ஐயமும்!  தெளிவும்!!

in 2024 ஜூன்

ஐயமும்!  தெளிவும்!!

ஐயம் : ஷைத்தானின் நண்பர்கள் (நெருக் கமானவர்கள்) யார்? ஷைத்தானின் நண்பர்களை (நெருக்கமானவர்களை)  அடையாளம்  காணமுடியுமா?

தெளிவு : இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஷைத்தான் என்றால் யார்? அவன் என்ன செய்தான்? என்ன செய்வான் என்பதை தெரிந்துக் கொண்டுவிட்டால், ஷைத்தானுடைய நண்பர்கள் (நெருக்கமானவர்கள்) யார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஷைத்தான்  என்பவன்  யார்?

பொதுவாக ஷைத்தான் என்ற சொல் இறைவனால் சபிக்கப்பட்ட / வெறுக்கப்பட்ட இப்லீஸ் என்பவனை குறிக்கும். அதாவது இப்லீஸும்இப்லீஸின் சந்ததிகளும் ஷைத்தான் எனப்படுவார்கள். இந்த இப்லீஸ் என்பவன் ஜின் இனத்தை  சார்ந்தவன்.

(ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டவையாகும்)

இந்த ஜின்களில் நல்லவையும்  உண்டு, கெட்டவையும்  உண்டு.

எனவேதான் மறுமையில் மனிதர்களை விசாரனை செய்வது போல் ஜின்களும்  விசாரிக்கப்படுவார்கள்.

ஷைத்தான் என்றால் யார் என்பதை தெரிந்துக் கொண்டோம். அடுத்து அந்த ஷைத்தான்கள் என்ன  செய்யும்  என்பதைப்  பார்ப்போம்.

ஆதத்தின் மக்களே! ஷைத்தான் உங்கள் தாய்தந்தையரை (ஆதம் ஹவ்வா இருவரையும்) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவன் ஆவான். மேலும் அவன் குழப்பத்தில் ஆழத்த கூடியவன். மேலும் நீங்கள் பார்க்க முடியாத இடத் திலிருந்து அவனும் அவனுடைய சந்ததி களும் உங்களை பார்க்கின்றார்கள்என்று  இறைவன்  கூறியுள்ளான்.   (அல்குர்ஆன் : 7:27)

மனிதனின் இயல்பிலேயே உயர் நிலை அடையவேண்டும் என்னும் ஓர் இயற்கையான தாகம் உள்ளவனாக படைக்கப்பட்டுள்ளான். இதை அறிந்த இப்லீஸ் (REAL ஷைத்தான்) பெருமை மற்றும் பொறாமையின் காரணமாக மனிதனின் நலம் விரும்பி போல் பேசி மனித இனத்தின் தாய் தந்தையரை குழப்பத்தில் ஆழ்த்தி சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான் என்று மேற்படி  வசனம்  கூறுகிறது.

அடுத்து இறைவன் பொதுவாக நம் அனைவருக்கும் எச்சரிப்பது என்னவென்றால் நாம் பார்க்க முடியாத இடத்திலிருந்து இப்லீஸும் அவனுடைய சந்ததிகளும் மனிதர்களை வழிகெடுக்க பார்க்கிறார்கள் என்பதாகும். இதுவே REAL ஷைத்தானைப் பற்றியும், அவன் என்ன செய்வான் என்பதையும்  பார்த்தோம்.

இனி ஷைத்தானுக்கு நெருக்கமாக மனிதர்கள் யார் என்பதையும் நெருக்கமானவர்களையும் அடையாளம் காணமுடியும் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம். 

ஷைத்தானுக்கு நெருக்கமானவர்கள் யார்? 

1. ஏக இறை நம்பிக்கை கொள்ளாத வர்கள் மற்றும்  இணை  வைப்பவர்கள்.

2. இறைவனையன்றி ஷைத்தான்களை நண்பர்களாக்கிக் கொண்டவர்கள்.
(
அல்குர்ஆன் 4:119)

3. ஏக  இறைவனை  மறுப்பவர்கள்.

(“ஏக இறைவனை மறுப்பவர்கள் தான் உயிரினங்களிலேயே மிகவும் மோசமானவர்கள் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்”.   (அல்குர்ஆன்  8:55)

4. இறை வழிகாட்டும் நூலிலிருந்து (குர்ஆனில்) அறிவு வழங்கப்பட்டிருந்தும் ஜிப்தையும், தாஃகூத்தையும் ஏற்றுக்கொள்கின்றவர்கள்.   (அல்குர்ஆன் 4:51)

(“ஜிப்த்‘) எனும் சொல்லின் அசல் கருத்து என்னவென்றால் யதார்த்தமற்ற, அடிப்படையற்ற, பயனற்ற பொருள் என்பதாகும். அதாவது இஸ்லாத்தின் கொள்கைக்கு மாற்றமான மந்திரம், ஜோதிடம், குறி பார்த்தல், வசியம் செய்தல், சகுனம், நல்ல நேரம் பார்த்தல் ஆகிய மூடப்பழக்க வழக்கங்களை நம்பக்கூடியவர்கள்)

(தாஃகூத்) : இந்த இறை நூலையும் (குர்ஆனையும்) இதற்கு முன்பு அருளப்பட்ட இறை நூல்களையும் நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவார்கள். ஆனால் தீர்ப்பு என்று வரும்போது தாஃகூத்தின் (ஷைத்தானின்) சட்டத்தையே  பின்பற்றுவார்கள். 

அதாவது இறைவனின் கட்டளை, இறைதூதரின் கட்டளை ஆகிய இரண்டும் இஸ்லாத்தின் அடிப்படை சட்டமாகும். FINAL AUTHORITY  ஆகும்.   (அல்குர்ஆன் 4:61)

ஆனால் மத்ஹபு  சட்டத்தின்படியும், ஜமாத்துல் உலமா சபையின் கொள்கைபடியும், இன்னும் இயக்கங்களின் BYLAWபடியும் மார்க்க விசயத்தில் தீர்ப்பு வழங்குபவர்கள் அதை ஏற்றுக் கொள்பவர்கள்.

5. அமைதியளிக்கக் கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய செய்தி ஏதேனும் வந்தால் அதனை பரப்புபவர்கள்.  (அல்குர்ஆன் 4:83)

(இது இன்றைய MEDIA எனும் ஷைத்தானை குறிக்கும்)

பல பொய்யான தகவல்களை உண்மைப் போல் சித்தரிக்கும் அதன் ஆபத்தை உணராது, விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாது செய்தி பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு பரப்புவார்கள்.

6. மனித உள்ளங்களில் ஊசலாட்டத்தை  ஏற்படுத்துபவர்கள்.  (அல்குர்ஆன் 114:5)

(எனவேதான் இறைவன் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் மனிதர்களிடமிருந்து, ஜின்(ஷைத்தான்) இனத்திலிருந்து பாதுகாவல் தேடுமாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ளான். (அல்குர்ஆன் 114:6)

மேற்கண்ட பதிலிலிருந்து ஷைத்தான்களுக்கு நெருக்கமானவர்கள் அவர்களின் அடையாளம் என்ன  என்பது தெரிந்திருக்கும்  என  நம்புகிறோம்.

Previous post:

Next post: