக்கைகளை எல்லாம் தூர எறிந்து விட்டு நாங்கள் அநியாயத்தை எதிர்த்துப் புறப்பட்டு விட்டோம். இது பெரிய சேவை, தொண்டு, ஜிஹாத். இதற்காக எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்லி அவர்கள் களம் இறங்கினார்கள்.
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் அழிந்ததிற்கு இந்த சிந்தனைதான் காரணம். இந்த சிந்தனை மட்டும் ஏற்பட்டிருக்காவிட்டால், இஸ்லாமிய சாம்ராஜ்யத் தின் பரப்பளவும் அதன் எண்ணிக்கையும் எங் கேயோ போயிருக்கும். எல்லாவற்றையும் இந்த சிந் தனை கெடுத்துக் குட்டிச் சுவராக்கியதை நாமெல் லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
(பீ.ஜே.வின் அந்த 72 கூட்டம் யார்? 12 மற்றும் 13ம் பாகங்களின் சுருக்கம்)
அந்த உரையில் அவர் ஆயுதக் கலகம்தான் செய் யக்கூடாது என்பதை ஆதாரங்களோடு பேசியிருந் தார். அது காரிஜியாக்களின் வழி என்றும் பேசியி ருந்தார். ஆனால், அந்த உரையில் காட்டப்பட்ட அந்த பகுதி போராட்ட கலகம் செய்தலும் கூடாது என்பதை மறைமுகமாக கூறுவதை காணலாம். ஆனால், அவர் தந்த இந்த விளக்கத்துக்கு எதிராக அவரே காரிஜியாக்களின் வழியில் சென்று அக்கிரமக்கார அரசன் முன் சத்தியத்தை எடுத்து சொல்வது மாபெரும் ஜிஹாத் என்ற ஹதீஃதுக்கும், தீமை நடக்க கண்டால் இயன்றால் கையால் தடுப் பீராக அல்லது நாவால் தடுப்பீராக அல்லது மனதால் ஒதுக்குவீராக என்ற ஹதீஃதுக்கும் சுய விளக்கம் கொடுத்து இஸ்லாமிய சாயம் பூசி ஜிஹாத் என்று சொல்லி ஆட்சியாளர்களிடம் உரிமை கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். இவ் வாறு செய்தது கொண்டு அவர் தன்னையும் தன்னை நம்பியவர்களையும் அந்த 72 கூட்டத்தில் இணைத்துக் கொண்டார். ஆக காரிஜியாக்களின் கொள்கை இதோடு சேர்த்து ஆறாகி விட்டது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தலாம் என்று அரசியல் சாசனம் சொல்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு போராடி னால் பலன் கிடைக்கும். அரசியல் சாசனம் சொல்வ தால் அரசியல்வாதிகள் அவ்வளவு எளிதில் நம் போராட்டத்தை அலட்சியம் செய்ய முடியாது என் றெல்லாம் புருடா விட்டு நாளுக்கொரு போராட் டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் சொன் னது போல் போராட்டம் பலன் தந்திருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்து விட்டால் நபி (ஸல்) இதை செய்யச் சொல்லியிருப்பார்களா சொல்லியிருக்க மாட்டார்களா? என்பதை முடிவு செய்து விடலாம்.
கடந்த 20 வருடங்களாக பலவிதமான கோரிக் கைகளை முன் வைத்து இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உதாரணமாக சில,
1995லிருந்து பல வருடங்களாக பாபர் மசூதி கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத் தினார்கள். பாபர் மசூதியும் கிடைக்கவில்லை. அதற்கான போராட்டத்தையும் நிறுத்தி விட்டார் கள். பொதுப்பிரிவில் 13 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத் தினார்கள். இப்போது பொதுப்பிரிவில் 13ஐயும் காணோம். போராட்டத்தையும் காணோம்.
“ஷ்ஐஐலிஉeஐஉe லிக்ஷூ துற்வியிஷ்துவி” என்ற வீடியோவை “க்ஷுநுUவீUயசி”லிருந்து நீக்கக் கோரி போராட்டம் நடத் தினார்கள். உங்களுடைய தந்தை, பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விட மேலாக, என்னை நேசித் தாலே தவிர நீங்கள் மூஃமீனாக முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரீ:15) என்ற ஹதீஃதை காரிஜியாக்களின் பாணியில் எடுத்துக் சொல்லி அந்தப் போராட்டத்துக்கு கூட்டம் சேர்த் தார்கள். அதாவது, அந்த போராட்டத்துக்கு போகா விட்டால் மூஃமீன் இல்லையாம். இன்று வரை அந்த வீடியோ “க்ஷுநுUவீUயசி “- ல் இருக்கிறது.
ஒன்று திரண்டு போராடினால் பலன் கிடைக் கும். அரசியல் சாசனம் சொல்வதால் அரசியல் வாதிகள் அவ்வளவு எளிதில் நம் போராட்டத்தை அலட்சியம் செய்ய முடியாது என்று இவர் தந்த உத்திரவாதம் எங்கே போனது என்று தெரிய வில்லை. போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அவர்கள் சிலதைச் சொல்கிறார்கள். அவற்றின் நிலை என்னவென்று பார்ப்போம்.
2016 துவக்கத்தில் சென்னையில் வெள்ளம் வந்த போது, சென்னைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ஊரி லும் வெள்ளம் வந்தது. சென்னையில் வெள்ளம் வடிந்து விட்ட போதும் பக்கத்திலிருந்த அந்த ஊரில் வெள்ளம் வடியவில்லை. இவர்கள் போராட்டம் நடத்தியதும் வெள்ளம் வடிந்து விட்டது. இதன் பின்னணி என்னவென்றால் , அந்த ஊருக்கு அடுத்து இருந்த தனியார் நிர்வாகம் எழுப்பியிருந்த தடுப்பு, வெள்ளத்தை வடிய விடாமல் தடுத்துக் கொண்டி ருந்தது. உள்ளூரில் சம்பந்தப்பட்டவர்கள் இதைக் கண்டுகொள்ளாமலிருந்தனர். இந்த விவகாரம் மறைந்த முதல்வரின் கவனத்துக்கும் போகவில்லை. இவர்கள் போராட்டம் நடத்தியதும், அதை மீடி யாக்கள் ஃப்ளாஷ் செய்ததும் விவகாரம் மறைந்த முதல்வரின் கவனத்துக்குப் போய் விட்டது. உடனே அங்கிருந்து கட்டளை பறந்தது விவகாரம் தீர்ந்தது. இதில், வியம் என்னவென்றால், விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும் அவ்வளவுதான். இதை போராட் டத்தின் மூல மாகத்தான் கொண்டு போக வேண் டும் என்றில்லை. 3.5க்காக கனிமொழி வழியாக கருணாநிதியைப் பிடித்தது போல் ஓ.எஸ். மணியன் போன்றோர் வழியாக முதல்வரைப் பிடித்து இருக் கலாம். அல்லது பொதுநல வழக்காக, அவசர வழக் காக அன்றைய தினமே நீதிமன்றத்துக்குக் கொண்டு போயிருக்கலாம்.
அப்படி அமைதியாக அந்தப் பிரச்சனை தீர்வதில் இவர்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் நடத்திய போராட்டத்தினால்தான் சிக்கல் தீர்ந்தது என்று காட்டிக் கொள்ள வேண்டும். அதற்காக நடத்திய போராட்டம் தான் அது. எனவே அதை போராட் டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கருத முடியாது. மேலும், இது முஸ்லிம்களின் உரிமை சார்ந்த விசயமுமல்ல. எல்லா மதத்தினருக்கு பொதுவான பிரச்சினையாகும்.
அடுத்ததாக, சில ஊர்களை மையமாகக் கொண்டு புதிய தாலுகாக்களை உருவாக்க வேண் டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராட் டம் நடத்தினார்கள். அவர்கள் கோரியது போலவே தாலுக்காக்கள் உருவாக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய வியம் என்னவென்றால் இவர்கள் போராட்டம் நடத்தியவுடன் தாலுகாக் கள் உருவாக்கப்படவில்லை. பல வருங்களுக்கு பிறகே உருவாக்கப்பட்டன. காரணம், நிர்வாக வசதிக்காக, அதாவது தங்களுடைய வசதிக்காக புதிய தாலுகாக்களை ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். எனவே இதையும் போராட்டத் துக்கு கிடைத்த வெற்றி என்று கொள்ள முடியாது. இதுவும், முஸ்லிம்களின் உரிமை சார்ந்த விசயமு மல்ல. எல்லா மதத்தினருக்கும் பொதுவான பிரச் சினையாகும். போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் சொல்லும் எல்லா விசயங்களும் இதுபோல்தான் இருக்கும்.
அடுத்ததாக விஸ்வரூபம் சினிமா விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் இவர்களுக்கு சாதக மாக நடந்து கொண்டார். காரணம், இவர்களு டைய பேச்சாற்றலையும், இவர்களுக்குக் கூடிய கூட்டத்தையும் பார்த்து தேர்தலில் இவர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்று நம்பினார். எனவே, இவர் களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவிலிருந்தார். அதே முதல்வர், போன வருடம் மேலப்பாளையம் பள்ளிவாசல் விவகாரமாக சில கோரிக்கைகளை முன் வைத்து இவர்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியபோது இவர் களைக் கண்டு கொள்ளவே இல்லை. காரணம், 2014 பாராளுமன்ற தேர்தல் முடிவானது இவர்கள் வெறும் வெத்துவேட்டுகள், வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பவர்கள். இவர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது என்பதை அவருக்குக் காட்டி விட்டது. எனவே, முதல்வர் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் போராட்டம் என்ற நிலையைத் தாண்டி, தீவிரவாதிகள் பாணியில் மிரட்டியும் பார்த்தார்கள்.
ஒழுங்காக கட்சி நடத்தினோமா! நாலு காசு பார்த்தோமா! போனாமா என்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எங்களை மிரட்டிப் பார்க்க நினைத்தால் திங்கிற சோத்தில் மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள் என்கிற தொனியில் எதிர்த் தரப்பிலிருந்து அபாய சிக்னல் கிடைக்கவே உடனே வெள்ளைக் கொடியை காட்டி விட்டுப் பதுங்கிக் கொண்டார். ஆக, போராட்டங்களின் நிலை இதுதான். போராட்டக் கலகங்களின் வாயி லாக இவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண் டார்களே தவிர, இவர் வாக்களித்தது போல உரிமைகளை மீட்டுத் தரவில்லை. இப்படிப்பட்ட எந்தவித பலனையும் தராத, கவைக்குதவாத போராட்டக் கலகங்களை நடத்துமாறு நபி(ஸல்) கட்டளையிட் டிருப்பார்களா?
மேலும், போராட்டக் கலகங்களை நியாயப் படுத்துவதற்காக ஒரு காரணத்தையும் சொன்னார். அது என்னவென்றால், முஸ்லிம்கள் தீவிரவாதத் தின் பக்கம் செல்வதைத் தடுப்பதற்காகவே போராட்டங்களை நடத்துவதாகவும் சொன்னார். உண்மை என்னவென்றால் போராட்டக் கலகம் என்பது ஆயுதக் கலகத்தின் முன்னோட்டம்தான். அதாவது தீவிரவாதத்தின் நுழைவாயிலே போராட்டம் தான் என்றால் அது மிகையில்லை. போராட்டத்துக்குச் செல்பவர்கள் தீவிரவாதம் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாத மும் கிடையாது. இன்றைய தீவிரவாதிகளின் நேற்றைய நிலையை பார்த்தால் இது விளங்கும். உதாரணமாக கோவையில் குண்டு வைத்தவர்கள், அதற்கு முன் போராட்டத்துக்கு போனவர்கள் தான்.
அல்லாஹ் நாடியிருந்தால் நம்பிக்கையாளர் களே நீங்கள் போராட்டம் நடத்தாதீர்கள் என்று ஒரு வசனத்தை இறக்கி நேரடியாகவே போராட் டத்தைத் தடை செய்திருப்பான். அப்படிச் செய் திருந்தால் அன்றைய மக்கள் குழம்பியிருப்பார்கள். அதாவது, நம்பிக்கையாளர்களே நீங்கள் சினிமா பார்க்காதீர்கள் என்றொரு வசனத்தை இறக்கியிருந் தால் அது அந்த மக்களிடத்தில் என்ன மாதிரியான குழப்பத்தை உண்டாக்கியிருக்குமோ? அதைப் போன்ற ஒரு குழப்பத்தைத்தான் போராட்டம் நடத்தாதீர்கள் என்ற வசனமும் ஏற்படுத்தியிருக்கும்.
ஆயினும், சினிமா பார்க்காதீர்கள் என்ற வசனத் துக்கு பதிலாக விபச்சாரத்தின் அருகில் கூட செல்லா தீர்கள் என்ற வசனத்தை இறக்கினான். அதே போல், போராட்டம் நடத்தாதீர்கள் என்ற வசனத்துக்கு பதிலாக 102 இடங்களில் பல கோணங்களில் பொறு மையைப் பற்றிப் பேசக்கூடிய வசனங்களை இறக்கி வைத்தான். அது மட்டுமின்றி, எனக்கு பிறகு (ஆட்சி யாளர்களிடம்) நிறைய சுயநலப் போக்கையும் பார பட்சமாக நடக்கும் போக்கையும் நீங்கள் காண்பீர் கள். நீங்கள் வெறுக்கும்படியான பலவற்றையும் காண்பீர்கள். அப்போது குடிமக்கள் என்ற முறையில் நீங்கள் அவர்களுக்கு செய்யவேண்டிய கடமை யைச் செய்து வாருங்கள். உங்களுடைய உரிமையை அல்லாஹ்விடத்தில் கேளுங்கள். புகாரீ : 7052
அதாவது, நீங்கள் கஷ்டப்பட்டு உண்டாக்கிய இநத கட்டமைப்பை, உரிமையை கேட்கிறோம் என்ற பெயரில் நீங்களே குழப்பம் செய்து உடைத் தால் முஸ்லிமாக வாழவே விடாதவன், இஸ் லாத்தைச் சொல்லவே விடாதவன் அந்த இடத்தில் வந்து அமர்வான். பிறகு நீங்கள் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்ளவே முடியாத நிலை உண் டாகிவிடும். அந்த நிலையை நீங்களே உண்டாக்கி விடாதீர்கள். யா அல்லாஹ் இந்த ஆட்சியாளருக்கு ஹிதாயத்தைக் கொடு, அல்லது வேறு நல்ல ஆட்சி யாளரைக் கொடு என்று துஆ செய்யுங்கள் என்றும், உங்களுடைய ஆட்சியாளர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய கடமையை கொடுத்து விடுங் கள்; அவர் தன்னுடைய பொறுப்பில் எப்படி நடந்து கொண்டார் (உங்களின் உரிமையை பறித்தாரா இல்லையா) என்பது பற்றியயல்லாம் (பார்த்து கவனிக்க வேண்டிய விதத்தில் அவரை) அல்லாஹ் கவனித்துக் கொள்வான். (புகாரீ : 3455) என்றும்,
உங்களிடத்தில் ஒரு காலம் வந்தால், அதன் பின் வரும் காலம் முன்னதை விட மோசமானதாகத் தான் இருக்கும். எனவே, நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையாக இருங்கள். (புகாரீ : 7068) என்றும் தன் தூதரை சொல்ல வைத்தான். மேலும் பொறுமை என்பது துன்பம் ஏற்பட்டவுடன் கைக்கொள்வதே. (புகாரீ 1302) என்று நபி(ஸல்) கூறினார்கள். அதாவது, பிரச்சினை வந்தவுடனேயே தவறு செய்யும் மனப் போக்கை, வன்முறை செய்யும் மனப்போக்கை, தீவிரவாதம் செய்யும் மனப்போக்கை முளையி லேயே கிள்ளியயறியச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வழியை பின்பற்றுவதாகச் சொல் லும் இவர்களோ, பிரச்சினை வந்து விட்டதா? வா போராட்டம் நடத்துவோம். காட்டுக் கத்தல் கத்து வோம் வா என்று அழைக்கிறார்கள். அதாவது, தவறு செய்யும் மனப்போக்கை, வன்முறை செய்யும் மனப்போக்கை, தீவிரவாதம் செய்யும் மனப் போக்கை நீரூற்றி வளர்க்கிறார்கள்.
அறியாமைக் கால கூச்சலிடுபவன், கூப்பாடு போடுபவன் நம்மைச் சார்ந்தவனல்ல. (முஸ்லிமே அல்ல) புகாரீ 1298 என்று நபி(ஸல்) சொல்லியிருக்க, இவர்கள் முழக்கம் என்ற பெயரில் காட்டுகத்தல் கத்துகிறார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங் களை அன்புடன் அழைக்கிறது என்று பேனர் வைக் கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பார்வையில் இவர் களின் நிலை என்ன என்பதை இவர்களே முடிவு செய்யட்டும்.
ஆக போராட்டம் என்பதும் காரிஜியாக்களின் வழிதான். போராட்டம் நடத்துபவர்களும் காரிஜி யாக்கள்தான் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆக ஆறு புதிய கொள்கைகளை உண்டாக்கிய காரிஜியாக்கள் இன்று காஷ்மீரிலி ருந்து கன்னியாகுமரி வரை பல கூட்டங்களாகப் பிரிந்து பரந்து இருக்கின்றனர். இவர்கள் அந்த ஆறையும் ஒருசேர இல்லாவிட்டாலும் ஒவ்வொன் றாகவோ, இரண்டிரண்டாகவோ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த காரிஜியா கூட்டங்கள் ஒவ்வொன்றும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளை எல்லாம் புறக் கணித்து விட்டு, தங்கள் பக்கம் விளங்காத கூட்டத்தை பெருக்கிக் கொள்வதற்காக நாங்கள் அநியாயத்தை எதிர்த்து புறப்பட்டு விட்டோம். இது பெரிய சேவை, தொண்டு, ஜிஹாத், இதற்காக எங்களுக்கு சொர்க்கும் கிடைக்கும் என்று சொல்லி, போட்டி போட்டுக்கொண்டு களம் இறங்கி, கூடாத சேட்டைகளெல்லாம் செய்து, 1950களில் ஏற்படுத்தப்பட்ட மதச்சார்பற்ற இந்தியா என்ற கட்டமைப்பு உடையும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். காந்தி கொலைக்குப்பின் மக்களால் தேச விரோதிகள் என்று தீர்மானிக்கப் பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்றவர்கள் இன்று உண்மை யான தேச பக்தர்களாக, வலம் வரும் நிலைக்கு, நாடாளும் நிலைக்கு இந்தியாவை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். நபி(ஸல்) எதைச் செய்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்களோ அதைச் செய்து விட்டார்கள்.
மேலும், சர்வதேச அளவில் இன்று இஸ்லாமிய அழைப்புப் பணி பெரும் பின்னடைவைச் சந்தித் திருப்பதற்கு இந்த காரிஜியா சிந்தனைதான் கார ணம். இந்த காரிஜியா சிந்தனை மட்டும் ஏற்பட்டி ருக்காவிட்டால், இஸ்லாமிய அழைப்புப் பணியின் வீரியமும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் எங் கேயோ போயிருக்கும். எல்லாவற்றையும் இந்த காரிஜியா சிந்தனை கெடுத்துக் குட்டிச் சுவராக்கி யிருப்பதை நாமெல்லாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம்.
(நபியே) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்டதையும் நம்புவதாக வாதம் செய்து கொண்டிருப்போரை நீங்கள் பார்க்கவில் லையா? (யாரை) நிராகரிக்க வேண்டும் (புறக் கணிக்க வேண்டும்) என்று அவர்களுக்கு கட்டளை யிடப்பட்டிருக்கிறதோ அந்த ஆதிக்க மனப் பான்மை கொண்டவனையே தங்களின் (தலைவ னாக) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக் கொண்டார் கள். அந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டவனோ அவர்களை அழிவுக் கிடங்கில் தள்ளிவிடவே திட்டமிட்டிருக்கிறான். 4:60
மேலும் (இந்தபோலி வஹீ நம்பிகளிடம்) வஹீயின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள் என்று நீங்கள் அழைத்தால், அந்த நயவஞ்சகர்கள் உங்களை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விடுவதைக் காணலாம். 4:61.