இஸ்லாமிய மற்றும் கிறித்துவ ஒற்றுமை ஓங்கட்டும்!
அஹமது இப்ராஹிம்
நமது தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நல்ல நண்பர்களாக இருந்த, இருக்க வேண்டிய கிறித்துவ சகோதரர்களை தங்கள் இயக்கத்தை வலுப்பெற வைக்க இயக்க வெறிபிடித்த புரோகிதர்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூண்டு வதற்காக வேண்டுமென்றே விவாதம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு விரோதமாக கிறித்தவர்களை வம்புக்கிழுத்து விவாதித்து முஸ்லிம்களுக்கு விரோதியாக்கியது போதாதா?
ஏற்கனவே பயங்கரவாத பா.ஜ.க. ஆட்சியில் கிறித்துவர்களும், முஸ்லிம்களும் சொல்லொண்ணா துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம்.
இதில் இரு சமுதாயங்களும் ஒருவருக் கொருவர் ஆறுதலாக இருப்பது அவசியத் திலும் அவசியமாக இருக்க வேண்டி இருக்க, இப்படி நாயும் பூனையுமாக சண்டையிடு வது கடைந்தெடுத்த புரோகிதத்தன மல்லவா! நமது சமுதாயத்திலுள்ள நாற்ற மெடுத்த பிரிவினை இயக்கங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்க என்ன வழியோ அந்த வழியைப் பற்றி சிந்தியுங்கள்!
கீழ்க்கண்ட அல்குர்ஆன் வசனங்களை அவதானியுங்கள்:
நிச்சயமாக யூதர்களையும், இணை வைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங் கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (அல்குர்ஆன் 5:82)
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள். (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில் லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:108)
கிறித்தவர்களுடன் விவாதிப்பதை நேரடியாக தடை செய்யும் வசனம் :
(முஃமின்களே) “அல்லாஹ்வின் வச னங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதை யும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட் டால், அவர்கள் இதை விட்டு வேறு வியத்தில் ஈடுபடும் வரையில் அவர் களோடு நீங்கள் உட்கார வேண்டாம்‘ என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர் களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர் களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். (அல்குர்ஆன் 4:140)
மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் விளங்குவதென்ன?
இயக்க வெறிபிடித்த புரோகிதர்கள் கிறித்துவ அறிஞர்களுடன் விவாதம் செய் யும்போது பைபிளில் இடம் பெற்ற சிற்சில வசனங்களை குறிப்பிட்டு நக்கல் நையாண்டி செய்கின்றனர். கடும் வார்த்தைகளால் கிறித்துவர்களின் நம்பிக்கையை எள்ளி நகையாடுகின்றனர்.
பதிலுக்கு கிறித்துவ அறிஞர்கள் அல் குர்ஆனையும் நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களையும் நிராகரித்து பரிகசிக் கவும் செய்கின்றனர். அப்பழுக்கற்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் தூய வாழ்க்கையை அருவருக்கத்தக்க வார்த்தை களால் கிறித்துவ புரோகிதர்கள் சாடும் போது இதைக் கேட்கும் எந்த ஒரு முஸ்லி மும் வேதனை தாளாமல் தன்னாலே கண்ணீர் விட்டுக் கதறி அழ நேரிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவ்வாறு நமது மார்க்கம் பரிகசிக்கப் படுவதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் கார ணமான கிறித்துவர்களுடன் அமர்ந்து விவாதித்த இயக்கவாதிகளும் கிறித்தவர் களைப் போன்றவர்களே என மேற்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ்வே கூறுவதாக நாம் விளங்க முடிகிறது.
எனவே இந்த இயக்கவாதிகளைப் போன்று தாங்களும் ஆகிவிடாமல் நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் காத்தருள்வானாக! ஆமீன்!