துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

in 2025 பிப்ரவரி

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை

உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2025  ஜனவரி  மாத  தொடர்ச்சி

தூதர்கள் மூலமாகவும் அவர்களிடம் எடுத்துக்கொண்ட  உறுதிமொழிகள்:

உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்தபின் உங்களிடம் இருப்பதை உண்மைப் படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?’ என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்துஇதை ஒப்புக்கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டீர்களா?’ என்று கேட்டபோது, “ஒப்புக்கொண்டோம்என்று அவர்கள் கூறினார்கள். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்என்று அவன் கூறினான்.   (3:81)

மேலும்நபிமார்களிடம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (33:8) என்றெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர்களின்  மூலமாகவும்;

இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களிட மும் செய்துகொண்ட உடன்படிக்கை யையும்  உடைத்தார்கள்:

யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் செய்துகொண்ட உடன்படிக்கையில், நஷ்ட ஈடு கொடுக்கும் விசயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும்; ஆனால்அம்ர் இப்னு உமையா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாகக் கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடு தொடர்பாக நழீர் இனத்து யூதர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேச வந்தபோது யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்து உடன்படிக்கையை உடைத்து நபி(ஸல்) அவர்களைக் கொல்வதற்கு முயற்சித்தார்கள்.   (அர்ரஹீக் அல்மக்தூம் 359)

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், அல்லாஹ்வுடைய தூதர்களிடம் செய்து கொண்ட உறுதிமொழியையும் உடைத்து, தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(3:77)  ஏனெனில்  அவர்கள்;

நாங்கள் செவியேற்றோம் மாறு செய்தோம் என்று  அவர்கள்  கூறினார்கள்:

நாம் உங்களுக்கு மேலேதூர்மலையை உயர்த்தி, உங்களுக்கு நான் வழங்கியதைப் பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்; (நபிமார்கள் சொல்வதையும்) செவியுறுங்கள் என உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். (என்றோம் அப்போது அவர்கள்) “நாங்கள் செவியேற்றோம்; மாறு செய்தோம்என்று கூறினார்கள். (2:93, 4:46) அவர்கள் அவ்வாறு மறுத்த பாவத்தின் காரணமாக காளைக்கன்றின் மீதான பக்தி அவர்களின் உள்ளங்களில்  ஊட்டப்பட்டது.  (2:93)

அறப்போருக்குச் செல்லாமல் இறைத்தூதருடன் முரண்டு பிடித்தார்கள்:

எனது சமுதாயத்தாரே! உங்களுக்கென்றே அல்லாஹ் எழுதிவைத்துள்ள தூய்மையான (பைத்துல் மக்திஸின்) இந்தப் பூமியில் நுழையுங்கள் (அடக்குமுறையாளர்களான அங்குள்ளஅமலேக்கியர்எனப்படும் எதிரிகளை அஞ்சி) புறமுதுகிட்டு ஓடாதீர்கள். (அவ்வாறு ஓடினால்) நீங்கள் இழப்புக்குள்ளான வர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் கூறினார்)

அதற்கு அவர்மூஸாஅந்தப் பூமியில் (அமலேக்கியரான) ஆதிக்க வர்க்கத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேறாத வரையில் நாங்கள் அதற்குள் நுழையமாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டால் நாங்கள் நுழைவோம் என்று கூறினார்கள்.

அப்போது(அல்லாஹ்வை) அஞ்சி நடப்பவர்களில் இறையருளைப் பெற்ற இருவர் (இஸ்ரவேலர்களிடம்) அவர்களை எதிர்த்து(ப் போரிட அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள். அவ்வாறு அதில் நீங்கள் நுழைந்துவிட்டால் நீங்களே வெற்றியாளர்கள் நீங்கள் (உண்மையிலேயே) இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள் என்று கூறினார்.

அதற்கு அவர்கள்மூஸாஅவர்கள் அங்கிருக்கும் வரை அதில் நாங்கள் ஒருபோதும் நுழையவேமாட்டோம். (வேண்டுமானால்) நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்! நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் 5:21-24) 

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் உத்தரவுக்குப் பணிய மறுத்து விட்டனர். ஆகவே அவர்கள்தீஹ்எனும் பாலைவனத்தில் திக்குத் தெரியாமல் நாற்பது ஆண்டுகள் சுற்றித் திரியும் நிலையில் நாடோடிகளாக அலையவிடப்பட்டார்கள்.       (அல்குர்ஆன் 5:26)

இதையடுத்து அவர்கள்தீஹ்பாலைவனத்திற்குள் சிக்கி அதிலிருந்து வெளியேற வழி தெரியாமல் சுற்றித் திரிந்தவண்ணம் இருந்தார்கள். ஓரிடத்திலிருந்து பயணப்படும் போதெல்லாம் மீண்டும் அதே இடத்திற்கே வந்து சேருவார்கள். இதனால் எந்த இடத்திலும் நிலையாகத் தங்காமல் பயணத்திலேயே அவர்களின் நாட்களெல்லாம் கழிந்தன.

இப்னு அப்பாஸ்(ரழி) கஅபுல் அஹ்பார் (ரஹ்), பைஹகீ, மஜ்ம உஸ்ஸவாயித், அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸயீ, முஸ்னது அபீயஅலா, தப்ரானீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:119-135, 4:562,563, 5:723-726) பின்னர், தீஹ் பாலைவனத்தில்;

எங்களுக்கு உணவு எங்கே? என்று இறைத்தூதரிடம் கேட்டார்கள்:

இஸ்ரவேலர்கள்தீஹ்பாலைவனத்தில் நுழைந்தபோது மூஸா(அலை) அவர்களிடம்இங்கு நிலவும் அசாதாரண சூழலை நாங்கள் எவ்வாறு சமாளிப்பது? எங்களுக்கு உணவு எங்கே? என்று வினவினார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வானத்திலிருந்து பாலைவிட அதிக வெண்மையான தாகவும் தேனைவிட அதிக இனிப்பாகவும் நீருடன் கலந்தால் தரமான குளிர் பானமாகவும் வேறு பொருளுடன் சேர்த்தால் புதிய வகை கண்ணுக்கு நிவாரண உணவாகவுமுள்ளமன்னுஎனும் சிறப்பு உணவு இஞ்சிச் செடியில் வந்து விழுந்து கொண்டிருந்தது; “சல்வாஎன்பது காடையை விட அளவில் பெரிதான உருவத்தில் அதைப் போன்ற சிவப்பு நிறச் சாயலுள்ள, காடையைப் போன்ற, ஒருவகைப் பறவை ஆகும். அவர்களில் ஒருவர் வந்து அந்தப் பறவையைப் பார்ப்பார் அது நன்கு கொழுத்திருந்தால் அதைப் பிடித்து அறுப்பார், இல்லையேல் அதை விட்டுவிடுவார். நன்கு கொழுத்த பின்னர் அது தானாகவே அவரிடம் வந்து சேரும். (அல்குர்ஆன் 2:57-61)

இதோ உணவு கிடைத்தாயிற்று குடிப்பதற்குத் தண்ணீர்  எங்கே?  என்றார்கள்:

பிறகு அந்த இஸ்ரவேலர்கள்இதோ உணவு கிடைத்தாயிற்று குடிப்பதற்குத் தண்ணீர் எங்கே? என்று கேட்டார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களுக்கு ஓர் உத்தரவு வந்தது. உடனே அவர்கள் தமது கைத்தடியால் பாறையில் அடித்தார்கள். அதிலிருந்து பன்னிரண்டு நீரூற்றுக்கள் பீறிட்டு வந்தன. அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் ஒரு நீரூற்றில் நீர் அருந்தினார்கள்.  (2:60)

இதோ தண்ணீர் கிடைத்தாயிற்று தங்குவதற்கு நிழல் எங்கே? என்றார்கள்:

பிறகு அவர்கள்இதோ தண்ணீர் கிடைத்தாயிற்று தங்குவதற்கு நிழல் எங்கே? என்று கேட்டார்கள். அப்போது மேகக் கூட்டங்கள் அவர்கள் நகரும் இடங்களெல்லாம் நிழல் கொடுத்தன.

இதோ நிழல் கிடைத்தாயிற்று உடுத்துவதற்கு உடை  எங்கே?  என்று  கேட்டார்கள்:

பின்னர் அவர்கள்இதோ நிழல் கிடைத்தாயிற்று. உடுத்துவதற்கு உடை எங்கே? என்று கேட்டார்கள். உடனே அவர்கள் அணிந்திருந்த பற்றாக்குறையான ஆடைகள் அவரவரது உயரத்திற்கு ஏற்ப விரிந்து கொண்டன. அவர்கள் வளர வளர குழந்தைகள் வளர்வதைப் போன்று அந்த ஆடைகளும் வளர்ந்தன. அவை அழுக்கடையவுமில்லை, இற்றுப்போகவு மில்லை. (2:57 இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு ஜுரைஜ்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:218) சிறிது நாளின் பின்னர் மீண்டும்; 

மூஸாவே! நாங்கள் ஒரே வகையான உணவைத் தினமும் சகித்துக் கொள்ள முடியாது. எனவே எங்களுக்கு வேறு உணவு வகைகளும் வேண்டும் என்றார்கள்:

மூஸாவே! நாங்கள் (தினமும்) ஒரே (வகையான) உணவைச் சகித்துக்கொள்ள முடியாது. எனவே, எங்களுக்காக உம்முடைய இறைவனிடம் இறைஞ்சுவீராக! அவன் எங்களுக்கு பூமியில் விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பயறு, வெங்காயம் ஆகியவற்றை வெளிப்படுத்தித் தருவான். (2:61) என்று கேட்டார்கள். இஸ்ரவேலர்களுக்கு இறைவன்மன்னுமற்றும்சல்வாஆகிய தூய்மையான பயனுள்ள களிப்பூட்டும் உணவை எவ்வித உடலுழைப்புமின்றி எளிதாக அருளினான். ஆனால் அவர்களோ! கீரை, கொமட்டிக்காய், வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு போன்ற தரம் தாழ்ந்த மலிவான மட்டமான உணவு வகைகள் வேண்டும் என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), புகாரி:3330,3399, தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:227-230, விவிலியம் பழைய ஏற்பாடு எண்ணாகமம்  11:6,7)

அல்லாஹ்வின் தடையை மீறி அடுத்த நாளுக்கும் சேர்த்து உணவை எடுத்து வைத்துக் கொண்டார்கள்:

வானத்திலிருந்து பாலை விட அதிக வெண்மையானதாகவும் தேனை விட அதிக இனிப்பாகவும் நீருடன் கலந்தால் தரமான குளிர்பானமாகவும் வேறு பொருளுடன் சேர்த்தால் புதிய வகையில் கண்ணுக்கு நிவாரண உணவாகவுமுள்ளமன்னுஎனும் சிறப்பு உணவும், சிவப்பு நிறச் சாயலுள்ள காடையைப் போன்ற, ஒருவகைப் பறவையின் இறைச்சியைப் போன்றஸல்வாஎனும் அதிஅற்புத உணவு அவரவர்களின் இருப்பிடங்களிலேயே பனிப் பொழிவைப் போன்று இறக்கி கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அன்றைக்குத் தேவையான அளவுக்கு மாத்திரமே அந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்த நாளைக்கும் சேர்த்து எடுத்து வைக்கக்கூடாது என்பது இறைக்கட்டளையாகும். 

ஆனாலும் அதை அவர்கள் மீறி அடுத்த நாளுக்கும் சேர்த்தெடுத்து சேமித்த இறைச்சி கெட்டுப் போய்ச் துர்நாற்றமடிக்கும். (2:57-61, 5:21-26, 10:93, 20:80, சயீத் பின் ஸைத்(ரழி), புகாரி: 4478, 4639, 5708, திர்மிதி, இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா (ரஹ்), சுத்தீ(ரஹ்) அப்துர் ரஹ்மான் பின் அஸ்லம் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:216-219) இதனையே, பனூ இஸ்ராயீல் குலத்தார்களான யூதர்கள் மட்டும் அவ்வாறு செய்யாமலிருந்திருப்பின் இறைச்சி இன்றளவும் துர்நாற்றமடித்திருக்காது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி:3330,3399, உம்ததுல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ)

Previous post:

Next post: