அறிவியலை விட இஸ்லாம் சிறந்ததா? எப்படி?

in 2025 பிப்ரவரி

அறிவியலை விட இஸ்லாம் சிறந்ததா? எப்படி?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

உலகில் ஒவ்வொரு நாளும் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக புதிதுபுதிதான கண்டுபிடிப்புக்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஒரு காலத்தில் கனவாக, கற்பனையாக இருந்தவை எல்லாம் இன்று நினைவாகி நம்மை  வியப்பில்  ஆழ்த்துகின்றன.

மிக சமீபகால அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்பான புணூ (புrமிஷ்க்ஷூஷ்உஷ்ழியி ணூஐமிeயியிஷ்ஆeஐஉe) (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மிகவும் ஆச்சரியத்தையும், ஆபத்தையும் தருகின்றன. அறிவியல் மின்னல் வேகத்தில் வளர்ச்சி பெற்று மனிதனுக்கு சில சேவைகளை செய்கிறது என்பது உண்மைதான். அதே சமயம் மனித சமுதாயத்தை அழிவுப் பாதைக்கும் வித்திடுகிறது. இஸ்லாமும் அறிவியலை கூறுகிறது.

ஆனால் இஸ்லாம் கூறும் அறிவியல் வெளிப்படையாக தெரியாது. ஆய்வு செய்து ஆராய்ந்தால்  மட்டுமே  அறியமுடியும். இன்றைக்கு இருக்கின்ற அறிவியல் அறிவு அனைத்தும் குர்ஆனில் கூறப்பட்டதைக் கொண்டே கண்டுபிடிக்கப்பட்டவையாகும். (ஆயினும் குர்ஆனில் கூறப்பட்டதைக் கொண்டு கண்டுபிடித்தோம் என்று வெளிப்படையாக கூறமாட்டார்கள்) அதுமட்டுமல்ல குர்ஆனில் கூறப்பட்டுள்ள பல அறிவியல் உண்மைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமலே சில உள்ளன.

உதாரணமாக, “அல்லாஹ் ஏழு வானங்களைப் படைத்தான், அவற்றைப் போல பூமிகளையும் படைத்தான். அவற்றில் வசிக்க கூடியவை களுக்கு இறைவனின் கட்டளை (வழிகாட்டு தல்) இறங்கிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் அவற்றின் மீது அனைத்து ஆற்றலும் பெற்றிருக்கின்றான். நீங்கள் (நாம்) அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வி­யங்கள்  எடுத்துரைக்கப்பட்டுள்ளன.”’   (அல்குர்ஆன் 65:12)

ஏழு வானங்கள் இருப்பது என்பதை நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணத்தின் (மிஃராஜ்) மூலமும், அறிவியல் மூலமும் நிரூபிக்கப்பட்டுவிட்டன. ஆனால் வானத்தைப் போல பூமியிலும் ஏழு பூமி அடுக்கடுக்காக உள்ளதா? என்பதை இன்றுவரை கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம். அதனால்தான் நீங்கள் (நாம்) அறிந்துகொள்ள (கண்டுபிடிக்க) இந்த வி­யங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளனஎன்று இறைநூலில் (குர்ஆனில்)  இறைவன்  கூறியுள்ளான்.

ஆக அறிவியலுக்கு முன்னோடியாக இஸ்லாம் (குர்ஆன்) இருக்கின்றது என்பதே மாபெரும்  உண்மை.

குர்ஆன் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டி நூல்தானே. அது விவரிக்கும் பெரும்பாலான வி­யங்கள் (றீற்ணுளூeஉமி) மனிதனைப் பற்றியதாகத்தானே உள்ளது. அது எப்படி அறிவியலுக்கு முன்னோடியாகும், சிறந்ததாகும் என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

அவ்வாறு சந்தேகப்படுபவர்களுக்கு நாம் கீழே பட்டியலில் குறிப்பிட்டுள்ள சுமார் 36க்கு மேற்பட்ட வி­யங்களுக்கு இஸ்லாம் ஆதாரமாகவும், முன்னோடியாகவும் உள்ளன என்பதை இறைநூல்(குர்ஆன்) வசனங்கள் மூலம்  அறியலாம்.

(கட்டுரையின் சுருக்கத்தை கருதி விரிவான விளக்கங்களை நாம் குறிப்பிடவில்லை, வசனத்தின் எண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்)

1. பூமியைப்  பற்றி :

A. புவி உருண்டை என்பதை நிரூபிக்கிறது;

வசனம் : 18:86, 18:90

B. பூமி ஈர்ப்பு விசையைப் பற்றி;

வசனம் :  20:53, 43:10, 78:6

C. மனிதர்கள் பூமியில்தான் வாழமுடியும்;

வசனம் :  2:36, 7:10, 7:24,25, 30:25

D. பூமியின் ஆழத்திற்குச் செல்லமுடியாது ;

வசனம் :  17:37

E. பூமி குறைகிறது ;

வசனம் :  13:41,  21:44

2. இரவு பகல் எவ்வாறு என்பதைக் கூறுகிறது;

வசனம் : 2:16

3. மழை எவ்வாறு உருவாகிறது, பொழிகிறது;

வசனம் : 24:43

4. காற்று எவ்வாறு வீசுகிறது? 

வசனம் : 2:164

5. சூரியன் சந்திரன் மற்றும் இதர கோள்கள்

சுழல்வதைப்பற்றி

வசனம் : 13:2, 31:29, 35:13, 36:38, 39:5

6. மலைகள் ஏன்

வசனம் : 15:19, 16:15, 21:31, 27:11, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32

7. வானம் எவ்வாறு அமைந்துள்ளது;

வசனம் : 12:22, 21:32, 40:64, 51:47, 52:5

8. விண்வெளி பயணம் சாத்தியமே!

வசனம் : 55:33

9. வானத்திற்கு பாதை உண்டு.

வசனம் : 7:40

10. இரும்பு எப்படி கிடைக்கிறது;

வசனம் : 57:25

11. நாளின் துவக்கம் எப்போது?

வசனம் : 97:1

12. சந்திரன் பிளந்துள்ளது;

வசனம்: 54:1

13. இரு கடல்கள்:

வசனம் : 27:61, 35:12, 55:19,20

14. சாவு  (ம்சிபும் றீசிபு)  கடல்

வசனம் : 18:9

15. ஆழ்கடலுக்குள் அலைகள் உள்ளன:

வசனம் : 24:40

16. வேற்று கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா?

வசனம் : 2:36, 7:10, 7:24,25, 30:25

17. கால்நடைகள், தாவரங்கள், விலங்குகள், பறவைகளில் ஜோடி.

வசனம் : 13:3, 20:53, 36:36, 43:12, 51:49

18. மனிதனின் தோல்களின் உணர்ச்சி

வசனம் : 4:56

19. விரல்  நுனியைப்  பற்றி

வசனம் : 75:4

20. மனித படைப்பின் மூலம், அதன் பெருக்கம்  எவ்வாறு?

வசனம் : 3:59

21. தாயின் கருவறையில் குழந்தை வளர்ச்சி

வசனம் : 23:14

22. கால்நடைகள்  மற்றும்  பயன்கள்

வசனம் : 5:1

23. தேனீக்கள் + தேன்

வசனம் : 16:68, 69

24. இறந்தவரின் உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது

வசனம் : 10:92

25. நவீன வாகனங்கள்

வசனம் : 16:8

26. குளோனிங் சாத்தியமே

வசனம் : 3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50

27. உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாக்க

வசனம் : 2:259

28. எறும்புக்கு பேசும் ஆற்றல்

வசனம் : 27:18

29. ஜம் ஜம் நீரூற்று

வசனம் : 3:97

30. சிவில் சட்டம்

வசனம் : 4:11, 4:12, 4:176, 24:4, 24:6-8, 24:11-13, 2:180, 2:229, 5:8

31. குற்றவியல்  சட்டம் 

வசனம் : 2:178, 5:38, 5:45, 6:151, 4:15, 24:2, 17:33, 24:13, 25:68

32. பசுமையான மரங்களில் நெருப்பு

வசனம் : 36:80

33. உலகம் படைப்பு எவ்வாறு

வசனம் : 41:11, 21:30

34. கடல்  பிளந்தது

வசனம் : 2:50

35. இரு கிழக்கு இரு மேற்கு

வசனம் : 2:115, 2:177

36. ஹலால்  ஹராம்  ஏன்?

வசனம் :  5:3,4

நாம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள இத்தனையும் இஸ்லாம் (குர்ஆன்) கூற காரணமென்ன?

அது அறிவியல் நூலா?

அது விலங்கியல் நூலா?

அது பெளதீக நூலா?

அது மருத்துவ நூலா?

 ஆம், அனைத்து வி­யமும் மனிதனின் அடிப்படையிலான வாழ்க்கை முறையுடன் தொடர்பு உள்ளன என்பதால்தான் அது அனைத்தையும் பற்றி பேசுகிறது. அது மட்டுமல்ல ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து அதை ஆராய்ந்து சிந்திக்க மனிதனுக்கு இஸ்லாம் ஆர்வமும் ஊட்டுகிறது.

அதாவது இந்த பிரபஞ்ச அமைப்பு இயற்கையாக உண்டானது அல்ல. அவைகளை படைத்தவன் ஒருவன் இருக்கின்றான், அதன் காரணமாகத்தான் உலகம் ஒரு முறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை  உணர்த்துகிறது.

உதாரணமாக: அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்ட சிலவற்றையும் இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு கூறப்பட்ட வசனம் என்னவென்றால்,  வசனம் 2:259

மேற்கண்ட வசனத்தில் ஒரு மனிதரை நூறு ஆண்டுகள் இறைவன் மரணிக்கச் செய்தான். பின்னர் உயிர்ப்பித்தான், மேலும் அந்த இறந்த மனிதரின் அருகில் இருந்த உணவும், பானமும் (தண்ணீரும்) கெட்டுப்போகாமல் இருந்தன. ஆனால் அவனோடிருந்த கழுதை மட்டும் செத்துவிட்டது என்று கூறிவிட்டு அந்த கழுதைக்கு மீண்டும் உயிர் கொடுத்து அதை பழைய நிலைமைக்கு ஆளாக்கிதாகவும் இறைவன்  கூறுகிறான்.

இது அறிவியல் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத, நம்ப முடியாத ஒன்றாகும்.

எனவேதான் அறிவியலை விட இஸ்லாமே சிறந்த முன்னோடி என்று கூறுகிறோம். எவ்வாறு என்றால் இறைவன் என்பவன் அனைத்து வல்லமை (ஆற்றலும்) பெற்றவன் ஒன்றை நினைத்தால் ஒரு நொடியில் அவனால் ஆகுமாக்க முடியும் என்பதும் ஒன்றை நினைத்தால் ஒரு நொடியில் அவனால் அழிக்கவும் முடியும் என்பதை பறைசாற்றுகிறேன்.

அதுமட்டுமல்ல, பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு ஒரு தொழில் நுட்பம் உள்ளது என்பதை ஆய்வு செய்யுங்கள் என்று மறைமுக அறிவியலுக்கு முன்னறிவிப்பும்  இறைவன்  செய்துள்ளான்.

அதாவது குளிர் சாதனங்கள், குளிர்பதனப் பெட்டி (இறந்தவர்களை பாதுகாக்க) இன்னும் இது தொடர்பான அனைத்தும் இஸ்லாம் கூறும் முன்னறிவிப்பு மூலமே உலகிற்கு  தெரியவந்தது.

Previous post:

Next post: