(அறிவியல் கட்டுரை) பூமியை  பற்றிய  விளக்கம்

in 2025 பிப்ரவரி

(அறிவியல் கட்டுரை) பூமியை  பற்றிய  விளக்கம்

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

1. பூமியைப்  பற்றி :

A. பூமி உருண்டை என்பதை நிரூபிக்கிறது:

வசனம் : 18:86, 18:90

பொதுவாக எந்த ஒரு உருண்டையான பொருளை நாம் பார்த்தாலும் பாதி உருண்டை முன்புறமும், மீதி உருண்டை எதிர்புறம் தான் இருக்கும். எனவேதான் இறைவன் சூரியன் மறைவதை வசனம் 18:86லும் சூரியன் உதிப்பதை 18:90லும் ஒரு வரலாற்று சம்பவம் மூலம் நமக்கு பூமி தட்டை அல்ல உருண்டை தான்  என்று  கூறியுள்ளான்,

B. புவி  ஈர்ப்பு  விசையைப்  பற்றி :

வசனம் : 20:53, 43:10, 78:6

பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்கு தெரிவதல்லை, மேலும் எந்தவிதமான பாதிப்பையும் நாம் உணரவில்லை. அதற்கு காரணம் பூமியைத்தொட்டிலாகஇறைவன் அமைந்துள்ளதே ஆகும். அதனால்தான் பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு விலகிவிடாமல் ஒரு வித ஈர்ப்பு விசையால் கயிற்றால் கட்டி இழுக்கப்படுவதுபோல் சுற்றி வருகிறது. அதை அறிவியல் ஈர்ப்பு விசை என்று அழைக்கிறது.

C. மனிதர்கள்  பூமியில்தான்  வாழமுடியும்:

வசனம் : 2:36, 7:10, 7:24, 7:25, 30:25

இறைவனின் படைப்பில் பல கோள்கள் உள்ளன. அவை, புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் (இவைகள் அனுமானமாக மனிதர்களால் சொல்லப்பட்டது)

மேற்கண்ட எந்த கோள்களிலும் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தட்பவெப்ப நிலை இல்லை. அவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறான தட்பவெப்ப நிலையில் உள்ளன. மனிதன் தாங்கிக்கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. மேலும் உயிர் வாழ அவசியமான காற்றும் (ஆக்ஸிஜன்) பூமியில்தான்  இருக்கிறது.

(தற்காலிகமாக செயற்கை ஆக்ஸிஜன் துணை கொண்டு சிறிது நாட்கள் தங்குவதை வாழ்வதாக கருதமுடியாது. சந்திரனில் மனிதனை குடி அமர்த்துவோம் என்பதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை) எனவே இறைவன் கூறுவது போல் பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்பது நிரூபணமாகிறது.

D. பூமியில் ஆழத்திற்குச் செல்லமுடியாது:

வசனம் : 17:37

பூமியில் கர்வத்துடன் (பெருமையுடன் நடக்காதீர்! நிச்சயமாக பூமியின் ஆழத்திற்கு செல்லமுடியாது, மலையளவுக்கு உயர்ந்து விடவும்  முடியாது”. 

மேற்கண்ட அத்தியாயத்தில் (17ல்) வசனம் 37க்கு முன்பாக வசனம் 22 முதல் 36 வரை மனிதன் இந்த பூமியில் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை இறைநூல்(அல்குர்ஆன்) கூறுகிறது. அவ்வாறு கூறிவிட்டு வசனம் 37ல் மூன்று வி­யத்தை  கூறுகிறது. 

1. பெறுமையுடன்  நடக்காதீர்,

2. பூமியின்  ஆழத்திற்கு  செல்லமுடியாது,

3. அதுபோல் மலையளவு உயர்ந்துவிட முடியாது  என்பதை  கூறுகிறது.

இந்த வசனத்திற்கு மொழி பெயர்ப்பாளர்கள் பலரும் தவறான பொருளை கூறியுள்ளார்கள். அதன் விளைவு இந்த வசனம் கூறும் ஒரு அறிவியல் உண்மையை மறந்துவிட்டார்கள். என்னதான் மனிதன் அறிவியலில் வளர்ச்சி அடைந்தாலும் அவன் பலகீனமானவனே என்பதை  இவ்வசனம்  கூறுகிறது.

அதாவது மனிதன் வளிமண்டலம் முன்னர் செல்லமுடியும், ஆனால் பூமியின் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் செல்லமுடியாது என்பதாகும்.

உலகின் மிக உயரமான மலையான இமயமலையின் உயரம் சுமார் 9 கி.மீ. அளவு ஆகும். இந்த உயரத்தை மனிதன் அடைந்து அங்கு கொடி நாட்டுகிறான். ஆனால் பூமியின் ஆழத்திற்கு மனிதன். இதுவரை செல்லவில்லை, இனியும்  செல்லமுடியாது.

தவறான  மொழிபெயர்ப்பு:

பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம்; (ஏனெனில்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விடமுடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்துவிடவும்  முடியாது. (ஜான் டிரஸ்ட் புத்தகம் 2019)

E. பூமி  குறைகிறது  என்று  கூறுகிறது:

வசனம் : 13:41

இந்த பூமியை நாம் குறைத்துக்கொண்டு வருகிறோம், நீங்கள் காணவில்லையா?” என்று  இறைவன்  கேட்கின்றான்.

இதற்கான விளக்கம் சென்ற வருடம் 2023ல் மே மாத இதழில்பிறந்தநாள் விழா, புத்தாண்டு விழா!’ என்ற தலைப்பில் பக்கம் 8,9ல் விரிவாக குறிப்பிட்டுள்ளோம்.

Previous post:

Next post: