இஸ்லாம் மார்க்கம் ஏன் எதிர்க்கப்படுகிறது?
அய்யம்பேட்டை – நஜ்முதீன்
உலகில் பல நூற்றுக்கணக்கான மதங்கள் உள்ளன. அதில் ஒருசில மதங்கள் மட்டும் பெரும்பாலோரால் பின்பற்றப்படுகிறது. அவற்றுல் கிருஸ்த்தவ மதம், யூத மதம், புத்த மதம், இந்து மதம், சீக்கிய மதம் ஆகியவை பரவலாக எல்லோராலும் அறியப்பட்டவையாகும். இவைகளுக்கு வேத நூல்களும் உள்ளன. அவை அனைத்தும் மனித கரங்களால் உருவாக்கப்பட்டு குறைபாடுகளுடன் இருக்கின்றது. இருப்பினும் அவைகள் அதிகமாக விமர்சனத்திற்கு ஆளாகுவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டும் எதிர்க்கப்படுகிறது.
இஸ்லாம் மார்க்கத்திற்கு இறைவனால் அருளப்பட்ட வழிகாட்டுதல் நூலும் (குர்ஆனும்) உள்ளது. ஆயினும் அதிக விமர்சனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகுவது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே!
இதற்கு என்ன காரணம்? ஏன் எதிர்க்கப்படுகிறது?
இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிர்ப்பு என்பது இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ளது. இது ஏதோ நேற்று இன்று தோன்றியதா என்றால் இல்லை.
நபி இப்ராஹீம்(அல) அவர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகின்றது.
அது எதனால்?
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் களும் சொன்னதும், செய்ததுமே முக்கிய காரணமாகும். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர்களும் ஏதோ தவறாக சொல்லியதனால் எதிர்க்கின்றார்களா என்றால் இல்லை.
பின்பு ஏன் எதிர்க்கின்றார்கள்?
இரண்டு காரணங்கள் தான் மிக முக்கியமானது.
ஒன்று : அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நூலில் (குர்ஆனில்) குறிப்பிடப்பட்டது. மற்றொன்று அல்லாஹ்வின் தூதர்கள் சொன்னது.
அல்லாஹ் தன் வழிகாட்டுதல் நூலில் (குர்ஆனில்) இவ்வாறு கூறுகின்றான்.
“இந்த குர்ஆன் வழிகாடுதலாகும், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இறையச்ச முடையோருக்கு இது நேர்வழிகாட்டி யாகும்.” அத்தியாயம்: 2, வசனம் : 2
“இந்த வழிகாட்டும் நூலை (குர்ஆனை) அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ், அல்லாத வரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டு இருப்பார்கள். அத்தியாயம்:4, வசனம்:82
“இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்ட தன்று; அல்லாஹ்வே அதை அருளினான். மேலும் இதற்கு முன்னர் அருளப்பட்ட வழிகாட்டும் நூல்களை (வேதங்களை) உண்மைப்படுத்த அவற்றில் உள்ளவைகளுக்கு விளக்கம் கொடுப்பதாகவும் இருக்கிறது. இது அகிலங்களுக்கெல்லாம் அதிபதியான ரப்பிடமிருந்து வந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அத்தியாயம்: 10, வசனம்: 37
“இதை நம் தூதராகிய நீர் கற்பனை செய்தது என அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: நீங்கள் சொல்வதில் உண்மையாளராக இருந்தால், இதிலுள்ளதைப் போன்று ஓர் அத்தியாயத்தைக் கொண்டுவாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவீராக”. அத்தியாம் : 10, வசனம்: 38
அல்லாஹ் குர்ஆனை நேர்வழிகாட்டும் நூல் என்றும், முரண்பாடு இல்லாதது என்றும், இது போன்று ஒரு குறையும் இல்லாத நூலை கொண்டுவாருங்கள் என்று அல்லாஹ் அறிவித்தப் பிறகும் மனிதன் இதனை குறை கூறுகின்றான். அதாவது இஸ்லாம் மார்க்கத்தை எதிர்க்கின்றான்.
இஸ்லாம் மார்க்கத்தை எதிர்ப்பவர்கள் யார்?
மற்ற மதங்களை பின்பற்றும் பெரும்பாலோரா என்றால் இல்லை. எதிர்ப்பவர்கள் யார் என்றால் மற்ற மதங்களிலுள்ள மதகுருமார்களே.
தங்களுடைய மதகுருமார்கள் எதிர்ப்பதால் மற்ற மதங்களை பின்பற்றக்கூடிய சாதாரண பொதுமக்கள் இது உண்மையாக இருக்குமோ? என்பதாக நினைத்து அவர்களுக்கு ஆதரவு தருகின்றார்கள்.
மற்ற மதங்களிலுள்ள குருமார்கள் இஸ்லாம் மார்க்கத்தை எதிர்க்க என்ன காரணம்?
காரணம் ஒன்று : ஏனைய மதங்களிலுள்ள சில குருமார்கள், தான் கடவுளின் அவதாரம் என்றும், கடவுளின் நிலையை அடைந்ததாகவும் அம்மக்களை நம்ப வைக்கின்றார்கள். அம்மக்களும் நம்புகின்றார்கள். ஏனைய மதங்களிலுள்ள இதுபோன்ற பித்தலாட்டத்தை (மோசடியை) இஸ்லாம் மறுக்கின்றது. இது மதகுருமார்களுக்கு இடைஞ்சலாக உள்ளது.
காரணம் இரண்டு : கடவுளின் அன்பையும், மன்னிப்பையும் யார் வேண்டுமானாலும் இடைதரகர்கள் (அதாவது பூசாரி, ஃபாதர், ஹஜரத், அவுலியா, ஆலிம்) இல்லாமல் நேரடியாகப் பெறமுடியும். இதுவும் எல்லா மதங்களிலுள்ள குருமார்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்பதே உண்மையான காரணம்.
அல்லாஹ்வின் தூதர்கள் சொன்னது:
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே! உங்களது தந்தையும் ஒருவரே! எந்த ஒரு அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒரு அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ மேன்மையோ சிறப்பும் இல்லை. அதுபோல் எந்தவொரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்தவொரு கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும், சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். உங்களில் மிக சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்கள்தான்.
மனிதர்களுக்கிடையே ஏற்ற தாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில் உள்ள பெரும்பாலானோருக்கு இது மரண அடியாக இருக்கின்றது. எனவேதான் இஸ்லாம் மார்க்கத்தை எதிர்க்கின்றார்கள்.
அதாவது எவருடைய உள்ளத்தில் நானே உயர்ந்தவன், நானே மிகமிக அறிந்தவன் என்ற எண்ணம் இருக்கின்றதோ அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை எதிர்க்காமல் இருக்கமாட்டார்கள்.
இது இப்லீஸின் குணம். அவன் அல்லாஹ்விடம் நீ படைத்த மனிதனை விட நானே உயர்ந்தவன், அதிகம் அறிந்தவன் என்றான். ஆக இப்லீஸின் குணம் கொண்டவர்களால் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிர்ப்பு இருந்தே தீரும்.
அவ்வாறெனில் இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சியை அழித்துவிட முடியுமா? என்றால் ஒருபோதும் முடியாது. ஏனெனில் இது இறைவனின் மார்க்கம் இதை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்களே தவிர இஸ்லாம் அழியாது.
ஆனாலும் உலக அளவிலும், இந்தியாவிலும் மீடியாக்களின் துணையைக் கொண்டு இப்லீஸின் குணம் கொண்டவர் கள் இஸ்லாமை எதிர்க்கின்றார்கள்.
அதன் வளர்ச்சியை தடுக்கவும், இஸ்லாத்தை அழிக்கவும் பெரும் முயற்சி செய்கின்றார்கள். அவ்வாறு முயற்சி செய்கிறவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்களும் தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்கள். இதுவும் உண்மை.
துணை போகின்றவர்கள் யார் யார்?
1. மத்ஹப் என்ற பெயரில் இஸ்லாம் மார்க்கத்தில் பல பிரிவுகளை உண்டாக்கியவர்கள் மற்றும் அதை ஆதரிப்பவர்கள்.
2. இம்மை–மறுமை கல்வி வெவ்வேறு, மறுமை கல்வியே போதுமானது என கூறி இவர்களில் சிலர் தங்கள் கரங்களால் எழுதியதை வாழ்க்கைக்கு உதவாத பல பாடங்களை மதரஸாவில் நடத்துகிறார்கள். மற்றும் மதரஸாவின் வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்.
(இதில் வேடிக்கை என்னவென்றால், “யா அல்லாஹ்! எங்களுக்கு இம்மையிலும், மறுமை யிலும் அருள்புரிவாயாக” என்று துஆ மட்டும் செய்வார்கள்)
3. இயக்கவாதிகள் : மார்க்கத்தில் பிரிவினை இல்லை, பிரிவினை கூடாது என கூறிக் கொண்டு தனி பள்ளிவாசல், தனி மேடை என மக்களை பல பிரிவுகளாக பிரித்தவர்கள், பிரிப்பவர்கள். இத்தகைய தலைவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள்.
4. இஸ்லாத்திற்கு எதிராக நஞ்சை கக்கும் வல்லரசு நாடுகளை இப்லீஸின் குணம் கொண்ட தலைவர்கள் மற்றும் சுய நலத்திற்காக ஆதரிப்பவர்கள்.
5. அதிர்ஷ்டவசமாக இந்தியாவிலும், பல மாநிலங்களிலும் ஒற்றை தலைமை உள்ளது. ஆச்சரியமாக இருக்கின்றதா? உண்மைதான். ஒருவர் டெல்லி இமாம், மற்றொருவர் மாநில தலைமை காஜிகள்.
மேற்கண்ட இவர்கள் ரமழான் மாதம் ஆரம்பத்தின் போதும், அதன் முடிவிலும் ஓர் அறிவிப்பை வெளியிடுவார்கள். இந்த முல்லாக்கள் பிறை வியத்தில் மட்டும் அறிவியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அது நபிவழி இல்லையாம்.
இவர்களின் இத்தகைய செயல்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கின்றது?
மேற்கண்ட இவர்கள் மார்க்க வியத்தில், ஒத்த கருத்தை சொல்வதில்லை.
ஏன் தெரியுமா? ஒன்று அறியாமை, மற் றொன்று வயிற்று பிழைப்பு.
அதாவது ஓர் ஆலிம் என்பவர் (அவர் களாகவே ஆலிம்(அறிஞர்) என்று சொல்லி கொள்பவர்கள்) மார்க்க வியத்தில் குர் ஆனை (அல்லாஹ் வழிகாட்டுதல் நூலை) ஆதாரமாக காட்டுவார்.
வேறுவொரு ஆலிம் என்பவர் ஹதீதை ஆதாரமாக காட்டுவார்.
இந்த இரண்டையும் ஆதாரமாக காட்டினாலும் எங்கள் மத்ஹப் நூலில் அவ்வாறு இல்லை. எனவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று மற்றொறு ஆலிம் என்பவர் கூறுவார்.
ஆக இஸ்லாத்தின் எதிரிகள் வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் இருக்கிறார்கள் என்பது தெளிவான உண்மை.
எனவே மக்களே! மேற்கண்ட தவறுகளை திருத்திக்கொண்டு இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுங்கள். எதிர்ப்பவர்கள் கண்ணுக்கு தெரியாத தூரம் காணாமல் போய்விடுவார்கள்.
முயற்சி செய்வோம், அல்லாஹ்விடம் மகத்தான கூலி இத்தகையவர்களுக்கு மட்டுமே காத்திருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
“மக்களே! நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர் களாகவும், தீயதிலிருந்து மக்களை விலக்குபவர்களாகவும் உங்களிடம் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெறுவார்கள்.” அத்தியாயம்: 3, வசனம் : 104