நீரும் – நெருப்பும்…

in 2025 பிப்ரவரி

தலையங்கம் :

நீரும்நெருப்பும்

பொதுவாக மதங்களை பின்பற்றக்கூடிய எல்லா மதத்தினரும் கடவுளை (இறைவனை) வழிபடும்பொழுதுநெருப்பைதுணையாக ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

உதாரணமாக:

இந்துக்கள் : விளக்கில் எண்ணெயை ஊற்றி கடவுளை வழிபடுகின்றனர்.

கிறிஸ்தவர்கள் : மெழுகுவர்த்தியை ஏற்றி இயேசுவை வழிபடுகின்றனர்.

பெளத்தர்கள் : பெரும் பெரும் ஊதுவத்தியை ஏற்றி புத்தரை வழிபடுகின்றனர்.

சீனர்கள், சீக்கியர்கள் மற்றும் மதங்களை பின்பற்றும் பலரும் கடவுளை வழிபடும் பொழுதுநெருப்பையே துணையாகக் கொள்கின்றனர்.

ஆனால் இஸ்லாம் மார்க்கத்தில் அத்தகைய வழிபாடு இல்லை. ஆயினும் மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள இஸ்லாமியர்கள் சிலரும் வீடுகளிலும், கடைகளிலும், கஃப்ருகளிலும், ஊதுவத்தியை ஏற்றுகின்றனர்.

கடவுளுக்கும் (இறைவனுக்கும்) நெருப்புக்கும் என்ன  சம்பந்தம்?

நெருப்பை துணை கொண்டு வழிபாடுகள் செய்வதைதான் கடவுள் விரும்புகிறாரா?

என்றால் நிச்சயமாக  இல்லை.

எவ்வாறு  என்றால்,

மண்ணைக் கொண்டு மனிதன் படைக்கப் பட்டிருந்தாலும் நெருப்பின் மூலம்தான் மனிதனுக்கு தண்டனை வழங்குவேன் என்று இறைவன் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நெருப்பின் மூலம் தண்டனை உள்ளது. அதில் (நரக நெருப்பில்) நிரந்தரமாக இருப்பார்கள். இது மிகப்பெரும் இழிவுஎன்பதை அவர்கள் அறியவில்லையா?    (.கு. 9:63)

ஆகநெருப்புஎன்பது மனிதனுக்கு தண்டனை வழங்கக்கூடியது. அவ்வாறுயிருந்தும் கடவுளை வழிப்பட நெருப்பை மனிதர்கள் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர்.

எது நமக்கு எதிரானதோ அதை (நெருப்பை) நண்பனாக (துணையாக) ஆக்கிகொள்ளும் மனிதர்களின் வினோதமான செயலில் இதுவும்  ஒன்று.

நெருப்பு என்பது வெறும்தீமட்டுமல்ல மின்சாரமும், நெருப்புத்தான். மின்சாரத்தின் பயன் இல்லாமல் இன்று உலகம் இயங்காது என்ற  நிலைப்பாடு  ஏற்பட்டுள்ளது.

கட்நத 10 நாட்களுக்கு மேலாக (ஜனவரி 2025, 8ம் தேதி முதல்) பேசு பொருளாக இருப்பது  இந்த  நெருப்பு  தான்.

அது எவ்வாறு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்பதைப் பற்றியயல்லாம் பலரும் பல்வேறு கோணத்தில்  கருத்தை  பதிவிடுகிறார்கள்.

அதாவது :

1. அல்லாஹ்வின் கோபம்,

2. இயற்கையின் சீற்றம்,

3. மனித கரங்களால் ஏற்பட்டது.

என  பலவாறு  கருத்து  பதிவிடப்படுகிறது.

இதில்  எது  சரி?

மக்களுக்கு ஏற்படும் சோதனைகள் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்? என்பது நமக்கு முழுமையாக  தெரியாது.

அவை; தண்டனையாகவோ, அல்லது

சோதனையாகவோ, அல்லது

பாடமாகவோஇருக்கலாம், அல்லது மனித கரங்களால் ஏற்பட்ட கவனகுறைவால் ஏற்பட்டதாக  கூட இருக்கலாம்.

இது நமது அறிவுக்கு எட்டாத விசயம், இறைவனுடைய தண்டனைதான் என்று கூற இப்போது எவருக்கும் வஹியை இறைவன் இறக்கவில்லை.

வஹி (தூது செய்தி) நின்றுவிட்டது.

எனவே இறைவன் என்ன விரும்புகிறான் என்பது நம் அறிவுக்கு எட்டாத விசயம். அதனால் நாமாக எந்த ஒரு தீர்ப்பும் இறைவன் பெயரால்  கூறுவது  தவறு.

“..நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுவதை இறைவன் தடை செய்துள்ளான்என்று கூறுவீராக. (.கு.7:34)

முஸ்லிம் நாடுகளில் கூட பேரழிவுகள் பல ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் மக்காமதீனாவில் கூட பெய்த மழை, பெரும் வெள்ளமாக மாறி பல இழப்புக்களை ஏற்படுத்தியது.

எதுவொன்றையும் அழிப்பதாக அல்லது தண்டனைக் கொடுப்பதாக இருந்தால் அல்லாஹ்விற் கென்று சில நியதிகளை அவனே (தனக்குத்தானே) ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.

அவை என்ன?

நமது வசனங்களை அவர்களுக்கு எடுத்துரைக்கும் தூதரை தாய் நகருக்கு (ஊர்களின் மையமான பகுதிக்கு) அனுப்பாமல் எந்த ஊரையும் உமது இறைவன் அழிப்பவனாக இல்லை. எந்த ஊரையும் அதில் உள்ளவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தாலே தவிர நாம் அழிப்போராக இல்லை.”   (.கு. 28:59)

அந்த கலிஃபோர்னியா மாநிலத்திலும், லாஸ் ஏன்ஜல்ஸ் மாநிலத்திலும் பல முஸ்லிம்களின் இல்லமும், சொத்துகளும் கூட சேதமடைந்தன.

இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம்களின் கடமை என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும்  அவர்களின்  நலனுக்காக  துவா  செய்வதுமே  ஆகும்.

சென்ற சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும், திருநெல்வேலியிலும் ஏற்பட்ட வெள்ள பெருக்கின்போது முஸ்லிம் தன்னார்வாளர்கள் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்ப்பின்றி மதம் கடந்து பல உதவிகளை  அனைவருக்கும்  செய்தனர்.

எனவே கொளுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்க முயற்சியும் பாதிக்கப்பட்டவர் களுக்காக கருணை காட்டுமாறு இறைவனிடம் துஆச் செய்ய வேண்டும்.

Previous post:

Next post: