இஸ்லாமியர்களும்!  இறை  நம்பிக்கையும்!

in 2024 டிசம்பர்

இஸ்லாமியர்களும்!  இறை  நம்பிக்கையும்!

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

மனிதர்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் (இறைவன்) படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்  (அல்குர்ஆன் 39:6)

மேற்கண்ட வசனத்தில் மனித வர்க்கத்தைப் படைத்தது பற்றியும், மேலும் அத்தியாயம் 4ல் வசனம் 1ல் மனித வர்க்கம் எவ்வாறு பெருகியது பற்றியும் இறைவன் கூறுகிறான்.

அவ்வாறு  படைக்கப்பட்ட  மனிதர்களில்,

1. இறைத்  தூதர்கள்  உள்ளனர்.

2. இறைவனுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய  தியாகிகளும்  உள்ளனர்.

3. இறைவன் ஒருவன்தான் என்று மட்டும் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர்.

4. இறைவன் ஒருவன் என ஏற்றுக்கொண்டாலும் இறைவனுக்கு மகன் உண்டு என நம்பக்கூடியவர்களும்  உள்ளனர்.   (அல்குர்ஆன் 43:15)

5. இறைவனின் தூதரான ஈஸா(அலை) அவர்களை இறைவன் எனவும் இறைவனின் மகன் எனவும் நம்பக்கூடிய கிறிஸ்தவர்கள்  உள்ளனர்.

6. இறைவன் ஒருவன் அல்ல, பல கடவுள்கள் உண்டு என நம்பக்கூடியவர்களும் உள்ளனர்.

7. இறைவனை அடைய இடைத்தரகர்கள் தேவை என நம்பக்கூடியவர்களும் உள்ளனர்.

8. இறைவன் என்று ஒருவன் இல்லை, எல்லாமே கற்பனை. கடவுள் என்பவன் இல்லவே இல்லை எனக் கூறக்கூடிய நாத்தி கர்களும்  உள்ளனர்.

9. நானே கடவுள், நான் கடவுளின் அவதாரம் எனக் கூறக்கூடிய பித்தலாட்டகாரர்களும்  உள்ளனர்.

10. சூரியன், சந்திரன், நட்சத்திரம் இன்னும் மரம், செடி போன்றவர்களை கடவுளாக  கருதக்கூடியவர்களும்  உள்ளனர்.

மனித வர்க்கத்தைப் பற்றி இறை நூலில் (அல்குர்ஆனில்) பேசும்பொழுது மேற்கண்ட அனைவரைப் பற்றியும் இறைவன் பேசுகிறான்.

அவர்களில்,

1. இஸ்லாமியர்கள் – ISLAM

2. கிறிஸ்தவர்கள் – CHRISTIAN

3. இந்துக்கள் – – HINDUISM

4. புத்தர்கள் – – BUDDHISM

5. சீக்கியவர்கள் – SIKKISM

6. ஜெயினர்கள் – JAINISM

7. யூதர்கள் – JWICEM

ஆகிய 7 பிரிவினரும் அடங்குவர்.  மேற்கண்டவர்களில்

1. மண்ணைத் தேடி அலைபவர்கள் உண்டு

2. பொன்னைத் தேடி அலைபவர்கள் உண்டு

3. பெண்ணைத் தேடி அலைபவர்கள் உண்டு

4. வேலையைத் தேடி அலைபவர்கள் உண்டு 

5. விடியலைத் தேடி அலைபவர்கள் உண்டு 

6. வேடிக்கையைத் தேடி அலைபவர்கள் உண்டு 

7. புகழைத் தேடி அலைபவர்கள் உண்டு 

8. பதவியைத் தேடி அலைபவர்கள் உண்டு

மேற்கண்டவைகளை தேடுவதில் தவறு இல்லை. ஆனால் அதை மட்டுமே தேடுவது  என்பதுதான்  தவறாகும்.

ஏனெனில்,

ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் (வணங்க வேண்டும்) என்பதற்காக அன்றி வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை. நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தை யும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவ ளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை.”    (அல்குர்ஆன் 51:56)

மேற்கண்ட வசனத்திலிருந்து மனிதனை இறைவன் படைத்த நோக்கம் என்ன வென்று  தெளிவாக  தெரிகிறது.

எனவே நாம் ஏனைய 6 பிரிவினரை விட்டு விட்டு ஏக இறைவனை மட்டுமே வணங்குவோம்  என  கூறும்.

இஸ்ஸாமியர்களும்இறை நம்பிக்கை யும் என்ற அடிப்படையில் வாழக்கூடியவர் களில் யார் என்றால்? முஸ்லிம், மூஃமின், முத்தக்கீன் என்ற மூன்று பிரிவினர்கள் உண்டு.

எனவே தான் மூன்று நிலைகளில் உள்ள வர்களைப் பற்றி பல இடங்களில் இறை நூலில்(அல்குர்ஆனில்) இறைவன் பேசுகிறான். இந்த மூவரும் ஒன்றா? அல்லது வெவ்வேறா?

நிச்சயமாக மேற்கண்ட மூவரும் ஏக இறைவனை மட்டுமே நம்பக்கூடியவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரின் நம்பிக் கையும் (ஈமானும்) வெவ்வேறு நிலையில் உள்ளவை என்பதை இறை நூலின்படியும் உலக  நடப்பைக்  கொண்டும் அறியலாம்.

உலகில் சுமார் 800 கோடிக்கு மேல் மக் கள் இந்த பூமியில் வாழ்கின்றனர். இவர் களில் ஏக இறைவனை நம்பக்கூடியவர்கள் 250 கோடிக்கு மேல் உள்ளனர்.

இது உலகிலுள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒரு பாகமாகும்.

உலக மக்கள் தொகையில் பெரும்பான் மையானவர்களாகவும், உலக நாடுகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்ட நாடுகளாகவும் இருந்தும், ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் கிறிஸ்தவர்களாலும், சொற்ப மான அளவில் உள்ள யூதர்களாலும் மற்றும் இதர பிரிவினர்களாலும் அடிமை போல் வாழ்கின்றனர்.

ஏக இறைவன் தன்னை ஏற்றுக் கொண்ட வர்களைப் பற்றி என்ன சொல்கின்றான் என்றால்,

நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள், நீங்கள் இறை நம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்”. (அல்குர்ஆன்:3:139)

இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்குர்ஆன் நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது.”   (அல்குர்ஆன் 27:2)

ஆனால் ஏக இறை நம்பிக்கை கொண்ட வர்களின் நிலை மிக மோசமாக உள்ளது.

என்ன  காரணம் :

1. ஏக இறைவனால் உலக மக்கள் அனை வருக்கும் அனைத்து துறைகளுக்கும் வழி காட்டியாக வழங்கப்பட்ட இறைநூலை (அல்குர்ஆனை) விட்டுவிட்டு மனித கரங்க ளால் எழுதப்பட்ட சட்டங்களையும், சம் பிரதாயங்களையும், சடங்குகளையும் வழி காட்டும் முறையாக ஏற்றுக் கொண்டது.

2. முகம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதி தூதர் என்றும், அந்த இறைதூதரின் வாழ்க் கையில் முன்மாதிரி உள்ளது என இறை நூலில் அறிவித்திருந்தும் கூட அந்த இறை தூதரின் வழிமுறையை பின்பற்றாமல் பல பிரிவுகளாக  பிரிந்திருப்பதும்.

3. ஏக இறைவனால் மனித வர்க்கத்திற்கு எதிரி இப்லீஸ்(ஷைத்தான்) ஆவான் என எச்சரிக்கப்பட்டு இருந்தும் அவனின் (ஷைத் தானுக்கு) கட்டளைக்கு கீழ்ப்படிந்தும், அவனே தங்கள் தோழராக ஏற்றுக் கொண் டவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் பலர்  இருப்பது.

4. உலக கல்வியைப் பற்றி ஞானமும் (அறிவும்) இல்லாமல் மார்க்க கல்வியையும் அறைகுறையாகப் படித்துவிட்டு ஆலிம்கள் (அறிஞர்கள்) என தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்களே வழி காட்டியாக இறை நம்பிக்கையாளர்கள் பின்பற்றுவது.

5. இறை நம்பிக்கையாளர்களில் சிலர் குர்ஆன், ஹதீஃதை ஆய்வு செய்து முற் போக்கு சிந்தனை உள்ளவர்கள் கூறும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் மூட நம்பிக்கையில் ஊறிப்போன சில தலைவர்க ளையும், வேறு சில சமுதாய மக்களின் கருத் துக்களையும்  பின்பற்றுவது.

6. அல்குர்ஆன், ஹதீத் அடிப்படையில் சீர்திருத்தக் கருத்தை சொல்லி விழிப் புணர்ச்சி  ஏற்படுத்த  வந்தவர்களே.

சிதறு தேங்காயாக சிதறி கிடக்கின்றார்கள். இத்தகைய தலைவர்கள் அவர்கள் ஆரம் பித்த கழகம், இயக்கம் போன்ற வற்றை சரியானது என நம்பி மோசம் போன இறை  நம்பிக்கையாளர்களாக  இருப்பது. 

7. இறைத்தூதரின் பெயரில் ஹதீத்கள் என பதிவு செய்யப்பட்ட அல்குர்ஆனுக்கு மாற்றமான சில ஹதீத்களையும் பின்பற்று பவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் இருப்பது.

8. அல்குர்ஆன் மட்டுமே போதும் ஹதீத் கள் தேவை இல்லை என்கிற சிந்தனையில் இறை நம்பிக்கையாளர்கள் சிலர்  இருப்பது.

9. அருட்கொடைகளில் ஒன்றான செல் வத்தை ஏக இறைவன் வாரி வழங்கியிருந் தும், அரபு மன்னர்களும், அரபு மக்களும் இப்லிஸின் வழியான பெருமையில் செலவழிப்பது.

அதாவது வாழ்க்கை முறையாக இஸ் லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பலரும், பல நாடுகளில் ஏழ்மையில் இருப் பதை அறிந்தும் ஆடம்பர வாழ்க்கையில் அரபியர்கள் வாழ்வது.

10. முகம்மது நபி(ஸல்) அவர்கள் காலத் திற்குப் பிறகு இரு பிரிவுகளாக (சுன்னத் ஜமாத், ´யா) முதலில் பிரிந்தது. அடுத்து சுன்னத் ஜமாஅத் நான்கு பிரிவுகளாக பிரிந் தது. அதை அடுத்து உலக அளவில் பல பிரிவு களாக பிரிந்தது. குறிப்பாக உலகில் எங்கும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட பிரிவுகளாக பிரிந்து கிடப்பது.

மேற்கண்டவைகளில் ஒருசில முக்கிய மான காரணங்களை மட்டுமே இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம். இன்னும் ஏராளம் உள்ளன.

இதுவரை என்ன காரணம் என்பதை பார்த்தோம். இனி முஸ்லிம், மூஃமின், முத்தக்கீன்களில் சரியான இறை நம்பிக்கை யாளர்கள் யார் என்பதை பார்ப்போம். 

ஏக இறைவனே இதற்கு அல்குர்ஆனில் விடை  கூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் இறைவனைப் பற்றி கூறப்பட்டால் அவர் களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வச னங்கள் அவர்களுக்கு கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப் பார்கள்.

மேலும், அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள், நாம்  (இறைவன்) வழங்கி யவற்றிலிருந்து நல்வழியில் செலவிடுவார் கள். இத்தகையவர்களே உண்மையான நம் பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.”  (அல்குர்ஆன் 8:2,3,4)

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முஸ்லிம், மூஃமின், முத்தக்கீன் அல்லாமல் மேலும் ஒரு வகையான அதுவும் உயர்வான இறை  நம்பிக்கையாளர்களும்  உள்ளனர்.

அவர்கள்  யார்?

வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மக்க ளின் தவறுகளை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின் களை) அல்லாஹ் நேசிக்கிறான். 

மேலும் அவர்கள் எத்தகையோர் எனில்,

1. மானக்கேடான செயலை செய்து விட்டால் அல்லது ஏதேனும் பாவங்கள் செய்து தமக்கு தாமே அநீதி இழைத்துக் கொண்டால் உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்பு  கேட்பார்கள்.

ஏனெனில் அல்லாஹ்வைத் தவிர பாவங் களை மன்னித்தருள்பவன் வேறு யார்? என அவர்கள் அறிந்ததால். மேலும் தாம் செய்தவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் தெரிந்த நிலையில் பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்.       (அல்குர்ஆன் 3:134,135)

Previous post:

Next post: