விமர்சனம் : சென்ற செப்டம்பர் 2017இதழில் வெளியாகி இருந்த தலையங்கத்தின் தலைப்பு விளையாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதே! அல்லாஹ் குர்ஆன் “”இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை” என்று குறிப்பிடுகிறான். எனவே, தலையங்கத்தின் தலைப்பு இப்படி “”ஃபிரன்ட்லி மேட்ச்” “FRIENDLY MATCH”” என்று இருப்பது சரியா?
(தொலைபேசி மூலம் வாசகர்)
விளக்கம் : தாங்கள் குறிப்பிட்டுள்ள தலையங்கத்தில், அந்நஜாத் இதழில் தவறான கருத்து எதுவும் இருந்தால், தங்களின் விமர்சனத்தை அனுப்புமாறு கேட்டிருந்தோம். குர்ஆன்-ஹதீஃத் அடிப்படையில் நாங்கள் தவறி இருந்தால், எங்களின் கருத்தை மாற்றிக் கொண்டு, விமர்சனத்தை வெளியிட்டு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எழுதி இருந்தோம். தங்களின் விமர்சனம் சரியில்லை என்று நாங்கள் கருதினால், அவ்விமர்சனத்தை அந்நஜாத்தில் வெளியிட்டு அதற்குரிய விளக்கத்தை தெரிவிக்கிறோம் என்று எழுதி இருந்தோம். இதனைத் தொடர்ந்து, விமரித்தமைக்கு எமது நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது தலையங்கத்தில் கடைசி 2 வாக்கியங்களில் 1. “”இது பரிசை எதிர்பாராமல் ஆடும் ஆட்டம்! “FRIENDLY MATCH என்றும், 2. “”நமது அமல்களுக்கான பரிசை இறைவனிடம் பெறுவதுதானே இஸ்லாம்” என்றும் எழுதி இருந்தோம்.
இப்போது சிறிது இலக்கணம் பேசுவோம்!
பிறரிடமிருந்து விமர்சனம் கேட்டிருப்பதையும் நாம் அதற்கு விளக்கம் கொடுப்பதையும், வேறு மாதிரியாக அதாவது நேரிடையாக அர்த்தம் கொள்ளாமல் “”பரிசை எதிர்பாராமல் ஆடும் ஆட்டம்! FRIENDLY MATCH என்று வேறு அர்த்தத்தைக் கொடுக்கும் போக்கை, ஆங்கிலத்தில் “”METAPHOR”என்பர், தமிழில் “”உருவக அணி” என்பர். அதன் அர்த்தம் யாதெனில், “”நேர் சொற்பொருள் ஆகாத பெயர்/சாதாரண அர்த்தம்/வேறு அர்த்தத்தைக் குறிப்பிடும் பாங்கு” என்பதே ஆகும்.
விளையாட்டு விளையாட நாம் அழைக்க வில்லை. எமது தலையங்கத்தைப் படித்து விட்டு நாம் கேட்டுக் கொண்டபடி தங்களது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறீர்கள். நாமும் விளக்கம் கொடுக்கிறோம். இதில் நாம் விளையாட்டு எதுவும் விளையாடி விட்டோமா? இல்லையே!
இதை ஒரு விளையாட்டாய் நாம் கருதவே இல்லை என்பதற்கு ஆதாரமாக, தலையங்கத்தின் எமது 2வது (கடைசி) வாக்கியமான “”நமது அமல்களுக்கான பரிசை இறைவனிடம் பெறுவதுதானே இஸ்லாம்” எனக் குறிப்பிட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
உலக வாழ்க்கையில் “”விளையாட்டு என்று சொல்லவே கூடாது” என்று அல்லாஹ் கட்டளை இட்டு இருந்தால், தங்களின் விமர்சனம் ஏற்புடையதாய் இருந்திருக்கும்.
இப்போது தங்களுக்கு மீண்டும் ஒரு விமர்சனம் தோன்றலாம். அதாவது இந்த விமர்சனத்தின் மூலமாக நாம் எந்த விளையாட்டையும் விளையாடவில்லை என்றால், தலையங்கத்தில் இதை ஏன் “”ஃபிரன்ட்லி மேட்ச்” “FRIENDLY MATCH” என்று குறிப்பிடுகிறீர்கள் என்று தாங்கள் மீண்டும் விமர்சிக்கலாம். அதற்கான எமது விளக்கம் யாதெனில் “”மெட்டாஃபர் METAPHOR” தான்.