மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும், துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்! 

in 2024 செப்டம்பர்

மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும், துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்! 

அபூ அப்தில்லாஹ்

அறியாமை நிறைந்த சமுதாயங்களில் மக்கள் உறுதி வாய்ந்தவர்களாகக் காணப் பெற்றாலும் அவர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள் தாம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களின் பலகீனத்தை எதிர்த்துச் செயல்பட முடியாது. மிகவும் கண்டிப்பான கொள்கை களைக் கடைப் பிடிப்பவர் என அறியப்பட்ட வரும் கூட தன்னுடைய நலன்கள் கேள்விக் குறிக்கு ஆளாகும்போது தன்னுடைய விதிகளை மீறி விடுவார். நிர்ப்பந்தம் ஏற்படும்போது, தொல்லைகள் எழும்போது, இடர்ப்பாடு அல்லது நோய்க்கு ஆளாகும்போது அல்லது கண்டிக்க அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்று உணரும்போது எந்த விதியையும் கடைப்பிடிப்ப தில்லை. எந்த வரையறையையும் கையாளுவதில்லை. தங்களின் கொள்கை களை மீறாமலிருக்கவோ அல்லது தங்களின் விருப்பங்களை விட்டுக் கொடுக்கவோ தகுந்த காரணம் இல்லாதபோது கவர்ச்சிமிக்க இயக்கங்களை  ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனாலும் முன்னர் குறிப்பிட்டது போல ஒருவர் இதுபோன்று ஒரு தவறை முன்பு இழைத்திருக்கிறாரா அல்லவா என்பது முக்கிய மன்று. மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாதவருக்கு தன்னுடைய தன்னல ஆர்வங்களுக்கு முன்னுரிமை வழங்குவதைத் தடுக்கத் தகுந்த காரணம் இல்லை என்பதுதான் முக்கியம். இறையச்சம் இல்லாதபோது, இத்தகைய மனிதனுக்கு தன்னுடைய மனத் திடத்திற்கு உகந்து நடக்கும் ஆற்றல் இல்லாமல் போகும்.

இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை உணர்ந்து அறியும் ஆற்றல் படைத்த ஒருவரின் நிலை வேறு விதமாக இருக்கும். தான் உண்மை என நம்புவதை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்ற தீர்மானத்தை முறியடிக்க எதனாலும் முடியாது. இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணம் அவனுக்குள்ள ஆழ்ந்த இறையச்சமே. இறைவன் யாவற்றையும் காண்கிறான், செவியுறுகிறான். உள்ளத்தில் மறைந்துள்ள அனைத் தையும் அறிவான் எனும் உண்மையை உணர்ந்துள்ளான்; மேலும் தான் எப்போதும் இறைவ னின் முன்னிலையிலேயே உள்ளோம் என்றும் உணர்கிறான். உண்மையிலேயே இறை நம் பிக்கை உடைய ஒருவனிடம் தனி மனிதச் சிறப்பியல்பும் மனத் திடமும் காணப்பெறும்; இறைவன் விதித்துள்ள வரையறைகளைப் பேணி நடப்பான். இறைவனுக்கு அதிருப்தியளிக்கும் எதையும் எப்பொழுதும் செய்யவே மாட்டான். வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் சரி, எப்பொழுதும் இறைவனின் நினைவு மாறாமல் இருக்கவே நாடுவான்; அதில் சோர்வடையமாட்டான். இது குர்ஆனில் கீழ்வருமாறு கூறப் படுகிறது.

காலையிலும் மாலையிலும் அவனை (இறைவனை) துதி செய்து கொண்டும், வணிகப் பரிமாற்றத்தில் இறைவனை நினைவு கூர்வதிலும், தொழுகையை நிறைவேற்றுவதிலும், ஜகாத் வழங்குவதிலும் உறுதியாக நின்று, உள்ளங்களும் பார்வைகளும் நிலைகுலையும் நாளைப் பற்றி பயந்தவர்களாக அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிடச் சிறந்த கூலியை, இறைவன் தன் அருளால் அதிகமாகவே வழங்குவான் என்று நம்பி வாழும் பலர் இருக்கின்றனர். இறைவன் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான்.”   (24:36,37,38)

இஸ்லாமிய ஒழுக்க நெறி தன்னல வேட்கையை நீக்கும் :

மார்க்கக் கடமைகளைக் கடைப்பிடிக்காத வர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்வதில் வியப்பில்லை. அவர்கள் வாழ்க் கையில் கடைப்பிடிக்கும் தத்துவங்கள் கேட்ப வற்றில் இதுவும் ஒன்று என்பது உண்மை. தியா கம் செய்ய முன் வருதல், இரக்கம், நல்லொழுக் கம் ஆகிய பண்புகள் எல்லாம் மார்க்கம் வலியு றுத்துபவை: மார்க்கமே அவற்றை நெஞ்சார விரும்பக் கேட்கிறது. வாழ்ந்து மரணமடைந்த பின் மறுமையில் தங்களுடைய செயல்பாடுக ளுக்குக் கணக்குக் கொடுத்தாக வேண்டும் என்று நம்பும் இறை நம்பிக்கையாளர்கள் தாம் குர்ஆன் அறிவுறுத்தும் ஒழுக்க நெறிகளை முற் றிலும் நடைமுறைப்படுத்துவார்கள். இறை நம் பிக்கையற்றவர் இத்தகைய நற்பண்புகள் உடை யவராகத் திகழ்வார் என எதிர்பார்க்கமுடியாது. மேலும், இறை நம்பிக்கையற்றவர் “”தன்னலம் மிக்க இத்தகைய மக்கள் அங்கே காணப்படுகி றார்கள்; நான் நிச்சயமாக அவர்களில் ஒருவன் அல்லன்என்று சொல்வது முற்றிலும் தவறா கும். மார்க்க நெறி முறைகளைக் கடைப்பிடிக் காதவர்களுக்குத் தன்னலம் பேணுவதைத் தவிர வேறு வழியில்லை. வேறு பல ஒழுக்கக் கேடுக ளைத் தூண்டும் மனப்பான்மைக்கு எது காரணமோ அதுவே தான் இதற்கும் காரணம் ஆகும். அவற்றில் சில: மறுமையில் நம்பிக்கை யின்மை: இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு தீய செயலும் மறுமையில் தண்டனை பெற்றுத் தரும் என்பதை நம்பாதது, இறையச்சம்  இன்மை.

மார்க்கப் பண்புகளைப் பேணி வாழாதவர் கள் தன்னலம் ஒன்றிலே அக்கறை கொண்டு மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் வாழ்வதற்கு இதுதான் காரணம். இவர்களு டைய வாழ்க்கையின் முக்கிய நோக்கம் செல் வம் குவிப்பது. தொழில் அபிவிருத்தி, வாழ்க் கைத் தரத்தை உயர்த்துவது ஆகியவை தாம். உற்றார் உறவினரின் தேவைகளை நிறைவேற்ற உதவுவது, வறியவர்களுக்கும், முதியோருக்கும் உதவுவது, சமுதாய நலனுக்காகத் தன்னால் இயன்றதை வழங்குவது ஆகியவை எல்லாம் பொதுவாக அவர்கள் மனதில் வைப்பது அபூர்வ மாகவே உதிக்கும். இறை நம்பிக்கையற்றவரின் இப்புவி வாழ்க்கையைப் பற்றிய கணிப்பில், தியாகம் புரிவது அல்லது நல்ல செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணங்க ளெல்லாம் இடம் பெறாததே இதற்குக் கார ணம். அவர்களைச் சூழ வாழும் மக்களிடமும் இதற்கு மாற்றமான மனப்பான்மையையும் செயல்பாட்டையும் காணவியலாது. ஒட்டு மொத்த சமுதாயமே இந்த முறையில் தான் செயல்படுகிறது. சமுதாயத்தில் அனைவருமே இதே மனப்பான்மை உடையவராகத் திகழ்வது அவர்களின் மனச்சாட்சிக்கு ஊக்கம் அளிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், மார்க்கக் கொள்கை களும் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படாத சமுதாயத்தில் தன்னல வேட்கை தவிர்க்க முடி யாதது. ஒவ்வொருவரும் எவ்வித விதிவிலக்கு மின்றி தன்னலம் உடையவர்களாகவே திகழ்வார்கள்.

எதையும் உருவாக்க முடியாத, தான் எனும் உள்ளத்தில் (நஃப்ஸ்), இத்தகைய தன்னல வேட் கையை நுழையச் செய்து இறைவன் மனித னைச் சோதிக்கின்றான். மனிதனின் இந்த வேட் கையைப் பற்றி இறைவன் குர்ஆனில் கீழ் வரு மாறு  கூறுகிறான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னல வேட்கைக்கு ஆளாகிவிடுகிறான். நீங்கள் நன்மை செய்து இறை வனுக்கு அஞ்சி நடந்தால் இறைவன் நீங்கள் செய்வதை  தெரிந்து கொள்வான்.’’ (4:128)

தன்னலம் பாராட்டும் மக்கள் பொதுவாகத் தாங்கள் உறுதிகொண்டவற்றை, அவை அற்ப மானவையாக இருப்பினும் சரியானவை என்றே வலியுறுத்துவார்கள். தன்னலமுடைய ஒருவன் களைத்திருக்கும் போதும், பக்கத்தில் சோர்ந்து நிற்கும் ஒரு முதியவர் அல்லது நோயாளியைக் கண்டு கொள்வதே இல்லை. மற்றவர் களைப் பற்றிக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் ஒவ்வொன்றிலும் சுயநலமாக இருப் பான். தன்னுடைய வசதிக்காக மற்றவர்க்குத் தொல்லை ஊட்டுவதால் எவ்விதச் சலனமும் அவன் மனதில் ஏற்படுவதில்லை. தான் அலுவ லில் ஈடுபடும்போது அமைதியை நாடும் அவன், பிறர் பணி புரியும்போது அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவனுடைய தன்னல வெறி பல்வேறு வழிகளில் குடும்ப வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் வெளிப்படும்.

இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களிலும் கூட, நற்செயல்களுக்குப் பெயர் போன சிலர் காணப் பெறுவர். தன்னைச் சுற்றியுள்ளவர் களிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வார்கள். இறைவனின் திருப்தியைப் பெறுவதில்லை. இதற்குக் காரணம், பண்பாளர் என்று பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்பதே; இதன் நோக்கம் புகழப்பட வேண்டும். பாராட் டும் நற்பெயரும் மக்களிடமிருந்து பெற வேண் டும் என்பதே இவர்கள் ஏழைகளுக்கு என ஒதுக் குவது அவர்களின் வருமானத்தோடு  ஒப்பிடும் போது  மிக அற்பமானதே.

இலட்சியவாதிகள் பொறுப்பேற்கவும் தலைமை தாங்கவும் விரைவார்கள். இதிலும் இவர்களின் நோக்கம் இறைவனின் திருப்தியைப் பெறுவதோ மக்களுக்குச் சேவை புரிவதோ அன்று. செல்வாக்கும் புகழும் பெற்று சமுதாயத்தில் தகைமை (அந்தஸ்து) மிக்கவர்க ளாக உயர வேண்டும் எனும் தங்களின் ஆசா பாசங்களை நிறை வேற்றவே உழைக்கிறார்கள். தங்களுடைய ஆர்வம் பாதிக்கப்படும்போது அவர்களின் உண்மை வடிவம் வெளிப்படும்.

மார்க்கப் பண்புகள் பின்பற்றப்படாத சமுதாயங்களில், தாராள மனப்பான்மையு டையவர்களாகக் கருதப்படுபவர்கள், தியாகம் செய்யும் இறை நம்பிக்கையாளர்களோடு ஒப்பி டப்படும் போது தன்னலவாதிகளாகவே கணிக் கப் பெறுவர். இறை நம்பிக்கையாளர்கள் “”தன் னலத் தியாகம்எனும் தத்துவத்தை புரிந்து கொண்ட விதத்திற்கும் இறை நம்பிக்கையற்ற வர்கள் அதனைப் புரிந்து கொண்ட விதத்திற் கும் பெரிய வேறுபாடு உள்ளது. உண்மையான இறை நம்பிக்கையாளர்கள், எப்பொழுதும் தங் களின் தேவையை விட மற்றவரின் தேவைக்கே முக்கியத்துவம் நல்குவார்கள். தங்களின் சகோ தரர்களுக்கும், சகோதரிகளுக்கும் தங்கள் மனப் பூர்வமாக நலனையே நாடுவார்கள். குர்ஆன் வலியுறுத்தும் ஒழுக்கத்தையே இது  பிரதிபலிக் கிறது.

இறைவன் மீதுள்ள அன்பின் காரணமாக அவர் கள் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைவாசி களுக்கும்  உணவளிப்பார்கள்.”  (76:8)

இத்தகைய ஒழுக்க உணர்வால், இறை நம்பிக்கை யாளர்கள் ஒடுக்கப்படும் ஆண்கள், பெண்கள் குழந் தைகளுக்காக இறைவனுடைய பாதையில் போராடு வார்கள்.  (4:75)

தங்களுடைய நலனையும் தேவைகளையும் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பேற்று பொது நன்மையையே நாடுவார்கள்.

என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒரு மனிதன் தான் தனக்காக விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், ஹதீத் எண்)

மார்க்கப் பண்புகள் மேலோங்கி நிற்கும் போது மட்டுமே சமுதாய உறவுகள் தியாகத் தின் அடிப்படையில் அமையும். இதனால் பல  பிரச்சினைகளை  மறைந்துவிடும். 

மூலம் :  ஹாரூன் யஹ்யா, 

தமிழில்: H.அப்துஸ் ஸமது, இன்ஜினியர்

Previous post:

Next post: