2011 செப்டம்பர்

M.ஜமாலுத்தீன், நாகர்கோவில், 9894932446 அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, உங்கள் கவனத்திற்கு, நாம் நமது அறிவைப் பயன்படுத்தாமல் நம் தலைவர்களையும், இமாம்களையும், அமைப்பு அமீர்களையும் பின்பற்றி வருகிறோம், இது சரியா? அல்லாஹ் தனது நெறிநூலில் நம்மை சிந்திக்கச் சொல்கிறான். மறுமையில் அல்லாஹ்விடம் தன்னந் தனியாக நிற்கும்போது இமாம்களோ, தலைவர்களோ, அமீர்களோ நமக்காக பரிந்து பேச முடியாது. அல்லாஹ் கூறுகிறான்.

ஐயம் : பிறை விசயத்தில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படலாமா? M. அபூயாசீர், மதுரை

அபூ அப்தில்லாஹ் தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் குர்ஆன், ஹதீஸை கரைத்துக் குடித்த மேதைகள் எனக் கூறும் மதகுருமார்கள் அனைவரும் ஏகோபித்துப் பிறையைக் கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு அவர்கள் கொடுக்கும் ஆதாரம் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். பிறை பார்த்து நோன்பை முடியுங்கள். பிறை பார்க்காமல் நோன்பை ஆரம்பிக்காதீர்கள்; பிறை பார்க்காமல் நோன்பை முடிக்காதீர்கள் போன்ற கருத்தைத் தரும் பல ஹதீஸ்களாகும். இந்த ஹதீஸ்களை […]

மறுபதிப்பு : செப்டம்பர் 1986     மவ்லவி பீ.ஜே. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது(ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் “­பாஅத்’ என்னும் பரிந்துரை செய்பவர்களாகவும், “மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாக வும்அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

ஆயிரம் மாதங்களைவிட சிறப்புப் பெற்ற ஒரு நாளையுடைய ரமழான் மாதம் நம்மை விட்டுக் கடந்து செல்கிறது. மனித குலத்திற்கே இறுதி வழிகாட்டல் நெறி நூலான அல்குர்ஆன் இந்த ரமழான் மாதத்தில் தான் குறிப்பாக ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய கத்ருடைய நாளில்தான் முதன்முதலாக வஹி மூலம் இறங்கியது. இந்த குர்ஆன் மனித குலத்திற்கு முழுமையான வழகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், நன்மை எது? தீமை எது? எனத் தெளிவாகப் பிரித்தறிவிப்பதுமாகவும், இருக்கிறது என்பதை 2:185 இறைவாக்கு உறுதி […]