மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றோம்?

in 2024 ஜூலை

மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றோம்?

அஹமது இப்றாஹிம், புளியங்குடி

நடப்பு துல்ஹஜ் பிறை பெருநாளுக்கு முந்தைய நாளிலிருந்து ஒவ்வொருவக்த் ஜமாஅத் தொழுகைக்குப் பின்பு இமாம் தக்பீரோடு சிற்சில வார்த்தைகளை சேர்த் துக்கொண்டு இராகத்தோடு சப்தமிட்டு சொல்ல அவரைத் தொடர்ந்து பின்பற்றித் தொழுவோரும் கோரஸாகவும் சப்தமாகவும் தக்பீர்  கூறுவது  நபிமொழியில்  உள்ளதா?

அதன் அறிவிப்பாளர் தொடர் பற்றி விபரம் அறிந்தோர் யாராவது பகிரங்கமாக அறிவிக்க  முடியுமா? 

நிச்சயமாக முடியாது! ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூல் அல்குர்ஆனில் சப்தமிட்டு திக்ரு செய்வதை தடுத்திருக்கின்றான்!

(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்துவிட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.     (அல்குர்ஆன் 7:205)

அடுத்ததாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பாருங்கள்:

அபூ மூஸா அப்தில்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ(ரழி) அறிவித்தார்:

(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்தபோது) நபி(ஸல்) ஒருகுன்றில்அல்லதுமேட்டில்ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில்லாயிலாஹ இல்லல்லாஹு‘, “வல்லாஹு அக்பர்‘ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார். இறைத் தூதர்(ஸல்) அவர்கள், தம் கோவேறு கழுதையில் இருந்தபடி, (மெதுவாகக் கூறுங்கள்) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை என்று கூறினார்கள். பிறகுஅபூ முஸா!’ அல்லதுஅப்துல்லாஹ்‘ (என்று என்னைக் கூப்பிட்டு) “சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், “ஆம்! (அறிவித்துத் தாருங்கள்)’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், (அந்த வார்த்தை) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது)’ என்றார்கள்.  புகாரி: 6409, அத்தியாயம்: 80,  பிரார்த்தனைகள்.

மார்க்கம் இவ்வளவு தெளிவாக இருக்க அல்லாஹ்வை தானே திக்ரு செய்கின்றோம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்காரர்கள் காட்டுக்கத்து கத்துவார்களே நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் முலீக் ஜிந்தாபாத் என்பது போன்று கத்துவதற்கு மார்க்கத்தில் இம்மியளவும் ஆதாரமில்லை என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனமும் நபிமொழி ஆதாரமும் நமக்கு நெற்றிப் பொட்டில் அடித்தது போல் பறை சாற்றுகின்றது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளி வாசல்களிலும் இவ்வாறான பித்அத்துக்கள் காலகால மாக அரங்கேறி வருகின்றன! இது போன்ற பித்அத்துக்கள் அனைத்தும் நம்மை நரகிற்கு  கொண்டு  செல்வது  உறுதி! 

ஹஜ்ஜுடைய காலங்களில் சில நபித் தோழர்கள் கடைத்தெருவிற்குச் சென்று தக்பீர் கூறுவார்கள் என்ற செய்திக்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் ஏதும் கிடையாது! ஆனால் அவர்கள் கூட பள்ளிவாசலில் இதுபோன்று சப்தமிட்டு திக்ரு செய்ததாக எந்த ஒரு ஆதாரமுமில்லை! எனவே ஹஜ்ஜுடைய பிறைக் காலங்களில் இவை போன்று சப்தமிட்டு திக்ரு செய்ததாக  எந்த  ஒரு  ஆதாரமுமில்ல!

எனவே ஹஜ்ஜுடைய பிறைக் காலங்களில் இவை போன்ற பள்ளிவாசலில் சப்தமிடும் பித்அத்துக்களை விட்டு அனைவரும் நீங்கிக்  கொள்வோமாக!

Previous post:

Next post: