சொந்த வீடா? வாடகை வீடா?

in 2024 செப்டம்பர்

சொந்த வீடா? வாடகை வீடா?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

பொதுவாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மனிதர்கள் முதல் அனைத்து வசதிகளையும் பெற்ற மனிதர்கள் வரை சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் இலட்சியத்தில் ஒன்றாக உளளது. இந்த இலட்சியம் நினைவாகிப் போனவர்களின் எண்ணிக்கையை  விட  கனவாகப்  போனவர்களின்  எண்ணிக்கையே  அதிகம்.

இளமையோ / முதுமையோ, 

பகலோ / இரவோ, 

தனியாகவோ / துணையாகவே, வசிப்பதற்கு  ஒரு  வீடு  அவசியம்  தேவை.

1. உண்ண  உணவும்,

2. உடுத்த  உடையும்

எவ்வாறு அவசியம் தேவையோ அது போல வீடு என்பதும் அவசியம் தேவையானது தான். ஆயினும் இந்த மூன்றும் ஒருசேரப் பெற்றவர்கள் சிலராகத்தான் இருக்கின்றார்கள். அதில் முதல் இரண்டு (உணவு உடை) மட்டும் கிடைத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

ஆனால் 3வதாக குறிப்பிட்டவீடுஇல்லாதவர்களே அதிகப் பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய தேவையான வீட்டின் அவசியத்தை கருதி எங்கு பார்த்தாலும் ரியல்  எஸ்டேட்  விளம்பரம்.

சொர்க்கமே  என்றாலும்  சொந்த  வீடு  போல  வருமா?’ 

விளம்பரத்தில் REAL ESTATE-டை, REEL ESTATE என்று சொல்லும் அளவுக்கு காதில் பூ சுற்றுவார்கள்.

மேலும் அனைத்து வங்கிகளும் ((BANK) – போட்டி போட்டுக்கொண்டு பல லட்சங்களைகனவு இல்லம் நிறைவேறகடனாக வழங்குவதாக ஆசை காட்டி மக்களை HOME LOAN என்ற  பெயரில்  இழுக்கிறது.

இத்தகைய கடன் மூலம் (HOME LOAN) வாங்கி வீடு கட்டியவர்களும் உண்டு; அதுவே கடன் வாங்கி வீடு கட்டியதால் E.M.I.(Every Month Installment) கட்ட முடியாமல் கட்டிய வீட்டையே விற்றவர்களும்,  இழந்தவர்களும்  உண்டு.

வீடு என்பது பலருக்கு சுமார் 10X10=100 சதுர அடியும் வீடுதான். 10 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டாலும்  அதுவும்  வீடுதான்.

இந்த 10மு10 சதுர அடியும் கூட சொந்தமாக இல்லாத மனிதர்களும் வாழ்கின்ற பூமி இது. அதாவது, வீதியில் வாழ்பவர்களும் வாழ்கின்ற  பூமியும்  இதுதான். 

உலக மக்கள் அனைவருக்கும் ரஹ்மத்துல் ஆலமின் (அருட்கொடை) என சிறப்பிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த வீட்டின் அளவு  என்ன  தெரியுமா?

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாக இடம் பெற்ற  ஹதீத்:

இரவில் நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் படுத்து உறங்கிக் கொண்டிருப்பேன். நபி(ஸல்) அவர்கள் இரவு நேர தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்து தொழும்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (சஜ்தாச் செய்யுமிடத்தில்) நீட்டிக் கொண்டு இருக்கும். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் நிலையிலிருந்து சஜ்தாவுக்கு வரும்போது என்னை அது சமயம் தமது விரலால்  தொட்டுணர்த்துவார்கள்.

உடனே நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன், நபி(ஸல்) அவர்கள் மீண்டும் நிலைக்குச் சென்றுவிட்டால் நான் மறுபடியும் என் கால்களை நீட்டிக்கொள்வேன், அந்த நாட்களில் எங்கள் வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை. (ஆதாரம்: புகாரி புக் நம்பர் 8, ஹதீத் எண் 382, முஸ்லிம் புக் நம்பர் 4, ஹதீத் எண் 889)

இந்த பூமியில் முதலில் கட்டப்பட்டது எது தெரியுமா?

நிச்சயமாக மனிதர்களுக்காக கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளகாஃபாவாகும். அது அருள் வளம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும்  மையமாகவும்  அது  இருக்கிறது.    (அல்குர்ஆன் 3:96)

காஃபா ஆலயத்தை நபி ஆதம்(அலை) அவர்கள் தான் இறை ஆணைக்கு இணங்க முதன் முதலில்  மக்காவில்  கட்டினார்கள்.

நபி நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளை பிரளயத்தில் காஃபா ஆலயமும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு பலமுறை காஃபா ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. (RENOVATION செய்யப்பட்டது)

அடுத்தபடியாக நபி இப்ராஹிம்(அலை) காலத்தில் மீண்டும் இறை ஆணைக்கு இணங்க இப்போது இருக்கும் அமைப்பு போன்று சரி செய்யப்பட்டது. அதன் பிறகும் அதாவது நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், மற்றும் பலமுறையும் புதுப்பிக்கப்பட்டது. (இது சுருக்கமான  வரலாறு)

இங்கு நாம் குறிப்பிட வருவது காஃபா ஆலயம் எந்த அளவிற்கு இப்போது அது அருள் வளமும், பரக்கத்தும்  நிறைந்ததாக ஆகியுள்ளது என்பதைப் பற்றியும் மற்றும் காஃபா ஆலயத்தை கட்டிய பிறகு நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் செய்த துஆவாவைப்  பற்றியுமாகும்.

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் கேட்ட துஆ இறைநூலில் (குர்ஆனில்) பார்க்க அத்தியாயம் 2ல் வசனம் 126 முதல் 129 வரை இடம் பெற்றுள்ளது. நாமும், நமது சந்ததிகளும் வாழ சொந்தமாக வீடு கட்டினாலோ அல்லது வாடகை வீட்டில் வசித்தாலோ அது அமைதி தரும் இடமாகவும், அருள்வளம் (பரக்கத்) நிறைந்ததாகவும்  இருக்க வேண்டும்.

ஆனால்  நிலைமை  என்ன?

உலக மக்களில் ஒவ்வொருவருக்கும் பல்வேறான ஆசைகள், பிரச்சனைகள் அதனால் அமைதியளிக்க வேண்டிய வீடு அமைதியை தரவில்லை.

என்ன  காரணம்?

இறையச்சமும் முழுமையாக இல்லை, இன்னும் ஏராளம், ஏராளம் அவைகள் எண்ணிக்கையில் அடங்காது. எனவே சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, ஒரு உண்மையை நாம் உணரவேண்டும். “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; சுமார் முப்பது ஆண்டு சேமிப்பில் நீ கட்டிய உன் வீட்டில் மூன்று நாட்கள் கூட உன் பிணத்தை வைக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, நம் இறப்புக்கு பிறகு நம் பெயர்பிணம்/மையத்என்று மாறும். பாடுபட்டு சேர்த்த சொத்தும், சொந்த வீடும்வாரிசுஇடம் சேரும். நாம் வந்த இந்த உலகில்இறைவன்தந்த உடம்பில்சொந்தம்என்பது எதுவுமில்லை, நாம்தங்கிசெல்லும் வழிப்போக்கர்களே!!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்த  ஹதீத்.

இந்த உலகத்தில் நீ ஒரு பயணியைப் போன்று வாழ். அல்லது வழிப்போக்கனைப் போல் வாழ். மண்ணறைக்குள் சென்றுவிட்டவர்களில் ஒருவனாக உன்னை நீ கருதிக்கொள்என்று கூறினார்கள். (நூல்: முஃஜம் இப்னில் அஃராபி)

இது (பூமி) இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது, எனவேதான் நபி(ஸல்) அவர்கள் ரத்தன சுருக்கமாக சொன்னார்கள். “அடியான், “என் செல்வம்; என் செல்வம்என்று  கூறுகின்றான்.

உண்மையில் அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும்.

1. அவன் உண்டு கழித்ததும்,

2. அவன் உடுத்திக் கிழித்ததும்,

3. அவன் கொடுத்துச் சேமித்த தர்மமும் அவனுக்குரியவை. மற்றவை அனைத்தும் அவனை கைவிட்டுப் போகக் கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்ல கூடியவையும் ஆகும்.   (ஆதாரம் : முஸ்லிம்: ஹதீத் எண் 5666)

நாம் வந்த இந்த உலகில்இறைவன்தந்த உடம்பில்சொந்தம்என்பது எதுவுமில்லை, நாம்தங்கி  செல்லும்  வழிப்போக்கர்களே!!

ஆகவே,  துஆச்  செய்வோம்:  யா ரப்பில்  ஆலமினே!”

இறைவா! நாங்கள் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை, திரும்ப உன்னிடம் வரும்போது எங்கள் நன்மையைத் தவிர, வேறு எதையும் கொண்டுவரப்  போவதில்லை. 

எனவே எங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை (வெற்றியை) தருவாயாக!  ஆமீன்.

Previous post:

Next post: