அபூ அப்தில்லாஹ்
இன்று மிகப்பெரும்பான்மையினராக இருக்கும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த மதகுருமார்களான மவ்லவிகளும் அவர்களை தக்லீத் (கண்மூடிப் பின்பற்றல்) செய்யும் முஸ்லிம்களும் நடை முறைப்படுத்தி வரும் ஒரே தவணையில் முத்தலாக் சொல்லி மனைவியைக் கணவனிடமிருந்து பிரித்து நடுரோட்டில் நிற்க வைக்கும் காட்டுமிராண்டிச் சட்டம் மக்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் முத்தலாக் விவகாரம் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனால் பெரும் பாதிப்புக்குள்ளான சில பெண்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்தத் தவறான சட்டத்தைத் திருத்தி அமைக்காவிட்டால் மத்திய அரசு சட்டம் இயற்றி முத்தலாக் சட்டத்தை இரத்து செய்ய வேண்டி வரும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெருங்கொண்ட மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவதையே தங்கள் இலட்சியமாகக் கொண்ட வீண் பெருமை பேசும் மதகுருமார்களான இம் மவ்லவிகள் (பார்க்க : 7:146) செய்து வரும் அடாத செயல்களால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை மாற்றார்கள் இழிவுபடுத்தும், கேவலப்படுத்தும் நிலையை உருவாக்கி வருகிறது. இம்மவ்லவிகள் குர்ஆன், ஹதீஃதைக் கண்டுகொள்வதே இல்லை. இம்மவ்லவிகளின் புரோகித முன்னோர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளையே மார்க்கமாக்கத் துடிக்கின்றனர்.
பார்வைக்கு இந்த முத்தலாக் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். முதலில் தலாக், முத்தலாக் பற்றி குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
அல்பகரா 2:226 முதல் 233 வரை படித்துப் பார்ப்பவர்கள் கணவன் மனைவியை தலாக் சொல்லி தற்காலிகமாகப் பிரிவது எப்படி நிரந்தர மாகப் பிரிவது எப்படி என்பதைத் திட்டமாகத் தெளிவாகப் போதிப்பதை அறிய முடியும். தலாக் என்பது மூன்று வெவ்வேறு தவணைகளில் மட்டுமே. ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என்று சொல்வதல்ல என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இதை உறுதிப்படுத்த 2:228 இறைவாக்கு “”அத்தலாக்கு மர்ரத்தானி” அதாவது மீட்டிக் கொள்ளும் தலாக்கு இரண்டு தவணைகளில் என்று கூறுவ தோடு மீட்ட முடியாத தலாக்கு முத்தலாக்கு ஒரே தவணையில் அல்ல. மூன்று தவணைகளில் சொல்லப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்து கிறது. இதற்கு மேலதிக விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று அல்ல பல தலாக் சொன்னாலும் அது ஒரேயொரு தலாக் தான் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். (அல்ஹீஸ் 1035ம் பக்கம்) இவை அல்லாமல் அல்குர்ஆனில் 2:187, 4:20, 33:49, 65:17 வசனங்களையும் நேரடியாகப் படித்து, நம்மைப் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ் தலாக் பற்றி வலியுறுத்தியுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.
இரவும் பகலைப் போல் தெள்ளத் தெளிவாக இருக்கும் குர்ஆன், ஹதீஃத்களை விட்டு இம்மவ்லவிகள் தங்கள் ஆபாக்களான முன்னோர் களின் வழிகெட்ட நடைமுறைகளை ஆதாரமாகத் தருவதின் இரகசியம் என்ன? குர்ஆன், ஹதீஃதைப் புறக்கணித்து முன்னோர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவோர் நாளை ஒதுங்குமிடம் நரகம் என்று பல குர்ஆன் வசனங்கள் கூறுவதை அறியாதவர்களா இம்மவ்லவிகள்? ஆம்! இம்மவ்லவிகளிடம் காணப்படும் வீண் ஆலிம் என்ற பெருமையால் அல்லாஹ்வே அவர்களை குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுகிறான். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். வழிகேடுகளையே நேர்வழியாக ஏற்று அவற்றையே மக்களுக்குப் போதிப்பார்கள். இப்படி நாம் கூறவில்லை. அல்லாஹ்வே 7:146 இறைவாக்கில் கூறி இருக்கிறான். நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில்-தவணையில் சொல்லும் முத்தலாக், கணவன் மனைவியைப் பிரித்து விடும். மீண்டும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ வழியே இல்லை. அப்படி மணமுடித்துக் கொள்ள விரும்பினால் 2:230 இறைவாக்குச் சொல்வது போல் மிகக் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியே தீர வேண்டும். அந்த வெறுக்கத்தக்கச் செயலை இம் மவ்லவிகள் மனமகிழ்வுடன் செய்து வருகிறார்கள். அதனால்தான் எவன் பொண்டாட்டி எவனுடன் போனால் என்ன? லெப்பைக்கு ஐந்து பணம் எனறு அன்றிலிருந்தே சொல்லி வருவது போதிய சான்றாகும்.
எப்படி என்று பாருங்கள். ஒருவன் மனைவியுடன் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்கிறான். திடீரென்று வாய்ப்பேச்சு முற்றி கணவன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று அவசர கோலத்தில் மனைவி யைப் பார்த்து தலாக், தலாக், தலாக் என மூன்று முறை சொல்லிவிட்டான். ஆத்திரம் தணிந்த பின் மன வருத்தப்பட்டு அவன் நம்பிக்கை வைத்துள்ள இந்த மவ்லவிகளிடம் மார்க்கச் சட்டம் கேட்கிறான். அவர்களோ தங்கள் வருமானத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற மன மகிழ்வோடு நீங்கள் மூன்று தலாக் சொல்லிவிட்டதால் உங்கள் மனைவி உங்களுக்கு ஹராமாகி விட்டாள். இனி நீங்கள் அவளைத் தொடக் கூடாது. வீட்டை விட்டு அவளை வெளியேற்றி விட வேண்டும் என்று மூடச் சட்டத்தைச் சொல்கிறார்கள். அவனால் அதை ஏற்க முடியவில்லை. அவளை மீண்டும் தன் மனைவியாக்கிக் கொள்ள வழியே இல்லையா எனப் புலம்புகிறான். அவன் வகையாகத் தங்கள் வலையில் சிக்கிக் கொண்டான் என்பது உறுதியான வுடன் அதற்கு வழி இருக்கிறது. உனது முன்னால் மனைவி வேறு ஒருவனுக்கு சட்டப்படி மனைவியாக வேண்டும். அவன் அவளோடு சில நாட்கள் வாழ்ந்து பின் முத்தலாக் சொல்ல வேண்டும். இத்தா கழிந்து நீ அவளை மீண்டும் மணமுடித்துக் கொள்ள லாம். இதுதான் ஷரீஅத் சட்டம் என்கின்றனர்.
உண்மையில் இந்நிகழ்வு இயற்கையாக மூன்று தவணைகள் தலாக் சொல்லப்பட்ட பின் நடந்தால் சரி. இதையே 2:230 இறைவாக்குக் கூறுகிறது. தவறில்லை. ஆனால் இம்மவ்லவிகள் என்ன செய்கிறார்கள்? எப்படி உண்மைக்கு மாறாக நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல வாடகைக்கு சாட்சிகள் கிடைக்கிறார்களோ அதே போல் இம் மவ்லவிகளிடம் உண்மைக்கு மாறாக வாடகைக் கணவன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு மேற்படிப் பெண்ணைத் திருமணம் முடித்து அவனோடு சில நாட்கள் தங்க வைத்து விட்டுப் பின்னர் தலாக் கொடுக்க வைப்பார்கள். இத்தா முடிந்த பின் மீண்டும் பழைய மாப்பிள்ளைக்குத் திருமணம் முடித்து வைப்பார்கள்.
பொய்ச் சாட்சிகளைக் கொண்டு நீதிபதிகளை ஏமாற்றுவது போல் இந்தப் போலிக் கணவன்களைக் கொண்டு அல்லாஹ்வையே ஏமாற்ற இம் மவ்லவிகள் முற்படுகின்றனர். இந்த மவ்லவிகள் எத்தனைப் பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது விளங்குகிறதா? இல்லையா?
இந்த மவ்லவிகளின் இம்மூடத்தனமான ஃபத்வாவில் அதிருப்தியுற்றவர்கள் எம்மிடம் வந்து விளக்கம் கேட்கும்போது ஒரே நேரத்தில் சொல்லப் படும் தலாக், தலாக், தலாக் என முத்தலாக் ஒரே யயாரு தலாக்தான்; தலாக் சொல்லி எத்தனை நாட்கள் ஆகின்றன எனக் கேட்போம். மூன்று மாதங்களுக்கு உட்பட்டு இருந்தால் திருமண முறிவு ஏற்படவில்லை. நீங்கள் போய் கணவன் மனைவி யாக வாழ மார்க்கத்தில் எவ்விதத் தடையுமில்லை. மூன்று மாதங்கள் கழிந்திருந்தால் மீண்டும் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் என்றே கூறி அனுப்புகிறோம்.
அல்குர்ஆனின் 2:226லிருந்து 233 வரையுள்ள வசனங்களும், நபி(ஸல்)அவர்க் காலத்திலும், அபூ பக்கர்(ரழி) ஆட்சி காலத்திலும் உமர்(ரழி) ஆரம்ப ஆட்சி காலத்திலும் ஒரே தவணையில் சொல்லப் படும் 3 தலாக் (முத்தலாக்) ஒரேயயாரு தலாக்காக மட்டுமே கணக்கிடப்பட்டது. உமர்(ரழி) அவர் களே அதை முத்தலாக்காக நடைமுறைப்படுத்தினார்கள் என்று கூறும் 2932 முஸ்லிம் ஹதீஃதும், ஒரே நேரத்தில் சொல்லப்படுவது, ஒன்றுக்கு மேல் பலவாக இருந்தாலும் அது ஒரேயொரு தலாக்தான் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையுமே (பார்க்க அல்ஹதீஸ் 2ம் பாகம், பக்கம் 1035) எமக்கு இந்தத் தெளிவைத் தந்தன.
இம்மவ்லவிகளுக்கோ அல்லாஹ் சொல்லியிருப் பது மார்க்கமாகத் தெரியவில்லை. நபி(ஸல்) அவர் கள் நடைமுறைப் படுத்தியிருப்பதும், சொல்லியிருப்பதும் மார்க்கமாகத் தெரியவில்லை. அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) தமது ஆரம்ப ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தியதும் மார்க்கமாகத் தெரியவில்லை. உமர்(ரழி) அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தின் பிந்திய பகுதியில் நடைமுறைப்படுத்தியது மட்டுமே மார்க்கமாகத் தெரிகிறது. அதில் பிடிவாதமாக இருப்பதோடு, அப்படியானால் உமர் (ரழி) அவர்கள் வழிகேடரா? என்று கேட்டு, தங்கள் கண்மூடிப் பக்தர்களை, தங்களின் சூன்யப் பேச் சால் மடக்கி வழிகெடுத்து வருகிறார்கள்.
இப்படிக் கேட்பதன் மூலம் இம்மவ்லவிகள் அல்லாஹ் குர்ஆனின் கூறி இருப்பதும் தப்பு, ரசூலுல்லாஹ் நடைமுறைப்படுத்தியதும் தப்பு-உமர்(ரழி) நடைமுறைப்படுத்தியதுதான் சரி நேர்வழி மார்க்கம் என்று சொல்லாமல் சொல்லி தங்கள் பக்தகோடிகளைத் தக்க வைக்க முற்படுகின்றனர். ஆம்! இம்மவ்லவிகள் 9:31 இறைவாக்குக் கூறு வது போல் உமர்(ரழி) அவர்களைத் தங்கள் ரப்பாகக் கொண்டுள்ளனர்.
இரண்டாம் கலீஃபா தவறுகளுக்கு அப்பாற் பட்ட மனிதர், கடவுள் தன்மை உடையவர் என்பது இம்மூடமுல்லாக்களின் மூட நம்பிக்கை. ஆதம் தவறு செய்தார். அவரது மக்களும் தவறு செய்யக் கூடியவர்களே! தவறு செய்பவர்களில் தெளபா செய்து மீள்பவர்களே சிறந்தவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது வீண் பெருமையடிக்கும் இவர்கள் கண்ணில் படாது. (பார்க்க : 7:146)
நபிமார்களே தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் நபிமார்களுக்கும் மற்றவர்களுக் கும் என்ன வித்தியாசம் தெரியுமா? வஹீ மூலம் நபிமார்களின் தவறுகள் உடனுக்குடன் திருத்தப்பட்டு நேர்வழியில் செலுத்தப்பட்டார்கள். (பார்க்க : 17:73-75, 69:44-47, 66:1,2) நபி(ஸல்) அவர்கள் மரணித்தவுடன் உமர்(ரழி) என்ன செய்தார்கள்? நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை. யாரும் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று சொன்னால் அவரின் தலையைச் சீவி விடுவேன் என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் 3:144, 39:30 இறைவாக்குகளைப் படித்துக் காட்டியவுடன், இன்று இந்த மவ்லவிகள் குர்ஆன், வசனங்களுக்குச் சுயவிளக்கம் கொடுத்து குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாவது போல் உமர்(ரழி) விதண்டாவாதம் செய்யவில்லை. உடனே தெளபா செய்து மீண்டுத் தனது தவறைத் திருத்திக் கொண்டார். இதுபோல் மஹரை நிர்ணயித்தபோதும் ஒரு பெண்மணி 4:20 இறை வாக்கைப் படித்துக் காட்டியவுடன் தன் தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டார். அந்த உயர்ந்த நற்குணம் இம்மவ்லவிகளிடம் இல்லவே இல்லை.
உமர்(ரழி) அவர்களை முத்தலாக் வியத்தில் யாரும் குற்றப்படுத்தவும் கூடாது. 2:134,141 இறை வாக்குகள் என்ன கூறுகின்றன? அவர்கள் சென்று போனவர்கள். அவர்களைப் பற்றி உங்களிடம் கேட் கப்படாது. உங்களைப் பற்றித்தான் கேட்கப்படும் என்று உறுதியாகச் சொல்லவில்லையா? மேலும் இன்று இந்த மவ்லவிகள் உமர்(ரழி) அவர்களை தக் லீது செய்வது போல், அவர்கள் யாரையும் தக்லீது செய்யவில்லை. சுயமாகச் சிந்தித்தே முடிவெடுத் தார். எனவே உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ் மன்னிக் கப் போதுமானவன். அவரது பாவங்களை நன்மைகளாக மாற்றிச் சுவர்க்கத்து நன்மாராயம் பெற்றவர்கள்.
ஆயினும் உமர்(ரழி) சொன்னவை, நடை முறைப்படுத்தியவை குர்ஆனுக்கோ, ஆதாரபூர்வ மான ஹதீஃத்களுக்கோ முரணாக இருப்பது திட்ட மாகத் தெரிந்தால், நேர்வழி நடக்கும் உண்மை முஸ்லிம் குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடிப்பதே கடமையாகும். எனவே ஒரே நேரத்தில் சொல்லப்படும் முத்தலாக்கை கைவிட்டு, குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி அதை ஒரேயொரு தலாக்காவே கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கம் கூறும் அழகிய நடை முறையை சிறிது சிந்தித்துப் பாருங்கள். கோபத்தில் அவசரப்பட்டு முத்தலாக் கூறுவது ஒரு பக்கம் இருக் கட்டும். உண்மையிலேயே மனைவி அடங்கா பிடாரியாக இருந்தாலும், கணவன் அவளோடு வாழ்வது சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தி ருந்தாலும், அந்த எண்ணத்தோடு ஒரு தலாக் மட்டுமே கூறி அவளை தனது வீட்டிலேயே தங்க வைத்து அவளது உணவு, உடைத் தேவைகளைக் குறைவில்லாமல் நிறைவேற்றுகிறான். அதே சமயம் அவன் அவளை நெருங்குவது இல்லை. அவளையும் தன்னை நெருங்கவிடுவதே இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவள் தனது தவறை உணர்ந்து திருந்தி வர வாய்ப்பு உண்டு. அதேபோல் கணவனும் தன் தவறை உணர்ந்து திருந்த வாய்ப்புண்டு, அதற்கு மாறாக அதே வெறுப்பு நிலை தொடர்ந்து 3 மாதங் கள் நீடித்தால் மட்டுமே திருமண உறவு முறிந்து விடுகிறது. 3 மாதங்கள் முடிவதற்குள் அவர்கள் கணவன் மனைவியாக வாழ மார்க்கத்தில் எவ்விதத் தடையுமில்லை. ஆயினும் 3ல் 1 தலாக் முடிந்து விட்டது.
ஒரு தலாக் கொடுத்த நிலையில் 3 மாதங்கள் கழிந்து விட்டாலும் திருமண உறவு முறிந்து விட்டதே அல்லாமல், மீண்டும் அவர்கள் மணமுடித்துக் கொண்டு கணவன் மனைவியாக வாழ முடியும். ஆனால் ஒரு தலாக் முடிந்து 2 தலாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மீண்டும் ஒரு சச்சரவு ஏற்பட்டு இரண்டாவது தலாக் கொடுத்தா லும் கணவன் மனைவி உறவு முறியாது 3 மாதங்கள் கடந்தால் கணவன் மனைவி உறவு முறிந்து விடும். இந்த நிலையிலும் மீண்டும் அவர்கள் மணமுடித்து கணவன் மனைவியாக வாழ மார்க்கம் அனுமதிக் கிறது. இந்த இரண்டு தலாக்குடைய நிலையில் அவர் கள் மீண்டும் மணமுடித்து கணவன் மனைவியாக வாழ அனுமதி இருப்பதோடு, ஆண் பிரிதொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தும் பெண் பிரிதொரு கணவனைத் தேர்ந்தெடுத்து மணமுடிக்கவும், பூரண அனுமதி உண்டு.
ஆனால் மூன்றாவது தலாக் சொல்லிவிட்டால் கணவன் மனைவி உறவு முற்றிலும் முறிந்து விடும். பின்னர் அவர்கள் கணவன் மனைவியாக வாழ விரும்பினாலும் அது 2:230 இறைக் கட்டளைப்படி அப்பெண் இயற்கையாகவே நாடகமாக அல்ல, பிரிதொரு ஆணை மணந்து அவனுடன் வாழ்ந்து இயற்கையாகவே அவர்களுக்குள் மணமுறிவு ஏற்பட்டால் மட்டுமே முந்திய கணவன் அவளை மீண்டும் மணக்க முடியும்.
தலாக் கொடுப்பது வாய்ப் புளித்ததோ, மாங் காய் புளித்ததோ என்றில்லாமல் அனுமதிக்கப் பட்ட வற்றில் மிகமிக அல்லாஹ்வால் வெறுக்கப்படும் ஒரு செயல் என்பதை உணர்த்தவே இச்சட்டம்.
இந்த மூட முல்லாக்கள் முத்தலாக் சொல்லித் தான் கணவனிடமிருந்து மனைவியைப் பிரிக்க முடியும் என்ற மூட நம்பிக்கையில்தான் இந்த ஒரே நேரத்தில் சொல்லும் முத்தலாக்கை வெறித்தனமாக ஆதரிக்கிறார்கள். ஒரேயயாரு தலாக்கை மட்டுமே சொல்லி 3 மாதங்கள் கழிந்து விட்டால் கணவன் மனைவி உறவு முறிந்துவிடும். அவர்கள் விருப்பப் பட்ட வேறு வேறு ஜோடியைத் தெரிவு செய்து மண மடித்துக் கொள்ளலாம். அவர்களே மீண்டும் மண முடித்து கணவன் மனைவியாக வாழவும் முடியும். இஸ்லாம் எவ்வளவு எளிய அழகான மனமகிழ் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது பாருங்கள்.
இதற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தை இங்குப் பதிவிடுகிறோம் பாருங்கள். ஒரு கணவன் மனைவி விவகாரம் நம்மிடம் வந்தது. மனைவி எதற்கும் கட்டுப்படாது, அடங்கா பிடாரியாக இருந்தாள். எப்படிப்பட்ட உபதேசமும் அவளை நேர்வழிப் படுத்தவில்லை. பலமுறை கணவன் மனைவி இருவரையும், தனித்தனியாகவும் ஒன்று சேர்த்து வைத்தும் கணவனுக்கு மனைவி செய்யவேண்டிய கடமைகள் கணவனின் கடமைகள் அனைத்தையும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களுடன் பலமுறை எடுத் துச் சொல்லியும் அவள் திருந்துவதாக இல்லை. அனைத்து முயற்சிகளும் வீணாயின. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்பெண்ணின் கணவனிடம் நம்முடைய முயற்சிகள் பலனிக்கவில்லை. அதனால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். அவளுக்கு ஒரு தலாக் மட்டும் சொல்லுங்கள். 3 மாதங்கள் வரை கணவன் மனைவி உறவு முறியாது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் அவளை நெருங்காதீர்கள். அவளும் உங்களை நெருங்க அனுமதிக்காதீர்கள். இப்படி நீங்கள் பொறுமை காத்தால் அவள் திருந்த வாய்ப்பு ஏற்படலாம் என்று ஆலோசனை கூறி னோம். ஆரம்பத்தில் அவர் தயங்கினாலும் பின்னர் ஏற்று மனைவிக்கு ஒரு தலாக் மட்டும் கொடுத்து விட்டு, அவளை நெருங்காமல் இருந்து வந்தார். அல்ஹம்துலில்லாஹ் 3 மாத தவணைக்குள் அவள் தன் தவறை உணர்ந்து கணவனிடம் மன்னிப் புக் கேட்டு திருந்தி விட்டாள். இப்போது அவர் இந்த மனைவியை விட சிறந்த ஒரு மனைவி கிடைக்கவே மாட்டாள் என்று ஏற்றிப் போற்றும் அளவுக்கு அவளின் குணத்திலும், நடைமுறைகளிலும் பெருத்த மாற்றத்தை அளித்து சிறப்பாக வாழ்வ தோடு மார்க்கத்தையும் பேணி நடக்க முற்பட்டு விட்டார்கள்.
இவ்வளவு மிக அழகிய வாழ்க்கை முறையை குர்ஆனும், ஹதீஃதும் 1438 ஆண்டுகளாகத் தந்து கொண்டிருக்க குர்ஆனையும், ஹதீஃதையும் நீரா கரித்து விட்டு குஃப்ரிலாகி நாளை நரகை நிரப்ப இருக்கும் இம்மவ்லவிகளை மக்களுக்கு அடை யாளம் காட்டாமல் இருக்க முடியுமா? சிறிது சுயமா கச் சிந்தியுங்கள். 2:187 இறைவாக்குக் கூறுவது போல் ஒருவருக்கு ஒருவர் ஆடையாக இருந்து 4:21 இறைவாக்குக் கூறுவது போல் ஈருடல் ஓருயிர் என்ற நிலையில் ஒருவர் மற்றவருடன் கலந்து கொஞ்சிக் குலாவி வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்ற பின் ஏதோ பேச்சில் வாய்த்தகராறு முற்றி கணவன் மனிதன் அநியாயக் காரணாகவும், அறிவிலியாகவும் இருக்கி றான் என்று 33:72 சொல்வது போல் அவசரத்தில், ஆத்திரத்தில் தலாக், தலாக், தலாக் என்று சொல்லி விட்டால், உடனடியாக கணவன், மனைவி உறவு முறிந்து விடும். உடனே அவளை வீட்டுக்கு வெளியே தள்ளி அந்த அபலைப் பெண்ணை நடுவீதி யில் நிற்க வைக்க வேண்டும் என்று ஃபத்வா-தீர்ப்புக் கொடுப்பதை விட ஒரு காட்டுமிராண்டிச் செயல் வேறு இருக்க முடியுமா? இஸ்லாமிய மார்க்கம் இப் படிச் சொல்லுமா? சிந்தியுங்கள்! இந்த மவ்லவிகள் எத்தனைப் பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் சிந்தியுங்கள். மற்றவர்கள் தூய இஸ்லாமிய மார்க் கம் பற்றி என்ன நினைப்பார்கள். காவி அரசு இதையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தைக் கொச்சைப் படுத்துவதோடு, முஸ்லிம்களின் மார்க்க விவகாரங்களில் மூக்கை நுழைக்க முற்படுகிறது.
முத்தலாக் நடைமுறை கடந்த 1400 ஆண்டுகளாக இருந்து வருகிறது. முஸ்லிம்கள் காலங்காலமாக செயல்படுத்தி வரும் செயல் என அதை இம்மவ்லவிகள் நியாயப்படுத்தி வருகின்றனர். அப்படியானால் நூஹ்(அலை) காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வரும் சமாதி வழிபாடு, சிலை வழிபாடுகள் பற்றி இம்மவ்லவிகள் என்ன சொல்வார்கள்? அனைத்து வழிகேடுகளும் மிகமிக நீண்ட காலமாக மக்களிடையே இருக்கத்தான் செய் கின்றன. அவற்றை நியாயப்படுத்த முடியுமா? ஒரு போதும் முன் சென்றவர்களை மார்க்க விவகாரங்களில் பின்பற்றக்கூடாது. குர்ஆன் ஹதீஃதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று பல வசனங்கள் குர்ஆனில் இருப்பது இம்மவ்லவிகளின் கண்களில் படுவதில்லையா?
முன் சென்றவர்கள் மீதுள்ள அபார குருட்டு நம்பிக்கையில் அவர்களின் மனோ இச்சைப்படி யுள்ள குருட்டு நம்பிக்கையில் கற்பனை செய்யப் பட்ட பிக்ஹு சட்டங்களை முஸ்லிம் ஷரீஅத் சட்டம் முஹம்மடன் லா என்ற பெயரில் தூக்கிப் பிடிக்காமல், அவற்றை அம்பட்டனின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டு, குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஃதும் நேரடியாகக் கூறுவதை எந்த மனிதனின் சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி இம் மவ்லவிகள் எடுத்து நடக்க முன் வந்தால் மட்டுமே இம்மவ்லவிகளுக்கும், முஸ்லிம் களுக்கும் விமோசனமும், மறுமையில் சுகவாழ்வும் ஏற்படும் என்பதை இம்மவ்லவிகள் கவனத் தில் கொள்ள வேன்டுகிறோம்.
இவ்வாறு குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஃத் களும் கூறுவதை நாம் கூறுவதால் இம்மவ்லவிகள் எம்மை யூதக் கைக்கூலி, பா.ஜ.க. கைக்கூலி என்று அவதூறு பரப்பலாம். அதாவது அவர்களே யூதக் கைக்கூலிகளாகவும் பா.ஜ.க. கைக்கூலிகளாகவும் இருந்து கொண்டு அப்பழியை எம்மீது சுமத்துவார் கள். இம்மதகுருமார்களின் இந்த இழி செயலையும் அல்லாஹ் 4:112 இறைவசனத்தில் சுட்டிக் காட்டி எச்சரிக்கத் தவறவில்லை. ஆயினும் உண்மையின்றி வீண் பெருமை அடிக்கும் இம் மவ்லவிகளின் கண்களை விட்டும் அல்லாஹ் மறைத்து விடுகிறான். (பார்க்க : 7:146)
மேலும் நபி காலத்தில் நேர்வழியை மிகமிகக் கடுமையாக எதிர்த்த அக்காலத்து மதகுருமார்கள் பற்றி அல்குர்ஆன் அல்பகரா 2:8 முதல் 20 வரை யுள்ள வசனங்கள் என்ன கூறுகின்றனவோ அந்த வசனங்கள் அனைத்தும் இன்றைய மதகுருமார் களுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும். குறிப்பாக முஸ்லிம் மதகுருமார்களான இம்மவ்லவிகளுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். முஸ்லிம்களே இம் மவ்லவிகளை நம்பி மோசம் போய் நாளை நரகம் புகாதீர்கள். இறைவன் இறக்கியருளிய இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து நேர்வழி நடந்து சுவர்க்கம் புக முன் வாருங்கள். குர்ஆனில் நேரடியாகப் பாடுபடு பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். இது அல்லாஹ்வின் உறுதியான வாக்குறுதி (பார்க்க: 29:29).