அதிகபட்சம் முப்பது நாட்கள்தான் எனும்போது பதினாறு எப்படி வரும்?

in 2024 ஜூன்

அதிகபட்சம் முப்பது நாட்கள்தான் எனும்போது பதினாறு எப்படி வரும்?

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை.

பிறையுடைய ஒரு மாதம் என்பது அதிகபட்சம் முப்பது நாட்கள் தான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது அதில் பாதியளவு, பகுதியளவு, பெளர்ணமி பதினாறாக  எப்படி  வரும்?’’

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மாதம் என்பது சில வேளை (குறைந்த பட்சம்) 29 நாட்களைக் கொண்டதாகவும் சில வேளை (கூடியபட்சம்) 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்று; (அறிவிப்பவர்கள் அபூஹுரைரா(ரழி), இப்னு உமர்(ரழி), அனஸ்(ரழி), அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), உம்மு ஸலமா(ரழி) ஆகியோர் புகாரி: 1907-1913, 2468) மேலும்,

நிச்சயமாக அல்லாஹ்பிறைகளை (ஹிலால்களை) காலங் காட்டிகளாகஆக்கியுள்ளான். எனவேஅதனை” (பிறையை) நீங்கள் கண்டால் நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும்அதனை” (பிறையை) நீங்கள் கண்டால் நோன்பை விட்டுவிடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் (பிறை தென்படாமல் மறைக்கப்பட்டால்) ஏற்பட்டால் அதனை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை”. அறிவித்தவர்: (இப்னு உமர் (ரழி), நூல்: இப்னு  ஹூசைமா : 1789)

ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்து கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் சஃபான் மாதத்தின் நாட்களை மட்டும் (குறிப்பாகக் கவனித்துக்) கணக்கிடக்கூடியவர்களாக இருந்தார்கள் மற்ற மாதங்களின் நாட்களை அப்படிக் (குறிப்பாக அவர்கள்) கணக்கிடவில்லை. பின்னர் அவர்கள் மீது மறைக்கப்படும்போது அதை அவர்கள்முப்பதாவது நாள்என்று எண்ணிக் கொள்வார்கள். பிறகு (ரமழானில்) நோன்பு வைப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) அவர்கள், அபூதாவூத்:1993, அஹ்மத்)

நாம் கத்ருடைய நாளைப் பற்றி நபியவர்களிடம் நினைவுபடுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? 22 நாட்கள் முடிந்தன. மேலும் எட்டு நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். (அதற்கவர்கள்) இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது எனக் கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தமது கையில் 29 நாட்கள் வரை எண்ணினார்கள். பிறகு இன்றைய நாளில் அந்த கத்ருடைய நாளைத் தேடுங்கள் எனக் கூறினார்கள். (இப்னு ஹுஸைமா: 2024, பைஹகீ: 8018, இப்னு ஹிப்பான் : 2588)

மேலும், பெருநாட்களின் இரு மாதங்களும் சேர்ந்தாற்போல் இருபத் தொன்பது நாட்களாகக் குறையாது என்று என்று முஹம்மது கூறுகின்றார். (புகாரி: பாகம் 2,  பக்கம் 586, பாடம் 12)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: துல்ஹஜ், ரமழான் ஆகிய பெருநாட்களுக் குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் (29+29 நாட்களாகக்) குறையாது என்று; அறிவிப்பவர் : அபூபக்ரா(ரழி), அவர்கள் புகாரி: பாகம் 2, பக்கம்: 586, பாடம் 12 & 1912 (இரண்டு பெருநாட்களுக் குரிய மாதம் என்பது துல்ஹஜ் மற்றும் சவ்வால் மாதமாகும்) 

மேலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மாதம் தமது மனைவியருடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். (அம்மாதம்) 29 நாட்கள் முடிந்ததும் அவர்கள் தங்கியிருந்த பரணை விட்டும் இறங்கி, மனைவியரின், வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள் அவர்களிடம்; நீங்கள் ஒரு மாதம் (முப்பது நாட்கள்) வீட்டிற்கு வருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகின்றேனே (29 நாட்கள் தானே ஆகிறது) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் ஒரு மாதம் என்பது (குறைந்தபட்சம்) 29 நாட்களாகவும் அமையும்! என்று கூறினார்கள். அறிவிப்பவர்கள்: உம்மு ஸலமா(ரழி), அனஸ் (ரழி), ஆயிஷா(ரழி), இபனு அப்பாஸ் (ரழி) ஆகியோர். புகாரி: 1910, 1911, 2468, 2469, 378, 4785, 4786, 4788, 4789, 5262, 5263, நஸயீ: 2104) மேற்கண்ட ஆதாரபூர்வமான அறிவிப்புகளின்படி மாதமென்பது கூடியபட்சமும் முப்பது நாட்களாகவும், குறைந்தபட்சம் இருபத் தொன்பது நாட்களாகவுமே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே மாதமென்பது முப்பது நாட்களை விட அதிகமாவதில்லை. இருபத்தொன்பது நாட்களைவிடக் குறைவதில்லை. இதுவே இறை நம்பிக்கையாளர்களின்  புரிதலாகும்.

ஆகவே, ஒரு மாதமென்பது கூடியபட்சம் 31 நாட்களாகவும், குறைந்தபட்சம் 28 நாட்களாகவும் வருவதென்பது உலகில் பெரும்பாலானவர்களாக இருக்கக்கூடிய கிறிஸ்தவர்களின் காலண்டர் வழிமுறையாகும். அதாவது: கிறிஸ்துவுக்குப் பின்னர் 1582ஆம் ஆண்டளவில் 13 பதின்மூன்றாவது கிறிஸ்தவப் போப்பாண்டவர்கிரகரீஎன்பவரால், நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு நாளைக் கூட்டியும், 127 வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு நாளைக் கழித்தும், குறைந்தபட்சம் 28 நாட்களைக் கொண்டதாகவும் கூடியபட்சம் 31 நாட்களைக் கொண்டதாக வும், கணக்கிடும்படியானநுஜூமிய்யாஎன்னும் நட்சத்திரக் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட கிரிகோரியன் சூரியக் கணிப்புக் கணக்கீட்டுக் காலண்டரின் நிலையாகும். (ஆதாரம்: “டாக்டர் சிதம்பரநாத செட்டியார்தொகுத்தளித்த ஆங்கில, தமிழ் அகராதி, சென்னை பல்கலைக் கழகம், 1965ஆம் ஆண்டு, பதிப்பு பக்கம் 456) ஆனாலும், நபிவழிப்படி நமக்கு அதிகபட்சம் முப்பது நாட்களும், குறைந்தபட்சம் இருபத்தொன்பது  நாட்களுமாகும்.

அதற்கு மேற்கொண்டும் ஆதாரமாக, ஒரு மாதத்தின் கூடியபட்ச முப்பது நாட்களில் சரிபாதியாகிய பதினைந்தாவது பெளர்ணமி வெளிச்சமான, பிரகாசமான, ஒளியான நாட்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பிரஸ்தாபிக்கின்றார்கள்.

மாதம் மூன்று நோன்புகளில் மிகச் சிறந்ததுஅய்யாமுல் யபீழ்என்றழைக்கப்படும் வெள்ளை நாட்களாகும். அது பிறை 13,14,15 ஆகிய நாட்களாகும் என ஆதாரபூர்வமான ஹதீத்களில் பிரஸ் தாபிக்கப்படுகிறது. 

மேலும், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரழி) அறிவித்ததாவது: (மாதந்தோறும், 13,14,15 ஆகியஅய்யாமுல் யபீழ்என்றழைக்கப்படும் மூன்று (வெள்ளை) நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 1979, அத்தியாம்:30, நோன்பு, முஸ்லிம் :1159, ரியாளுஸ்ஸாலி ஹீன்: 1260)

அபூதர்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: “மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால் 13,14,15 ஆகிய (“அய்யாமுல் யபீழ்எனப்படும் வெள்ளை) நாட்களில் நோன்பு வைப்பீராக!” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: 761,  ரியாளுஸ்ஸாலிஹீன்: 1262)

கதாதா இப்னு மில்ஹான்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: “அய்யாமுல் யபீழ்எனும் 13,14,15 ஆகிய (வெள்ளை) நாட்களில் நோன்பு நோற்குமாறு எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அபூதாவூத்: 2449, ரியாளுஸ்ஸாலிஹீன்: 2449) அது போன்றே ஒரு மாதத்தின் குறைந்தபட்ச நாட்களாகிய இருபத்தொன்பது நாட்களில் வரும் பகுதியாகிய பதினான்காவது  நாள்  குறித்தும்  பிரஸ்தாபிக்கின்றார்கள்.

ஒரு மாதத்தின் குறைந்தபட்ச இருபத்தொன்பது நாட்களைக் கொண்ட மாதங்களில் பெளர்ணமி எனும் முழு நிலவு தோன்றுவது “14′ ஆவது நாளில் தான் என்பதையும் அவர்கள்  விளங்கியிருந்தார்கள்:

ஓர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்பொழுது அவர்கள் பதினான்காம் நாளின் (பெளர்ணமி) முழு நிலவைக் கூர்ந்து நோக்கியபடி இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் உங்கள் இறைவனையும் (மறுமையில் நீங்கள்) காண்பீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜரீர்பின் அப்தில்லாஹ் (ரழி), புகாரி: 4851) இது போன்ற ஹதீத்களுக்கு முற்றிலும் முரணாக, ஹிஜ்ரிக் காலண்டரில் பிறை பதினாறிலும் பெளர்ணமி வருகிறதே? அப்படியானால் ஒரு மாதம் என்பது 16+16=32  நாட்களா?

Previous post:

Next post: