2011 டிசம்பர்

அபூ அப்தில்லாஹ் அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நட்டத்தில் இருக்கிறான்; ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற் செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொரு வர் அறிவுரைக் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (103:1-3)

விமர்சனம்: நீங்கள் அக்டோபர் 2011 அந்நஜாத் விமர்சன விளக்கத்தில் நஜ்ரான் தேசத்துப் பாதிரிகள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தபோது, பள்ளியிலேயே அவர்களது முக்கடவுள் கொள்கைப்படி வணக்க வழிபாடு செய்ய நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்று எழுதியுள்ளீர்கள். நான் பலரிடம் விசாரித்தேன். அப்படி எவ்வித ஆதாரமும் இல்லை என்றே சொன்னார்கள். எஸ்.கே.யிடமும் கேட்டேன். அவர், “´ஷிர்க் செய்யும் இமாம் பின்னால் நின்று தொழலாம்” என்று எழுதுகிறவருக்கு இப்படி எழுதுவது இயலாத காரியமா? என்று கேட்டார். எனவே ஆதாரமில்லாத […]

அல்லாஹ்வின் உன்னத பண்பால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ் ஒருமையானவன்! முஹிப்புல் இஸ்லாம் புகழாரங்களால் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துதல்: அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். (அல்குர் ஆன் : 1:1)

நடந்து முடிந்த திருச்சி மேற்கு தொகுதிச் சட்டசபை இடைத்தேர்தல், மற்றும் மாநகர, நகர, பேரூ ராட்சி, சிற்றூராட்சி, பஞ்சாயத் தேர்தல் இவை அனைத்திலும் இடம் பெற்ற நடுநிலை மனிதர்களால் ஜீரணிக்க முடியாத மிருகச் செயல்களையும், அவற்றால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் பொருளாதார வீண் செலவுகளையும் கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பாருங்கள்.