இப்னு ஹத்தாது
சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்துவிட்டால் கடமை தீர்ந்தது. அதன் பின்னர் அப்பொருள் காலமெல்லாம் ஒருவரிடம் இருந்தாலும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற அறிவீனமான மூடத்தனமான ஒரு சட்டம் ததஜ மத்ஹப் தலைமை இமாம் பீ.ஜை.யால் கற்பனை செய்யப்பட்டது. அது உருமாறி இப்போது மாத சம்பளம் வாங்கினாலும், வேறு எந்த வழியில் வருமானம் வந்தாலும், வந்தவுடன் அதிலிருந்து 2.5% ஜகாத் கொடுத்துவிடவேண்டும் என்ற நூதன சட்டம் சிலரால் நடைமுறைப்படுத் தப்படுகிறது.
இப்போது குர்ஆன் என்ன கூறுகிறது பாருங்கள்:
நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மத குருமார்களிலும், துறவிகளிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடா திருக்கிறார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (9:34) (மேலும் பார்க்க : 9:35)
(வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களி டமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும், ஏழைகளுக் கும் வழிப்போக்கருக்கும் உரியதாகும்; உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள் ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும் எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்; மேலும் அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடினமானவன். (59:7)
இந்த இரண்டு வசனங்களையும் மீண்டும் மீண்டும் படித்து உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். செல்வத்தை வெளியே செல்லவிடாமல் தடுத்துச் சேமித்து வைப்பதற்குத்தான் இந்தச் சட்டமே அல்லாமல், செல்வம் வந்தவுடன் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. இன்னும் பாருங்கள். மனிதனின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் உணவுப் பொருட்கள்; அவற்றை நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாது. அழுகிப்போகும் உளுத்துப் போகும். அப் படிப்பட்ட விவசாயப் பொருட்கள் அறுவடை யானவுடன் ஜகாத் கொடுக்க வேண்டும் . அதுவும் இயற்கையாக விளைந்தால் 10% ஜகாத். நீர் பாய்ச்சி விளைந்தால் 5% ஜகாத். அதுவும் வருடத்தில் எத்தனை போகங்கள் 1,2,3 என விளைந்தாலும் ஒரு வருடத்திலேயே அத்தனை போகங்களுக்கும் 1,2,3 ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது மார்க்கக் கடமை; இதை அறியாதவர்களா இவர்கள்.
இப்போது நடுநிலையுடன் சிந்தியுங்கள். சேமித்து வைக்க முடியாத விவசாயப் பொருட்களுக்கு உடனடியாக வருடம் ஒரு போகமோ, இரு போகமோ, முப்போகமா 10% 5% என ஜகாத் கொடுக்கும் நிலையில் தலைமுறை தலைமுறை யாகச் சேமித்து வைக்கும் தங்கம், வெள்ளி, நிலம் இவற்றிற்கு ஒரேயயாரு முறை மட்டும் 2.5% கொடுத்தால் போதும் என்று கூறுவது அறிவீனமான சட்டமா? அறிவார்த்தமான சட்டமா? சிந்தியுங்கள். உண்மையில் ஜகாத் உடனடியாக ஒரு முறை மட்டுமே கொடுப்பதாக இருந்தால் அது வெறும் 2.5% மட்டுமே இருக்க முடியுமா? வருமான வரிகள் இப்படி மிகக் குறைந்த அளவிலா வசூலிக்கப்படுகிறது. சிந்தியுங்கள்.
நீண்ட நெடுங்காலமாக முஸ்லிம்களிடையே சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு ஜகாத் வருடா வருடம் கடமை என்ற நடைமுறையே இருந்து வந்தது. அந்த நடைமுறையில் எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரமுமின்றி சுயநல நோக்குடன் பொய்யன் பீ.ஜை. சுய கற்பனையில் உதித்ததுதான் ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமே ஜகாத் என்ற மூடச் சட்டம்.
“”தெருத்தெருவா கூட்டுவது பொது நலத் தொண்டு.
அதைப் படம் பிடித்துக் காட்டுவதில் சுய நலம் உண்டு.”
என்று கவிஞன் பாடினான். அதுபோல் பொய்யன் பீ.ஜை.யின் ஒவ்வொரு செயலுக்கும் சுயநலம் உண்டு.
ஜகாத் கொடுத்த பொருளுக்கே வருடா வருடம் ஜகாத் கொடுக்கும் நடைமுறை உமர்(ரழி), அலீ (ரழி) அவர்களின் அறிவிப்புகளின்படி இருக்கத்தான் செய்திறது. ஆனால் தங்கம், வெள்ளி, வியாபார முதலீடு, கிடைக்கும் லாபம், கட்டிடங்களிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம் இவை மட்டுமே ஜகாத்தில் கணக்கிடப்பட்டன. கோடிக் கணக்கான பணத்தில் வாங்கப்படும் நிலங்கள் ஜகாத் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அதனால் கஞ்சத்தனமுள்ள செல்வந்தர்கள், கட்டிட வாடகை வழியே வரும் லட்சக்கணக்கான வருமானத்தைக் கொண்டு புதிதாக ஒரு கட்டிடத்தை 11 மாதத்திற்குள் வாங்கிக் கொண்டு, ஜகாத் கடமையாகும் அளவில் எங்கள் கையில் பணம் இல்லை என்று கூறி அல்லாஹ்வை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இதை அவதானித்தச் சிலர் வாடகை வருமான நோக்கில் கட்டிடங்களில் ஈடுபடுத்தப்படும் பணமும் வியாபாரங்களில் லாப நோக்கில் ஈடுபடுத்தப்படும் முதலீடு போன்றதே! அதற்கும் ஜகாத் கட்டாயக் கடமை என்ற உண்மையை வெளிப்படுத்தினர். இந்த உண்மையை பீ.ஜை. ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டவர்தான்.
ஆனால் கோடிகளுக்கு கட்டிடங்கள் உள்ளவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. உண்மைதான். சில நூறு, ஆயிரம் என்ற நிலையில் திருப்தியுடன் ஜகாத் கொடுத்து வந்தவர்களுக்கு பல லட்சம் அல்லது கோடி ஜகாத் கொடுக்க வேண்டி வரும்போது மனம் இறுகத்தானே செய்யும். 30 கோடிகளுக்குச் செல்வம் உள்ள ஒரு பெரும் செல்வந்தர் என்னிடம் 30 கோடி சொத்து இருக்கிறது. வருடா வருடம் 75 லட்சம் ஜகாத் கொடுக்க முடியுமா? என்று வேதனையுடன் கேட்டார். நாம் கூறினோம். சகோதரரே நீங்கள் கொடுக்கும் 75 லட்சம் மட்டும்தான் உங்கள் செல்வம். அதுவே நிரந்தரமான மறு உலகில் உங்கள் வைப்பு நிதியில் வைக்கப்படும். நாளை நீங்கள் அங்கு போனபின் நீங்கள் வருடா வருடம் அனுப்பி வைத்தவற்றை தாராளமாக அனுபவிக்கலாம். மற்ற படி இங்கு நீங்கள் என்னுடையது என்னுடையது என்று பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாத்து வருவது உங்களுடையதல்ல, நீங்கள் இறந்தவுடன் அவை உங்கள் வாரிசுகளுக்குரியதாகும். அது மட்டுமா? ஜகாத் கொடுக்காமல் அவற்றைச் சேமித்து வைத்திருந்ததால் 9:35 இறைவாக்குச் சொல்வது போல் அவை நெருப்பில் காச்சப்பட்டு விலாவிலும், முதுகிலும், நெற்றியிலும் சூடு போடப்படும்; நீ சேமித்து வைத்த செல்வம் இதுதான் நன்றாக அனுபவி என்று சொல்லப்படும். அது மட்டுமா? நீங்கள் உங்கள் வாரிசுகளுக்காக விட்டுச் சென்ற செல்வத்தை உங்கள் வாரிசுகள் தவறான வழியில் செலவிட்டால் அந்தப் பாவத்தையும் நீங்களே நாளை மறுமையில் சுமக்க நேரிடும் என்ற எதார்த்த நிலையை உணர்ந்தவர்கள் வருடா வருடம் ஜகாத் கொடுப்பதிலிருந்து பின்வாங்குவார்களா? சொல்லுங்கள்.
ஆக இப்படிக் கஞ்சத்தனம் நிறைந்த செல்வந்தர்களின் தயவு உதவி பீ.ஜை. நுழைந்த அரசியல் காரணமாகத் தேவைப்பட்டது. அந்தச் சுயநலத்தால் தான் அவருக்குக் காலம் காலமாகச் சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்ற நூதனச் சட்டத்தைச் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டது. அந்த அத்தனைச் செல்வந்தர்களின் பாவச் சுமையையும் 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல் பொய்யன் பீ.ஜையே நாளை சுமக்க இருக்கிறார். ஆயினும் அவருக்கு மறுமையில் உறுதியான நம்பிக்கை இருந்தால் அல்லவா அவர் மனம் திருந்தப் போகிறார். ஆயினும் நாமும், அவரும் மக்கள் அனைவரும் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் மறுமையைச் சிந்திக்கத்தான் இருக்கிறோம்.
ஒரு பொருளுக்கு ஒரேயொரு முறைதான் ஜகாத். அதன் பின்னர் அப்பொருளுக்கு ஜகாத் கடமை இல்லை என்ற பீ.ஜையின் மூடச் சட்டத்தின் பரிணாம வளர்ச்சிதான் இப்போது பணம் கையில் கிடைத்தவுடன் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் முரண்பட்டச் சட்டம். பீ.ஜை.யின் மிகவும் கேடு கெட்ட வழிகேடான புத்தி என்ன தெரியுமா? அவரது மூடத்தனமான கொள்கையை நிலைநாட்ட 33:36 இறைவாக்கை நிராகரித்து குஃப்ரிலாகி குர்ஆன் வசனங்களுக்கு மிகவும் அறிவீனமான சுய விளக்கம் கொடுப்பார். 2:102, 3:7 இன்னும் பல குர்ஆன் வசனங்களுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் இந்த உண்மையை உணர்த்தப் போதுமானவையாகும். மேலும் தனது சொத்தை வாதத்தை நிலைநாட்ட ஆதாரபூர்வமான ஹதீஃத்களை பலவீனமானது என்பார். பலவீனமான ஹதீஃத் களை ஆதாரப்பூர்வமானவை எனப் பிதற்றுவார்.
ஜகாத்துடைய விஷயத்தில் கலீஃபாக்களான உமர்(ரழி) அலீ(ரழி) இருவரும் தரும் செய்தியை பலவீனமானது என்பார். தொழுகையில் ஷைத்தா னின் செயலான (நஸாயீ 1148) விரலாட்டுவதை பலமானது என்றும், பிறை விவகாரத்தில் தாபியி, தபஅதாபியீ சொல்லும் செய்திகளை மிகவும் ஆதார பூர்வமானவை எனப் பிதற்றுவார். இது அவரின் வழிகெட்டப் போக்கு. எனவே ஜகாத்துடைய விஷயத்தில் பீ.ஜையின் வழிகெட்ட போக்கை ஏற்று சேமித்து வைத்திருக்கும் பொருள்களுக்கு வருடா வருடம் தவறாமல் ஜகாத்தைக் கணக்கிட்டு கொடுத்து வாருங்கள். அதுவே உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும். அல்லாஹ்வின் வாக்குறுதிப்படி வருடா வருடம் ஜகாத் கொடுப்பது உங்களுடைய பொருளாதாரத்தில் வளர்ச்சியைத் தருமே அல்லாமல் பொய்யன் பீ.ஜை. சொல்வது போல் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஒருபோதும் ஏற்படுத்தாது.
ஏழை எளியவர்களுக்காக கல்வி, தொழில், மருத்துவம், கடன், திருமணம் இன்னும் பல அவசியத் தேவைக்காக திண்டாடும் தேவையுடை யோருக்கு அந்நஜாத் ஆரம்ப காலத்திலிருந்தே செல்வந்தர்களிடம் ஜகாத், சதக்காவாகப் பெற்று கொடுத்து வருகிறோம. அந்த வரவு செலவு கணக்கு களை முறையாகப் பராமரிக்கப்பட்டு, ஜகாத், சதக்கா கொடுத்து வருபவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கம், வெள்ளி, கட்டிடங்கள் அனைத்திற்கும் முறையாக ஜகாத் கணக்கிட்டு வருடா வருடம் அது பல லட்சம் அல்ல, பல கோடி வந்தாலும் மனம் தளராமல் அதுதான் உங்களின் அசலான சேமிப்பு என்பதை விளங்கி கொடுத்து வாருங்கள். அதுதான் உங்களுக்கு ஈருலக வெற்றியை நல்கும். அல்லாஹ் அருள் புரிவானாக.