உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும்

in 2024 டிசம்பர்

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும்அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும்

அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்….

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  நவம்பர்  தொடர்ச்சி

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனது பாவத்தின்  நிலை:

அபூஷிரைஹ்(ரழி) அறிவித்தார்: அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்!, அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்!!,  அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்!!!,  என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”அவன் யார்? இறைத் தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள்எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்  என்று  பதிலளித்தார்கள்.   (புகாரி: 6016)

எந்தப் பெண்ணும் தனது அண்டை வீட்டுக்காரிக்குத்தான் அளிக்கும் சிறிய அன்பளிப்பைக் கூட அற்பமாகக்  கருதவேண்டாம்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குழம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவா கக் கருதவேண்டாம். இதை அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 2566, 6017) அதாவது: பயனற்ற ஆட்டின் கால் குழம்புதானே! இதை எவ்வாறு அண்டை வீட்டுக்காரிகுக்குக் கொடுப்பது எனக் கருதிவிடாமல் அத்தகைய சிறிய அன்பளிப்பையேனும் கொடுத்து அண்டை வீட்டுக்காரியுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் போன்றே ஆட்டின் குழம்புதானே! இதென்ன பிரமாதம்?’ என்று அற்பமாகக் கருதிவிடாமல் அண்டை வீட்டுக்காரி பிரியத்தோடு அளிக்கும். இதுபோன்ற சிறிய அன்பளிப்பைக் கூட ஏற்றுக் கொள்ள வேண்டும். (6017ன் சிறு குறிப்பு: 36ஆவது & ஃபத்ஹுல்  பாரீ)

அல்லாஹ்வையும், மறுமை நாளையும், நம்பிக்கை கொண்டவர் தமது அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம் அத்துடன் விருந்தாளியைக்  கண்ணியப்படுத்தட்டும்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும் என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புகாரி: 6018,6136,6475)

அபூ ஷிரைஹ் அல்அதனீ(ரழி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தம் கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்என்று கூறினார்கள். அப்போதுஇறைத்தூதர் அவர்களே! அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபச்சாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்  என்று  கூறினார்கள். (புகாரி: 6019)

அல்லாஹ்வின் தூதரே! ஒருத்தி தன்னுடைய ஏராளமான தொழுகைகளாலும், நோன்புகளாலும், தர்மத்தாலும், பிரபல மடைந்திருக்கின்றாள். ஆனால் அவள் தன்னுடைய அண்டை வீட்டாரை நாவினால் துன்புறுத்துகின்றாள் என்று ஒருவர் கூறினார். அவள் நரகத்தில் இருப்பாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒருத்தி சொற்ப நோன்புகளும் தர்மமும், தொழுகையும் உடையவள் என்று பிரஸ்தாபிக்கப்படு கின்றாள் அவள் பால் கட்டியில் சிறிதளவே தர்மம் கொடுக்கின்றாள். ஆனால் தன்னுடைய நாவினால் தனது அண்டை வீட்டாரை அவள் துன்புறுத்துவதில்லை என்று அவர் சொன்னார். அவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), முஸ்னத் அஹ்மத்) மேலும்,

வீட்டு வாசலின் நெருக்கத்தை வைத்து அண்டை வீட்டாருக்கு முன்னுரிமை கொடுத்தல்:

ஆயிஷா(ரழி) அறிவித்தார்: இறைத் தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன்.  அதற்கு நபி(ஸல்) அவர் கள், இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு என் றார்கள். (புகாரி: 2259,2695,6020) மேலும்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமது நண்பனிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவரே அல்லாஹ் விடம் நண்பர்களில் சிறந்தவர்கள் ஆவர். தமது அண்டை வீட்டாரிடம் நல்ல முறை யில் நடந்து கொள்பவரே அல்லாஹ்விடம் அண்டை வீட்டார்களில் சிறந்தவர் ஆவார் என்று. (அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி) தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523) மேலும்;

பயணத் தோழருக்கும், வழிப்போக்க ருக்கும் நன்மை செய்யுங்கள்என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில்; “பயணத் தோழர்என்பதைக் குறிக்கவஸ்ஸாஹிபி பில்ஜன்பிஎனும் சொற்றோடர் பயன்படுத் தப்பட்டுள்ளது. இது (வாழ்க்கைப் பயணத் தோழியான) மனைவியைக் குறிக்கும் என்பதாக அலீ(ரழி) அவர்களும், இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களும் தெரிவித்துள்ளார்கள். இது; பயணத் தோழரையே குறிக்கும் என்ப தாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், முஜாஹித்(ரஹ்) அவர்களும் குறப்பிட்டுள் ளார்கள். நல்ல தோழனை இது குறிக்கும் என்று சயீத் பின் ஜுபைர்(ரஹ்) அவர்களும் பயணத் தோழரையும், உள்ளூரில் உங்க ளுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நண்பனை யும் குறிக்கும் என்று ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523) அடுத்து;

வழிப்போக்கருக்கும், நன்மை செய்யுங்கள்என அல்லாஹ் கூறுகின்றான். வழிப்போக்கர் என்பதை; “இப்னுஸ் ஸபீல்என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. இதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர்விருந்தினர்எனப் பொருள் கூறியுள்ளனர். முஜாஹித், ளஹ்ஹாக், முகாத்தில்(ரஹ்) ஆகியோர் இதற்குபயணத்தில் உம்மைக் கடந்து செல்பவர் (வழிப்போக்கர்) என்பதாகப் பொருள் கூறியுள்ளார்கள். இதுவே தெளிவான கருத்தாகும். “விருந்தினர் எனப் பொருள் செய்தவர்கள் வழிப்போக்கரான விருந்தினரையே நோக்கமாகக் கொண்டிருந்தால் இது கருத்துக்களும் ஒன்றே. (தஃப்சீர் இப்னு கஸீர் 2:515-523) மேலும்,

இப்னுஸ் ஸபீல்என்பது பயணத்தில் இருக்கும்போது தமது அத்தியாவசியத் தேவைகளுக் கான அனைத்து வழிவகைகளையும் இழந்து திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவரைக் குறிக்கும். அவர் (தமது சொந்த ஊரில்) செல்வந்தராக இருந்தாலும் சரியே அவர் ஊர் போய்ச் சேரும் வரை அவருக்குத் தேவையான அளவுக்கு ஸக்காத் வழங்கலாம். (9:60, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:305-314) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.

செல்வந்தருக்குஸக்காத்வழங்க (மார்க்கத்தில்) அனுமதி இல்லை. (ஆனால்) அவர் இறைவழியில் (அறப்போர் புரிந்துகொண்டு) இருப்பவராகவோ அல்லது வழிப்போக்கராகவோ, அல்லது அண்டை வீட்டு ஏழை ஒருவருக்கு ஸக்காத் வழங்கப்பட்டு அதை அவர் (செல்வந்தரான) உமக்கு அன்பளிப்பாக வழங்கினாலோ அல்லது உம்மை (விருந்துண்ண) அவர் அழைத்தாலோ தவிர. அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ(ரழி), அபூ தாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:305-314) அடுத்த தொடரில்;

அடிமைகளுக்கும் பணியாளர்களுக்கும் நன்மை செய்யுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். 

அதாவது; அடிமைகள், பலவீனமானவர்கள், வாய்ப்புக்கள் மறுக்கப்படுபவர்கள்,  பிறரிடம் கைதிகளாக இருப்பவர்கள், என அவர்களுக்கும் உதவ வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கையில் கூடத் தமது சமுதாயத்தாருக்கு அறிவுரை கூறியபோதுதொழுகை; தொழுகை; உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைகள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் இறுதியில் அவர்களுடைய நாவால் அவற்றைச் சரியாக உச்சரிக்கக் கூட முடியவில்லை. அறிவிப்பவர்: உம்மு சலமா(ரழி), இப்னுமாஜா, முஸ் னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523)

கைஸமா பின்அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர்  வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) அவர்கள்அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா?’ என்று கேட்டார்கள். அவர், “இல்லைஎன்றார். “உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடுஎன்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறிவிட்டுப் பின் வருமாறு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம் என்று (முஸ்லிம்: 1819, தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லை என்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் (அந்த உணவிலிருந்து அவருக்குக்) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் அதன் வெப்பத்தையும், அதன் சிரமத்தையும் சகித்துப் பாடுபட்டார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), புகாரி: 2557,5460, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523)

Previous post:

Next post: