அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. அறியாமை காலத்தில் சாயிபா என்ற ஒட்டகத்தை நேர்ச்சை செய்துவிட்டவர் யார்?
அம்ர்பின்ஆமிர்அல்குஸாஈ. முஸ்லிம் :5486
2. இறை நம்பிக்கையாளரின் உயிரை எத்தனை வானவர்கள் எடுத்துச் செல்கின்றனர்?
இருவர். முஸ்லிம் : 5510
3. அபூ ஜஹலின் உடலை எங்கு போட நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள்?
பத்ரில் இருந்த பாழுங் கிணற்றில். முஸ்லிம் : 5512
4. ஹர்ஜ் என்றால் என்ன?
கொலை. முஸ்லிம் : 5537
5. மறுமை நாளின் அடையாளங்களின் ஒன்று.
50 பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பது. புகாரி : 6808
6. நபி(ஸல்) அவர்களின் எந்த பிரார்த்தனையை அல்லாஹ் நிராகரித்தான்?
எனதுசமுதாயத்தார்தமக்குஇடையேமோதுவதை. முஸ்லிம் : 5539
7. தங்கமலை வெளிப்படும்போதும் மக்கள் சண்டையிட்டு கொள்ளும்போது எத்தனை பேர் கொல்லப்படுவர்?
ஒவ்வொருநூறிலிருந்து 99 பேர். முஸ்லிம் : 5548
8. யுக முடிவு நாள் நெருக்கத்தில் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பவர்கள் யார்?
ரோமர்கள். முஸ்லிம் : 5553
9. அல்கவ்ஸர் என்ற தடாகம் எவ்வளவு தொலைதூரம் கொண்டது?
ஒருமாதகாலபயணதொலைதூரம். புகாரி : 6579
10. கஅபாவை இடித்து பாழாக்க வந்தவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
அபீசீனியாவைச் சேர்ந்தவன். முஸ்லிம்: 5576
11. குழப்பம் எத்திசையிலிருந்து தோன்றும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கிழக்குதிசை. முஸ்லிம் : 5564
12. சுமய்யா(ரழி) அவர்களின் மகன் யார்?
அம்மார்(ரழி). முஸ்லிம் : 5589
13. அபூதாலிபின் சொத்துக்கு வாரிசு உரிமை கொண்ட மகன்கள் யார்?
அகீல்மற்றும்தாலிபும். புகாரி: 1588
14. சொர்க்கத்தின் மண் எந்த நிறத்தில் இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?
வெண்மை. முஸ்லிம் : 5611
15. லிஆன் என்றால் என்ன?
சாபஅழைப்புபிரமாணம். புகாரி: 5308
16. தஜ்ஜால் எத்தனை நாட்கள் பூமியில் தங்கியிருப்பான்?
40 நாட்கள். முஸ்லிம் : 5629
17. தஜ்ஜாலை பின்தொடர்ந்து வருபவர் கள் யார்?
அஸ்பஜான். ஈரான் நாட்டைச் சேர்ந்த யூதர்கள். முஸ்லிம் : 5643
18. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் இருக்கிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தாய்.
19. பூமியின் மீது ஊர்ந்து செல்லக்கூடிய பிராணியை எதிலிருந்து அல்லாஹ் படைத்தான்?
தண்ணீர். அல்குர்ஆன் 24:45
20. ஹுத் ஹுத் பறவை எந்த நாட்டிலி ருந்து செய்தியை கொண்டுவந்தது?
ஸபா. அல்குர்ஆன் 27:22