2014 ஜூன்

கேப்டன் அமீருத்தீன் “அந்நஜாத்’ மே மாத இதழில் “தொழுகை இருப்பில் விரலசைப்பது’ பற்றிய கட்டுரை யைக் கண்டேன். கடந்த 2010ம் ஆண்டு “சமரசம்’ இதழில் அது பற்றி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ நிகழ்ச்சியை எழுதியிருந்தேன். பின்னர் அக்கட்டுரையை 2012ம் ஆண்டு “அந்நஜாத்’தில் வெளிவந்த கலாநிதி அஷ்ரஃப் அவர்களின் செய்தியுடன் பூர்த்தி செய்து விரைவில் வெளி வர இருக்கும் “பசுமை பூத்த நினைவுகள்’ (இஸ்லாமிய சிந்தனை) என்ற எனது தொகுப்பு நூலில் இடம் பெறச் செய்துள்ளேன். இந்நிலையில் […]

Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், இயக்க வழிபாட்டினரை விட்டுப் பிரிந்து அவர்களின் அரசியல் லீலைகள் மற்றும் குர்ஆன் ஸுன்னாவின் கொள்கைகளுக்கு மாற்றான விளக்கங்களால் கொதித்துப் போய் பல சகோதரர்கள் அந்தந்த ஊர்களின் பெயராலும் மன்றங்களின் பெயராலும் ஜமாஅத்தாகச் செயல்படுகிறார்கள். இவர்களின் இந்த முயற்சி இயக்க வழிபாடுகளில் நீங்கள் சிக்கி இருந்ததைப் போன்றுதான் விளைவுகளை ஏற்படுத்தும். உங்களின் கோபம் எல்லாம் இந்த இயக்கத்திலிருந்து அங்கு சென்றால் அங்கே வலை விரித்து ஆளைப் பிடிக்கின்றார். ஆக இப்படி எங்கு சென்றாலும் தப்பவே முடியாது […]

அபூ அப்தில்லாஹ் இதோ இறுதி நெறிநூல் அல்குர்ஆன் பறைசாற்றுகிறது! நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும், நானே உங்கள் இறைவன். ஆகையால், எனக்கே நீங்கள் வழிபடுங்கள். (21:92) (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்கக்) காரியங்களில் பிளவுபட்ட னர்; அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  (21:93) நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். எனவே, நீங்கள் இறை உணர்வுடன் (பயபக்தி) நடங்கள். (23:52) ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தைத் தமக்கிடையே […]

அல்லாஹ் தேவையற்றவன்! (அல்லாஹு ஸ்ஸமத் ) முஹிப்புல் இஸ்லாம் இறை ஒருமையின் தனித்துவம் : படைத்தவன் ஏகன் அல்லாஹ், படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன், வேறுபட்டவன். அல்லாஹ் ஒருவன் எனத் துவங்கும் அல்லாஹ்வின் ஒருமை. ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கு நிகராய், ஒப்பாய், இணையாய் எவனும், எதுவும் இல்லை என்று நிறைவு பெறச் செய்திருப்பது (காண்க.அல்குர்ஆன்:112:1,4) அல்லாஹ்வின் அருளுரை இதை மானுடத்துக்குக் கற்றுத் தருகிறது. ஏற்றோர் இவ்வத்தியாயத்தைக் கசடறக் கற்பதும் அதன் பிரதிபலிப்பாய் வாழ்வை அமைத்துக் கொள்வதும் கட்டாயக்கடமை. கோடிட்டுக் […]