ிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்
அந்நஜாத்
இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்
மே 2020
ரமழான்-ஷவ்வால் 1441
- தலையங்கம்!
- முஸ்லிம்களே பேராபத்தைச் சந்திக்கப் போகிறீர்கள்!
- மனிதரில் ஏன் இத்தனை நிறங்கள்?
- ஜும்ஆ தொழுகை பள்ளியிலா? வீட்டிலா?
- பொதுவான வேதனை வரும்போது நல்லவர்களையும் சேர்த்தே அது பாதிக்கும் …….
- அமல்களின் சிறப்புகள்…
- சத்தியத்தை சொல்வது ஜிஹாத்!
- இஸ்லாம் கொண்டுவந்த முதல் மாற்று சட்டம் கிப்லா மாற்றமே!
தலையங்கம்!
கொரோனா!
உலகத்தையே உலுக்கும் நோயாக கொரோனா வலம் வந்து கொண்டிருப்பது இன்னும் முடிந்த பாடில்லை எங்கு பார்த்தாலும் வெறுமை ஒட்டுமொத்த உலகும் இயங்கவில்லை. இது தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருப்பதால், இது எப்படி எங்கே உள் நுழைந்து அறிமுகமானது. இதன் பின்னணி என்ன? இதன் மீதான நடவடிக்கைகள் யாவை? ஆகிய அனைத்தையும் ஏறக்குறைய உலகிலுள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும்படி செய்துவிட்டது.
இந்த நோய் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அரசின் அயராத நடவடிக்கைகள். தன்னையும் காத்து அனைவரையும் காக்க இரவும் பகலும் ஓய்வின்றி நேரத்தில் கிடைக்காத ஊண் உறக்கத்திற்கிடையே உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அவசரகால மருத்துவ டெக்னீசியன்கள், புதுப்புது யூகங்கள் அமைத்து கடும் வெயிலில் சாலைகளிலும், வீதிகளிலும் வாழ்க்கை(?) நடத்திக் கொண்டிருக்கும் காவல்துறையினர், அதைத் தொடாதே இதைத் தொடாதே என்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும் அசுத்தங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேன் நிர்வாகமும், தூய்மைப் பணியாளர்களும் ஆக அனைவருமே தியாகத்தால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றனர்.
மறுபக்கம் கவலை தரும் சம்பவங்களும் நடந்து கொண்டிருப்பது மனதை கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஹுவான் மாகாண மக்கள் சீனாவில் எங்கு வசித்து வந்தாலும் தம் சொந்த நாட்டு மக்களான அவர்களிடம் சந்தேக கண்கொண்டு நெருங்காமல் இருப்பதும், பல இடங்களில் சீனர்களாலேயே அவர்கள் அவமதிக்கப்பட்டு மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டும் இருக்கின்றனர். சீனாவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்களும் சீனர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனர்கள் தம் நாட்டு ஹுவான் மக்களை எப்படி நடத்துகிறார்களோ அதே அணுகுமுறையை சீனர்கள் பிற நாடுகளிலிருந்தும் திரும்ப பெறுகின்றனர். ஆம்! ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் சீனர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சீனர்களின் மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க அரசு. சீன வைரஸ், குங் ஃப்ளு என்றெல்லாம் கேலி செய்வதாக செய்திகள் கூறுகின்றன. பன்றி காய்ச்சல் அமெரிக்காவிலிருந்து பரவியதால் அதை நாங்கள் “அமெரிக்க காய்ச்சல்’ என்று பெயரிட்டு அழைக்கவில்லை என்று அங்கு வசிக்கும் சீனர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகள் நோயால் பாதிக்கப்பட்டதால், வெள்ளை இனத்தவரை தாய்லாந்து கேலி செய்தது.
இது போன்ற அவமானங்களை, சீனர்களின் உருவ அமைப்பைக் கொண்ட இந்தியாவின் வடகிழக்கு மாகாண மக்கள் சந்தித்து வருவதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. அடுத்து, டெல்லி நிஜாமுத்தீன் மர்சுக்கு வந்த தப்லீக் ஜமாஅத்தினர் கொரோனா நோயை பரப்புவதாக இந்தியாவில் மத துவேசத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுவருகிறது. மதத்தை முன்னிறுத்திய குற்றசாட்டுகள் பிற நாடுகளில் இல்லை. தாம் சுமத்திய குற்றசாட்டுகளுக்கு இப்போது தாய்லாந்து நாடு மன்னிப்பு கேட்கிறது.
ஆனால் இந்தியாவில் மட்டும் உடனி ருக்கும் மனிதர்களை மதஅடையாளங்களின் அடிப்படையில் சந்தேகக் கண் கொண்டு காணும் காட்சி. அவர்கள் மீது பழி செலுத்தவும், அவர்களைப் புறக்கணிக் கவும் ஏதுவாகிவிட்ட மனித துவேஷம், மனித நேயத்தை குழிதோண்டி புதைத்து விட்டது. இந்த குற்றச்சாட்டுகள் மறைந்து விடாமல் ஊதி பெரிதாக்கப்பட்டு நீரு பூத்த நெருப்பாக சுழன்று கொண்டிருக்கிறது. இது குறித்து இந்திய செய்தி சேனல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் ஒருவர், “சிறுபான்மையினர் மீது குற்றம் சாட்டுவது மிகுந்த வேசனை அளிப்பதாகவும், நமக்குத் தேவை வெறுப்பு அல்ல ஒற்றுமை’ என்றும் அறிவுரை கூறுகிறார்.
நம் நாட்டில் இந்த நோய் வருவதற்கு முன் அதிக இயற்கை மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வெவ்வேறு நோய்களால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்து போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆனால் இந்த நோய்க்கு மட்டும் விதவிதமான அச்சுறுத்தல்கள், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு மரணமும் உடனுக்குடன் எட்டு பேர் செத்தார்கள். ஒன்பதாவது மரணம் ஏற்பட்டுவிட்டது. சாவு எண்ணிக்கை பத்தைத் தொட்டு விட்டது என்ற மீடியாக்களின் மரண விளம்பரங்கள், மக்களின் பயத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன. இந்த மரண விளம்பரங்களில் அரசின் பங்கும் கணிசமாக இருக்கத்தான் செய்கிறது. மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு அவர்களை உஷார்படுத்த இவ்வாறு செய்யப்படுகிறது என்று அரசு மீது நல்லெண்ணம் கொண்டாலும் இவை மக்களை பீதிக்குள்ளாக்கவும் செய்கிறது என்பது ஊரறிந்த உண்மை!
இந்த கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க அகில உலகும் வர்த்தக மூடலை கடைப்பிடித்து வருவதால் பல அரசுகள் பொருளாதார சரிவில் சிக்கி இருக்கிறது. சிறு வணிகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், தரைக்கடையினர் ஆகியவர்கள் தங்களின் தினசரி வாழ்க்கை தேவையை கவனிக்க முடியாமல் அவதியுறுகின்றனர். நாட்டில் பசி பட்டினியால் வாடுபவர்களுக்கு வழக்கமாக உதவிக்கரம் நீட்டும் அமைப்புகள் கொரோனாவின் பெயரால் அரசு தடுத்து வருகிறது. மாதக் கணக்கில் நான்கு சுவற்றுக்குள் வீட்டில் இருக்கச் செய்த மக்களின் மீது அரசுக்கு பொறுப்பும் இருக்கிறது. மனநலன் மற்றும் ஆரோக்கியத் தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொலைக்காட்சியை தூரமாக்கி வையுங்கள் என்று மனநல மருத்துவர்கள் அன்று கூறியதற்கு எதிரிடையாக வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சி செய்திகளில் நேரத்தை செலவிடுமாறு ஆலோசனைகள் தரப்படுகின்றன. நடப்பது என்ன? தொலைக்காட்சியின் முன் மாதக் கணக்கில் நேரத்தை செலவழிக்கும்படி ஆகி விட்டது. இது சமுதாய வளர்ச்சிக்கு உகந்ததாகத் தெரியவில்லை. அதுவும் தமிழ்நாட்டில் இந்த செயலால் கலாச்சார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உண்டு, எனவே, இவைகளை கருத்தில் கொண்டு அரசு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*******************************************************************************
முஸ்லிம்களே பேராபத்தைச் சந்திக்கப் போகிறீர்கள்!
இப்னு ஹத்தாது
(என்னை நம்பியவர்களைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. (10:103)
நம்பிக்கையாளர்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான். (22:38)
அல்லாஹ்வை நம்புகிறவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அல்லாஹ்வின் கடமை. (30:47)
அல்லாஹ் வாக்குறுதி மீறவே மாட்டான். (3:9,194, 13:31,39:20)
ஆகிய குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அல்லாஹ் முஸ்லிம்களைக் காப்பாற்றுவேன், பாதுகாப்பேன், உதவி செய்வேன் என்று சொல்வது எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதியாக உணர்வார்கள் காரணம், இன்றைய முஸ்லிம்களில் மிகமிகப் பெரும்பான்மையினர்,
“நாங்களும் மூஃமினீன்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகிறார்கள். “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்களும் முஸ்லிமீன்” என்று (வேண்டுமானால்) சொல்லிக் கொள்ளுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய உள்ளங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை. 49:14 என்ற இறைவாக்கு கூறுவது போல் “நம்பிக்கையாளர்கள்” என்ற நிலையில் இல்லை. உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள்.
மேலும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வையும் நம்புகிறார்கள் கூடவே, இணை வைக்கவும் செய்கிறார்கள். 12:106
என்ற இறைவாக்கு கூறுவது போல் அவனோடு இணையாக்கி, ஈமான் கொண்டிருக்கிறார்கள் என்பதாலும்தான்.
முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இணை வைத்து ஈமான் கொண்டிருக்கிறார்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான் அல்லவா? அதில் உள்ள “இணை’ என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். எனவே, அதைத் தெளிவாக விளங்குவோம். இந்த வசனத்தை பல கோணங்களில் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களோடு விரிவாக விளக்க முடியும் இருப்பினும், இதில் தலையாய, பிரதானமான, மிகக் கொடிய இரண்டைப் பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
(இவர்களின் நிலை, காலத்தால்) இவர்களுக்கு நெருக்கமாக முன்னிருந்தவர்களைப் போன்றே (இருக்கிறது) அவர்கள் தம் தீய செயல்களுக்கு நோவினை செய்யும் வேதனை காத்திருக்கிறது. 59:15
“நீங்கள் உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். புகாரி : 3456
அவர்களின் (மார்க்க அறிஞர்கள் என்று) ஒருசாரார் அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை மாற்றக் கூடியவர்கள். 2:75
மற்றொரு சாரார், (படித்த மற்றும்) படிக்காத முட்டாள்கள் ஆவர். அவர்களுக்கு நெறிநூலைப் பற்றிய ஒழுங்கான அறிவு கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் அடிப்படை (ஆதாரம்) இல்லாத நம்பிக்கைகளும் (வீணான உலக) ஆசைகளும் தான். மேலும், வெறும் யூகங்களிலே தான் அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். 2:78
அவர்கள் அல்லாஹ்வை விட்டு மார்க்க அறிஞர்களையும், துறவிகளையும் தங்களின் கடவுளாக்கிக் கொண்டார்கள். 9:31
அவர்கள் ஏதாவதொரு பிரச்சனைக்கு தீர்வு கேட்டு மார்க்க அறிஞர்களிடம் செல்வார்கள் அதற்கு அவர்கள் இதைச் செய் அதைச் செய்யாதே அதைச் செய் இதைச் செய்யாதே என்று எதையாவது சொல்வார்கள். சொன்னதும் உடனே இவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சரிபார்க்காமல் அதை அப்படியே குருட்டுத்தனமாகப் பின் பற்றுவார்கள். மார்க்க அறிஞர்களை, சன்னியாசிகளை கடவுளராக்கியதன் பொருள் இதுதான். (ஹதீஃதின் கருத்து கொடுக்கப்பட்டுள்ளது. திர்மிதி: 3095)
நபியே! உம்மீது இறக்கப்பட்ட வஹீயையும் உமக்கு முன்னர் இறக்கப்பட்ட வஹீயையும் நம்புவதாக வாதம் செய்து கொண்டிருப்போரை நீங்கள் பார்க்கவில்லையா? (யாரை நம்பக்கூடாது) நிராகரிக்க வேண்டும் (புறக்கணிக்க வேண்டும்) என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களையே தங்களின் (தலைவனாக) தீர்ப்புச் சொல்பவனாக ஆக்கிக் கொண்டார்கள். அந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டவனோ அவர்களை அழிவுக் கிடங்கில் தள்ளிவிடவே திட்டமிட்டிருக்கிறான். 4:60
நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் தூதரை அனுப்பி “அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணியுங்கள். ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்கு அடிபணியாதீர்கள்” என்று எச்சரித்தோம். 16:36
“அல்லாஹ்விடத்தில் மோசமான கதிக்கு ஆளானவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” யாரெல்லாம் ஆதிக்க சக்திக(ளாகிய மவ்லவிக)ளுக்கு அடிபணிந்தார்களோ அவர்கள்தான். அவர்கள் ரொம்பவும் தரங்கெட்டவர்கள். மேலும், அவர்கள் நேர்வழியிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றவர்கள் ஆவர். 5:60
(நம்பிக்கை எனும்) தூய வழிபாடு (என்பது) அல்லாஹ்வுக்கு மட்டும்தான்(வேறு யாருக்கும் அதில் எந்தப் பங்கும் கிடையாது) என்பதை அறிந்து கொள்ளுங்கள். 39:3
அவன் தன்னுடைய அதிகாரத்தில் எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை. 18:26
நீங்கள் அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை (இணை) ஆக்க வேண்டாம். (அப்படிச் செய்தால்) நீங்கள் பழிக்கப்பட்டவர்களாக) இழித்தவர்களாக), உதவி அற்றவர்களாக (நாதியற்றவர்களாக) ஆகிவிடுவீர்கள். 17:22
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் (வஹீயை) பின்பற்றுங்கள். அவனைத் தவிர(வேறு யாரையாவது) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)கள் பின்னால் செல்லாதீர்கள், உங்களில் கொஞ்சம் பேர்தான் நல்லுணர்வு பெறுகிறீர்கள். 7:3
அல்லாஹ்வைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருந்தால் மறுமையை (நம்ப வேண்டிய விதத்தில்) நம்பாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவனோடு யாரையாவது அல்லது எதையாவது இணைத்துப் பேசினால் உடனே அவர்களுடைய உள்ளங்கள் மலர்ந்து விரிந்து பூரித்து விடுகின்றன. 39:45
அவர்கள் (காண்பிக்கப்படும் ஒவ்வொரு ஆதாரங்களையும்) பொய்யாக்குகின்றனர். மேலும் தங்கள் இச்சைகளையே(விருப்பங்களையே) பின்பற்றுகின்றனர். ஆயினும் (அல்லாஹ்வின்) ஒவ்வொரு திட்டமும் நடந்தே தீரும். 54:3
அல்லாஹ்வுடைய வழிகாட்டலை விட்டு விட்டு தன் மன இச்சையைப் பின்பற்றுபவனை விட மிக வழிகெட்டவன் யார் நிச்சயமாக அல்லாஹ் (அப்படிப்பட்ட) அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்டமாட்டான். 28:50
யார் தன்னுடைய (மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீங்கள் பார்த்தீர்களா? மேலும் (அவனைப் பற்றி) அறிந்து தான் அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு, அவனுடைய காதுகள் மீதும் உள்ளத்தின் மீதும் சீலிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை போட்டு விட்டான். எனவே (அவனால் உண்மையை பார்க்க முடியாது, கேட்க முடியாது, விளங்க முடியாது, உணர முடியாது) அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அவனுக்கு நேர்வழி காட்ட முடியுமா? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? 45:23
நம் வசனங்களைப் பொய்யாக்குகிறவர்)கள், மறுமையை (நம்ப வேண்டிய விதத்தில்) நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவர்கள்தான் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர். 6:150
அநியாயக்காரர்கள் அறிவில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை (யாராலும்) நேர்வழியில் கொண்டுவர முடியாது. மேலும் (இம்மையிலும், மறுமையிலும்) அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை.30:29
“பனூ இஸ்ராயீல்களுக்கு வந்தது போல் எனது சமுதாயத்திற்கு ஒரு காலம் ஒரு செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும். திர்மிதி: 2641
நாம் பனூ இஸ்ராயில்களுக்கு (தவ்ராத்) நூலில், “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை அராஜகம் செய்வீர்கள். (அல்லாஹ்வுக்கு அடிபணியாமல்) ஆணவத்துடன் பெரும் அழிச்சாட்டியங்கள் செய்வீர்கள்” என்று (முன்னறிவிப்பாக) அறிவித்தோம். 17:4
அவ்விரண்டில் முதலாவது முன்னறிவிப்பு (நிறைவேறும் காலக்கெடு) வந்தபோது, உங்கள் மீது கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம். அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும் உங்கள் பொருள்களையும் தேடி (அழித்து) விட்டார்கள். (இவ்வாறு முதல்) முன்னறிவிப்பு நிறைவேறியது. 17:5
இரண்டாவது முன்னறிவிப்பு (நிறை வேறும் காலக்கெடு) வந்தபோது, (உங்களைத் துன்புறுத்தி) உங்களுடைய முகங்களை கெடுத்து, (துன்புறுத்தி) முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து தங்கள் கைக்குக் கிடைத்தவைகளையயல்லாம் இடித்தழித்து நாசமாக்கக் கூடிய (கடின சித்தமுடைய)வர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம் (இவ்வாறு இரண்டாவது முன்னறிவிப்பும் நிறைவேறியது. 17:7
(இதோடு நீங்கள் திருந்திக் கொண்டால் உங்களுக்கு நல்லது) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப் போதுமானவன். மாறாக, மீண்டும் நீங்கள் (அராஜகம், அழிச்சாட்டியம் செய்யத்) திரும்பினால், நாமும் (முன்போல் தண்டிக்கத்) திரும்புவோம். (பார்க்க ஹிட்லர் VS யூதர்கள் வரலாறு) மேலும் (நம்முடைய கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கும் இப்படிப்பட்ட) நிராகரிப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக தயாராக்கி வைத்துள்ளோம். 17:8
மேற்கூறிய குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் மீண்டும் மீண்டும் நேரடியாகப் படித்து அவற்றின் சத்தையும், சாரத்தையும் உள்ளத்தில் இறக்கி விளங்குகிறவர்கள், அல்லாஹ்வுக்கும், தங்களுக்குமிடையில் தரகர்களாக மார்க்க அறிஞர்களை புகுத்துவதும் மன இச்சையைப் பின்பற்றுவதும் கொடிய இணை வைப்பாகும் என்பதையும் அதன் விளைவாக பனூ இஸ்ராயீல்களுக்கு ஏற்பட்ட கதி என்ன? என்பதையும் உணரமுடியும். இந்த கொடிய குற்றத்தை தான் முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவியும், பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்பதையும் உணர முடியும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.
அல்லாஹ்வின் நாட்டப்படி அன்றைக்கிருந்த பலவிதமான சூழல்களால் ஷிர்க் என்றால் என்ன? தவ்ஹீத் என்றால் என்ன? ஈமான் உணர்வு என்றால் என்ன? இன உணர்வு என்றால் என்ன? என்பதை எல்லாம் அறியாத இந்திய முஸ்லிம்கள் மதவியாபாரிகளான மவ்லவிகளையும், அரசியல் வியாபாரிகளான முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதுதான் ஈமான் உணர்வு இஸ்லாம் என்று எண்ணிக் கொண்டு அவர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றியதால் பெருங்கேடாக இந்தியா பாகிஸ்தான் எனப் பிளவுபட்டது. அதனால் ஏற்பட்ட பெருங்கலவரங்களில் பல்லாயிரம் முஸ்லிம்கள் உயிர் இழந்ததோடு, பல்லாயிரம் முஸ்லிம் பெண்கள் கற்பழித்ததோடு, பல்லாயிரம் கோடி பொருள் இழப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானின் கராச்சியில் அகதிகளாக குடியமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கும் பஞ்சாபியர்களுக்கும் பாகிஸ்தானில் பகை நிலவுகிறது. பாகிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு உரிய பங்கு இல்லை. பிரதிநிதித்துவம் இல்லை, உரிமை இல்லை, நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம், அகதிகளாக நடத்தப்படுகிறோம் என்று இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் கூக்குரலிடுகிறார்கள். அவ்வப்போது முட்டல் மோதல்களும் நடக்கின்றன. அதற்காக, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் “முஹாஜிர் கவ்மி மூவ்மென்ட்” என்ற பெயரில் இயக்கமும் நடத்துகிறார்கள். இதன் பின்னணியில் இருப்பவர்களும் மத வியாபாரிகளான மவ்லவிகளும், அரசியல் வியாபாரிகளான முஸ்லிம் அரசியல் தலைவர்களும்தான். சரி விஷயம் அதோடு முடிந்ததா?
பாகிஸ்தான் முஸ்லிம்கள் மத வியாபாரிகளான மவ்லவிகளையும், அரசியல் வியாபாரிகளான முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதுதான் ஈமான் உணர்வு, இஸ்லாம் என்று எண்ணிக் கொண்டு அவர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றியதால் மற்றொரு பெருங்கேடாக பாகிஸ்தான் பங்களாதேஷ் எனப் பிளவுபட்டது. அப்போதும், பெருங் கலவரம் முஸ்லிம்கள் உயிரிழப்பு முஸ்லிம் பெண்கள் கற்பிழப்பு பொருள் இழப்பும் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட வேதனைகள் இன்னும் தொடர்கிறது.
அன்று நாட்டுப் பிரிவினை முஸ்லிம்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் என்பதை அபுல்கலாம் ஆசாத் போன்ற வெகு சிலரே உணர்ந்து கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் சொல் அம்பலம் ஏறவில்லை. தெற்கே கன்னியாகுமரியிலிருந்து வடக்கே காஷ்மீர் வரை, மேற்கே பாகிஸ்தானிலிருந்து கிழக்கே பங்களாதேஷ் வரை வாழ்ந்த முஸ்லிம்கள் இன உணர்வை ஈமான் உணர்வு என்று நினைத்துக் கொண்டு இந்த முஸ்லிம் மத வியாபாரிகள், அரசியல் வியாபாரிகள் பின்னால் கச்சையைக் கட்டிக் கொண்டு பெரும் திரளாகக் கைகோர்த்து நின்றனர். அதன் தீய விளைவுகளை இன்றளவும் அனுபவித்து வருகின்றனர்.
பின்னர், 1986க்குப் பிறகு அதாவது பாபரி மஸ்ஜித் விவகாரம், காஷ்மீர் விவகாரம், எல்லாம் பெரிய அளவில் தலை எடுக்கத் துவங்கியிருந்த காலகட்டம். அல்லாஹ் கால சூழல்களை மாற்றி, ஷிர்க் என்றால் என்ன? தவ்ஹீத் என்றால் என்ன? ஈமான் உணர்வு என்றால் என்ன? இன உணர்வு என்றால் என்ன? என்பதைய எல்லாம் பிரித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு வசதிகளை அருளினான். ஆனால் முஸ்லிம்கள்தான் மாறவில்லை. அந்த வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியையும், வெற்றியையும் தேடித்தரும் பாதையில் முன்னேற முன்வரவில்லை.
விளைவு, இவர்களுடைய முன்னோர்கள், மத வியாபாரிகளான மவ்லவிகளையும் அரசியல் வியாபாரிகளான முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதுதான் ஈமான் உணர்வு. இஸ்லாம் என்று எண்ணிக் கொண்டு அவர்களை குருட்டுத் தனமாகப் பின்பற்றியது போல் இவர்களும் மத வியாபாரிகளான மவ்லவி களையும், அரசியல் வியாபாரிகளான முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதுதான் ஈமான் உணர்வு இஸ்லாம் என்று எண்ணிக் கொண்டு அவர்கள் குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஷைத்தானின் ஏஜெண்டுகளான அந்த முஸ்லிம் மத வியாபாரிகளும் அரசியல் வியாபாரிகளும் உங்கள் பொருள்களிலும், உங்கள் உயிர்களிலும் (இழப்பு ஏற்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும் பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (அப்போது) நீங்கள் (கோபப்படாமல்) பொறுமையுடன் அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந் தால் (நீங்கள்தான் வெற்றியடைவீர்கள்) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும். 3:186
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக, நன்மையை ஏவி, தீமையை விட்டு (மனிதர்களை) விலக்குவாயாக. (அதனால்) உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக, நிச்சயமாக இதுதான் வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். 31:17
யாராவது (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும். 42:43
நன்மையும், தீமையும் (ஒன்றுக் கொன்று) சமமாகிவிடாது. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீங்கள் தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் உங்களுடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கள் கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காணலாம். 41:34
நீங்கள் அழகிய நன்மையைக் கொண்டு (தீமையைத்) தடுத்துக் கொள்ளுங்கள். (அப்போது, வெட்கம் மானம், ரோஷம் சூடு, சொரணை, சுயமரியாதை இல்லாதவன் என்று உங்களைப் பற்றி) அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம். 23:96
(அப்போது) “”என் இறைவனே! (கோபத்தைத்) தூண்டும் ஷைத்தானிடமிருந்து என்னை காப்பாற்றும்படி உன்னிடம் கோருகிறேன் (என்று கேளுங்கள்). 23:97
பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். 41:35
(எல்லோருக்கும் பொதுவாக) பூமியிலோ அல்லது (தனிப்பட்ட முறையில்) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்(பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. 57:22
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி எந்த ஒரு தீங்கும் (யாரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்புகிறாரோ அவருடைய உள்ளத்தை (அவன்) நேர்வழியில் நடத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். 64:11
(நம்பிக்கையாளர் யார் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள், மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கிறான். 3:134
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (எங்களிடம்) “உங்களில் வீரன் என யாரைக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “எவராலும் அடித்து வீழ்த்த முடியாதவனே வீரன்” என்று பதிலளித்தோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “அவன் வீரனல்ல” மாறாக, வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன்தான்” என்று கூறினார்கள். முஸ்லிம்: 5084
இதுபோன்ற ஈமான் உணர்வைத் தூண்டும் வசனங்களை ஹதீஃத்களைய யல்லாம் மறைத்து, திரித்து நாங்கள் என்ன கோழைகளா? பேடிகளா? என்று உணர்ச்சி ததும்ப வீர வசனம் பேசி பாபரி மஸ்ஜித் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இன உணர்வுக்கு ஆளாகி நின்ற முஸ்லிம்களுக்கு அவர்களுடைய இன உணர்வை ஈமான் உணர்வைக் காட்டி கொம்பு சீவி விட்டு இனவெறி கொள்ள வைத்தனர். காவி வெறியர்களுடன் மல்லுக்கு நிற்க வைத்து வெறுப்பை வளர்த்து, பாபர் மஸ்ஜிதை இடிபட வைத்து காவி வெறியினரை ஆட்சியில் அமர்த்தினார்கள். அன்று ஹுதைபியா உடன்படிக்கையை முன்மாதிரியாகக் காட்டி பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் விட்டுக்கொடுங்கள் என்று கூறிய ஓரிருவரின் கூற்று அம்பலம் ஏறவில்லை அப்படிக் கூறியவர்களை ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி என அவதூறு பரப்பினார்கள்.
பாபர் மஸ்ஜிதுக்காக போராடுபவர்களில் எத்தனைப் பேர் ஐங்காலத் தொழுகைகளை அதன் அதன் நேரத்தில் ஜமாஅத்துடன் பேணித் தொழுபவர்கள் என்று கணக்கெடுத்தால் வேதனையே மிஞ்சும். 19:59 இறைவாக்கில் அல்லாஹ் “அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மனஇச்சையைப் பின்பற்றினார்கள். (அதனால் ஏற்படும்) பாதகமான விளைவை அவர்கள் சந்திக்க வேண்டியது வரும்” என்று முன்னறிவிப்புச் செய்துள்ளது இன்று நடக்கிறது.
அதனால் பாபர் மஸ்ஜித் இடத்தின் பெறுமதியை விட ஆயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்தையும், பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிரையும் பெண்களின் கற்பையும் இழந்ததுடன், நூற்றுக்கணக்கானோரின் இளமையை வெஞ்சிறையில் பாழாக்கவும், நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனமுற்று வாழவும் வழி வகை செய்துள்ளனர். அதே சமயம் முஸ்லிம் சமூகத்தின் இப்படிப்பட்ட பேரிழப்புக்கு மாறாக இம்மத வியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளும், பாபரி மஸ்ஜித் விவகாரத்தை வைத்து மறுமையை நட்டப்படுத்திக் கொண்டாலும் இவ்வுலகில் பெருத்த லாபத்தையே அடைந்துள்ளனர். அல்லாஹ் அல்குர்ஆன் 2:200 இறைவாக்கில் கூறுவது போல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறைவாகவே கொடுத்து விட்டான்.
ஆனால் அவர்களை நம்பி இன உணர் வுக்கு ஆட்பட்டு அவர்களின் பின்னால் கண்மூடிச் சென்றவர்கள் பேரிழப்பிற்கும், பெரு நட்டத்திற்கும் ஆளாகி தங்கள் கைகளால் தேடிக்கொண்டதையே (பார்க்க 3:182, 4:62, 8:51, 30:41, 42:30) அனுபவித்து வருகின்றனர். இம்மையில் மட்டுமல்ல நாளை மறுமையில் இதை விட மிகமிகக் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. (பார்க்க: 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)
அல்குர்ஆன் 6:153 வசனம் கூறுவது போல் ஒரே நேர்வழி நடந்து இவ்வுலகிலும் மன அமைதியுடனும், சந்தோசத்துடனும் வாழ்ந்து நாளை மறுமையிலும் அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கலோக பெரு வாழ்வு வாழ விரும்பும் மக்களே, எந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கு மிடையில் எந்த மவ்லவியையும், ஆலிமையும், இமாமையும், ஸலஃபியையும் இடைத்தரகராகப் புகுத்தாமல், நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடித்து அவற் றின் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இருக்க முன்வாருங்கள்.
நாடு போகிற போக்கைக் கூர்ந்து கவ னிப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் ஒட்டுமொத்தமாக காவி வெறியர்களின் கைகளில் சிக்கப் போகிறது என்ற அறி குறியே தென்படுகிறது. 19:59 இறைவாக்குக் கூறுவது போல் பாதகமான விளைவை முஸ்லிம்கள் சந்திக்கப் போகிறார்கள். முஸ்லிம்கள் அல்லாஹ் அல்குர்ஆனில் 3:103 இறைவாக்கில் கட்டளையிட்டுள்ளபடி மவ்லவிகளைப் புறக்கணித்துவிட்டு அல்குர் ஆனைப் பற்றிப் பிடித்துப் பிரியாமல் ஓரணியில் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபடாதவரை முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எதிர்கால மில்லை.
*******************************************************************************
மனிதரில் ஏன் இத்தனை நிறங்கள்?
எஸ். ஹலரத் அலி, திருச்சி.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகளிருக்கின்றன. அல்குர்ஆன்: 30:22
மற்றொரு வசனத்தில், “இவ்வாறே மனிதர்கள், விலங்குகள், கால்நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகிறார்கள். அல்குர்ஆன்:35:28
அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் பல நிறங்களில் உள்ளன. இந்த நிற வேறுபாடு ஏன் எதற்கு என்பதற்கு அல்லாஹ் கூறும் காரணம், இது ஒரு அத்தாட்சியாக அவனது சான்றுகளில் ஒன்றாக இருப்பதாகக் கூறி, சிந்திக்கச் சொல்லு கின்றான். மனிதன் ஆதியில் கருப்பான களி மண்ணிலிருந்தே படைக்கப்பட்டான். ஆதி மனிதனின் நிறம் கருப்பு என்பதே ஆய்வாளர்களின் முடிவு.
ஓசை தரக்கூடிய கருப்பான களிமண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். அல்குர்ஆன்: 15:26
ஒரு ஹதீஃதில் உலகத்திலுள்ள பல நிறங்களுடைய மண்ணைக் கொண்டு வந்து ஆதம்(அலை) அவர்களைப் படைத்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கையளவி லிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் நன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் கருப்பாகவும், சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் இரண்டும் கலந்து உள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். அறிவிப்பவர்: அபூ மூஸா(ரழி), நூல்: அஹ்மத்.
அறிவியல் ரீதியாக கருப்பு என்பது ஒரு நிறமல்ல, எல்லா நிறங்களின் கூட்டுக் கலவையே கருப்பு நிறமாகிறது. கருப்பு நிற களிமண் சத்தில் படைக்கப்பட்ட ஆதம் (அலை) அவர்களின் உடல் அணுக்களில் (Genes) அவர் சந்ததிகளுக்கான எல்லா நிறங்களும் உள்ளடக்கப்பட்டே படைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களின் வாழ்விடச் சூழலின் காரணமாக தோலின் நிறம் மாறு கிறது. ஆதம்(அலை) அவர்களின் உடல் நிறம் கருப்பாகத்தான் இருக்கும் என்று நாம் குறிப்பாக சொல்ல முடியாது. காரணம், அவர் படைக்கப்பட்ட களிமண்ணைக் குறிப்பிடும் போது,
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன்(ஆதி) மனிதனைப் படைத்தான். அல்குர்ஆன்: 55:14
மண்பாண்டங்களை உருவாக்கும் குயவர்கள் களிமண்ணை குழைத்து பானைகளாக்கி நெருப்பில் சுட்ட பின்பு அதன் நிறம் செந்நிரமாகி விடுகிறது. வீடு கட்டும் செங்கல்லும் இவ்வாறே செம்மை நிறம் பெறுகிறது. ஆதம் என்னும் ஹுப்ரு சொல்லுக்கு சிவப்பு செம்மை மண் என்ற பொருளுமுண்டு. ஆகவே ஆதம்(அலை) அவர்கள் சிவந்த நிறத்திலும் இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன். மேலும் அவர்கள் பல நிற மண்ணிலிருந்து படைக்கப்பட்டி ருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியர்களாகிய நாம் மாநிறத்தில் இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார்கள். ஆப்பிரிக்க மக்கள் கருப்பு நிறத்திலிருக்கிறார்கள் மனிதர்களின் நிறம் வேறுபடுவதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்படுகின்றன. நம் மூதாதைகளின் மரபணுக்களும் ஒரு காரணமாக இருக்கலாம். நம் தோலில் மெலனின் என்ற நிறமி உள்ளது. இதுதான் நிறத்திற்கு காரணமாகிறது. பொதுவாக மனிதர்களைப் பொருத்தவரைஅவர்கள் வாழும் நிலப்பகுதிகளைப் பொறுத்து நிறம் வேறுபடுகிறது.
பூமியின் வெப்பமண்டலம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கருப்பாகவும் குளிர் நிலப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெண்மையாகவும் உள்ளனர். அவ்வாறே பனிப் பிரதேசத்தில் வாழும் மிருகங்களான புலி, கரடியும் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன. வெப்ப மண்டலத்தை சேர்ந்த தமிழகத்தின் பூர்வ குடிகள் கருப்பு நிறம் கொண்டவர்களாகவே இருக்க முடியும். அந்த அடிப்படையில் தமிழர்களின் நிறம் கருப்புதான்.
Our skin color is determined by a pigment called melanin, and while everyone has melanin (both fair and dark-skinned people), it comes in different forms and ratios, The two forms of melanin are called eumelanin and pheomelanin. Eumelanin comes in primarily brown and black hues, while pheomelanin appears as red and yellow hues. It is produced by a specialized group of cells called melanocytes.
அறிவியல் ரீதியாக மனிதர்களின் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலின் மேலுள்ள “மெலனின்’ என்ற நிறமிகள் (Pigment) தான். மெலனின் அதிகம் உள்ளவர்கள் கருப்பாகவும், மெலனின் குறைவாக உள்ளவர்கள், வெளுப்பாகவும் இருப்பார்கள். தோலின் கீழ் அடுக்கிலுள்ள “மெல னோசைட்” (Melanocytes) என்னும் செல்கள் தான் மெலனினை உற்பத்தி செய்கிறது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றிய ஆதி மனிதர்கள், ஐம்பதினாயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்த போது கருப்பு நிறம் கொண்டவர்களாவே இருந்தனர். பின்பு தோராயமாக எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை அவர்கள் கருப்பு நிறம் கொண்டவர்களாகவே வாழ்ந்ததாகவும், பின்பு வெப்பம் குறைவு, குளிர் அதிகம் காரணமாக நிறம் வெளுக்கத் துவங்கி வெண்மை யாக மாறியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி பழங்குடிகளான இங்கிலாந்து மக்க ளின் நிறம் கருப்பு என்றும், அவர்களின் விழிகள் நீல நிறத்தில் இருந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. 1903ஆம் ஆண்டு கண்டெடுக் கப்பட்ட பிரிட்டனின் பழமையான எலும்புக் கூடான செட்டர் இன மனிதனின் எலும்புக் கூட்டை டி.என்.ஏ. பரிசோத னைக்கு உட்படுத்தியது லண்டன் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகம், பின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் இதனை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் முக வடிவத்தை மீட்டெடுத்தார்கள்.
கற்கால பிரித்தானியர்கள் கருமை யான சுருண்ட முடிகளைக் கொண்டிருந்தனர். அவர்களின் விழி நீல நிறத்திலும், தோல் கருப்பு நிறத்திலும் இருந்திருக்கிறது. இப்போது இருக்கும் வெளிர் நிறம், மத்திய கிழக்கிலிருந்து பிரிட்டனுக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்த மக்களினால் வந்திருக்கலாம். எப்படி விவசாயிகள் வெளிர் நிறமாக பரிணாமம் அடைந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. வைட்டமின் ‘D’ குறைபாட்டினால் அவர்கள் வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கலாம்.
-பால் ரின்கன், 08 பிப்ரவரி, 2018, bbc.com
ஒரு மனிதனின் நிறத்தை வைத்து அவனை அடிமைப்படுத்தும் அவலம் அன்றும், இன்றும் தொடரவே செய்கிறது. இன்றைய வெள்ளையர்கள் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை நாகரீகம் இல்லா காட்டுமிராண்டியாய், வேட்டை சமூகமாக வாழ்ந்தவர்களே இவர்களுக்கு விவசாயத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஆப்பிரிக்க மத்திய கிழக்கிலிருந்து வந்த கருப்பு மனிதர்கள்தான்.
இன்றைய வெள்ளை மனிதனுக்கும், கருப்பு மனிதனுக்கும் மூதாதையர் ஒருவரே மனிதக் குழுக்கள் இடம் பெயர்ந்து பல்வேறு தட்ப வெப்பச் சூழல் நிலைகளில் வாழ்ந்து வந்ததும், அவர்களுக்குள்ளேயே பல தலைமுறைகளாக இனப்பெருக்கம் நடைபெற்றதுமே, நிறம் நிலைபெறக் காரணமாயிற்று. ஆகவே இருவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்களே என்ற குர்ஆனின் கருத்தை இன்றைய நவீன தொல்லியல் மற்றம் மரபியல் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். நிறத்தில் காரணமாக வேறுபாடு கற்பிக்க முடியாது நிறம் என்பது இயற்கையின் தகவமைப்பு (ADAPTATION) என்ற நிலையில், கருப்பு நிறம் கொண்டவன் தாழ்ந்தவனாகவும், வெள்ளை நிறம் கொண்டவன் உயர்ந்தவனாகவும் எப்படி மாறினான்?
வெள்ளை மனிதர்கள் வசிக்கும் ஐரோப்பிய நாடுகள், வளர்ந்த நாடுகளாக இருப்பதற்கும், கருப்பின மக்கள் வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகள் வளர்ச்சியில் பின்தங்கி யிருப்பதற்கும், மனிதர்களின் நிறம் எவ்விதத்திலும் காரணம் இல்லை. பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெள்ளையர்களின் வளர்ச்சி சாத்தியமாயிற்று. இதனை நிறத்துடன் பொருத்தி, வெள்ளை நிறம் கொண்டவர்கள் அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள் என்ற கருத்தியல் திட்டமிட்டு நிலை நிறுத்தப்பட்ட ஒன்றாகும். மனிதர்களின் நிற வேறுபாட்டை இஸ்லாம் முற்றாக வெறுக்கிறது.
இந்த உண்மையை அல்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள், மேலும் அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். அல்குர்ஆன்: 4:1, 49:13
இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜான “ஹஜ்ஜதுல் விதா” பேருரையில் தெளிவாகக் கூறினார்கள்.
“மானிடரே நிச்சயமாக உங்களை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருநதுதான் இறைவன் படைத்தான். மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். எனவே பிறப்பு, செல்வம் ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. ஒரு அரபி, அரபியல்லாதவனை விட உயர்ந்தவன் அல்லன். அரபி அல்லாத ஒருவன் அரபியனை விட உயர்ந்தவன் அல்லன். ஒரு வெள்ளையன் கருப்பனை விட உயர்ந்தவனல்லன். ஒரு கருப்பன் வெள்ளையனை விட உயர்ந்தவனல்ல. மனி தர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவனுடைய இறைபக்தியை பொறுத்தே அமைகிறது.
மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர், இறையச்சமுள்ளவர் அவரே இறைவனின் பார்வையில் கண்ணியமிக்கவர், மற்றொருவர் தீயவர், அவன் அல்லாஹ்வின் பார்வையில் தீயவன் துர்பாக்கியவான் அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். மனிதர்கள் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர். அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதீ, பைஹகி.
தோலின் நிறத்தைக் கொண்டு மனிதர்களை பாகுபடுத்துவதை இஸ்லாம் முற்றாக நிராகரிக்கிறது நிற வேறுபாட்டை தன் காலில் போட்டு மிதிக்கிறது எந்தளவு என்றால், உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய கருப்பு நிற அடிமையயாருவர் உங்களுக்கு தலைவராக்க ஆக்கப்பட்டாலும் அவரின் சொல்லைக் கேளுங்கள். அவருக்கு கீழ்ப்படியுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: 7142
கருப்பு நிறமுடைய மனிதர்களிடத்தில் அதிகளவில் மெலனின் என்னும் நிறமி அணுக்கள் இருப்பதால் இவர்களை சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் தாக்குவதில்லை. வெள்ளைத்தோல் மனிதர்களிடத்தில் மெலனின் நிறமிகள் குறைவாக இருப்பதால் இவர்கள் சூரிய புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்படுகின்றனர். இது போலவே பறவைகளிலும் கருப்பு நிறமுடைய பறவைகளின் இறக்கைகள் சூரிய ஒளியை அதிகமாக கிரகித்துக் கொண்டு வெப்பமடைவதால் அவை வானில் எளிதாக பறப்பதற்கு உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. கருப்பு நிறத்துக்கு ஒளியை உட்கிரகிக்கும் ஆற்றல் உள்ளது. ஏனெனில் அனைத்து நிறங்களின் கலவையே கருப்பு.
Dark feathers may help birds fly more efficiently, They heat up the animals wings and the surrounding air, which might help increase airflow over the wing.
மனிதர்கள் பல நிறங்களில் இருப்பது போல அவர்கள் பேசும் மொழியும் வேறுபடுகிறது. மனிதர்கள் வாழும் காலம் குறைவு. ஆனால் அவர்கள் பேசும் மொழி தொன்றுதொட்டு வருகிறது. மொழியை நாம் உருவாக்கவில்லை. ஆனால் பயன்படுத்துகிறோம். மனித உறவுகள் வலுப்பட பேச்சு உதவுகிறது. உறவை வலுப்படுத்த உதவும் கருவியே மொழி.
மொழி எப்படித் தோன்றியது, இயற் கையாக தோன்றியது என்றால் உலக மக்கள் அனைவரும் ஒரே மொழியைத்தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிறக்கும் விதம் ஒன்று போல் இருந்தாலும், மனிதன் பேசும் பேச்சில், மொழியில் மட்டும் ஒற்றுமை இல்லை, இடத்திற்கு இடம் இனத்திற்கு இனம் வேறுபடுகிறது. காரணம், மொழி மக்களின் அடையாளம். ஓர் இனத்தவரைக் குறிக்கும் குறியீடு மனிதரை இணைக்கும் உறவுச் சங்கிலி, மொழிக்கும் வளர்ச்சி உண்டு, மாற்றம் உண்டு, வீழ்ச்சியும் உண்டு, உலக மனிதர்கள் அனைவருக்கும் ஒன்றுபோலவே உடலமைப்புகள், உடலுறுப்புகள் இருக்கின்றன. உதாரணமாக அனைத்து மனிதர்களுக்கும் மூளை பொதுவாகவே உள்ளது, பேசுவதற்கான நாக்கும் பொதுவாகவே உள்ளது. சொற்களை மொழிவதற்கு உதவும் உதரவிதானம் என்று சொல்லப்படும் எல்லாமே ஒன்றாகவே உள்ளது. ஆயினும் ஒவ்வொரு பிரதேச மனிதனும் வெவ்வேறு மொழியில் பேசுகின்றான்.
இதைத்தான் இறைவன் தனது அத் தாட்சி என்றும், தன் வல்லமைக்கு சான்றாகவும் கூறுகின்றான்.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகளிருக்கின்றன. அல்குர்ஆன்:30:22
சிந்திக்கக் கூடிய அறிவுள்ள மனிதனுக்கு இதில் நிச்சயமாக பல அத்தாட்சிகள் உள்ளதாகக் கூறி ஆய்வு செய்யச் சொல்கிறான். மனிதன் விந்துத் துளியிலிருந்தே குழந்தைகள் உருவாகிப் பிறக்கின்றன. ஒரே துளி நீர்தான். ஆயினும் பிறக்கும் குழந்தைகள் நிறம் ஒன்று போல இருப்பதில்லை. ஒரு தாய் தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் பிறப்பதில்லை. கருப்பு சிவப்பு, வெளுப்பு இரண்டும் கலந்த மாநிறம் என்று பல நிறங்களில் பிறக்கின்றன.
இதற்குக் காரணம் அக்குழந்தையின் மரபு வழி முன்னோர்கள் எவரேனும் அந்த நிறத்தில் இருந்திருப்பார்கள். (Skin colour genes) மரபியல் ஜீன்கள் வழிவழியாக அடுத்த தலைமுறைக்கு நிற ஜீன்களை கடத்தும்போது இப்படியான தாய் தந்தைக்கு இல்லாத புது நிறத்தில் குழந்தை பிறப்ப துண்டு. இன்றைய நவீன மரபியல் ஆய்வுகள் இதை நிரூபிக்கின்றன.
பிறக்கும் குழந்தையின் நிற வேறுபாட்டிற்கு காரணமாகும் மரபியல் அறிவியலை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடையை) எனக்குக் கருப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான். (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?) என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், “உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “ஆம்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், “அதன் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு” என்று பதிலளித்தார்,
நபி(ஸல்) அவர்கள், “உன் ஒட்டகங்களிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், “(தன்னுடைய தாயிடம் இல்லாத) நிறம் அதற்கு மட்டும் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். அதற்கவர், “அதன்(தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், “உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையாரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும்” என்று கூறி னார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி), புகாரி : 5305.
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக, அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், மிக மன்னிப்பவன். அல்குர்ஆன்: 35:28
*******************************************************************************
ஜும்ஆ தொழுகை பள்ளியிலா? வீட்டிலா?
எம் அப்துல் ஹமீத்
கொரோனா நோய் பரவாமல் தடுக்கவும் அதற்காக சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்த எல்லா இடங்களிலும், கோவில்கள், பள்ளிவாசல்கள், சர்ச்சுகளிலும் கூட மக்கள் கூடுவது தற்போது ஊரடங்கு உத்தரவால் தடுக்கப்பட்டுள்ளது. மீறியவர்கள் சில இடங்களில் அடித்து விரட்டப்பட்டனர். தினசரி ஐவேளை கூட்டுத் தொழுகையையும், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையையும் முஸ்லிம்கள் கட்டாயமாக பள்ளிவாசலில் தொழுதாக வேண்டிய கடமையில் இருக்கிறார்கள். தொழமுடியாத நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதால், இறைவனால்கட்டாயமாக்கப்பட்ட தொழுகைகளை அரசின் கட்டாயத்தால் வீட்டில் தொழுது வருகிறார்கள் முஸ்லிம்கள்.
இந்த சூழலில் ஜும்ஆ தொழுகையை வீட்டில் தொழுவது கூடுமா? கூடாதா? என்ற சந்தேகம் ஏற்பட்டு, கூடும் என்பவர்கள் அவரவர் வீட்டில் ஜும்ஆ தொழுகையை அவர்களுக்குள் நடத்தி வருகிறார்கள். கூடாது என்பவர்கள் லுஹர் தொழு கையை அவரவர் வீட்டில் தொழுது வருகிறார்கள். இவ்வாறாக பல ஜும்ஆ தினங்களை இரு பிரிவினரும் கடந்து விட்டனர்.
இதில் யார் சரி? இதற்கான விடையை ஆராயும் முன் (1) ஜும்ஆ தினத்தில், வீட்டில் தொழ அனுமதி இருக்கிறதா என்பதையும், (2) ஜும்ஆ தினத்தில் வீட்டில் தொழ வேண்டியது ஜும்ஆ தொழுகையா அல்லது லுஹர் தொழுகையா என்பதையும் ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
கீழுள்ள இரு இறை வசனங்களை நினைவிற் கொண்டு இதனை விரிவாகப் பார்ப்போம்.
- அந்நாளில் மக்கள் தங்கள் அமல்கள் காண்பிக்கப்படும் பொருட்டு பல பிரிவினராக பிரிந்து வருவார்கள். (அல்குர்ஆன்:99:6)
- கியாம நாளன்று அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். (29:13)
இப்போது அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் தீர்ப்புக்கு வாருங்கள். ஜும்ஆ தினத்தில் வீட்டில் தொழ அனுமதி இல்லை என்று சுலபமாக கூறிவிடலாம். பள்ளியில்தான் தொழுதாக வேண்டும். ஆனால் சிரமம் ஏற்பட்டால் அவரவர் வீடுகளில் தொழலாம் என்பது மார்க்கம் தரும் அனுமதி அப்படி அனுமதி தரும் ஆயத்துக்கள், ஹதீஃதுகளை இனி காண்போம்.
ஆதாரம் : 1. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. குர்ஆன்:2:286
ஆதாரம் : 2. நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்து வதில்லை. குர்ஆன் : 6:152
ஐவேளை தொழுகையை அதனதன் நேரத்தில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாக தொழுதே ஆகவேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் பள்ளியிலோ, வேறு இடத்திலோ ஜமாஅத்தாக தொழ முடியாத சூழல்! என்ன செய்வது? மேலே உள்ள ஆயத்துக் களின் அடிப்படையில் வேறு வழி இல்லா மல் அவரவர் வீடுகளில் உள்ளவர்கள் சேர்ந்து வீட்டில் மட்டுமே தொழுதாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. வீடுகளில் தொழ கீழேயுள்ள ஹதீஃத்கள் அனுமதித்திருப்பது, அல்லாஹ்வின் மார்க் கமிது என்ற ஆறுதலைத் தருகிறது.
ஆதாரம் : 3. அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர் கள் அறிவிப்பதாவது:
“அல்லாஹ்வின் தூதரே எந்த பள்ளி வாசல் முதலில் கட்டப்பட்டது?” என்று நான் வினவினேன், “அல் மஸ்ஜித் அல் ஹரம்” (மக்கா) என்று கூறினார்கள். “பிறகு எது?’ என்று நான் வின வினேன். “பிறகு, அல் மஸ்ஜித் அல் அக்ஸா’ (ஜெருசலம்) என்று கூறினார்கள். “அவற்றுக்கு இடையே எத்தனை ஆண்டுகள் (இருந்தன)?’ என்று நான் வினவினேன். நாற்பது ஆண்டுகள் ஆனால், பூமி முழுதும் உமக்கு தொழுமிடமாகும். ஆகையால் தொழுகை நேரம் வந்துவிட்டால், நீ எங்கு இருக்கிறாயோ அங்கு தொழுதுகொள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள். (நூல்: சுனன் இப்னுமாஜா (ஆங்கிலம்) எண். 753, புத்தகம்:4, வரிசை எண்: 19
பூமி முழுவதும் தொழுமிடம்! வீட்டில் தொழ அதிகாரபூர்வ அனுமதி கிடைத்து விட்டது!
ஆதாரம் : 4.
பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறிய பிறகு, ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று கூறும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார். மக்கள் இதனை வெறுப்பது போல் இருந்தனர். என்னை விட மிகவும் சிறந்தவரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்றும், நிச்சயமாக ஜும்ஆ அவசியமானதுதான், எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்கு சிரமம் சருவதை நான் விரும்பவில்லை என்றும் கூறினார்கள். (அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ்(ரழி), புகாரி எண்: 901)
இந்த ஹதீஃதிலிருந்து, சிரமம் காரணமாக வீடுகளில் தொழுது கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி தந்துள்ளதை அறியமுடிகிறது. இன்னும் கூடுதலாக நிர்பந்தத்தின் காரணமாக வீடுகளில் ஜும்ஆ தொழுவதற்கு குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தடையேதும் இல்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆதாரம் : 5. அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது சில வேளைகளில் தொழு கை(யின் நேரம்) வந்துவிடும். உடனே தாம் அமரும் விரிப்பை சுத்தம் செய்திடுமாறு பணிப்பார்கள். அவ்வாறே அது பெருக்கி சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப் படும்.பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்கு பின்னால் நிற்போம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். மக்களுடைய விரிப்பு (அன்று) பேரீச்ச மட்டையால் செய்யப்பட்டதாகவே இருந்தது. முஸ்லிம் எண்.1169
ஃபர்ள் தொழுகையை வீட்டில் ஜமாஅத்தாக தொழ இந்த ஹதீஃத் இடமளிப்பதால், நிர்பந்தத்தின் அடிப்படையில் ஃபர்ளான ஜும்ஆ தொழுகையை வீட்டில் தொழலாம் என அறியவும் முடிகிறது.
ஆதாரம் : 6. “அய்லாவின் அதிகாரியாக இருந்த ருசைக் இப்னு ஹகீம், வாதில் குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு Uஹாப் அவர்களுக்கு எழுதிக் கேட்டார். ஜும்ஆ நடத்த இப்னு Uஹாப் அவர்கள் கட்டளையிட்டார்கள். அக்கட்டளைக்கு ஆதாரமாக இப்னு உமர்(ரழி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபி மொழியை ஆதாரமாகக் காட்டினார்கள். “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள், தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்திற்கு பொறுப் பாளியாவான் தன் பொறுப்பில் உள்ளவரைப் பற்றி அவர் கேட்கப்படுவார். ஒரு பெண் கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்கு பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான். ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான் என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர்(ரழி) வழியாக ஸாலிம்புகாரி: ரஅக எண். 893
ஆண் மகன் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவரைப் பற்றி அவர் கேட்கப்படுவார் என்பதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்ததை அதாவது ஜும்ஆ நாளில் ஜும்ஆ தொழுகையை நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுது வந்துள்ளார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், குடும்பத்திலுள்ள ஆண்மகன் நிர்பந்தத்தின் காரணமாக அவரது வீட்டில் ஜும்ஆ தொழுகை நடத்த அவருக்கு உரிமை உண்டு. கீழே உள்ள ஹதீஃத் அவர் செயலுக்கு மேலும் ஆதாரமாக அமைந்து விட்டது.
ஆதாரம் : 7. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள் மீது நின்றபடி “மக்கள் ஜும்ஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகி இருக்கட்டும் அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்து விடுவான். பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர் என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி), அபூஹுரைரா(ரழி), ஹகம் பின் மீனா உ (ரஹ்) ஆகியோர் இரு அறிவிப்பாளர் தொடரும் உண்டு. (நூல்: முஸ்லிம் எண்: 1570)
மேற்கண்ட ஆயத்துக்கள் ஹதீஃத்கள் அடிப்படையில் ஜும்ஆ தொழுகையை நிர் பந்தத்தின் காரணமாக வீட்டில் தொழலாம் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டோம்.
அடுத்து அவரவர் வீடுகளில் தொழ வேண்டியது ஜும்ஆ தொழுகையா அல்லது லுஹர் தொழுகையா என்பதை கவனிப்போம்.
ஆதாரம் : 8. ஈமான் கொண்டவர்களே ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை தியானிக்க விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். 62:9
ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை திக்ர் செய்ய விரைந்து செல்லுங்கள் என்று இந்த இறை வசனம் கூறுகிறது. திக்ரில்லாஹ் என்ற வார்த்தையில், திக்ர என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. இங்கே திக்ர் என்பது தொழுகையை குறிப்பதாக இருக்கிறது. எனவே, ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால், அல்லாஹ் வைத் தொழ விரைந்து செல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஜும்ஆ தினத்தில் ஜும்ஆ தொழுகையை தொழத்தான் அல்லாஹ் கட்டளையிட்டு இருக்கிறான். எனவே, நிர்பந்தத்தின் காரணமாக வீட்டில் தொழுபவர்கள் ஜும்ஆ தினத்தில் ஜும்ஆ தொழுகையைத் தான் தொழுதாக வேண்டும்.
ஜும்ஆவுக்கு பதிலாக வீட்டில் லுஹர் தொழலாம் என்பவர்கள் இன்று மூன்று ஜும்ஆவை விட்டுவிட்ட நிலைக்கு ஆளாகிவிட்ட அனுபவமும் அவர்களுக்கு இப்போது கிடைத்து விட்டது. மூன்று ஜும்ஆவை விடக் கூடாது என்ற ஹதீஃதைப் பாருங்கள்.\
“மூன்று ஜும்ஆவை அலட்சியமாக கைவிட்டவரின் இதயத்தின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அறிவிப்பாளர் : அபூ அல்ஜஹ்து அத்தம்ரி(ரழி), அபூதாவூத் எண். 1052, நஸாயீ (ஆங்கிலம்) வால்யூம் 2, கிதாப்: 14, வரிசை எண்.1378.
ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக லுஹர் தொழலாம் என்று கேள்விப்பட்ட செய்திக்கு ஆதாரம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, ஜும்ஆ நாளில் ஜும்ஆ தொழுகையை தொழும்படி அல்லாஹ் கட்டளை இட்ட பிறகும், யாரோ சொன்னதைக் கேட்டு லுஹர் தொழுவது எப்படி சரியாகும்?
“கியாம நாளன்று அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்” (29:13) என்று அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கை செய்த இறை வசனத்தை மனதிலேற்றி, அல்லாஹ்வுக்கு பயந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு தவறிலிருந்து விடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளியில், ஜும்ஆ தொழவில்லை என்றால், அதற்கான பரிகாரம் லுஹர் தொழுவது அல்ல, தர்மம் செய்ய வேண்டும் என்பதை கீழே காண்பிக்கப்பட்ட ஹதீஃதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதாரம் : 9. “யார் ஜும்ஆவை வேண்டுமென்றே விட்டுவிடுகின்றாரோ அவர் ஒரு தீனாரை கொடுக்க வேண்டும். அது அவரிடம் இல்லை என்றால் அப்போது அவர் அரை தீனார் (கொடுக்கவும்)” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்ற அறிவிப்பில், “வேண்டுமென்றே” என்பது குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: சமுரா(ரழி), நூல்: நஸாயீ (ஆங்கிலம்) கிதாப்: ஜும்ஆ, கிதாப் எண். 14, வரிசை எண். 9, தரம் : ஸஹீஹ்.
இதே ஹதீஃதை காலித் பின் கைஸ்(ரழி) அவர்களும் வேறு அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் அறிவிக்கிறார். ஹதீஃதின் கருத்து ஒன்றாகவே இருக்கிறது என்று இமாம் அபூ தாவூத் அவர்கள் கூறினார்.
நிர்பந்தத்தின் காரணமாக வீட்டில் தொழ நேரிடும்போது ஜும்ஆ நாளில் ஜும்ஆ தொழுகைதான் தொழ வேண்டும் என்பதை அறியத் தந்த அல்லாஹ்வும் அவன் தூதரும் வழங்கிய தீர்ப்பை ஏற்று செயல்படு வோமாக. நிர்பந்த சூழல் மாறி கடமையான எல்லா தொழுகைகளையும் பள்ளிவாசலில் தொழ அல்லாஹ்விடம் ஈடுபாட்டுடன் பிரார்த்திப்போம்.
வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் சகோதரர் ஒருவர் இது சம்பந்தமாக அவரது கருத்துக்களைக் கூறி ஆடியோ ஒன்றை பதிந்துள்ளார். அவரது பேச்சை எமது விளக் கத்துடன் கீழே தந்துள்ளோம். கவனிக்கவும்.
கேள்வி : “இது ஒரு சோதனை எந்த ஆதாரத்தில் வீட்டில் தொழ முடியும்? இயல் புக்கு மாற்றமாகிறது. அதாவது பள்ளியில் தொழ வேண்டும் என்ற இயல்புக்கு இது மாற்றமாகி விடுகிறது” என்கிறார்.
பதில்: சரியாக சொல்கிறார். இது சோதனை தான்! ஒப்புக் கொள்கிறோம். இயல்புக்கு இது மாற்றமாகி இருப்பதால்தான் நிர்பந் தம் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துக் கொள்கிறோம்.
கேள்வி : வீடுகளில் 3 பேர் 4 பேர் தொழுகிறார்கள். 200 வீடுகளில் ஜும்மா என்றால் மலக்குகள் வருவார்களா?
பதில் : அல்லாஹ்வின் வல்லமையின் மீது தொடுக்கப்பட்ட வினா இது. கிராமன் காத்தியீன் – கண்ணியம் வாய்ந்த இரண்டு எழுத்தாளர்களை (2 மலக்குகள்) ஒவ்வொரு மனிதன் மீதும் நியமித்த அல்லாஹ்வுக்கு (பார்க்க இறை வசனம் 82:10,11) 200 வீடுகள் மட்டும் அல்ல. கணக்கிட முடியாத வீடுகளுக்கும் அல்லாஹ் மலக்குகளை அனுப்ப வல்லமை படைத்தவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கேள்வி: திட்டமிட்டு அலட்சியம் செய்து வேண்டுமென்றே விடுகிறோம்? 3 ஜும்ஆவை சேர்ந்தாற்போல் விடக்கூடாது என்பதற்கு ஆதாரம் வேண்டும்.
பதில் : என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்பதை அறியத் தாருங்கள். ஹதீஃத் ஆதாரம் கேட்கிறீர்கள். மேலே தரப்பட்டிருக்கிறது.
கேள்வி : ஜும்மாவுக்கு அழைக்கப்பட வேண்டும்? வீட்டிலிருந்து அழைப்பார் களா?
பதில் : ஆம்! பாங்கு சொல்வது சுன்னத். அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழிமுறை அது தானே வீட்டில் பாங்கு சொல்லக் கூடாது என்று நினைக்கிறீர்களா? வீட்டிலும் பாங்கு சொல்லலாம். காட்டிலும் பாங்கு சொல்லலாம். ஹதீஃத்களை பாருங்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் (ரழி) அறிவித்தார். அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி) என்னிடம், நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்கு செல்வதிலும் ஆசைப்படுவதைக் காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப்புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்தி சொல்வீராக. காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும், அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள் எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன் என் றும் கூறினார்கள். நூல்:புகாரி:609
மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரழி) அறிவித்தார்: சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சென் றோம். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையுடையவர்களாகவும் இருந்தார்கள் நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பச் சென்று தங்குங்கள், அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்; என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும் என்று கூறினார்கள். மேலும், அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவில்லை. நூல் : புகாரி: 631
கேள்வி : 2 ரக்அத் தொழாமல் உட்கார்ந்து விடுபவரை இமாம் தொழு எனக் கூற வேண்டும்.
பதில் : அதுதான் ஜும்ஆ தொழுகைக்கு முன்னுள்ள நபி(ஸல்) வழிமுறை அதை நிறைவேற்றுவோம்.
கேள்வி : வியாபாரத்தை விட வேண்டும் (என்று ஆயத்தில் சொல்லப்பட்டுள்ளது)
பதில் : வியாபாரம் நடத்தினால் தானே, விடமுடியும். ஊரடங்கு காரணமாக வியாபாரத்தை மூடிவிட்ட நிர்பந்தம் ஏற்பட்டு விட்ட பிறகு, இந்த கேள்விகளுக்கெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.
கேள்வி : அல்லாஹ்வை நினைவு கூற பள்ளிக்குத்தான் வரவேண்டும்.
பதில் : எங்கும் நினைவு கூறலாம். தொழுகையைப் பொறுத்தவரை நிர்பந்தத்தில் வீட்டிலும் தொழுவதற்கு ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி : லுஹர் தொழுதால் ஜும்ஆ நன்மையைக் கொடுக்கணும்.
பதில் : லுஹர் தொழுகை ஜும்ஆ நாள் அன்று கிடையாது. ஜும்ஆ நாளில் ஜும்ஆத்தான் தொழ வேண்டும். அதற்கு பதிலாக லுஹர் தொழுவது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத அமல் பித்அத் ஆகும்.
கேள்வி : அல்லாஹ்வின் அருளைத் தேட புறப்பட்டுப் போக முடியுமா?
பதில் : ஊரடங்கால் வியாபாரமே இல்லை, அப்புறம் எங்கே புறப்பட்டு போவது?
கேள்வி : நிர்பந்தம் என்றால் இயல்பான சட்டத்திலிருந்து மாற வேண்டும்.
பதில் : சரியாக சொன்னீர்கள், அதனால் தான் வீட்டில் தொழ வேண்டி இருக்கிறது.
கேள்வி : மலக்கு பள்ளிக்கு வருபவர்களை வாயிலில் நின்று நன்மையை பதிவு செய்றாங்க, மலக்குகள் வீட்டு வாசலில் நிப்பாட்டுவாங்களா?
பதில் : வீட்டுக்காரர்களால் எப்படி நிப்பாட்ட முடியும்? நிப்பாட்ட வலிமை உடையவன் அல்லாஹ் மட்டுமே, வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு எது வசதியான இடமோ, அல்லாஹ்வின் நாட்டப்படி அங்கே அவர்கள் நின்று கொள்வார்கள்.
கேள்வி : ஏட்டை மூடுகிறார்கள், பயானைக் கேட்கிறார்கள்.
பதில் : ஜும்ஆ நாளில் பள்ளியில் ஜும்ஆ தொழ முடியாத நிர்பந்தத்தால் வீட்டில் ஜும்மாவை தொழுகிறோம். அப்போது இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் ஏட்டை மூடுவதும், பயானைக் கேட்பதுமான, மலக்குகளின் மாமூலான பணியை மலக்குகள் செய்து கொள்வார்கள்.
*******************************************************************************
பொதுவான வேதனை வரும்போது நல்லவர்களையும் சேர்த்தே அது பாதிக்கும்
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
நன்மையை ஏவித் தீமையைத் தடுக்காமை அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்துகின்ற மிக முக்கியமானதொரு காரணியாகும். இது உண்மையில் பலரால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு காரணியாகவும் இருக்கிறது. தான் மாத்திரம் ஒரு ஸாலிஹானவராக வாழ்ந்தால் மாத்திரம் போதும் தமது சமூகத்தில் நன்மையை ஏவவோ தீமையைத் தடுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பதன் அபாயத்தைப் பெரும்பாலானவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
ஒரு மனிதன் பாவம் செய்யக்கூடிய வர்களை விட்டும் ஒதுங்கித் தனித்து நின்று தன்னளவில் மட்டும் வணக்கங்கள் செய்து வாழ்வதால் மட்டும் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றுவிட முடியாது. அவன் தனித்து நின்று பாவங்களைத் தன்னளவில் மட்டும் தவிர்த்து வாழ்ந்த போதிலும் அதில் எவ்விதப் பயனும் இருக்காது இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வின் கோபப் பார்வை அவனில் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கும் என்பதை ஏராளமான இறை வசனங்களும் இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளும் சொல்லிக் காட்டுகின்றது.
நீங்கள் ஒரு வேதனையைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை(அது மற்ற நல்லவர்களையும் தாக்கும்) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் ஆவான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். (8:25) இங்கு உயர்ந்தோனாகிய அல்லாஹ்.
தனது அடியார்களை நோக்கி ஒரு சோதனை, வேதனை குறித்து எச்சரிக்கின்றான். அந்தச் சோதனையும், வேதனையும், தீயோர், நல்லோர், அனைவரையும் தாக்கலாம், குற்றவாளிகளையும், பாவங்களில் நேரடியாக ஈடுபட்டோரையும், மாத்திரம் அது தாக்கும் என்பதல்ல, அனைவரையும் அது தீண்டும். அதைத் தடுக்கவோ நீக்கவோ இயலாது.
எல்லாருக்கும் வரும் பொதுவான வேதனை, சோதனை :
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஸுபைர் பின் அல் அவ்வாம்(ரழி) அவர்களிடம் அபூ அப்தில்லாஹ் அவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? கலீஃபா(உஸ்மான் ரழி) அவர்கள் (கிளர்ச்சியாளர்களால்) படுகொலை செய்யப்படும்வரை அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது வந்து அவர்களுக்காகப் பழிவாங்குமாறு கோருகிறீர்களே?” என்று கேட்டோம். அதற்கு அவர்,
நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி), ஆகியோரின் காலங்களிலும் அந்தச் சோதனை தொடர்பாக, நீங்கள் ஒரு வேதனையைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள், அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை. (அது மற்ற நல்லவர்களையும் தாக்கும்) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் ஆவான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். (8:25) என்னும் வசனத்தை ஓதியுள்ளோம்.
ஆனால் அந்தச் சோதனைக்கு நாங்களே ஆளாவோம் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை, இறுதியில் எங்களுக்கிடையே அது நிகழ்ந்துவிட்டது என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத், முஸ்னது அல்பஸ்ஸார், இப்னு கஸீர்: 4:63)
ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) கூறியதாவது: ஸுபைர் பின் அல்அவ்வாம்(ரழி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது இந்த (8:25) ஆவது வசனத்தின் மூலம் அச்சுறுத்தப்பட்டு வந்தோம். ஆனால் அந்த வசனம் பிரத்தியோகமாக எங்களுக்காகவே சொல்லப்பட்டது என்று நாங்கள் நினைக்கவேயில்லை என்று கூறினார்கள். மற்றுமோர் அறிவிப்பில் ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) அவர்கள், இந்த வசனம் அலீ(ரழி) உஸ்மான்(ரழி) தல்ஹா(ரழி) ஸுபைர்(ரழி) ஆகியோர் தொடர்பாக அருளப்பெற்றது என்று கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் தபரீ)
ஸுபைர் பின் அல் அவ்வாம்(ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நீண்டகாலம் இந்த (8:25) ஆவது வசனத்தை ஓதியுள்ளேன். அப்போதெல்லாம் இந்த வசனம் எங்களைத்தான் குறிக்கிறது என்று ஒரு போதும் நான் கருதியதில்லை. இறுதியில் நாங்களே இந்த வசனத்துக்கு இலக்காகிவிட்டோம் என்று (இப்னு கஸீர்: 4:64)
சுத்தீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம் பத்ருப் போரில் கலந்து கொண்ட நபித்தோழர்கள் தொடர்பாக மட்டுமே அருளப் பெற்றது. இதில் குறிப்பிடப்பட்ட அந்தச் சோதனை “ஜமல் போரின்போது அவர்களைத் தாக்கிற்று. அவர்கள் தமக்கிடையிலேயே சண்டையிட்டுக் கொண்டார்கள். (தஃப்ஸீர் தபரீ, பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களான தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரழி) ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரழி) ஆகி யோர் ஹிஜ்ரி 36ஆம் ஆண்டு நடந்த ஜமல் போரில் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (தஃப்ஸீர் ஃபத்ஹுல் கதீர்,இப்னு கஸீர்: 4:64)
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில் இங்கு “நீங்கள் ஒரு வேதனையைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். அது உங்களில் யார் அநியாயம் செய்தார்களோ அவர்களை மட்டுமே அதாவது நபித்தோழர்களாகிய உங்களை மட்டுமே தாக்காது மாறாக அது மற்றுவர்களையும் தாக்கும் என்று கூறினார்கள். மற்றுமோர் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அளித்துள்ள விளக்கமாவது, இறை நம்பிக்கை கொண்டவர்கள் தமக்கிடையே தீமை நிலைபெறுவதை அனுமதிக்காக் கூடாது தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த வசனத்தில் அவரகளுக்கு அல்லாஹ் ஆணையிடுகின்றான். அவ்வாறு செய்தால் தீயவர்கள், நல்லவர்கள் என அனைவரையும் அல்லாஹ் வேதனை செய்வான் என்றார்கள். (தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்: 4:64)
இதுவே மிகவும் சிறந்த விளக்கமாகும் இதனால்தான் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறும்போது “இந்த வசனம் நபித்தோழர்களுக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையன்று அவர்களுக்குப் பின்னர் வந்த உங்களுக்கும் சேர்த்ததுதான்” என்று கூறினார்கள். ஆக இந்த வசனம் நபித்தோழர்களை முன்னிலைப்படுத்தினாலும் இதில் வந்துள்ள எச்சரிக்கையானது நபித்தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருந்தும் என்பதே சரியான கருத்தாகும். (இப்னு கஸீர் (ரஹ்) : 4:65)
அதற்கான ஏனைய குர்ஆன் வசனங்களின் சான்றுகள் :
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நன்மையை ஏவித் தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் ஒரு கூட்டத்தினர் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 3:104ஆவர்.
நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்குக்கு முன்னர் சென்ற தலைமுறையினரின் பூமியின் குழப்பம் செய்வதைத் தடுக்கும் (சீர்திருத்தவாதிகளான) நன்மையாளர்கள் (பரவலாக) இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்த (அ)வர்கள் சொகுசு வாழ்க்கையிலேயே மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர். (11:116)
காலத்தின் மீது சத்தியமாக மனிதன் மாபெரும் நஷ்டத்தில் இருக்கின்றான் எனினும் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு நற்கிரிகைகள் புரிந்து ஒருவர் மற்றொரு வருக்கு அதை ஏவிக் கொண்டும் அதன் மீது பொறுமையைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் தவிர, (103:1-3)
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர், தீமையைத் தடுக்கின்றனர், நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். திருக்குர்ஆன் 3:114
ஒருமுறை அபூபக்கர் அஸ்ஸித்தீக்(ரழி) அவர்கள் உரையாற்றுவதற்காக எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர் கூறினார்கள். மக்களே நீங்கள் “இறை நம்பிக்கை கொண்டோரே! உங்களை நீங்களே (தீமையிலிருந்து பாது) காத்துக் கொள்ளுங்கள். (5:105) எனும் இந்த வசனத்தை ஓதுகின்றீர்கள். ஆனால் அதற்கான சரியான பொருளில் அதை நீங்கள் பயன்படுத்துவதில்லை. ஒருமுறை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், மக்கள் தமது சமூகத்தில் நடக்கின்ற தீமையைத் தடுத்து மாற்ற முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களாயின் அவர்கள் அனைவருக்கும் பொதுவான தண்டனையை அல்லாஹ் வழங்கக்கூடும் என்று கூறியதாக நான் செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், இப்னு கஸீர் 3:349) மேலும் இஸ்ரவேலர்கள்.
அல்லாஹ்வின் ஆணைக்கு மாறு செய்து அவனிடம் அளித்த உறுதிமொழியை உடைத்து தடை செய்யப்பட்ட சனிக்கிழமைகளில் வரம்பு மீறி வஞ்சகமாக மீன் பிடித்ததாலும், (2:65), நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாறிவிடுங்கள் என்று அவர்களிடம் நாம் கூறினோம். (7:166, 5:60, 2:65) அந்த இஸ்ரவேலர்களில் சிலரைக் குரங்குகளாகவும், சிலரைப் பன்றிகளாகவும் இறைவன் மாற்றினான். அதில் அவர்களின் இளைஞர்கள் குரங்குகளாகவும் முதியவர்கள் பன்றிகளாகவும் உருமாறினார்கள். அதன் பின்னர் அவர்கள் மூன்று நாட்களே உயிர் வாழ்ந்தார்கள். உருமாற்றப்பட்ட யாரும் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்ததில்லை அவர்கள் அதற்குப் பிறகு உண்பதோ பருகுவதோ ஈனுவதோ கிடையாது என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:241249)
இது, சவூதி அரேபியாவிலுள்ள மத்யனுக்கும் எகிப்தின் சினாய் தீபகற்பத்திலுள்ள தூர் மலைக்கும் இடையே உள்ள ஊராகிய “அய்லா’ எனும் ஓர் மீனவ கடலோரக் கிராமத்தில் வசித்து வந்த இஸ்ர வேலர்களான யூதர்களிடம் மீன் பிடிப்பதைக் கைவிட்டு புனித சனிக்கிழமையைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்றும் அவர்களது புனித நாளாகிய அந்த சனிக்கிழமை நாளில் இறைவனின் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருந்தான்.
அதே வேளை அல்லாஹ் அவர்களைச் சோதிப்பதற்காகத் தடை செய்யப்பட்ட அந்த சனிக்கிழமையில்தான் அவர்களிடம் மீன்களைக் கூட்டங் கூட்டமாக நீரின் மேல் மட்டத்திற்கு அனுப்பிவைத்தான். சனிக்கிழமையல்லாத வேறு நாட்களில் அவை அவர்களிடம் அவ்வாறு வருவதில்லை. அதனால் அந்த மக்கள் அல்லாஹ் புனிதமாக்கியவற்றைக் கெடுப்பதற்காகத் தந்திரம் செய்தனர். அதற்காகச் சில வெளிக்காரணிகளை அவர்கள் கையாண்டார்கள் ஆனால் அவை அந்தரங்கத்தில் இறை சட்ட மீறலாகவே இருந்தன. ஷ
எவ்வாறெனில் சனிக்கிழமைகளில் மாத்திரம் கொத்துக் கொத்தாக வரும் மீன்களைப் பிடிப்பதற்காக அதற்கு முதல் நாளே மீன்பிடி வலைகளையும் மற்றுமுண்டான மீன்பிடிக் கருவிகளையும் கடலில் போட்டு வைத்து விடுவார்கள். வழமை போன்று சனிக்கிழமையன்று மிகுதியாக வரும் மீன்கள் அந்த வலைகளிலும் இதர உபகரணங்களிலும் வந்து சிக்கிக் கொள்ளும் அந்த நாளின் பகல் பொழுது முழுவதும் அவை அதிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.
அன்றைய மாலை நேரமாகி (மஃரிபுடைய) நேரமும் தாண்டி இருள் வந்ததும் புனித சனிக்கிழமை முடிந்துவிட்டது அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையும் ஆரம்பித்து விட்டது எனக் கருதி அந்நேரமே வலைகளிலும் ஏனைய உபகரணங்களிலும் அகப்பட்டிருந்த மீன்களைப் பிடித்துக் கொள்வார்கள்.
இதன் காரணமாகவே அல்லாஹ்வினால் அவர்கள் சபிக்கப்பட்டு குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்பட்டு அழிக்கப்பட்டார்கள். (2:65,66, 7:163, இப்னு அப்பாஸ்(ரழி) அபூ ஹுரைரா(ரழி) முஜாஹித்(ரஹ்) சுத்தி(ரஹ்) கத்தாதா(ரஹ்) ஷைபான்(ரஹ்) அதாஉ(ரஹ்) அல்ஃகுரா சானீ(ரஹ்) ளஹ்ஹாக்(ரஹ்) இப்னு ஜரீர் (ரஹ்) அபுல் ஆலியா(ரஹ்) ஸயீத்பின் ஸுபைர்(ரஹ்) அல்ஃகுராசானீ(ரஹ்) இக்ரிமா (ரஹ்) இப்னு அபீ ஹாத்திப்(ரஹ்) ராஸு(ரஹ்) தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் 1:241-249, 3:927-937) இச்சம்பவத்தில் வரும் சனிக்கிழமை மீன் பிடித்தவர்களது வியத்தில் மூன்று பிரிவினர்,
முதலாவது பிரிவினர் : சனிக்கிழமையில் மீன்பிடிப்பதற்காகத் தந்திரம் செய்து இறையாணையை மீறியவர்கள்.
இரண்டாவது பிரிவினர் : குற்றம் இழைத்த மக்களைத் தடுத்து அவர்களை விட்டும் விலகியவர்கள்.
மூன்றாவது பிரிவினர் : குற்றம் இழைக்கவுமில்லை, குற்றம் இழைத்தவர்களைத் தடுக்கவுமில்லை.
இதில் முதலாவது பிரிவினரோடு சேர்த்து, இறையாணையை மீறி சனிக்கிழமையில் மீன் பிடித்தவர்களைத் தடுக்காமல் மெளனமாக இருந்தவர்களும் அழிக்கப்பட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது ஒரு அறிவிப்பில் வருகிறது. (தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர், 3:935, 936) அநீதி இழைத்தோரை, அவர்கள் குற்றம் புரிந்து வந்த காரணத்தால் கடுமையான வேதனையால் தண்டித்தோம். (7:165) (இன்ஷா அல்லாஹ் தொடரும்…..)
*******************************************************************************
அமல்களின் சிறப்புகள்….
தொடர் : 58
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் :
பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
தப்லீக் ஜமாஅத் சகோதரர்களேஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் நாம் தொழுவதைப் போல் தொழுது நம்மைப் போல் அதே கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்ததை உண்கிறாரோ, அவர் முஸ்லிம் ஆவார் (அனஸ் (ரழி), நஸாயி (ஆங்கிலம் எண். 4997 தரம் ஸஹீஹ்) இந்த ஹதீதின் பிரகாரம் தாங்கள் எமது சகோதர முஸ்லிம் ஆவீர்கள். தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், அது எமக்கும் தான்.
கொரோனா சோதனையில் உங்களில் ஒரு சிலருக்கு பாசிடிவ் இருந்து குணமானதாக கூறப்பட்டது. நோய்வாய்ப்பட்டிருக் கம் போது சகோதர முஸ்லிம் என்ற அடிப் படையில் உங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவேண்டிய பொறுப்பு இருந்தும், அரசு ஆணையால், சட்டத்திற்கு கட்டுப்பட்ட எமக்கு அது இயலாததாகி விட்டது. பாதிப் பிற்குள்ளானோர் நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியதற்கும், பிறர் பாதிக்கப்படாமல் காத்ததற்கும் அல்லாஹ்வுக்கு நன்றி கூற முஸ்லிம்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம்கள் என்பதற்காக இந்த நோயின் பெயரால் உங்களிலுள்ளவர்களைத் தேடித் தேடி கண்டுபிடித்ததும், தாங்கள் கூறுவது போல் தாங்கள் செய்யாதவற்றை செய்ததாக கூறியதும், உங்கள் மீது சுமத்தப்பட்ட பழி அல்ல. முஸ்லிம் சமுதா யத்தின் மீது வைக்கப்பட்ட குறி என்பதை உணர்த்துகிறது. நாட்டில் முஸ்லிம்களுக்கு அடுக்கடுக்காக இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் இதற்கான சான்று.
பாஜக ஆளும் மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பதால், அவர்களின் ஐடி செல், தப்லீக் ஜமாஅத் பிரச்சனையை எடுத்து இருப்பதா கவும், இதை மறு அறிவிப்பு வரும் வரை ட்ரெண்ட் செய்யுமாறும் “நமது பாரதம்” என்ற வாட்ஸ்அப் குரூப் கட்டளை இட்டிருக்கிறது. இதற்கேற்ப தப்லீக் ஜமா அத்தை பிரச்சனையாக்க தங்கள் ஜமாஅத் மீது மீடியாக்கள் படிப்படியாக குற்றங் களை சுமத்தி வருகின்றனர்.
உ.பி.யில் மருத்துவமனையில் நர்சுகளிடம் தவறாக நடந்தீர்களாம், மருத்துவ மனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்தீர்களாம், தப்லிக் ஜமாஅத்தின் டெல்லி நிகழ்ச்சி தான் இந்தியா முழுதும் நோய்க் கிருமி பரவ காரணமாம். எப்போதோ இறந்து போன முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஜாகிர் உசைன் மர்கஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாராம் இந்த செய்தியுடன் அவரது புகைப்படம் வேறு தருகிறது டிவி சேனல் ஒன்று. தப்லீக்மர்கசை கொரோனாவின் கேந்திரம் என்று தெரிவிக்கிறது. டெல்லியில் கேமிரா முன்பு பள்ளிவாசலை, குர்ஆனை, குடியிருப்புகளை கொளுத்தியவர்களை இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அரசும், அதை வெளியிடாத அந்த மீடியாக்களும்மர்கஸில் பங்கேற்றவர்களை சல்லடைப் போட்டு சுலபமாக தேடினார்கள். முஸ்லிம்கள் என்பதால்தானே என்று தாங்கள் எதிர் கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள். தங்கள் மீது சுமத்தியது பொய் என்று கூறும் தாங்கள் அவர்களை கவனித் துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் கேட்டிருப்பீர்கள். அதன் விளைவு அவர்களுக்கு அல்லாஹ்வின் கோபம் இறங்கி இருக்கலாம் அல்லது அவன் எப்போது விரும்புகிறானோ அப்போது இறக்கலாம். துஆவை அல்லாஹ்விடம் கேட்டதால் உங்களுக்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா? கீழே பாருங்கள்.
டெல்லி, ஹஜ்ரத் நிஜாமுத்தீன் மர்கசீல் இருந்து யாருக்கும் கொரோனா பரவவில்லை. அங்கு உள்ளவர்களின் டெஸ்ட் ரிப்போர்ட் வந்தபடி உள்ளது; வந்தவரை, எல்லாமே நெகடிவ் யாருக்கும் கொரோனா இல்லை என்று மர்கசில் உள்ளவர்களை பரிசோதித்த டாக்டர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் என்றும், நியூ டெல்லி, ராஞ்சி, ராஜஸ்தானி எக்ஸ்பிரஸில் இவர்களுடன் கோச்சில் பயணித்த மலேசிய பெண் பயணி ஒருவர் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதை ரயில் பயணிகள் பட்டியலை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு, அப்பெண் சிகிச்சையில் இருக்கிறார் என்ற செய்தியையும் தந்தது. அது மட்டுமின்றி, டெல்லி நிஜாமுத்தீன் மர்கசில் உள்ள யாருக்கும் கொரோனா பாசிடிவ் இல்லை என்று டாக்டர் சஞ்சீவ் குமர், எம்பி அறிவித்திருப்பதாக சமூக வலைதள பதிவு கூறுகிறது.
தப்லீக் ஜமாஅத்துக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மீடியா ஒன்று பிதற்றுகிறது. இது பச்சைப் பொய் என்றாலும், இதை நிரூபிக்க முடியுமா என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்காத அப்பாவிகள்.
இந்த தப்லீக் ஜமாஅத்தினராகிய நீங்கள் யார்? நீங்கள் என்னதான் செய்கிறீர்கள்? என்பதை மீடியாக்கள் ஆராய்ந்திருக்குமே யானால் குற்றம் சுமத்திய அத்தனை மீடியாக்களுக்கும் மனச்சாட்சி இருந்திருந்தால் வருத்தம் தெரிவித்து இருக்கும் உங்களிடம்.
தங்களின் ஒரு பக்கத்தை அவர்களுக்கு இப்போது தெரியப்படுத்துவோம்.
- அல்லாஹ்வை மட்டுமே இறைவனாக நம்பி ஏற்று, அந்த இறைவன் தேர்ந்தெடுத்த முஹம்மது(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடியார், தூதர் என்று நம்பி ஏற்று, இறை வன் அருளிய குர்ஆனையும், அதன்படி தூதர் போதித்த செய்திகளான ஹதீஃதுக ளையும் நம்பி ஏற்று,
- அவைகளின்படி அழகிய செயலால் வாழ்க்கையை அமைத்து,
- சத்தியத்தை (குர்ஆன் ஹதீஃதை)க் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்து,
- அதையும் பொறுமையுடன் உபதேசித்து வெற்றி பெற வேண்டும் என்பது இறைக் கட்டளை (பாருங்கள். அல்குர்ஆன்: 103:1) காலத்தின் மீது சத்தியமாக 103:2 நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் 103:3 ஆயினும் எவர்கள் ஈமான்(நம்பிக்கைக்) கொண்டு, அழகிய அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர. இந்த கட்டளையின் ஒரு பகுதி தொழுகை! அந்த தொழுகையை மட்டும் கையில் எடுத்து அந்த தொழுகை எல்லா முஸ்லிம்களிடமும் வர பாடுபடும் ஜமாஅத்தை(குழுவை) உருவாக்குகிறீர்கள்.
அந்த ஜமாஅத்தின் பெயர்தான் தப்லீக் ஜமாஅத் இதன் அர்த்தம் “பிரச்சார குழு” அந்த ஜமாஅத்தின் வேலை என்ன? தினமும் 5 வேளை இறைவனை தொழுவதற்கு பள்ளிவாசலுக்கு வராத முஸ்லிம்களை மட்டும் சந்தித்து பேசி அவர்களை தொழ வருமாறு அழைப்பது மட்டுமே உங்களுடைய முக்கிய பிரதான வேலை. அதற்காக கட்டுக் கோப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறீர்கள் என்பதும் மீடியாக்களுக்கு தெரியாது.
குடும்பம், தொழில், பள்ளிவாசல், இதுதான் இதுமட்டும்தான் உங்களின் உலகம். இந்த உலகத்தில் மது இல்லை, மாது இல்லை, திருட்டு இல்லை, ஆடம்பர மில்லை, வீண் பேச்சு இல்லை, வீண் விரயம் இல்லை, சினிமா இல்லை, பிற பொழுது போக்குமில்லை, மூட்டை தூக்குபவர் வண்டி இழுப்பவர், டாக்டர், பேராசிரியர், வக்கீல் என பல தரப்பினரும் இதில் சங்கமித்திருந்தாலும், உங்களுக்குள் ஏழை, பணக் காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் பாகு பாடில்லை. அரசியல் இல்லை, சப்தமாக பேசுவதில்லை, தர்க்கம் செய்வதில்லை.
இப்படிப்பட்ட உங்கள் மீது மீடியாக் கள் குற்றம் சாட்டினால் உங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அதனால் அப்படி பேசுகிறார்கள். குற்றம் சாட்டுகி றார்கள் என்று அப்பாவியாக சொல்வீர்கள், உங்களை பழி வாங்க இப்படி பேசுகிறார்கள் என்று கூறமாட்டீர்கள், யாரும் அப் படி உங்களிடம் சொன்னாலும், எங்களை அல்லாஹ் பார்த்துக்குவான் என்று சொல்வீர்கள், ஆக மொத்தத்தில் தப்லீக் வேலையை பிரதானமாகக் கையிலெடுத்து தினமும் பத்து பதினைந்து நிமிடங்கள் உங்கள் தெருவிலுள்ள பள்ளிவாசலிலும் வாரம் ஒருமுறை அடுத்த தெருவிலுள்ள பள்ளி வாசலிலும், மாதம் மூன்று நாள் பக்கத்து ஊர்களிலுள்ள பள்ளிவாசல்களிலும் வரு டத்திற்கு 40 நாட்கள், ஆயுளில் 120 நாட்கள் என இப்படியாக உங்கள் தொழிலை, குடும் பத்தினரை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்கு மட்டும் போதித்து வருகிறீர்கள். இதெல்லாம் மீடியாக்களுக்குத் தெரியாது. அதனால் அப்படி பேசுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள் என்பீர்கள்.
இந்த அர்ப்பணிப்புக்காக சொந்த நாட்டில் எந்த மாகாணத்துக்கு சென்றாலும் அல்லது வெளிநாட்டுக்கே சென்றாலும் கூட நீங்கள் அதிகபட்சமாக ஐந்து முதல் ஏழெட்டு நபர்கள் செல்வீர்கள். லாட்ஜ்களில் தங்கமாட்டீர்கள், ஒழுக்கம் பேண, உங்கள் வணக்க வழிபாட்டிலிருந்து கவனம் திசை திருப்பப்படாமலிருக்க பள்ளிவாசல்களில் மட்டுமே தங்குகிறீர்கள். உங்கள் செலவுக்காக இறைவனிடம் நன்மையை எதிர்பார்த்து உங்கள் பணத்திலிருந்து நீங்கள் செலவழிக்கிறீர்கள். இதற்கான கூலியை இறைவன் தருவான் என நம்புகிறீர்கள். நீங்கள் செல்கின்ற ஊர்களில், தொழுகாத முஸ்லிம்களை மட்டும் சந்தித்து அவர்களிடம் தொழுகையின் முக்கியத்துவத் தைக் கூறி அவர்கள் தொழுவதற்கு பாடுபடுகிறீர்கள்.
இவ்வாறாக அவர்களும் தொழ ஆரம்பித்து விட்டால், புகை பிடித்தல், பொய் பேசுவது, உறவுகளை கவனிக்காதது போன்ற கெட்ட பழக்கஙகளை பலர் விட்டு விடுகிறார்கள். இதனால் பலன் பெற்ற அவர்களின் குடும்பத்தினர் நன்றி கூறி உங்களைப் புகழும்போது, இறைவன் விரும்பியதால் தான் அவர்கள் நல்லவர்களாக ஆளானார் கள். காரணம் நாங்கள் அல்ல, எனவே புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று இஸ் லாம் கற்பித்த உண்மையை உடனே சொல்லி விடுகிறீர்கள். இவ்வாறாக முஸ்லிம் களுக்குள் மட்டும் உங்கள் வேலையை செய்து வருவதால் பொது மக்களிடம் நல்ல பிள்ளை பெயர் எடுத்து வருகிறீர்கள்.
டெல்லி மர்கசில் மார்க்க நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி பெற்றீர்கள். இல்லையா? அதன்பின், நிகழ்ச்சி நடத்தி முடித்தீர்கள். கால அவகாசம் கொடுக்க முடியாத சூழ்நிலையில், அரசு திடீரென்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. எனவே, அவரவர் ஊருக்கு செல்ல முடியாமல் மர்கசில் தங்கி விட்டீர்கள் என்பது மீடியாக்களுக்கு தெரியாது என்பீர்கள். அதனால் அப்படி பேசுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள் என்பீர்கள்.
மர்கசில் உங்கள் நிகழ்ச்சி நடந்தேறிய தற்கு ஓரிரு நாட்கள் முன்னோ பின்னோ, கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா விற்கு லட்சக்கணக்கில் ஆண் பெண் கூடினர். அங்கிருந்த வெளிநாட்டினர் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நக்கீரன் பத்திரிக்கை தகவல் தருகிறது. அதேபோல குஜராத்தில் “நமஸ்தே ஜி ட்ரம்ப்” நிகழ்ச்சி யில் வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கில் ஆண், பெண் கூடினர். வெளிநாடு பல சென்று திரும்பிய பாடகி கனிகா கபூர் என்ற பெண்மணிக்கு கொரோனா பாசிடிவ் அவர் வைத்த பார்டியில் பிஜேபி உயர்மட்டத்தினர் பலரை சந்தித்து இருக்கிறார். டெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறி, 200 வெளி நாட்டினர் 2 சொகுசு பஸ்களில் டேராடூனிலிருந்து டெல்லியை சுற்றி பார்த்துவிட்டு விமான நிலையம் செல்வதாகவும், அவர்க ளிடம் அனுமதி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இன்னும் பல நிகழ்வுகள் இதே போன்று முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்பட்டது. அத்துணை நிகழ்வுகளிலும் மக்கள் இடைவெளி இன்றி நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே சமூக இடைவெளி பேணப்படவில்லை. யாரையும் கொரோனா சோதனையும் செய்யவில்லை. அவர்களை அரசு கைது செய்ய விலலை என்று நீங்கள் அரசை குற்றம் கூற மாட்டீர்கள்.
அரசு மற்றும் மீடியாக்களால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளானாலும் அவர் களுக்கு தண்டனையைக் கொடு என்று இறைவனிடம் பிரார்த்திருக்க மாட்டீர்கள். சாபமும் இட்டிருக்க மாட்டீர்கள். மாறாக அவர்களை நேர்வழியில் செலுத்துமாறு இறைவனிடம் பிரார்த்திருப்பீர்கள்.
எதற்காக இந்த சோதனையை உங்களுக்கு கொடுத்தான் என்பது கொடுத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். நபித் தோழர்களின் வாழ்க்கையில் சிறு சோதனை ஏற்பட்டால் கூட தவறு செய்திருப்போம் என்றெண்ணி தாம் செய்து முடித்த செயல்களை அலசி ஆராய ஆரம்பித்து விடுவார்கள் என்பதை உங்கள் ஜமாஅத்தினரின் பயான்களில் அடிக்கடி கேட்டிருக்கிறோம். இதுவரை அப்படி எதையும் உங்கள் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து காரணம் எதையாவது நீங்களாகவே கண்டுபிடித்து இருக்கிறீர்களா? இல்லை என்றால் எமக்கு ஒரு காரணம் கிடைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இத்தொடரின் ஆரம்பத்தில் நாம் தெரிவித்த அதே ஹதீஃதின் கருத்திலுள்ள மற்றொரு ஹதீஃதில் அந்த காரணம் இருப்பதை கவனியுங்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்கு தகுதியானவன் யாரும் இல்லை என்றும் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் மக்கள் சாட்சி பகரும் வரை நான் அவர்களுடன் போர் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன் அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்கு தகுதியானவன் யாரும் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர்கள் சாட்சி பகர்ந்து, அவர்கள் எங்களைப் போல் அதே கிப்லாவை முன்னோக்கியும், நாம் அறுத்த பிராணிகளை சாப்பிட்டும், நாங்கள் தொழுவதைப் போல் அவர்களும் தொழுதால், அவர்கள் செலுத்த வேண்டிய உரிமையைத் தவிர, அவர்களது உயிரும், உடைகளையும் (செல்வம்) எங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்குள்ள அதே உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கு உண்டு. (அனஸ் பின் மாலிக் (ரழி), நஸாயீ(ஆங்கிலம்) எண். 5003, தரம்: ஸஹீஹ்)
இந்த ஹதீஃதில் சொல்லப்பட்டுள்ளதற் கேற்ப அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்கு தகுதியானவன் யாரும் இல்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறிய தாங்கள். தங்களின் மறு பக்கத்தை இப்போது காட்டுகிறீர்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறியதில் மட்டும் ஈமான் கொண்டு செயல்படாமல், தப்லீக் ஜமாஅத் தலைவர்களும், பெரியார்களும் கூறுவதில் அதாவது இஸ்லாத்தில் இல்லாதவைகளில் ஈமான் கொண்டு அதை மார்க்கமாக எண்ணி செயல்பட்டு அல் லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மாறு செய்கிறீர்கள். உங்கள் நடைமுறையில் இது வெளிச்சமாகிறது.
மார்க்கம் என்ற பெயரில் நீங்கள் பள் ளிககு அழைத்து வரும் முஸ்லிம்களிடம் குர்ஆன், ஹதீஃதுகளைப் படித்துக் காட்டாமல் உங்கள் தலைவர்கள் எழுதிய தஃலீம் கிதாபுகளை மட்டும் படித்துக் காட்டுவீர்கள். தங்களின் இந்த செயல்பாடு இதற்கு போதிய ஆதாரமாகும். தங்களின் வீடுகளிலும் கூட படிக்கப்பட்டுவரும் அமல்களின் சிறப்புகள் தஃலீம் புத்தகம் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறியதற்கு நேர் எதிராக இஸ்லாத்திற்கு விரோதமாக இருப்பதை எமது இந்த ஆய்வில் தொடர்ந்து எழுதி வருகிறோம். தாங்கள் இதை படிப்பது இல்லை என்றால், தயவு செய்து இந்தத் தொடரையாவது படித்து செயல்படுமாறு அன்புடன் கோரு கிறோம்.
தங்களின் அடுத்த பக்கம் இன்னும் இருக்கிறது. தாங்கள் மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படைகளை பின்பற்றாமல், கட்டளையிடப்பட்ட அந்த அடிப்படைகளுக்குள் கூறப்படாத உங்கள் தலைவர்களின் சொந்த கருத்துக்களைத் திணித்து மார்க்கத்தில் களங்கத்தை ஏற்படுத்துகிறீர்கள். இந்த விஷயங்களில் உங்களை நாங்கள் எச்சரிக்கி றோம், கண்டிக்கிறோம். இதில் உங்களுடன் எமக்கு சமரசம் கிடையாது. இந்த முன்னுரையுடன் அமல்களின் சிறப்புகள் புத்தகத்தின் அடுத்த ஆய்வுத் தொடரை ஆரம்பிக்கிறோம்.
இந்த இதழில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவை:
dஅமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம் 393ன் இரண்டாவது மூன்றா வது பத்திகளில் (கடைசி இரண்டு பகுதி களில்) ஹதீஃத் என்று தரப்பட்டுள்ளதை இந்த இதழில் இன்ஷா அல்லாஹ் ஆய்வு செய்வோம்.
இரண்டாம் பத்தியிலுள்ளவை :
ஈமானின் பிரகாசம் சிந்திப்பதில் தான் இருக்கிறது என்று சஹாபாக்களில் ஒருவர் அல்ல. இருவரல்ல, பல பேர் கூற நான் கேட்டிருக்கிறேன் என ஆமீர் இப்னு அப்துல் கைஸ் கூறி இருக்கிறார்கள்.
எமது ஆய்வு :
ஈமானின் பிரகாசம் சிந்திப்பதில் தான் இருக்கிறது என்ற வாசக அமைப்பு அல்லது இந்த வாசக அமைப்பு தெரிவிக்கும் கருத்து எதுவுமே எமது தீவிர தேடலில் எந்த ஹதீஃத் கிதாபுகளிலும் இல்லை.
மூன்றாம் பத்தியிலுள்ளவை :
ஒரு மனிதர் தன்னுடைய வீட்டு மாடியில் படுத்துக் கொண்டு வானத்தையும், அதிலுள்ள நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பின்பு, “”உங்களைப் படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதைச் சத்தியமாக, உறுதியாக நான் நம்புகிறேன், யா அல்லாஹ் நீ என்னை மன்னித் தருள்வாயாக என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் அருள் அவரை நோக்கி வந்தது. அவர் மன்னிக்கப்பட்டு விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எமது ஆய்வு :
ஈமானின் பிரகாசம் சிந்திப்பதில் தான் இருக்கிறது என்று இரண்டாம் பத்தி தெரிவித்த செய்தியை மூன்றாம் பத்தியில் விவரமாக தெரிவித்துள்ளது அசி புத்தகம். அதாவது ஒரு மனிதர் தமது வீட்டு மாடியில் படுத்துக் கொண்டு வானத்தையும், நட்சத்திரத்தையும் பார்த்து, “உங்களைப் படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதைச் சத்தியமாக, உறுதியாக நான் நம்புகிறேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ்விடம், யா அல்லாஹ் நீ என்னை மன்னித்தருள்வாயாக” என்று அவர் பிரார்த்தனை செய்கிறார். எனவே அல்லாஹ்வின் அருள் அவரை நோக்கி வந்ததாகவும் அந்த மனிதர் மன்னிக்கப்பட்டு விட்டதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்று அசி புத்தகம் எழுதி இருக்கிறது.
இந்த ஹதீஃத் எந்த ஹதீஃத் கிதாபில் இருக்கிறது என்பதை அசி ஆசிரியர் வழக்கம் போல அவருடைய தொலைநோக்கு பார்வை டெக்னிக்கை பயன்படுத்தி தெரியப்படுத்தாமல் விட்டுவிட்டார். எனவே, நாம் ஹதீஃதுகளை ஆராய்ந்தோம். இந்த வாசக அமைப்பு அல்லது இந்த வாசக அமைப்பு தெரிவிக்கும் கருத்து எதுவுமே எமது தீவிர தேடலில் எந்த ஹதீஃத் கிதாபிலும் இல்லை என்று ஊர்ஜிதமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, இந்த செய்தியை அறிவித்ததாக கூறப்பட்ட அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஃதுகளைத் தேடும் பணியைத் தொடர்ந்தோம். இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற செய்திகளை அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கவே யில்லை என்பதை தமிழ் ஸஹீஹுல் புகாரி (ரஅக)யிலும் ஸஹீஹுல் முஸ்லிமிலும் (ரஅக), அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்திருக்கும் ஹதீஃதுகளில் அசி புத்தகம் அவிழ்த்துவிட்ட பொய்யான ஹதீஃத் இல்லை என்பதை கண்டறிந்தோம்.
எனவே, எமது அடுத்த முயற்சியாக நஸாயீ, அபுதாவுது, திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹமது, ரியாளுஸ் ஸாலிஹீன், ஷமாயில் முஹமதியா, புளுகுல் மராம் ஆகிய ஆங்கில நூல்களிலிருந்து அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்திருக்கும் எண்ணற்ற ஹதீஃதுகளைப் படித்தோம். அந்தோ பரிதாபம் அசி ஆசிரியர் பரிதாபமாக சிக்கிக் கொண்டார். அவர் அவிழ்த்து விட்ட பொய்யான ஹதீஃத் இத்துணை ஹதீது நூல்களிலும் இல்லை. இல்லவே இல்லை. அது மட்டும் அல்ல.
பலவீனமான ஹதீதுகளில் கூட அசி ஆசிரியரின் கப்ஸா ஹதீஃதிற்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமது எண்ணத்தில் இருக்கும் கண்ட கண்ட நினைவுகளை எல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாகவும், அவைகளை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் அறிவித்ததாகவும் துணிந்து பொய் சொல்லி ஹதீஃதுகளில் விளையாடி வருகிறார் அசி புத்தக ஆசிரியர்.
இப்போதும் ஒன்றும் வீணாகி விட வில்லை. அசி புத்தகம் கூறும் ஹதீஃத் இடம் பெற்ற ஹதீஃத் நூலின் பெயரையும், அறிவிப்பாளர் பெயரையும், ஹதீஃத் எண்ணையும் உங்கள் தலைவர்கள் தரட்டும். அதனை அலசி ஆராய்வோம். உங்களில் எவரும் இதற்கு முன் வரமாட்டீர்கள். ஏனெனில் இப்படி ஹதீஃது இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் நோக்கம் மாஸ் காட்டுவது மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கும் எமது ஆய்வின் தொடராக அசி ஆசிரியர் அற்பத்தனமான செயல் ஒன்றை செய்து இருப்பதை யும் காண முடிகிறது. அது யாதெனில் அவர் கூறும் பொய்யான ஹதீஃதின் வாசகம் எந்த ஒரு ஹதீஃதிலும் இல்லை. அந்த வாசகத்தின் கருத்து அல்லது பொருளும் கூட எந்த ஹதீஃதிலும் இல்லை. அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஃதுகள் அத்தனை யிலும் அசி ஆசிரியர் கூறியது இல்லாமல் போகவும், இரண்டாம் பத்தியிலுள்ள செய் தியில் அடுத்து எதை ஆய்வு செய்ய வேண் டும் என்பதற்கான தடயம் எமக்குக் கிடைத்தது. அந்த செய்தி யாதெனில், ஈமானின் பிரகாசம் சிந்திப்பதில் தான் இருக்கிறது என்று ஸஹாபாக்களில் ஒருவர் அல்ல, இருவரல்ல பல பேர் கூற நான் கேட்டிருக்கிறேன் என ஆமீர் இப்னு அப்துல் கைஸ் கூறி இருக்கிறார்கள் என்ற இந்த சிறு துப்பு (ளீஸிUசி)தான். எம் ஆய்வை இன்னும் தொடரத் தூண்டு கிறது. அதையும் இப்போது ஆய்வு செய்து விடுவோம்.
சிந்தனை செய்யும்படி எத்தனையோ கட்டளைகளை அல்லாஹ் குர்ஆன் வசனங்களில் ஏவி இருக்கும்போது அவற்றை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். உங்களுக்கு உங்கள் தலைவர்கள் இட்டுக்கட்டும் பொய்யான ஹதீஃத்கள்தான் ஆதாரம் அப்படி தெரிவிக்கப்பட ஹதீஃதைத்தான் இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்.
ஸஹாபாக்களில் ஒருவர் அல்ல. இரு வரல்ல. பல பேர் கூற நான் கேட்டிருக்கி றேன் என ஆமீர் இப்னு அப்துல் கைஸ் கூறுகிறாராம். ஆனால் அதே அசி புத்தகம் இந்த ஹதீஃதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்ததாகத்தான் தெரிவிக்கிறது. அப்படியானால், இந்த ஆமிர் இப்னு அப்துல் கைஸ் யார் என கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது தங்க ளின் பெரியார், அசி ஆசிரியர் வசமாக மாட்டப்போகிறார் என்பது சர்வநிச்சயம் என எமக்கு தோன்றுகிறது. பல ஹதீத் நூல்களைப் படித்ததில் அசி ஆசிரியரின் கேவல புத்தி பட்டவர்த்தனமாகத் தெரிய வந்தது தான் கிடைத்த முடிவாக இருக்கிறது. அது என்னவென்றால், ஸஹாபாக்கள் அறிவித்தவை ஹதீஃதுகள் ஆகும். அஃசர் ஹதீஃத்கள் என்றால், தாபியீன்கள், தப உ தாபியீன்கள் அறிவித்தவைகள் ஆகும். நபித் தோழர் அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் இந்த ஹதீஃதை அறிவித்திருப்பதாக அசி புத்தகம் கூறி இருப்பதாலும், ஸஹாபாக்களில் ஒரு வர் அல்ல, இருவரல்ல பல பேர் கூற நான் கேட்டிருக்கிறேன் என கூறப்பட்டிருப்ப தாலும், அப்படிக் கூறும் இந்த அமீர் இப்னு அப்துல் கைஸ் என்பவர் ஸஹாபி அல்ல எனபது தெளிவாகி விட்டது.
எனவே, ஆமிர் இப்னு அப்துல் கைஸ் தாபியீன்களில் ஒருவராகவோ அல்லது தபஉ தாபியீன்களில் ஒருவராகவோ இருக் கலாம் என்ற எண்ணத்தில், ஆமிர் இப்னு அப்துல் கைஸ் என்பவர் இடம் பெறும் ஹதீஃதுகளை ஆராய்வோம் என்ற முடி வுக்கு வந்தோம். எம் முயற்சியின் முடிவு அசி புத்தகத்திற்கு இன்னும் கேவலமான இழிவைத் தந்திருக்கிறது.
ஆமிர் இப்னு அப்துல் கைஸ் பெயரில் அறிவிக்கப்பட்ட ஹதீஃதுகளைத் தேடிக் கொண்டு இருந்ததில் அவர் அறிவித்ததாக ஒரு ஹதீஃது கூட கிடைக்கவில்லை. எனவே, ஆமிர் என்று ஆரம்பமாகும் பெயர் கொண்டவர்கள் அறிவித்த ஹதீஃதை அசி ஆசிரியர் பெயரை தவறுதலாக மாற்றி எழுதி இருப்பாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆமிர் என்று பெயரில் அறி விக்கப்பட்ட ஹதீஃதுகளைத் தேடினோம் ஆமிர் என்ற பெயரிலும் அது போன்ற வேறு பெயர்களிலும் பல ஹதீஃதுகள் இடம் பெற் றிருக்கின்றன. அவ்வாறு கிடைத்த பெயர் களை கீழே தந்துள்ளோம்.
- ஆமிர்(ரஹ்), 2. ஆமிர்(ரழி), 3.ஆமீர் இப்னு, ரபீஆ (ரழி, 4.உக்பா இப்னு ஆமிர் (ரழி), 5.ஆமிர் இப்னு ஃபுஹைரா(ரழி), 6.ஆமிர் பின் ஷர்ஹபீல்(ரஹ்), 7.ஆமிர் இப்ன குரைஸ்(ரழி), 8.அபூ ஆமிர்(ரழி), 9.உபைத் அபூ ஆமிர்(ரழி), 10.ஹாரிஸ் இப்னு ஆமிர்(ரழி) 11.ஆமிர் இப்னு ஸஅத்(ரழி), 12.அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர்(ரழி), 13.ஆமிர் பின் அததுஃபைல் (ரழி), 14.அபூ ஆமிர் உபைத் (ரழி), 15.அபூ அதிய்யா மாலிக் இப்னு ஆமிர்(ரழி), 16.ஆமிர் அபி (ரஹ்), 17.அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரழி), 18. ஆமிர் இப்னு அக்வ (ரழி), 19.ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரஹ்) 20.ஆமிர் பின் வாஸிலா (ரஹ்), 21. ஸஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹ்) 22. ஆமிர் பின் ஸஅத் பின் அபி வக்காஸ் (ரஹ்), 23. ஆமிர் பின் ஷராஹீல் (ரஹ்), 24. அப்துல்லாஹ் பின் ஆமிர் அல் யஹ்ஸீ(ரஹ்), 25. அபூ அத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்), 26. உமர் பின் ஆமிர் (ரஹ்), 27. அபுல் மலீஹ் ஆமிர் பின் உஸா மா (ரஹ்), 28. அபு துஃபைர் ஆமிர் பின் வாயிலா (ரஹ்), 29. நஜ்தா பின் ஆமிர் அல் ஹரூரி (ரழி).
மேலே கூறப்பட்ட இத்துணை ஸஹா பாக்களும், ஸஹாபி அல்லாதவர்களும் அறி அறிவித்த அத்தனை ஹதீஃதுகளிலும் பல வெவ்வேறு ஹதீஃத்களைத்தான் தந்திருக் கின்றனர். அசி ஆசிரியர் கூறும் ஹதீஃத் எங் குமே இடம்பெறவில்லை என்பதைத் தெரி விக்கிறோம்.
அசி புத்தகம் கூறும் ஆமிர் இப்னு அப்துல் கைஸ் என்ற பெயரில் ஒரு ஹதீஃது கூட அறிவிக்கப்பட்டதாக பதிவுகளே இல்லை என்றால், ஆமிர் இப்னு அப்துல் கைஸ் என் பவர் அசி ஆசிரியரின் கற்பனையில் உதய மாகிய கதாபாத்திரம் மட்டுமே என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.
யார் வேண்டுமானாலும், எதை வேண் டுமானாலும் எழுதி விடலாம் என்ற அனுமதி இலவசமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்ததின் விளைவு. குப்பைகள் அத்தனையும் இன்று இறை இல்லங்களில் நூல்களாக உங்கள் அரியணையில் ஏறி இருக்கிறது. இஸ்லாத்திற்கு எதிரான அந்த அசி புத்தகம் தீயிலிட்டு எரிக்கப்பட வேண்டியது. ஆனால் அதற்கு பகரமாக அதே ஸ்டைலில் வேறொரு அநியா யத்தை அரியணையில் வைத்து அழகு பார்த்து, தீமைக்குத் துணை போய்க் கொண்டிருக்கிறீர்கள். எனவே இறுதி நாளில் அசி ஆசிரியரின் முடிவும், அதைப் பின்பற்றும் தப்லீக் ஜமாஅத்தினரின் முடிவும் மறுமையில் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்தறிந்து தங்களைத் திருத்திக் கொள் ளுங்கள் என்று எச்சரிக்கிறோம்.
எனவே, எமது இஸ்லாமிய சகோதரர்களாகிய தப்லீக் ஜமாஅத்தினரே அல்லாஹ்வன் கட்டளை அல்குர்ஆன் 6:116ஐக் கொண்டு உங்கள் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன் னும் அவர்கள் கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.
தப்லீக் ஜமாஅத்தில், ஒருவர் மற்றவரிடம் மூன்றாம் நபரைப் பற்றிய கெட்ட வி யத்தைப் பற்றி மறந்தும் பேசமாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் நினைக்கும் நல்ல அமல்கள் மூன்றாம் நபரிடம் இருந்தால், அவர்களுக்குள்ளாக மட்டும் அவரை புகழந்து பேசி அவரை எட்ட முடியாத அளவு உயரத்தில் வைத்து விடுவார்கள். இது அவர்களின் மறு பக்கம்! அப்படி பேசும்போது மூன்றாம் நபரை உயர்த்து வதற்காக பொய்யையும் சேர்த்து சொல்வார்கள்.
அந்த மூன்றாம் நபர் எப்படி இருப்பார் என்றால், தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் போது அதிகம் அதிகமாக தொழுபவராக, ஜமாஅத் தொழுகையை தவற விடாதவராக, தஹஜ்ஜத் தொழுகை தினமும் தொழுபவராக, பயான் செய்பவராக, சாதாரண மனிதராக, தஃலீம், கஸ்த், மூன்று நாள், ச்சில்லா, மூன்று ச்சில்லா என்று ஜமாஅத்தில் சென்று கொண்டிருப்பவராக இருந்தால் அவரை வானளாவ மற்றவர்களி டம் புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். அவரை அவுலியா என்று அதாவது அல் லாஹ்வின் நேசர் என்று சொல்லி ஏதாவது பொய்யை சொல்லி புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
எந்த அளவுக்கு என்றால், சுருக்கமாக ஒரு உண்மை சம்பவம். திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் தஞ்சாவூர் ரோடு முஹம்மதியா பள்ளிவாசல் அருகில் மேலே கூறப்பட்ட பண்புகளுடன் பெரியவர் ஒருவர் இருந்தார். இப்போது அவர் இல்லை, மரணித்து விட்டார். அவர் ஹியாத்தாக இருந்தபோது ஜமாஅத்தினர் அவரைப் பற்றி அவர்களுக்குள்ளாக அவரைப் புகழ்ந்து உயர்த்திப் பேசிக்கொண்டிருப்பர். முப்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பாக அதாவது 1981ல் ஒருநாள் ஜமாஅத்திலுள்ள ஒருவர் எம்மிடம், அவர் ஒரு அவுலியா என்றும், ஒரே நேரத்தில் அவரை இங்கே பார்த்து இருப்போம். அதே நேரத்தில் அவரை புதுக்கோட்டையில் பார்த்து பேசியதாக வேறொருவர் கூறுவார் என்று கதை விட்டார்.
மனிதரை புனிதராக்கும் வித்தகர்கள் தப் லீக் ஜமாஅத்தினராகிய நீங்கள் இதன் உச்சத்துக்கு சென்றவர்கள். அல்குர்ஆன்:2:186 இறைவசனம் கூறும். “….அவர்கள் என்னி டமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று (நபியே) கூறுவீராக என்ற குர்ஆன் வசனத்திற்கும், அல்குர்ஆன்:1:4 இறை வசனம் கூறும். “உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.” ஆகிய இறை வசனத்திற்கும் எதிராக, அல்லாஹ்விடம் உதவி கேட்பதற்கு பதிலாக, தர்காக்களுக்கு சென்று அங்கே இதேபோல பொய் புகழுக்கு ஆளாக்கப்பட்டு மரணித்து கப்ரில் அடங்கி இருக்கும் உயிரற்ற செத்த மனிதர்களிடம் தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்தனை செய்பவர்கள் இந்த ஜமாஅத்தில் பலர் இருக்கிறார்கள்.
மொத்தத்தில் இஸ்லாத்தின் அடிப்படையான மூலக் கொள்கைகளுக்கு மாற்றமாக செயல்படுபவர்கள், உதாரணமாக 33:66,67, 68 இறை வசனங்களில் கூறியபடி அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் வழிபடுவதை விட்டு, தப்லீக் ஜமாஅத்தின் தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழிபடுபவர்கள் ஆவார்கள். இவ்வாறாக செயல்படுவதற்கு ஆதாரமாக அவர்களின் “அமல்களின் சிறப்புகள்” போன்ற தஃலீம் கிதாபுகளை பயன்படுத்துகின்றனர். அந்த புத்தகம் காட்டித் தருகிற வழிமுறைதான் மனிதரை புனிதராகக் காட்ட அவர் இப்படி செய்தார், அப்படி செய்தார் என்று பொய் சம்பவங்களைக் கூறி புகழ்ந்து இஸ்லாத்திற்கு எதிரான அவரின் செயல்களை இஸ்லாத்தின் பெயரில் அறிமுகப்படுத்தும் வேலையை செய்து வருகிறது.
உங்களில் மிகப் பெரும்பாலானோர் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டியதை, மரணித்து கப்ரில் இருப்பவர்களிடம் பிரார்த்தனை செய்து இணை வைக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் உங்களில் அனைவரும் நேர்வழிக்கு வர அல்லாஹ்விடம் சரணடைந்து பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இன்ஷா அல்லாஹ், ஆய்வு தொடரும்…
*******************************************************************************
சத்தியத்தை சொல்வது ஜிஹாத்!
இப்னு ஸதக்கத்துல்லாஹ்
அக்கிரமக்கார ஆட்சியாளரிடம் சத்தியத்தைச் சொல்வதுதான் சிறந்த ஜிஹாத் (அபூதாவூத் 4344) என்ற ஹதீஃதுக்குரிய உண்மையான பொருள் என்ன? உண்மையான விளக்கம் என்ன? என்பதைச் சொல்லாமல், உலக ஆசையை கருத்தில் கொண்டு யார் வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் போராட்டம் ஆர்ப்பாட்டம் பேரணி போன்ற அக்கப்போர்கள் நடத்துவதை நடத்தி விட்டு கலைந்து செல்வதை சட்டபூர்வமாக சடங்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நாட்டில் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காகவும், கட்சி வளர்ப்பதற்காகவும், வசூல் செய்வதற்காகவும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று இவர்கள் செய்யும் அராஜகங்களும், முழக்கம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் அறியாமைக் கால கூச்சல்கள் (31:19) எல்லாம் இந்த ஹதீஃதின் கீழ் வரும் என்று சொல்லி தொடர்ந்து முஸ்லிம் சமுதாயம் ஏமாற்றி வழிகெடுக்கப்படுகிறது.
எனவே, இந்த ஹதீஃதுக்குரிய உண்மையான பொருள் என்ன? உண்மையான விளக்கம் என்ன? அதாவது இந்த ஹதீஃதில் வரும் அக்கிரமக்கார ஆட்சியாளர் என்ப தன் அளவுகோல் என்ன? அவரிடம் சொல்லவேண்டிய சத்தியம் என்பதன் அளவு கோல் என்ன? என்பதை நாமெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது பொதுவாக, குர்ஆனும், ஹதீஃதும் ஒன்றுக்கொன்று விளக்கம் சொல்வதாக இருக்கும் அந்த வகையில் மேற்கூறிய ஹதீஃதுக்கான பொருத்தமான விளக்கம் மூஸா(அலை) ஃபிர்அவ்ன் வரலாற்றிலிருந்துதான் கிடைக்கிறது அதைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் வியத்தில் சத்தியத் தைத் தவிர (வேறெதையும்) சொல்லக் கூடாது என்பது என்மீது கடமையாகும். உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே இஸ்ரா யீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி வையுங்கள் நாங்கள் பூமியில் எங்காவது ஹிஜ்ரத் செய்து போய் அதன்படி வாழ்கிறோம் என்று மூஸா கேட்டார்.7:105
அதற்கு ஃபிர்அவ்ன் “என்னைத் தவிர வேறு யாரையாவது வணக்கத்திற்குரியவராய் எடுத்துக் கொண்டால், சிறையில் கிடந்து வாடி வதங்குபவர்களுடன் நீரும் சேர்ந்து கிடக்க வேண்டியதுதான்” என்று கூறினான். 26:29
மேலும், “அவையோரே! உங்களுக்கு என்னைத் தவிர வேறு இறைவன் இருப்ப தாக எனக்குத் தெரியவில்லை (என்றும்) ஃபிர்அவ்ன் சொன்னான். 8:38
ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணிக்க நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டு ஃபிர்அவ்னை உசுப்பேற்றி விட்டார்கள். அதற்கு அவன், “(அது நடக்காது) நாம் அவர்களுடைய ஆண் மக்களை கொன்று அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழ (விட்டு அவர்களைப் பலவீனப் படுத்தி) விடுவோம் “நிச்சயமாக நாம் அவர்கள் மீது முழு அதிகாரம் பெற்றுள்ளோம்” என்றான். 7:127
“நான் அனுமதிக்கும் முன்பே நீங்கள் அவரை நம்பி விட்டீர்களா? நிச்சயமாக அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற் றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது), எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டை களில் உங்களைக் கழுவேற்றுவேன், மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார். அதில் நிச்சயமாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று(ம்) சொன்னான். 20:71
“எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள ஆதாரங்களை நாங்கள் நம்பியதற்காகத் தான் நீ எங்களைப் பழிவாங்குகிறாய் அல்லவா?” 7:126
ஃபிர்அவ்னும் அவனுடைய பிரமுகர் களும் தங்களைத் துன்புறுத்துவார்கள் என்ற பயத்தின் காரணமாக, மூஸாவை, அவரு டைய சமூகத்தார் சிலரைத் தவிர (பெரும் பாலோர்) நம்பவில்லை. 10:83
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரின் நம்பிக்கை கொண்டு அதை மறைத்து வைத்திருந்த ஒருவர், “என் இறைவன் அல்லாஹ் தான்” என்று ஒரு மனிதர் சொன்னதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? (என்று) கேட்டார். 40:28
இன்னும், “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் புறப்பட்டு அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்ப்டாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திடடமாக வஹீ அறிவித்தோம். 20:77
நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை கடலைக் கடக்க வைத்தோம். (அப் போது) ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் (அவர்களைப் பிடித்து) அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். 10:90
ேலே எடுத்தெழுதப்பட்ட வசனங்களில், “அக்கிரமக்கார ஆட்சியாளரிடம் சத் தியத்தைச் சொல்வதுதான் சிறந்த ஜிஹாத்” என்று ஹதீஃதுக்குரிய உண்மையான விளக்கம் என்ன? “அக்கிரமக்கார ஆட்சியாளர்” என்பதன் அளவுகோல் என்ன? அவரிடம் சொல்ல வேண்டிய “சத்தியம்” என்பதன் அளவுகோல் என்ன? என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது,
“இந்த நாட்டில் இஸ்லாத்தை கடை பிடித்து வாழ எங்களுக்கு அனுமதி கொடு, அல்லது நாங்கள் உலகில் வேறு எங்காவது ஹிஜ்ரத் செய்து போய் இஸ்லாத்தை கடைபிடிக்கிறோம் எங்களைப் போக விடு” என்று அல்லாஹ்வின் உரிமையை கேட்பது தான் “சத்தியம்” என்பதும், இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி மறுத்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுபவன் எவனோ அவன்தான் “அக்கிரமக்கார ஆட்சியாளன்” என்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த உண்மையை மறைத்து, ஒரு பித்அத்தான மார்க்கத்திற்கு முரணான காரியத்தை அரங்கேற்றத் துணிந்த ஆளுநர் மர்வானை தடுப்பதற்காக, அவருடைய ஆடையை அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி) அவர்கள் பிடித்திழுத்த சம்பவத்தை (புகாரி:956) மேற்கண்ட ஹதீஃதுக்கு விளக்கமாக எடுத்துக் காட்டி அக்கிரமத்தை தட்டிக் கேட்க வேண்டும். சட்டையை பிடித்துக் கேட்க வேண்டும் என்று சொல்லி உசுப்பேற்றி தொடர்ந்து முஸ்லிம் சமுதாயம் வழிகெடுககப்படுகிறது. அதே சமயம்,
(நபி(ஸல்) காலத்திற்கு பிறகு ஹஜ்ஜாஜ் ஆட்சி காலத்தில்) நாங்கள் நபித்தோழர் அனஸ் இப்னு, மாலிக்(ரழி) அவர்களிடம் போய் (ஆட்சியாளர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் அவஸ்தைகள், துன்பங்கள் குறித்து முறையிட்டு நீங்களெல்லம் இருக்கிறீர்களே, ஹஜ்ஜாஜிடம் எடுத்துச் சொல்லப்படாதா? என்று கேட்டோம். அதற்கு அவர் உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்கு பின் வரும் காலம் முன்பிருந்ததை விட மோசமானதாகத்தான் இருக்கும் எனவே, “மறுமையில் நீங்கள் இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையாக இருங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் அரசியல் தொடர்பாக சொன்ன சம்பவத்தை (முஸ்லிம் : 7068) மறைத்து விடு கிறார்கள் இதை நாமெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நான்தான் உங்கள் இறைவன் எனக்கு மாறு செய்தால் மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன் என்று சொல்லும் ஆட்சியாளன், சொல்வதோடு மட்டுமின்றி அதைச் செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளன், அவன் முன்பு போய் நின்று கொண்டு, அல்லாஹ்தான் என் இறைவன் என்று சொல்வதென்பது ஏதோ, போராட்டம், நடத்தி விட்டு வீட்டுக்கு போய் அயர்ந்து தூங்குவது போல் சாதாரண விஷயமல்ல தலை போய் விடும்.
இதே நிலை நபி(ஸல்) காலத்திலும் இருந்தது. ஒரு வித்தியாசம், நபி(ஸல்) காலத்தில் ஆட்சியாளன் என்று யாரும் இருக்கவில்லை. ஆனால், ஆதிக்க சக்திகள் (தாஃகூத் கள்) இருந்தனர். அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மத் அர் ரசூலுல்லாஹ்” என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை இரு கூறாகக் கிழித்து கொன்ற சம்பவங்கள் ஹதீஃத் நூல்களில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.
ஆக இப்படிப்பட்ட தலைபோகிற காரியத்தைத்தான் சிறந்த ஜிஹாத் என்று அந்த ஹதீஃத் சொல்கிறது. ஆனால், இவர்களோ உலக ஆசையை கருத்தில் கொண்டு இவர்கள் செய்யும் அக்கப்போர்கள் எல்லாம் அந்த ஹதீஃதின் கீழ் வரும் என்று சொல்லி ஜிஹாதையே கேலிக்கூத்தாகி விட்டார்கள். மேலும்,
ஜிஹாத் என்றால் “கடின முயற்சி’ என்பதை நாமெல்லாம் அறிவோம். இவர்கள் செய்யும் இந்த அக்கப்போர்களில் கடின முயற்சி என்று ஏதாவது இருக்கிறதா? என்பதையும் சிந்திக்க வேண்டும். மேலும்,
போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா என்று இவர்கள் செய்யும் அராஜகங்களும், முழக்கம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் அறியாமைக் கால கூச்சல்கள் எல்லாம் இந்த ஹதீஃதில் உள்ள “ஜிஹாத்”தின் கீழ் வரும் என்று சுய விளக்கம் சொல்லி புதியதொரு வழிகேட்டை துவக்கி வைத்தவர் பெரியண்ணன் பீ,ஜே.
இதே பீஜே. தான் கவாரிஜ்கள் எனும் வழிகேடர்கள் “ஜிஹாத்’ பற்றி பேசும் குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்து முதன் முதலாக இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதம் என்ற வழிகேட்டை அறிமுகப்படுத்தினார்கள் என்று சொன்னார்.
இதே பீஜே தான், 1990களில் அரசியல் சாசனம் தமது போராட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறது. எனவே, நமது போராட்டங்களை அவ் வளவு லேசாக அலட்சியப்படுத்த முடியாது என்று சொன்னார்.
சமீபத்தில் இந்த போராட்டங்களுக் கெல்லாம் இவர்கள் பணியமாட்டார்கள் மதிப்பளிக்க மாட்டார்கள் என்னுடன் ஒரு மூவாயிரம் பேர் வாருங்கள் வந்தால் நான் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் என்று பேசியதும் இதே பீஜேதான்.
இதை எல்லாம் அவர்களின் பின்னால் போகிறவர்களும், போராட்டங்களை ஆதரிப்பவர்களும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதோடு, கீழ்க்காணும் வசனங்களையும் ஒப்பு நோக்கி, சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கட்டும்.
கடுமையான வாதத் திறமை, உங்க ளைக் கவரும் வகையிலான இவ்வுலக (உரிமை, அரசியலை)ப் பற்றிய அசாத்திய பேச்சாற்றல் கொண்ட ஒருவர் அவர்களில் இருக்கிறான். (அவன் தான் யோக்கியன்) தன் உள்ளம் தூய்மையான என்பதற்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறான் (சத்தியம் செய்கிறான்) ஆனால் உண்மையில் அவன் தான் (உங்களுக்கும், சத்தியத்துக்கும்) கொடிய பகைவன் ஆவான். 2:204
இவர்கள் தங்களுடைய சத்தியங்களைத் தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு (தப்பித்து வருகின்றனர். மக்கள்) அல்லாஹ்வின் பாதையில் (சென்று விடாமல்) தடுத்தும் வருகின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது. 63:2
அந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டவனோ அவர்களை அழிவுக் கிடங்கில் தள்ளிவிடத்தான் விரும்புகிறான். 4:60
*******************************************************************************
இஸ்லாம் கொண்டுவந்த முதல் மாற்று சட்டம் கிப்லா மாற்றமே!
S.H. அப்துர் ரஹ்மான் ஷ
அன்பு சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
“கிப்லா” மாற்றம் :
நபி(ஸல்) காலத்தில் நடைபெற்ற கிப்லா மாற்றத்தை முஸ்லிம்கள் அறிந்து இருப்பார்கள். இறைதூதர்(ஸல்) 16 அல்லது 17 மாதங்கள் தற்காலிக கிப்லா பைத்துல்முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். நபி(ஸல்) விருப்பப்படி அல்லாஹ்வினால் கஃபத்துல்லாஹ் கிப்லாவாக மாற்றப்பட்டதாக கீழ்கண்ட வசனம் கூறுகிறது.
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கிக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள், நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள், அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பாராமுகமாக இல்லை. அல்குர்ஆன்: 2:144
இந்த வசனம் மக்காவின் கஃபத்துல்லாஹ் நிரந்தர கிப்லாவாக மாற்றப்பட்டதை விளக்குகிறது.
மும்முறை கூற காரணம் என்ன?
இறைநூல் குர்ஆனில் கிப்லா பற்றிய கட்டளைகளும் தொடர்ந்து திரும்ப திரும்ப 3 முறை கூறப்பட்டதற்குக் காரணம் கிப்லா மாற்றத்தை உறுதி செய்வதற்குத்தான் கூறப்பட்டுள்ளன.
முதலாவது மாற்றுச் சட்டம் :
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் உள் ளிட்ட பலரது கூற்றுப்படி இஸ்லாத்தில் கொண்டு வரப்பெற்ற முதலாவது மாற்று சட்டம் கிப்லா மாற்றம்தான். எனவே, அதை திரும்பத் திரும்பக் கூறி இறைவன் உறுதிபடுத்துகிறான். ஆதாரம் : தப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 1, பக்கம் 489, 490.
ஆதி ஆலயம் கஃபத்துல்லாஹ் :
இந்த கிப்லா திசை மாற்றம் புவியியல் மாற்றமா? என்றால் ஆம்! இது புவியியல் மாற்றம்தான் உலகின் மையமாக இருந்த பைதுல்முகத்தஸை மாற்றி ஆதி ஆலயமான மக்காவிற்கு மாற்றினார்கள்.
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப்பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான், அது பரக்கத்து(பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அல்குர்ஆன்: 3:96
ஆதி ஆலயமான மக்காவை உலக மையம் ஆக்குவதன் மூலம் உலகம் படைக் கப்பட்ட நாளில் இருந்த பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக கீழ்கண்ட ஹதீஃதில் நபி (ஸல்) அவர்கள் கூறுவது மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நிலைக் குத் திரும்பிவிட்டது :
அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரழி) அறிவித்தார்:
வானங்களும், பூமியும் படைக்கபபட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடி யவை. அவை துல்கஃதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர் மாதத்திற்கும் ஷஃபான் மாதத்திற்கும் இடையிலுள்ள “முஸர்’ குலத் தாரின் “ரஜப்” மாதமாகும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஹஜ்ஜத்துல் விதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணு மளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, “இது துல்ஹஜ்’ இல்லையா? என்று கேட்டார்கள். நாங்கள், “ஆம்’ என்றோம். (பிறகு) “இது எந்த நகரம்?’ எனக் கேட்டார்கள்.
அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணு மளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, “இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள்,”ஆம்’ என்றோம். மேலும், “இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்’ என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்து விட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா? எனக் கேட்க, நாங்கள், “ஆம்’ என்றோம்.
(பிறகு) “உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர் களும் உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும், உங்களுக்குப் புனிதமானவையா கும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.
இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம் என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) இதை அறி விக்கும்போது, “முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்’ என்று கூறுவார்கள்.
பிறகு, நபி(ஸல்) அவர்கள், “நான் உங்க ளிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?’ என்று இரண்டு முறை கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) கூறினார்:
“உங்கள் மானமும்’ என்பதையும் சேர்த்தே அபூ பக்கர்(ரழி) கூறினார் என எண்ணுகிறேன். ஸஹீஹ் புகாரி: 4406, அத்தியாயம்: 64, (நபிகளார் காலத்துப்) போர்கள்.
நபி(ஸல்) காலத்தில் இறைவன் செய்த புவியியல் மாற்றம் :
நபி(ஸல்) வாழ்வில் இறைவன் செய்த ஒரே புவியியல் மாற்றம் கிப்லா மாற்றமே. அதை தவிர மாதங்களை மாற்றவும் இல்லை. கிழமையை மாற்றவும் இல்லை என்பது புரிகிறது. கிப்லா மாற்றம் மூலம் உலகம் படைக்கப்பட்ட நாளில் இருந்த பழைய நிலைக்கு அதாவது உலக ஆரம்பத்தில் கஃபதுல்லாஹ் மையமாக இருந்த நிலைக்குத் திரும்பியது என்று கூறுவதாகவே புரிய முடிகிறது. உலகின் மையம் மாற்றப்படும் போது காலம் மாறிவிடும்-நாட்களும் மாறும் என்பது புரிகிறது.
இதனால்தான் இறைவன்; யூதர்கள் இதை ஏற்க மாட்டார்கள், மறுப்பார்கள் என்றும், இஸ்லாத்தை ஏற்பவர் யார்? இஸ்லாத்தை விட்டு திரும்பி செல்பவர்கள் யார் என்பதை கிப்லா மாற்றம் அறிவித்து விடும் என்று அல்குர்ஆன் 2:143ல் அல்லாஹ் தெளிவாக விளக்குகின்றான். கிப்லா மாற்றத்தை மிக பளுவாக அந்த மக்கள் கருதினர்.
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரசூல்(நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும். யார்(நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங்கால்கள் மீது பின் திரும்பி செல்கிறார்கள் என்பதை அறிய வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம். இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர் கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன். அல்குர்ஆன் : 2:143
கிப்லா மாற்றத்தை யூதர்கள் இவ்வளவு எதிர்க்க காரணம் கிப்லா என்பது தொழுகையில் மட்டும் நோக்கும் திசை மட்டும் அல்ல என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தனர். கிப்லா என்பது தொழுகைக்கும், ஹஜ்ஜுக்கும், கிலாபாவிற்கும், ஆட்சி அதிகாரத்திற்கும், அபயத்திற்கும் என்று அனைத்திற்குமான நோக்கு திசை என்று அறிந்து இருந்தார்கள். இதனால் நிராகரித் தார்கள். அதனை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.
முஸ்லிம்களின் அறியாமை கைசேதமே :
கிப்லாவை பற்றிய வசனம் 2:145ஐ தொடர்ந்து 146,147 வசனங்கள் கிப்லாவை பற்றி யூதர்கள் தெளிவாக அறிந்திருந்தார் கள் என்பதையும், அந்த உண்மைகளை மறைப்பார்கள் என்பதையும் கூறி பிறகு கிப்லா மாற்றத்தை முஸ்லிம்கள் சந்தேகிக்க வேண்டாம் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண் மையை) அறிவார்கள், ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். அல்குர்ஆன்: 2:146
(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும், ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம். அல்குர்ஆன்: 2:147
இந்த உண்மையை முஸ்லிம்கள் அறியா மல் இருப்பது கைசேதமே.
கிலாபத் வரலாறு :
நபி(ஸல்) அவர்கள் ஆட்சியை தொடர்ந்து ராசிதீன் கலிபாக்களின் ஆட்சி கி.பி.661 வரை தொடர்ந்தது அதை தொடர்ந்து உமையா கலிபாக்களின் ஆட்சி கி.பி. 750 வரை தொடர்ந்தது. அதை தொடர்ந்து அப்பாஸிய கலிபாக்கள் ஆட்சி கி.பி. 1160 வரை சிறப்பாக நடைபெற்றது. கி.பி. 1160க்கு பின்புதான் அரேபியர்களிடம் இருந்து துருக்கியர்களின் உதுமானிய (ஒட்டமான் பேரரசிடம்) கிலாபத் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் ஆட்சி காலம் கிலா பாவின் வீழ்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. இவர்கள் இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் ஆட்சி செய்ததால் இவர்களிடம் கிலாபத் ஒப்படைக்கப்பட்டது.
1839-1876ல் கிலாபத்தில் சீரமைப்பு செய்வதாக கூறிகொண்டு டான்சிமாத் (வீழிஐகுஷ்துழிமி) சீர்திருத்தத்தை கொண்டு வந்த னர். நவீன சீரமைப்பு என்று கூறி இஸ்லா மிய சட்டங்கள் தூக்கி விசப்பட்டு சமயசார் பற்ற சட்டங்கள் ஏற்றப்பட்டன. வங்கி முறை ஏற்படுத்தப்பட்டது. ஓரின சேர்க்கை குற்றமற்றதாக ஆக்கப்பட்டது. இது அல் லாஹ்வின் சாபம் இறங்க காரணமானது. கிலாபத் இறைவனால் எடுபட்டு போனது. அதற்கு பின் உள்ளவை போலி கிலாபத்கள் தான்.
கிலாபத் வீழ்ச்சியும் யூதர்களின் எழுச்சியும் :
கிலாபத் வலுவாக இருக்கும் வரை செய்ய முடியாததை யூதர்கள் 1867ல் அலாஸ்காவை ரஷ்யாவில் இருந்து கிழமை மாற்றி அமெரிக்காவுடன் சேர்த்ததன் மூலம் லண்டனை உலக மையாக கொண்டுவந்தனர் அவர்கள் லண்டனை கிப்லாவாக கொண்டு ஆட்சி செய்து வந்தனர். இன்றும் லண்டனில் விக்டோரியா மஹாராணி தலைமையில்தான் உலக ஆட்சி நடைபெறுகிறது என்பதை உலக மக்கள் அறியாமல் இருப்பது பெரும் வியப்பே.
யூத கிப்லாவும் காலண்டர் கணக்கீடும் :
இதனை நம் இஸ்லாமியர்களும் நம்பி லண்டனை மையமாக கொண்டு உச்சியை நாளின் ஆரம்பமாக கொண்ட UTCஐ நேரடியாக வைத்து பிறை காலண்டரை வடிவமைத்திருப்பது துரதிஷ்டமே. அதன் மூலம் இஸ்லாமியர்கள் தங்களை அறியாமல் யூதர்களை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் உண்மை.
பைத்துல்முகத்தஸை நோக்கி முஸ்லிம்கள் தொழுதது அன்று இருந்த யூதர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்று லண்டனை முஸ்லிம்கள் கணக்கீட்டு கிப்லாவாக வைத்திருப்பது யூத, கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த உண்மைகளை முஸ்லிம்கள் விளங்கி ஆங்கில கட்டமைப்பை விட்டு வெளியேறி பிறை காலண்டர் கணக்கிடுவதி லாவது ஒன்றிணைய அல்லாஹ் உதவி செய்வானாக.
அல்லாஹ் நாடும்போது இஸ்லாமிய கிலாபத் மக்காவில் தான் மீண்டும் வரும் அப்படி வந்தால் உலகின் மையமாக கஃபதுல்லாஹ் தானாகவே மாற்றப்பட்டு விடும். அதுவரை கணக்கீடுகளை நாம் ஆதி ஆலயம் மக்காவின் கஃபதுல்லாஹ்வை மையப்படுத் தியே செய்வோம். அதன்மூலம் சரியான நாட்களை அடைந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.
“வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்று பவர் அல்லர், இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர், எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர் களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.”
அல்குர்ஆன் :2:145
*******************************************************************************