வருமுன் காப்போம் வளம் பெருவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி!
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
எல்லோருக்கும் ஆசை என்னவென்றால் நிம்மதியாக வாழவேண்டும் என்பதாக. ஆனால் ஏதேனும் சம்பவம் நடந்து அல்லது நோய் வந்து ஒன்று மாற்றி ஒன்று எதிர்பாராமல் நடந்து மன நிம்மதி இல்லாமல் செய்துவிடுகிறது.
எனவே நோய் வந்தால் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும், எத்தனை வகையான மருத்துவ முறைகள் உள்ளன என்பதைப் பற்றியும், ஒவ்வொரு மருத்துவ முறைகளின் பயன்கள் என்ன என்பதையும், உடல் உறுப்புக்களில் மிகமிக முக்கியமான சிலபாகங்கள் பற்றியும் மேலும் சில விசயங்களைப் பற்றியும் தொடராக இக்கட்டுரையின் வாயிலாக வாசகர்கள் அறியலாம். வாசகர்கள் தொடர்ந்து படித்து பயன் அடைய இறைவனிடம் துஆச் செய்த வண்ணமாக இக்கட்டுரையை தொடர்கிறேன்.
மனித படைப்பான சமீப கால கண்டுபிடிப்பான மொபைல் போனின் செயல்பாட்டை பார்த்து மனிதன் வியந்து போகிறான். அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்கிறான். அதுவே இறைவனின் படைப்பான நமது உடல் அமைப்பையும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை.
அதன் விளைவு :
1. சில ஆட்சியாளர்களும், அரசு உயர் அதிகாரிகளும் அதிகாரத்தை காட்டி மக்களை பயமுறுத்துவது போல்,
2. ஆன்மீக ரீதியாக மார்க்கம் அறியாத மக்களை சில மதகுருமார்கள் ஏமாற்றுவது போல்,
3. உயிர் பயம் காட்டி சில மருத்துவர்கள் மக்களை பயமுறுத்துகிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் நம் உடல் அமைப்பு பல வருடம் எந்த நோயும் வராது வாழ எல்லாம் வல்ல இறைவனால் கம்ப்யூட்டர் புரோகிராம் மாதிரி தானே சீரமைத்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டது.
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்குவது போல் மனிதர்களை பல்வேறு நோய்கள் (நமது முன்னோர்கள் அறியாத) இன்று தாக்குகின்றன. சுமார் 40 வயதை கடந்துவிட்டாலே பல்வேறு நோய்கள் வரும் என்பதாக மனித மூளையில் திணிக்கப்படுகிறது. அதை நம்பும் பல மனிதர்களும் தனக்கு நோய் வந்துள்ளது என நம்பத் தொடங்குகின்றனர்.
வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டரை கிளீன் செய்தால் எப்படி சரியாகிவிடுமோ அதுபோல நம் உடலை தாக்கிய நோய்களை சரிசெய்து விடமுடியும். (மருத்துவர்களால் மட்டும்தான் முடியும் என்பதல்ல)
இறைவனின் படைப்பில் நம் உடல் சீராக இயங்கக்கூடிய ஒரு அருமையான, அற்புதமான இயந்திரம்.
உதாரணமாக :
சைக்கிள் செயினில் அல்லது எந்தவொரு இயந்திரத்திலும் அளவிற்கு மீறி எண்ணெய், கிரிஸ் போட்டால் சைக்கின் செயின் கழன்றுவிடும். அதுவே மிசனாக இருந்தால் வழக்கத்திற்கு மாற்றமாக செயல்படும். அதுபோலத்தான் நம் உடலும், அதிக மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் தொடர்ந்து சீராக செயல்படாமல் வெவ்வேறான நோய்களை உண்டாகி சீர்கெட்டுப்போகும்.
அதாவது புரியும்படி சொல்லவேண்டுமானால் கிச்சன் சிங்கில் அழுக்கு சேர்ந்தால் அடைத்துக் கொள்ளும், தண்ணீர் சீராக வெளியேறாது. அதுவே சுத்தமாக இருந்தால் தண்ணீர் சீராக வெளியேறும். நம் உடலும் அப்படித்தான்.
ஆனால் நவீன மருத்துவம் என்ன செய்கிறது என்றால் நோயின் கிளைகளை வெட்டுகிறதே தவிர மூலக் காரணமான நோயின் வேர்களை அப்படியே விட்டுவிடுகிறது.
உதாரணமாக: இன்றைய நவீன அலோபதி மருத்துவம் சர்க்கரை நோய் (நீரழிவு) வந்தால் உயிர் உள்ளவரை மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சமாளிக்க சொல்கிறது. அதை பூரணமாக குணப்படுத்துவது கிடையாது.
அதுமட்டுமல்ல அதை பூரணமாக குணப்படுத்த முடியாது என்பதாக நோய்வாய்ப்பட்ட மனிதனின் மூளையில் விசமத்தனமான எண்ணத்தை கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளின் சூழ்ச்சியால் விதைக்கப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களின் வாழ்நாள் கூடியிருப்பதாக பொய்யாக சொல்லப்படுகிறது. அது உண்மை அல்ல. இதுவொரு கோயபல்ஸ் தத்துவம். ஆனால் உண்மை என்னவென்றால் மருத்துவர்களும், மருந்து, மாத்திரைகளும், நோய்களும், மருத்துவமனைகளும் மட்டுமே கூடியிருக்கிறது.
உடல் நலம் காக்க சிறந்த வழி :
1. பயம், 2. கோபம், 3. அறியாமை
இந்த மூன்றையும் முற்றாக நீக்கிவிட்டு,
வருமுன் காப்போம்! வளம் பெறுவோம்!! நலமுடன் சந்திப்போம்!!!
இன்ஷா அல்லாஹ் தொடரும்…