அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. எந்த கலீஃபாவின் ஆட்சிக் காலத்தில் அல்குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
உஸ்மான் (ரழி)
2. நபி(ஸல்) அவர்களின் ஹதீத்களை அதிகமாக அறிவிப்பு செய்த நபி(ஸல்) அவர்களின் மனைவி யார்?
ஆயிஷா(ரழி)
3. திக்ருகளில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
லாயிலாஹா இல்லல்லாஹ்
4. ஆரம்பகால ஸஹாபாக்கள் தஞ்சம் புகுந்த நாடு எது?
அபீஸீனியா
5. தொழுகையில் அவசியம் ஓத வேண்டிய சூரா எது?
அல்ஃபாத்திஹா
6. தீயோர்களின் பதிவேட்டின் பெயர் என்ன?
ஸிஜ்ஜீன்
7. உயர்ந்த சொர்க்கம் எது?
ஃபிர்தெளஸ்
8. அல்லாஹ்வின் வாள் என அழைக்கப்பட்ட சஹாபி யார்?
காலித்இப்னுவலீத்(ரழி)
9. முதலில் இஸ்லாத்தை ஏற்ற சிறுவர் யார்?
அலி(ரழி)
10. நபி(ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
ஏழு.
11. தொழாதவர்களுக்கான நரகம் எது?
ஸகர்.
12. அல்குர்ஆனில் மதினாவை வேறு பெயரில் குறிப்பிடப்படுகிறது?
யாத்ரிப்
13. அல்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டுள்ள சஹாபியின் பெயர் என்ன?
ஜைத்(ரழி)
14. அல்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?
114 சூராக்கள்
15. இறைவன் என்னோடு இருக்கின்றான் என கூறிய நபி யார்?
மூஸா (அலை)
16. ஆயத்துல் குர்ஸி அல்குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம்?
அத். 2:255
17. உலகின் இஸ்லாமிய வருடம் எப்போதிலிருந்து கணக்கிடப்பட்டது?
நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்ததிலிருந்து கணக்கிடப்பட்டது.
18. மூஸா(அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசியது எந்த பள்ளத்தாக்கு?
துவாபள்ளத்தாக்கு.
19. அல்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் எது?
அல்பக்ரா
20. நரகத்தின் காவலாளியின் பெயர் என்ன?
மாலிக்.