பிஸ்மில்லாஹ்  சொல்வோம்!

in 2024 அக்டோபர்

பிஸ்மில்லாஹ்  சொல்வோம்!

சையது A. முபாரக், நாகை.

படைத்த உம் இரட்சகனின் பெயரால் ஓதுவீராக!  (அல்குர்ஆன் 96:1)

இந்த வசனத்தைக் கொண்டே இறை நூல் (அல்குர்ஆன்) இறங்க ஆரம்பித்தது. நாம் எந்தச் செயலையும் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டே தொடங்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம் என்பதை இது உணர்த்துகிறது. ஆகவே, மார்க்க கட்டளையாக இதனை நாம் கடைபிடிக்க வேண்டும்.

நாவினால் மொழியும்போதே இலக்கிய நயமும், செழிப்பும் மிக்கதாக பிஸ்மில்லாஹ் மிளிர்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நாம் கருத்தில் கொள்ளும்போது, பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிப்பது மிகப் பொருத்தமானதாக, சிறப்பானதாக இருக்கும். அல்லாஹ்விற்கு அடிபணிந்த, நற்குணம் வாய்ந்த ஒவ்வொருவரின் வாயிலிருந்து வெளியாகும், உள்ளத்திலிருந்து வரும், உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்ற ஓசையாக இது இருக்கிறது. 

அல்லாஹ்வால் நமக்கு முதலில் கற்றுக்கொடுக்கப்பட்ட இந்த பிஸ்மில்லாஹ்வில் உள்ள அல்லாஹ் எனும் பெயர் அவனது அனைத்துப் பண்புப் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் இதனைக் கொண்டு அனைத்துச் செயல்களையும் ஆரம்பிப்பது சாலப் பொருத்தமானதாக  இருக்கிறது.

நாம் ஒரு கவளம் உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, நாம் அரிசி வாங்கிக் கொடுக்கிறோம், மனைவி சமைக்கிறாள், நாம் உண்ணுகின்றோம் என்று எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம். இவைகள் எல்லாம் அல்லாஹ்வின் கருணை என்பதை நாம் கவனத்தில் கொள்வதே இல்லை. அதனால் இதனை நாம் சிறிது ஆழமாகச் சிந்தனைச் செய்து பார்ப்போம். உணவுலுஅரிசிலுநெற்பயிர்லுநீர்+ விதை+நெல்+பூமி. பூமியை நாம் படைக்கவில்லை; நெற்பயிரை (விதை நெல்லை) நாம் உருவாக்கவில்லை; நீரை நாம் இறக்கவில்லை. இவைகள் எல்லாம் அல்லாஹ்வின் கருணையினால் நமக்குக்  கிடைத்துக்  கொண்டிருக்கின்றன. 

விவசாயி பூமியில் விதை நெல்லைத் தூவுகிறார்; நீர்ப் பாய்ச்சுகிறார்; பதியம் வைக்கிறார்; களையயடுக்கிறார். பயிரை அறுவடை செய்து, நெல்லாக்கி, அரிசியாக்கி அது உணவாக நமக்குக் கிடைக்கும் வரை பலரின் உழைப்பு இதில் இருக்கிறது. பலரது உழைப்பு இருந்தாலும் அதனை வளரச் செய்து பதராகாமல் பசுமையான நெற்கதிராக நமக்குத் தருவது அல்லாஹ் அல்லவா. 

அல்லாஹ்வின் அருளும், கவனிப்பும், கண்காணிப்பும், பாதுகாப்பும் இருப்பதால் உணவை எடுத்து வாயில் வைப்பதிலும், உணவு செரிப்பதிலும், செரித்த உணவின் சத்து உடலில் சேர்வதிலும், கழிவுகள் உடலை விட்டு வெளியேறுவதிலும் அல்லாஹ்வின் அருள் மிகைத்து நிற்கிறது. இவைகளை நாம் நன்கு புரிந்து கொண்டால்,  நாம் எதனைச் செய்ய ஆரம்பித்தாலும் பிஸ்மில்லாஹ் சொல்லாமல் ஆரம்பிக்க மாட்டோம். 

மேற்கண்டவைகளை உணர்ந்து நாம் உள்ளச்சத்துடன் ஒவ்வொரு செயலை செய்யும்போதும் பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பித்தால்  ஏற்படும்  நன்மைகள்.

1. நமது செயல் அல்லாஹ்விற்கு விருப்பமானதாக, அவனது கட்டளைக்குட்பட்டதாக இருக்கிறதா? என சீர்தூக்கிப் பார்ப்பதால் நமது சிந்தனை, எண்ணம் நேரிய வழியில், சரியான திசையில் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.

2. செயலை நன்றாகச் செய்து முடிக்கும் சக்தி, ஆற்றல் நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் ஒப்படைப்பதால், அவனுக்கு அடிபணிந்து நடக்கும் நிலையை  உருவாக்குகிறது.

3. நமது செயல் அல்லாஹ்விற்கு மாற்றமானதாக, எதிரானதாக இருக்கக் கூடாது என்று  எச்சரிக்கைச்  செய்கிறது.

4. நமது செயலில் ஏதாவது தவறு ஏற்படின், அதிலிருந்தும் அதன் பின் விளைவு களிலிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பான்.

5. அல்லாஹ் நமது அருகில் இருக்கின்றான்; அவனது உதவி, அருள், ஆதரவு, கண் காணிப்பு, பாதுகாப்பு நமக்கு இருக்கிறது என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் நமது செயல்கள் நிதானமாக, சீராக, நேர்த்தியாக  நடைபெறுகிறது.

6. அல்லாஹ்வின் அருள்வளம் (பரகத்) நமக்குக்  கிடைக்கிறது.

7. அல்லாஹ்வை நாம் நினைவு கூர்வதால் அல்லாஹ் நம்மீது கவனம் செலுத்துகிறான்.

8. நமது செயலை ஒழுங்காகச் செய்து முடிக்க தேவையான மன வலிமையை, அறிவை அல்லாஹ்  நமக்குத்  தருகிறான்.

9. ஷைத்தானின் குழப்பம், சதிவலை போன்றவற்றிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுகின்றான்.

10. அல்லாஹ்வின் நெருக்கத்தை, அருட்கொடைகளை இம்மையிலும், இறை நிகழ்வை விட கொடுமையானதாக தாயிஃபிலிருந்து கல்லால் அடித்துத் துரத்தப்பட்ட நிகழ்வைக்  கூறினார்கள். 

காலில் இரத்தம் பெருக, நடக்க முடியாத நிலையில் ஒரு தோட்டத்தில் அமர்ந்தபோது, தரப்பட்ட திராட்சைக் குலையினை பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால், நாமோ வீட்டிற்குள் நுழையும்போது ஷைத்தானை தோழனாய் அழைத்து வருகிறோம்; சொகுசாக அமர்ந்து சாப்பிடும்போது ஷைத்தானுக்கு விருந்து படைக்கிறோம்.

ஒரு மனிதர் வீட்டில் நுழையும்போதும், உணவை உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் (பிஸ்மில்லாஹ் கூறினால்) ஷைத்தான் தன் தோழர்களிடம்உங்களுக்கு (இன்று) இரவு தங்குமிடமோ, உணவோ இல்லைஎன்று கூறுவான் அல்லாஹ்வை நினைவு கூறாமல் வீட்டில் நுழைந்துவிட்டால்நீங்கள் தங்குமிடத்தை பெற்றுக் கொண்டீர்கள்என்று ஷைத்தான் கூறுவான். மேலும் உண்ணும்போது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால், “நீங்கள் இரவு தங்குமிடத்தையும், உணவையும் பெற்றுக்கொண்டீர்கள்என்று ஷைத்தான் தன் தோழர்களி டம் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்: 4106)

எந்தச் செயல் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று சொல்லாமல் ஆரம்பிக் கப்படுகிறதோ அது துண்டிக்கப்பட்டதாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூதாவூத், நஸாயீ)

பிஸ்மில்லாஹ் சொல்லாமல் நாம் ஆரம்பிக்கும் செயல் அல்லாஹ்வின் அருள் வளத்தை இழந்துவிடும் என்பதை மேற்கண்ட ஹதீத் அறிவுறுத்துகின்றது. அல்லாஹ் நமக்கு அருளிய அருட்கொடைகளை நாம் அனுபவித்துக் கொண்டு அதற்கான நன்றியை நாம் அல்லாஹ்விற்குச் செலுத்தாதபோது, நாம் மோசடிக்காரனாக மாறிவிடுகிறோம். அல்லாஹ் இந்நிலையிலிருந்து நம்மைப் பாதுகாக்க ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ்வும் முடிவில் அல்ஹம்துலில்லாஹ்வும்  சொல்ல  வேண்டும்.

ஆகவே, நாம் எந்தச் செயலை, வேலையை, காரியத்தைச் செய்ய நாடினாலும், அதனைத் தொடங்கும்போதே பிஸ்மில்லாஹ் சொல்வதை  மறந்து விடக்கூடாது.

அனைத்துக் காரண(பண்பு)ப் பெயர்களையும் தன்னுள் அடக்கிய அல்லாஹ் எனும் பெயர் கொண்டு அதாவது பிஸ்மில்லாஹ்வை ஆரம்பமாகச் சொல்லி அல்லாஹ்வின் அருள்வளத்தைப் பெறுவோம்!    இன்ஷா அல்லாஹ்

Previous post:

Next post: