உலகப் புகழ் பெற்ற பேருரைகள்!

in 2024 டிசம்பர்

உலகப் புகழ் பெற்ற பேருரைகள்!

THE WORLD’S GREATEST SPEECHES

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

அனைத்து ஞானத்தையும் (இல்மு/ அறிவு) இறைவன் ஆதமுக்கு(முதல் மனிதருக்கு) கற்று கொடுத்தான்.  (அல்குர்ஆன் 2:31)

அதாவது மனித வர்க்கத்திற்கு அறிவை கற்றுக்கொடுத்துள்ளான். 

இறைவன் தன் செயல் திட்டப்படி அனைத்துப் படைப்புகளின் தன்மைகள் மற் றும் அவற்றைப் பயன்படுத்தும் அறிவையும், அதை முறையாக செயல்படுத்தும் ஆற்றலை யும் மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஆற்றலைப் பற்றி வானவர் களிடம் எடுத்து கூறுமாறும் “”இத்தகைய ஆற்றல்கள் உங்களிடம் உள்ளனவாஎன்று கேட்கப்பட்டது. 

எனவே தான் மற்றொரு வசனத்தில் (96:3,4,5) 

உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையயல் லாம் கற்றுக்கொடுத்தான்என்று கூறுகிறான்.  (அல்குர்ஆன் 96:3,4,5)

அதாவது உலகின் எல்லா பகுதிகளுக்கும் இறைவனின் குறிக்கோள் நிறைவேறவும், மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் ஆற்றலை வழங்கியுள்ளான்.

(மார்க்க விசயங்கள் முதல் அறிவு வளர்ச்சி ஏற்பட ஏற்பட விஷேச ஞானங்கள் இறைவன் புறத்திலிருந்து  வழங்கப்பட்டுள்ளன)

மேலும் தான் (இறைவன்) கற்றுக் கொடுத்ததை வானவர்களுக்கு (மலக்குகளுக்கு) கூறுமாறு இறைவன் கட்டளையிட்டான்.

ஆதமே! நாம் கற்றுக்கொடுத்ததை (ஞானத்தை) வானவர்களுக்கு கூறுவீராகஎன்று  இறைவன்  கூறினான்.    (.கு. 2:33)

ஆக மனிதனை படைத்துவிட்டு வெறு மனே (ஒன்றும் தெரியாதவனாக) இறைவன் விட்டுவிடவில்லை. மாறாக அனைத்தையும் (அறிவு, பிறருக்கு எடுத்து கூறும் ஆற்றல்) முதலியவற்றை கற்றுக் கொடுத்ததாக இறைநூல் (குர்ஆன்) கூறுகிறது.

எனவே பேசும் கலையையும், பிறருக்கு எடுத்துக் கூறும் ஆற்றலையும் இறைவன் மனிதனை படைத்தபோதே வழங்கியுள்ளான்.

அத்தகைய பேசும் கலை மூலம் உலக சரித்திரத்தில் இடம்பெற்ற தலைவர்கள், அறிஞர்கள், சீர்திருத்தச் செம்மல்கள், ஆன்மீகத் தலைவர்கள் என சுமார் 50க்கு மேற்பட்டவர்களின் சிறப்பான  பேருரைகள்.

“THE WORLD’S GREATEST SPEECHES” என்ற நூல் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அவைகளில் இடம் பெற்ற சிலரின் கருத்துள்ள சொற்பொழிவுகள் படிப்பவரைத் தன்னம்பிக்கை கொள்ளச் செய்யும் என்பது ஓரளவும்  உண்மையும்  கூட.

ஆனால் அந்த சொற்பொழிவுகள் எல்லா காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்ததா என்றால் இல்லை. அன்றைய சூழ்நிலையில் சில சொற்பொழிவுகள் அனல்கக்கும் உணர்வு கொப்பளித்த உரைகளாக இருந்தன. சிலரின் பேச்சு கற்ற ஞானத்தின் அடிப்படையில் பக்குவமாகவும் இருந்தன. சிலரின் பேச்சுகள் நையாண்டி அல்லது வேடிக்கையாகவும் இருந்தன. வேறு சிலரின் பேச்சுக்கள் உற்சாகத்தை பொங்கச் செய்வதாகவும், சில மாற்றங்களையும்  உலகில்  தந்துள்ளன.

ஆனால் உலக தலைவர்களிலேயே மிக சிறந்தவராகவும், முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கிய முகம்மது நபி(ஸல்) அவர்கள் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேருரை அந்நூலில் இடம் பெறவில்லை. (தெரிந்தோ, தெரியாமலோ இருட்டடிப்பு  செய்துள்ளனர்)

சுமார் 1446 ஆண்டுகளுக்கு முன்பு துல்ஹஜ் மாதம் பிறை 10ல் (மார்ச் 9, 632) முகம்மது நபி(ஸல்) அவர்கள் ஆற்றிய பேருரை மட்டுமே அன்றும், இன்றும், என்றும் உலக மக்களின் அனைவரின் நலனுக் காகவும், வழிகாட்டுதலையும் தந்தவையாக உள்ளன.

அதாவது ஏனைய உலக தலைவர்களின் சொற்பொழிவுகள் அழிந்துபோனதும் உண்டு, எல்லா காலங்களுக்கும் பொருந்தாமல் போனதும் உண்டும். அதுமட்டுமல்ல அவற்றில் பெரும்பாலும் பேச்சாக மட்டுமே இருந்தன. ஆனால் முகம்மது நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மட்டுமே செயல் வடிவமாக இன்றும் இருந்து கொண்டு  இருக்கின்றன.

அவற்றில் ஒருசில முக்கியமானவை மட்டுமே  (கட்டுரையில் சுருக்கத்தை கருதி) இங்கு  குறிப்பிட்டுள்ளோம்.

ஹஜ்ஜத்துல்  விதா  உரை:

1. மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் (மக்காவில்) உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்கு தெரியாது.

2. மக்களே! இந்த துல்ஹஜ் மாதத்தையும், இந்த (பிறை 10ஆம்) நாளையும் இந்த மக்கா நகரையும் புனிதமாகக் கருதுவது போல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும், பொருளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும். அவரது உறவினருக்கு அல்ல.

3. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்யவேண்டாம்; பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை  தண்டிக்கப்படமாட்டாது.

4. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன்.  அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக்கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டி யிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி  செய்கிறேன்.

5. பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியாக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக் கக்கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை யாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

6. நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் இறுதி நூலாகும். (குர்ஆன்)

7. மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பை நிறைவேற்றுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

8. உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள், உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ் வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.

9. மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே, உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.

10. “மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும்போது நீங்கள் என்ன பதில்  கூறுவீர்கள்?’ என்று கேட்டார்கள்.’

கூடியிருந்தோர்நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள்; நிறைவேற்றினீர்கள், நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்  என்றார்கள்.

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பிஅல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி‘! என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும்  இதை  எடுத்துக்  கூறுங்கள்.

ஏனெனில் செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள். (முஸ்லிம்: ஸுன்னுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது இப்னு ஜரீர், இப்னு ஹீஷாம்)

நபி(ஸல்) தங்களது உரையை முழுமையாக  முடித்தபோது, 

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்.” (அல்குர்ஆன் 5:3) என்ற வசனம் இறங்கியது.

Previous post:

Next post: