விமர்சனம் : பிறை கணிப்பின் மூலம் சமூகத்தில் மாபெரும் பிளவு/பிரிவு உண்டாக்கி தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையே பாவப் படுகுழியில் தள்ளி “”ஆஷிரா” நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை வேறுபடுத்தி ஒரு சாரார் நோன்பு வைத்திருக்க மற்றொரு சாரார் பெருநாள் கொண்டாட சமூகப் பிரி வினையை உண்டாக்கி “”ஒருவர் தன்னைத் தானே ஆக பரிசுத்தமானவர் என நினைத்து இன்னொரு சகோதரரை இழிவாக/ ஏளனமாக / தரக்குறைவாக பார்த்து, பெருமையின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு, இறை வனின் சாபத்திற்குரிய “”தற்பெருமைக்காரர்களாக” உருவாக்கி வைத்துள்ள அந்நஜாத்தின் போதனையால் சமூகத்தின் பிளவு/பிரிவினைக்குரிய காரணங் களில் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன், திருச்சி வழிகேட்டின் முன்னிலையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஷைக் அப்துல் காதிர், சிங்கப்பூர்.
விளக்கம் : 2010 செப்டம்பர் நஜாத்தில் பெருநாள் கொண்டாட்டம் கட்டுரையில் இது பற்றி தெளிவாக விளக்கிய பிறகும் மீண்டும், தாங்கள் வழி கேட்டில் இருந்து கொண்டு மற்றவர்களை வழி கேட்டில் இருப்பதாக கூறுவது ததஜவினரால் மட் டுமே முடியும். “”பெருநாள் கொண்டாட்டம்” என்ற கட்டுரையை இந்த இதழில் இவருக்காக மீண்டும் மறுபதிப்பு செய்கிறோம்.
விமர்சனம் : அக்டோபர் 2017, இதழில், பக்கம் 20ல், Dr.அம்ரைனி 12 மாதங்களின் பிறை துவக்கத்தை கணித்த பிறகு “”ஒவ்வொரு மாதமும்” கடைசி பிறையை “”அதிகாலை” வேளையில் பார்க்கச் சொல்கிறார். இது அனாவசியம் தானே. குழப்பங்கள்/குளறுபடிகள் இல்லாத துல்லியமான பிறை-காலண்டரை நீங்கள் கணித்த பின்பு, மறுபடியும் மாத கடைசியில், பிறை பார்ப்பது முரண்பாடல்லவா? ஷைக் அப்துல் காதிர், சிங்கப்பூர்.
விளக்கம் : முதலில் துல்லிய கணக்கீடுகளும், கணிப்பிற்கும் உண்மையில் உங்களுக்கு வேறுபாடு தெரிய வில்லையா? அல்லது உங்கள் இமாம் அவ்வாறு கூறு வதால் கூறுகிறீர்களா? என்று தெரியவில்லை. ஹிஜ்ரி நாள்காட்டி சந்திரனின் ஓட்டத்தை துல்லியமாக கணக்கிட்டு அதன் அஹில்லாக்கள் மற்றும் அதன் மனாஜில்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு இருப்பதால் துல்லியமாக உள்ளது. அதில் சந்தேகத் தில் உள்ளவர்கள் மாத கடைசியின் பிறை உர்ஜூனுல் கதீமை பார்த்து தங்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்தி கொள்ள கட்டுரையாளர் கூறுகிறார். இந்த அழைப்பு தங்கள் இமாம்களை அவர் கூறும் வார்த்தைகளில் கூட தக்லீது செய்து வரும் உங்களை போன்றவர்களுக்கானது. கணக்கீட்டில் சந்தேகம் இல்லாதவர்கள் அதனை பார்க்க தேவை இல்லை, இதில் முரண்பாடு எங்கே உள்ளது. தங்களின் வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு நடு நிலையுடன் இதை படித்தால் உண்மை தெரியும் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நாடினால் இந்த உண்மையை மக்கள் விரைவில் அறிவார்கள்.
விமர்சனம் : எப்படியாவது P.J.யின் குர்ஆன் மொழி பெயர்ப்பை மட்டம் தட்டிவிட வேண்டும், அந் நஜாத் வாசகர்கள்தான் உலகிலேயே பெரிய அறி வாளிகள் என்பதை நிரூபித்து விடவேண்டும் என்ற நோக்கில் நீங்கள் வெளியிட்ட வாசகரின் கட்டுரை .அலி, கல்லிடைகுறிச்சி நகைப்பிக்குரியதாகவே இருக்கிறது. அல்குர்ஆன் : 18:102ல்
P.Jமொழி பெயர்ப்பு : மறுப்போர்/உற்ற நண்பர்கள். (என்கிற வார்த்தைகள்)
மற்ற மொழிபெயர்ப்பு: நிராகரிப்போர்/ பாதுகாவலர்தான். (என்கிற வார்த்தைகள்)
இவ்விரண்டு வார்த்தைகளில் அப்படி என்ன பாரதூரமான அர்த்தங்கள் முரண்படுகின்றன என்பதை விளக்க முடியுமா?
Dr.அம்ரைனி தன் கட்டுரையில் கூட “”இறை-மறுப்பு” என்பதற்கு “”குப்ர்” என்கிற அரபி வார்த்தை யையே பயன்படுத்துகிறார். (பக். 20)
ஷைக் அப்துல் காதிர், சிங்கப்பூர்.
விளக்கம் : நீங்கள் குறிப்பிட்டுள்ள .அலி, கல்லி டைக்குறிச்சியின் கட்டுரை நகைப்பிற்குரியதாக இருக்கிறது என்று கூறினாலும் உங்களை அது பாதித் திருப்பதே இந்த விமர்சனத்தை எழுத வைத்துள் ளது. அந்நஜாத் வாசகர்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து இறைவனிடம் எந்த பலனும் இல்லை. ஆனால் அல்லாஹ் குர்ஆனில் அறிவாளி யார் என்று விளக்கியே உள்ளான். மற்றவர்கள் கூறுவதை கண் மூடி பின்பற்றாமல் குர்ஆனை கொண்டு சுயமாக நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர். அத்தகைய பாக்கியத்தை குர்ஆனை நேரடியாக படிப்பவர்களுக்கு தருவானாக.
இப்போது உள்ள சர்ச்சைக்கு வருவோம். மறுப்போர்/நிராகரிப்போர், இரண்டும் ஒன்று தான் என்று கூறும் நீங்கள் தமிழ் தெரிந்தவர்தானா? மறுப்பது என்பது ஏற்றுக் கொள்ள மறுப்பது, இதில் பிறகு புரிந்து ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் நிராகரிப்பது என்பது முற்றிலும் நிராகரித்து விடுவது, நிராகரித்துவிட்டேன் என்றால் இனி ஏற்க வாய்ப்பில்லை என்று அர்த்தம் என்று தமிழ் தெரிந்த வர்களுக்குத் கண்டிப்பாகத் தெரியும்.
அடுத்து உற்ற நண்பர்கள்/பாதுகாவலர்கள் இரண்டும் ஒன்றா? உதாரணமாக மனிதர்களை உற்ற நண்பர்களாக வைத்துக் கொள்ளலாம். மனிதர்களை பாதுகாவலராக வைக்க முடியாது. இதுவே இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உங்களுக்கு உணர்த்திவிடும். நீங்கள் உண்மையில் விளங்கி இவ்வாறு கூறுவதாக தெரியவில்லை. அந்நஜாத்தையும், அதன் வாச கர்களையும் மட்டம் தட்ட வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது போல் தெரிகிறது. பீ.ஜை. எழுதுவது உங்களுக்கு வேண்டுமானால் வேத வாக்காக தெரியலாம் “”உண்மை முஸ்லிம்கள் இறைவனின் வசனங்கள் கூறப்பட்டாலும் கூட குருடர்கள் போல் அவற்றின் மீது விழமாட்டார் கள்.” (அல்குர்ஆன் :25:73)