சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்

in 2020 செப்டம்பர்

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

ஆகஸ்டு  மாத  தொடர்ச்சி….

(நபியே!) இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்குச் சுவர்க்கத்துச் சோலைகள் உண்டு. அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (2:25) இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சுவர்க்கச் சோலைகளில் அவர்களைச் சேர்ப்பான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடும். (10:9,22:14,23:56) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் சுவர்க்கத்துச் சோலைகள் கிடைக்கும் என அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (9:72, 48:5, 57:12)

இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாளாகும். அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடும். (5:119, 18:31, 20:76, 55:46) அவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்கச் சோலைகளைச் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (9:89,100) சுவர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. (9:21) மேலும், அங்குள்ள சுவர்க்கச் சோலைகளில் மகிழ்விக்கப்படுவார்கள். (30:15) அனுப்பப்படுவார்கள். (14:23) நுழையச் செய்வான் (48:17, 58:22, 61:12, 64:9, 5:11, 66:8) நுழையச் செய்வேன் (5:2) நுழைவார்கள். (13:23, 16:31, 35:33) இருப்பார்கள். (18:19,20, 15:45, 42:22, 44:51,52, 51:15,16, 52:17, 54:54, 56:12, 69:22, 74:40,41,42) என்றெல்லாம் வருகிறது.

சுவர்க்கத்து நதிகளும், கடல்களும், ஆறுக ளும், மதுரமான நீரூற்றுக்களும்:

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும் அதன் மதுரமான நீரூற்றுக்களிலும் சுகம் பெற்று இருப்பார்கள். (15:45, 44:52, 51:15, 77:40) அதில் ஓடிக் கொண்டிருக்கும் (மதுரமான) நீரூற்று உண்டு. 88:12, அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுக்கள் (உதித்து) ஓதிக்கொண்டே இருக்கும். 55:50,66, அது (தஸ்னீம் எனும் ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்வின் நெருங்கியவர்கள் எனும்) முகர்ரபுகள் அருந்துவார்கள். 83:28)

(“காஃபூர்’ எனும்) கற்பூர ஊற்று ஒரு சுனையாகும். அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள் அதை (அவர்கள் தாம் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள். (76:6) “ஸல்ஸபீல்’ என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது. (76:18) அவர்களுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (10:9) அவற்றில் எல்லாப் பகுதிகளிலும் ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் அங்கு ஆறுகள் பாய்ந்து கொண்டிருக்கும்.  (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:584)

சுவர்க்கத்தில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும் தனது சுவை மாறாத பாலாறுகளும் அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மதுரச ஆறுகளும் தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. (47:15) தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள், 56:18) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு(ச் சுவர்க்கச்)சோலைகள் உண்டு. அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (2:25) அந்தச் சுவர்க்கச் சோலைகளுக்கிடையே உள்ள மரங்கள் மற்றும் மாளிகைகளுக்கு இடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஆறுகள் ஆழமானதாக இராது. (தஃப்சீர் இப்னு கஸீர்: 1:130)

சுவர்க்கத்தில் தண்ணீர்க்கடலும், தேன்கடலும், பாற்கடலும், மதுக்கடலும் உள்ளன. பின்னர் அவை மதுரமான நீர் ஆறுகளாக, தேன் ஆறுகளாக, பால் ஆறுகளாக, மது ஆறுகளாக்ப் பிரியும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஆவியா(ரழி), திர்மிதி: 2690)

தேனீக்களின் வயிறுகளிலிருந்து வெளிப்பட்டிருக்காத சுத்திகரிக்கப்பட்ட தேனாறுகளும், ஓடிக்கொண்டிருக்கும், அந்தத் தேன் மிகவும் தூய்மையானதாக இருக்கும். அதன் நிறமும் சுவையும், வாடையும் அழகாக இருக்கும். (இப்னு அப்பாஸ்(ரழி) முஸ்னத் அஹ்மத் தஃப்சீர் தபரி:24282-2479, இப்னுகஸீர்: 8:458-460)

சுவர்க்கத்தின் நதிகள் பூமியில் அடி ஆழத்தில் ஓடுகின்றன என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கலாம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவை பூமியின் மேற்பரப்பில் ஆழமின்றி ஓடிக்கொண்டிருக்கும். அதன் இரண்டு ஓரங்களிலும் முத்துகளிளான மாடங்கள் இருக்கும் அதன் தரை நறுமணம் கமழும் கஸ்தூரியாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் பின் மாலிக்(ரழி) இப்னு மர்தூயா (ரஹ்) இப்னு அபித்துன்யா(ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர் : 8:460)

சுவர்க்கத்தின் சுவையான பானங்கள்:

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள். (76:17) நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளை களிலிருந்து (பானம்) அருந்துவார்கள். அதன் கலப்பு கற்பூரமாக (காஃபூராக) இருக்கும்(76:5) இறையச்சம் உடையோருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் நிலை (இதுதான்) அதில் மாற்றமடையாத நீர் ஆறுகளும், சுவை மாறாக பால் ஆறுகளும், அருந்துவோருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும், (ஓடிக்கொண்டு) இருக்கும். (47:15)

அதில் ஓடிக்கொண்டிருக்கும் (மதுரமான) நீரூற்று உண்டு. 88:12, அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுக்கள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும். 55:50,66, அது (தஸ்னீம் எனும் ஓர் இனிய) நீர்ச்சுனையாகும் அதிலிருந்து (அல்லாஹ்வின் நெருங்கியவர்கள் எனும்) முகர்ரபுகள் அருந்துவார்கள். (83:28)

இறையச்சம் உடையோருக்கு வாக்களிக்கப்பட்டுல்ள சுவர்க்கத்தின் நிலை (இதுதான்) அதில் மாற்றமடையாத நீர் ஆறுகளும், சுவை மாறாத பால் ஆறுகளும், அருந்துவோருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும், (ஓடிக்கொண்டு) இருக்கும். (47:15)

எந்த இறை நம்பிக்கையாளர் தாகித்த இறை நம்பிக்கையாளருக்குத் தண்ணீர் புகட்டுவாரோ அவருக்கு மறுமை நாளில் அல்லாஹ் (ரஹூகுல் மக்தும் என்ற) முத்திரை இடப்பட்ட பானத்திலிருந்து புகட்டுவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஸயீத்(ரழி) அஹ்மத்).

சுவர்க்கத்தில் பானங்கள் அருந்தும் கிண்ணங்கள், குவளைகள், பாத்திரங்கள்:

(சுவர்க்க பானங்கள் நிறைந்த) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும், (கொண்டு) அவர்கள்மீது சுற்றிக் கொண்டுவரப்படும். (அவை பளிங்கல்ல)   வெள்ளியினாலான  பளிங்கைப்  போன்ற  தெளிவான  கிண்ணங்கள்   அவற்றைத்  தக்க  அளவாக  வடிவமைத்திருப்பார்கள்  (76:15.16).  மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல்(என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டுவார்கள். (76:17). நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள். அதன் கலப்பு கற்பூரமாக (காஃபூராக) இருக்கும். (76:5)

பொன்(னாலான) தட்டுக்களும் கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். இன்னும் அங்கு அவர்களது மனம் விரும்பியதும் கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. (43:71)

ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட தெளிவான(மதுக்) கிண்ணங்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரமானது அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள். போதை மயக்கத்திற்கும் ஆளாகமாட்டார்கள். (37:45-47, 56:19, 52:23)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். இரண்டு சொர்க்கங்கள் உண்டு, அவற் றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை, (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன் னால் ஆனவையாகும்…. என்று (அபூ ஹுரைரா(ரழி), அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரழி) அபூமூசா அல் அஷ் அரி(ரழி) புகாரி: 7444,4880, 4878, 3245, 3246, முஸ்லிம்: திர்மிதி: 2648, 2660)

(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ, அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்… இன்னும் அதனுடைய கலவை “தஸ்னீமில்” உள்ளதுமாகும். அது(தஸ்னீம் என்பது ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்களான) “முகர்ரபுகள்” அருந்துவார்கள். (83:25-28)

அங்கே அவர்கள் சிலர் சிலரிடம் இருந்து (மதுக்) கிண்ணத்தை ஆர்வத்துடன் வாங்கிக் (குடித்துக்) கொண்டிருப்பார்கள். (அந்த மதுவினால்) அங்கு வீணான பேச்சோ (சச்சரவோ) பாவச் செயலோ இருக்காது. (52:23) குடித்துவிட்டு அங்கு வீணான பேச்சுக்களைப் பேசமாட்டார்கள். வாய் உளறல் இருக்காது, பாவமும் இருக்காது. உலகில் மது அருந்துவோர் பேசுவதைப் போன்று மதிமயங்கி மானக்கேடான பேச்சுக்களையும் அவர்கள் பேசமாட்டார்கள். இவ்வுலகத்தில் அது ஷைத்தானிடத்தில் இருந்தது.

ஆனால் உலகத்து மதுவின் அருவருப்புகளில் இருந்தும், தீங்கிலிருந்தும் மறுவுலகத்து மதுவை அல்லாஹ் தூய்மைப்படுத்தி விடு வான். தலைச்சுற்றல், வயிற்றுவலி, வாந்தி, மதியைக் கெடுத்தல், நோய் ஏற்படுதல், போன்ற கெட்ட அம்சங்களை எல்லாம் மறு வுலகத்து மதுவிலிருந்து முற்றிலுமாக நீக்கி விடுவான். மேலும் பயனற்ற தீங்கான பேச்சுக்களை, உளறல்களை, மானக்கேடான பேச்சுக்களைப் பேசுவதற்கு மறுவுலகத்து மது அவர்களைத் தூண்டாது என்று அல்லாஹ் அறிவித்தான். என்று கத்தாதா (ரஹ்) கூறியுள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 8:719)

மேலும் அல்லாஹ் அறிவித்தான் மறுவுலகத்து மது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன் சுவை இனிமையாக இருக்கும் அதைப் பற்றி நல்லதையே கேள்விப்படுவதாக இருக்கும். என வேறு இரண்டு வசனங்களில் அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான். (அது) வெண்மையானது பருகுவோருக்குச் சுவையானது கேடேதும் அதிலே இராது. அதனால் அவர்கள் மதிகெட்டுப் போகவும் மாட்டார்கள். (37:47) என்றும் மேலும், அதனால் அவர்களுக்குத் தலைச் சுற்றல் ஏற்படாது அவர்கள் அறிவு பேதலிக்கவும் மாட்டார்கள். (56:19) அதனால்தான் அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடம் இருந்து கிண்ணத்தை ஆர்வத்துடன் வாங்கிக் (குடித்துக்) கொண்டிருப்பார்கள். (அதை அருந்தியதால்) அங்கு வீணான பேச்சோ பாவச் செயலோ(எதுவுமே) இருக்காது. (52:23) என்று சுவர்க்கத்தில் பருகுவார்கள் ஆனால் ஜலம் கழிப்பதில்லை:

“சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் பருகுவார்கள். ஆனால் ஜலம் கழிக்கமாட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரழி) முஸ்லிம்: 2835, ரி.ஸா.1880)

சுவர்க்கத்தில் முதலாவதாக நுழைகின்ற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போன்று (பிரகாசமாக) இருக்கும். சுவர்க்கத்தில் அவர்கள் “ஜலம்’ கழிக்கவும் மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா) ஜாபிர்(ரழி) புகாரி: 3245, 3327, முஸ்லிம்:5450,5451,5453 திர்மிதி: 2660)

சுவர்க்கத்தில் சூரியனின் கடுமையான சூடும் இல்லை அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து மகிழ்ந்தவண்ணம் இருப்பார்கள். (சுட்டெரிக்கும்) சூரியனையோ(அதன்) கடுமையான (சூட்டையோ) அதில் அவர்கள் காணமாட்டார்கள். (76:13)

“நிச்சயமாக நீர் இ(ச்சுவர்க்கத்)தில் (சூரியனால் ஏற்படும்) வெயிலில்(கஷ்டப்) படவும் மாட்டீர். (என்று கூறினோம். 20:118,119)

அதனால் சுவர்க்கத்தில் தாகமும் இல்லை :

நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் (சூரியனால் ஏற்படும்) வெயிலில்(கஷ்டப்) படவும் மாட்டீர். இன்னும் இதில் நீங்கள் தாகிக்கவும் மாட்டீர்கள். (என்று ஆதமுக்கு தாம் கூறினோம் 20:118,119)

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன்னர் “அல்கவ்ஸர்’ எனும் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது. “அல்கவ்ஸர்’ என்பது ஒரு சுவர்க்க நதியாகும் என்னுடைய இறைவன் மறுமை நாளில் சுவர்க்கத்தில் அதை எனக்குத் தருவதாக வாக்களித்துள்ளான்.

எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கவிருக்கும் அதன் பரப்பளவானது மதீனா நகரத்திலிருந்து அம்மான் வரையான ஒரு மாத காலப் பயணத் தொலைவு கொண்டதாகும். மேலும் அதன் அனைத்து மூலைகளும் சம அளவு கொண்டதாகும். அதன் இரு மூலைகளுக்கிடையே உள்ள தூரம் “ஷாம்’ நாட்டின் “ஜர்பா’ மற்றும் “அத்ருன்’ ஆகிய நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும். அது “ஃபிர்தெவ்ஸ்’ எனும், சுவர்க்கத்திலிருந்து நீளுகின்ற இருவடி குழாய்கள் மூலமாக அத்தடாகத்திற்குள் தொடர்ச்சியாகத் தண்ணீரையும் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அக்குழாய்களில் ஒன்று தங்கத்தாலானது மற்றொன்று வெள்ளியாலானது.

(அந்நீரை அருந்துவதற்காக) அதன் (விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும்) கூஜாக்கள், குவழைகள் (எண்ணிக்கையில்) விண்மீன்களைப் போன்றவையாகும். அதில் அபரிதமான நன்மைகள் உண்டு. அது பாலை விட வெண்மையானது, தேனை விட இனிமையானது. அதன் மணம் கஸ்தூரியை விட அதிக நறுமணம் வாய்ந்த தாகும். யார் அங்கு வந்து அதிலிருந்து நீர் அருந்துகின்றாரோ அவருக்கு அதற்குப் பின்னர் ஒருபோதும் தாகமே ஏற்படாது. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (108:1-3 அபூஹுரைரா(ரழி) ஸவ்பான்(ரழி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி), இப்னு உமர்(ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி), அபூ ஸயீத்(ரழி) மற்றும் நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரழி) புகாரி: 4042, 4330, 6577, 6579, 2790, 2791,1386,7423, முஸ்லிம்: 670, 1917, 4599, 4601, 4606, 4607, 4609, 4764, திர்மிதி, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்) மேலும் பார்க்க: அபூஸயீத்(ரழி), புகாரி: 2790, 2791, 1386,7423, திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் 2:226,227)

Previous post:

Next post: