அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. இறப்பின் நெருக்கத்தில் இருப்பவருக்கு நாம் எதை நினைவுபடுத்தவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
லாஇலாஹஇல்லல்லாஹ்என்றுநினைவுப்படுத்தவேண்டும். முஸ்லிம்: 1672
2. இறை நம்பிக்கையில் பாதி என்று எதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தூய்மை : முஸ்லிம் : 381
3. எந்த நபியுடைய சமுதாயத்தினர் மானக்கேடான செயல்களை செய்தனர் என அல்லாஹ் கூறினான்?
லூத் நபியின் சமுதாயத்தினர். அல்குர்ஆன் 29:28
4. ஹிஜ்ரத் என்ற நிகழ்ச்சி நடந்திராவிட்டால் நான் யாரில் ஒருவனாக இருந்திருப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அன்சாரிகளில் ஒருவனாக. புகாரி: 4330
5. இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரினரை விட்டு எதை நீக்கி விடுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
தீமைகளை. அல்குர்ஆன் : 29:7
6. யாருடைய சொத்துக்களையும், நம்முடைய சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
அநாதைகளின்சொத்துக்கள். அ.கு. 4:2
7. இந்த உலகத்தில் யாரைப்போன்று இருக்க நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வழிப்போக்கனைப்போன்று. புகாரி: 6416
8. சூர் ஊதப்படும் நாளில் மக்கள் எப்படி வருவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? கூட்டம் கூட்டமாக. அல்குர்ஆன் 78:18
9. அவர்கள் என்னை சேர்ந்தவர்கள், நான் அவர்களை சேர்ந்தவன் என்று எந்த குலத்தாரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?
அஷ்அரீகுலத்தார். புகாரி : 2486
10. யார் ஒரு அங்குல அளவுள்ள நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ அவருடைய கழுத்தில் எந்த அளவுக்கு மாலையாக மாட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஏழு நிலங்கள் அளவுகள். புகாரி : 2453
11. தனியாக தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது எத்தனை மடங்கு அதிகச் சிறப்பு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
27 மடங்கு. முஸ்லிம் : 1151, 1152
12. தொழுகை அழைப்பை (பாங்கு) செவியுற்றால் நம்மை என்ன செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அதைப்போன்றேகூறவேண்டும். முஸ்லிம்:627,628
13. கண்ணியம் யாருக்கு உரியது என அல்லாஹ் கூறுகிறான்?
தனக்கே(அல்லாஹ்வுக்கே). அ.கு.10:65
14. “மூபிகாத்‘ என்றால் என்ன?
பேரழிவைஏற்படுத்துபவை. புகாரி:6492
15. நபி(ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்கள் எத்தனை?
19 போர்கள். அபூ இஸ்ஹாக்(ரஹ்) புகாரி: 3949
16. உமய்யா இப்னு கலஃப் எந்த போரில் கொல்லப்பட்டான்?
பத்ருப்போரில். புகாரி: 3950
17. அபூஜஹ்லை கொன்றவர் யார்?
மூஆத், முஅவ்வித் என்ற சிறுவர்கள். புகாரி: 3964
18. பத்ருப் போரில் எதிரிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
ஆயிரம்பேர். முஸ்லிம்: 3621
19. அகழ் போரில் சஅத்பின் முஆத்(ரழி) அவர்களின் கை நரம்பில் அம்பெய்தவன் யார்?
இப்னுல்அரிகா. முஸ்லிம் : 3628
20. நபி(ஸல்) அவர்கள் வெற்றி நாளில் மக்காவினுள் நுழையும்போது கஅபாவை சுற்றிலும் எத்தனை சிலைகள் இருந்தன?
360 சிலைகள். முஸ்லிம் : 3650