சத்தியத்தை எடுத்து சொல்வது மட்டுமே கடமை!
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
இரண்டை மூன்றாக்கிய ஹிஜ்ரி கமிட்டி :
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ண யிக்கப்பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (இறைநூல் : 55:5)
இறைவன் கூறியபடி சந்திரனும் சூரியனும் கணக்கின்படியே இயங்கி வருகின்றன.
சூரியனை கணக்கிட்டு தொழுகை நேரத்தை கணக்கிட்டது போல் சந்திரனை கணக்கிட்டு மாத ஆரம்பத்தையும் கணக்கிட்டு விடலாம் அதன்மூலம் சந்திரநாள்காட்டியும் ஏற்படுத்திவிடலாம் அதன் மூலம் ஒரே நாளில் உலகம் முழுவதும் பெருநாள் வந்துவிடும் என்று கி.பி. 2000 வருடத்தில் புறப்பட்ட ஹிஜ்ரி கமிட்டி 22 வருடத்தில் சாதித்தது 2 நாள் பெரு நாளை 3 நாட்களில் பெரு நாள் ஆக்கியதுதான்.
ஆங்கிலேயர் லண்டனை முன்னோக்கி கணக்கிட்டு சந்திரனின் தரவுகளை லண்டன் கிரின்வீச்சின் நள்ளிரவை மையப்படுத்தி வெளியிட்டு உள்ளனர். அந்த Uவீளீஐ நேரடியாக பயன்படுத்திய ஹிஜ்ரி கமிட்டி, சங்கம நாளி லேயே பெருநாள் கொண்டாடி இரண்டை மூன்றாக்குகின்றனர்.
ஹிஜிரி கமிட்டியினர் ஆங்கில Uவீளீஐ பற்றி மறுபரிசீலனை செய்யாதவரை இதற்கு தீர்வு வராது. இஸ்லாமிய கணக்கீடு என்ற பெயரில் முஸ்லிம்களை ஆங்கில கணக்கீட்டை பின்பற்ற வைத்தது தான் இவர்களின் 22 வருட சாதனை.
இந்துத்வாக்களின் பிரிவினை உண்டாக்கும் திட்ட மும் அதனை பயன்படுத்தி வளரும் முஸ்லிம் இயக்கங்களும்!
ஒரே இறைநூலைப் பின்பற்றும் முஸ்லிம்கள்:
நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங் கள் பிரிந்தும் விடாதீர்கள், அல்லாஹ் உங்களுக் குக் கொடுத்த நிஃமத்களை (அருள்கொடை களை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர் களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன் பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரைமீதிருந் தீர்கள், அதனின்றும் அவன் உங்களைக் காப் பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்க ளுக்கு தெளிவாக்குகிறான். (இறைநூல் 3:103)
இறைவன் கூறியதற்கு எதிராக, இயக்கம், மத்ஹப் எனப் பிரிந்து பல பிரிவுகளாக ஆகிய தால் இறைவன் இந்திய முஸ்லிம்கள் மீது அநி யாயக்காரர்களின் ஆட்சியை ஏற்படுத்தி உள் ளான். அதனை நீக்குபவனும் இறைவனே. முஸ்லிம்கள் இறைவன் கூறியது போல் ஒன்று பட்டு இறைவனிடம் திரும்பினால் மட்டுமே இதில் இருந்து மீளமுடியும். பாபரி மஸ்ஜிதை வைத்து அரசியல் செய்த பி.ஜே.பி. அதன் பலன்களை கண்டு அடுத்த பள்ளிவாசலை வைத்து அரசியல் செய்ய வந்துள்ளது. இதற்கு மேலும் முஸ்லிம் கள் ஒன்றுபட்டு ஒரே அமீரின் கீழ் வரவில்லை என்றால் இறைவனின் கோபத் திற்கு ஆளாகி விடுவோம். பாபரி மஸ்ஜித் அரசி யலில் பலன் அடைந்தது பி.ஜே.பி. மட்டும் அல்ல எதிர் வினையாற்றிய முஸ்லிம் இயக்கங் களும் வளர்ச்சி அடைந்து உள்ளன. தமிழகத் தில் பாபரி மஸ்ஜித்தை வைத்து வளர்ந்தவர்கள் பி.ஜே.பி.யும் பாபர் மஸ்ஜிதுக்காக போராடிய முஸ்லிம் இயக்கங்களும்தான். அடுத்த பள் ளியை வைத்து செய்யும் அரசியலில் ஆதாயம் அடைய போவது பி.ஜே.பியும் இப்போது உணர்ச்சியை தூண்டும் முஸ்லிம் இயக்கங்க ளும் தான். இதை முஸ்லிம்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்.
இந்துத்வாக்களின் திட்டம் :
வரப்போகும் தேர்தலை முன் வைத்து கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஓட்டு அறுவடை செய்யும் திட்டத்துடன் பிஜேபி இயங்கிவருகிறது. அதற்காக முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் ஹிஜாப், பள்ளிக்கு சீல் வைத்தல் போன்ற நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதற்கு முஸ்லிம் இயக்கவாதிகளின் எதிர்வினையாற்றல் பி.ஜே.பி.க்கு சாதகமாகவே அமையும்.
இயக்கவாதிகளின் வரம்புமீறிய பேச்சு சாதாரண இந்துவையும் இந்துத்துவாவாக மாற்றும்.
உங்களுடைய இறைவனிடம் பணிவாக வும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங் கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (இறைநூல் 7:55)
முஸ்லிம்களே உங்களுக்கு சோதனையாக அநியாயக்கார ஆட்சியாளர்களை ஏற்படுத்தி யது அல்லாஹ்தான். அதை நீக்கும் ஆற்றல் உடையவனும் அவன்தான். அவனிடம் சரணடைவதை விட்டுவிட்டு உணர்ச்சியை தூண்டி அரசியல் செய்வதை விட்டு விடுங்கள். ஒன்றுபட்டு பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
இதற்கு இறைநூலில் தீர்வு என்ன?
இறை மறுப்பாளர்களின் நிந்தனைக்கும், அநீதிக்கும் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன என்று இறைவன் இறைநூலில் கூறுகிறான்.
உங்கள் பொருள்களிலும், உங்கள் உயிர் களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரி டமிருந்தும், இணை வைத்து வணங்குவோரிட மிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவி மடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தி யோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். இறைநூல் : 3:186
பொறுமையை மேற்கொண்டு (இறைவனி டம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சய மாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மை யைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலா கும் என்று இறைவன் கூறிய பின்பு வரம்பு மீறி பேசும் இயக்கவாதிகளின் வரம்பு மீறிய பேச்சு கள் தீமைகளையே கொண்டுவரும். பிரிவினை இயக்கவாதிகளின் பேச்சுக்களை விட்டு விலகி ஒன்றுபட்ட முஸ்லிம்களாக ஒரே தலைமை யின் கீழ் ஒன்றுபட்டு இறைவனின் கோபத்தை விட்டு மீளுவோம். இன்ஷா அல்லாஹ்!
பொறுமையுடனும், தொழுகையுடனும் பிரார்த்தனை செய்வோம் :
பொறுமையைக் கொண்டும், தொழு கையை கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள், எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக் குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (இறைநூல்:2:45)