புரோகிதம்

அப்துர் ரஹ்மான்,  திருச்சி இன்று முஸ்லிம் சகோதரர்களிடையே விபச்சாரம் பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதை விட கொடிய குற்றமான புரோகிதம் குற்றமாகவே பார்க்கப் படுவது இல்லை. காரணம் குர்ஆனை சுயமாக படித்து புரிந்து கொள்ள முயலாமல் மவ்லவிகள் பயான்கள் மூலம் குர்ஆனை விளங்கி கொள்ள முயல்வது தான். மவ்லவிகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான உண்மைகளை கூற மாட்டார்கள். காரணம் மக்கள் சொத்துக்களை தவறாக உண்பது தான், இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “நிச்சயமாக மதகுருமார்களிலும், துறவிகளிலும் […]

N. அலி, கல்லிடைகுறிச்சி டிசம்பர் மாத அந்நஜாத் இதழில் விமர்சனம் விளக்கம் பகுதியில் இடம்பெற்ற சகோதரர் சைக் அப்துல் காதிர் (சிங்கப்பூர்) அவர்கள் அக்டோபர் மாத இதழில் வெளியான அந்நஜாத் Vவி புரோகிதம் கட்டு ரையை வாசித்ததோடு மட்டுமல்லாமல் விமர்சித்தும், விளக்கம் கேட்டும் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சி யான வி­யமாகும். நேர்வழியை அறிந்து கொள்வதற்கு நல்ல வழிமுறையாகும் அந்நஜாத் VS புரோகிதம் கட்டுரையில் 18:102ன் நேரடிக் கருத்தை தெளிவுபடுத்தும் பொருட்டு எழுதப்பட்டதாகும். இப்பொழுது அவரின் (PJ) […]

அபூ அப்தில்லாஹ் முஸ்லிம் யார்? காஃபிர் யார்? இந்த மதகுருமார்கள் மக்களிடையே முஸ்லிம்களுக்கும், காஃபிர்களுக்கும் தவறான பொருளைக் கற்பித்து அதை மக்கள் உள்ளங்களில் புரையோடச் செய்துள்ளனர். முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்து, முஸ்லிம் பெயரிட்டு, சுன்னத்துச் செய்யப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்தில் வாழ்ந்தால் அவன் முஸ்லிம்; அவனுக்கு முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையான கலிமாவே தெரியாமல், மார்க்க சம்பந்தப்பட்ட அடிப்படைகள் எதையும் தெரியாமல் இருந்தாலும் அவன் முஸ்லிம்; இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆன் கடுமையாக கண்டித்துக் கூறும் […]

ஒரு நவீன காரீஜ்ஜியின் வளர்ச்சியும்… வீழ்ச்சியும்… ஒரு பார்வை! எஸ். ஹலரத்அலி, திருச்சி-7. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வெடித்துக் கிளம்பிய ஏகத்துவ புரட்சியின் நாயகனாக, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற முஜ்தஜிதாக, இஸ்லாத்தின் போர்வாளாக, அனாச்சார, மெளடீக சடங்குகளுக்கு சாவு மணி அடித்த புரட்சி புனலாக, பொங்கு வெள்ளமாக காட்சி தந்த அண்ணனின் நிலைமை இன்று, ஊர் சிரித்து ஒடுங்கிப் போக காரணம் என்ன? அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீங்கள் அவர்களுக்கு (பல்ஆம் இப்னு பாஊரா) என்னும் […]

தொடர் 4 அபூ அப்தில்லாஹ் அக்டோபர் தொடர்ச்சி…….. அவர்கள் சொல்வது போல், அறிந்தவர்களிடம் கேட்டு அறிவதாக இருந்தால், “”அஹ்லல் இல்மி” என்று இருக்க வேண்டும்; அவர்கள் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்றுவதாக இருந்தால் “”கல்லிதூ அஹ்லல் இல்மி” என்றே இருக்க வேண்டும். அப்படி இல்லை; மாறாக “”அஹ்ல ஃத்திக்ரி” என்றே இருக்கிறது. “”ஃதிக்ர்’ என்று இந்த இடத்தில் குறிப்பிடுவது 3:58ல் கூறும் இறையறிவிப்புக்களையே குறிக்கும். 16:43, 21:7 குறிப்பிடும் “”உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அனுப்பிய தூதர்கள் […]

அபூ அப்தில்லாஹ் மதகுருமார்களின் ஆதிக்கம்: ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின்-மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். அவர்களை சந்நிதானம், காட் ஃபாதர், காட் […]

 அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… ஒட்டுமொத்த மவ்லவிகள், உலமாக்கள், ஷேக்குகள், ஸலஃபிகள் குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளை நஞ்சென வெறுக்கும் இரகசியம்! அபூ அப்தில்லாஹ் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, மனிதக் கருத்துக்களை முற்றிலுமாக நீக்கி குர்ஆன் ஆதாரபூர்வ மான ஹதீஃத்கள் மட்டுமே எடுத்து வைக்கும் இக்கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு நேர்வழியை அறிந்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த மவ்லவிகளும், அவர்களது பக்தகோடிகளும் ஏன் மக்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதை மிகமிகக் கடுமையாகத் தடுக்கிறார்கள் என்ற இரகசியத்தை இங்கு அம்பலப்படுத்தியுள் […]

அபூ அப்தில்லாஹ் இறைவனல்லாத உயிருள்ளவை, உயிரற்றவை மனிதன் உட்பட அனைத்தும் படைக்கப்பட்டவையே! குறையுள்ளவையே! ஒரு நேரத்தில் ஆணி லிருந்து வெளிப்படும் இந்திரியத் துளியிலிருக்கும் கோடிக்கணக்கான அணுவைப் போன்ற ஒன்றிலிருந்து இறைவனால் படைக்கப்பட்டவன்தான் மனிதன். இவ்வுலகில் சோதனைக்காகப் படைக் கப்பட்டுள்ளான். அவனுக்குக் கொடுக்கப்பட் டுள்ள அழிந்துபடும் இவ்வுலக வாழ்க்கை மிகமிக அற்பமானது. நிரந்தரமான மறு உலக வாழ்க்கை யோடு ஒப்பிடும் போது சில மணித் துளிகள் அல்ல, சில நிமிடங்கள் அல்ல, சில வினாடிகள் கூட தேறாது. மனிதனுக்குக் […]

அபூ அப்தில்லாஹ் அல்லாஹ் கூறுகிறான்: “”…. அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள்; பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாய்த் திரியாதீர்கள்”. (2:60) “”…. ஏனெனில், குழப்பம் உண்டாக்குவது கொலையிலும் கொடியது….” (2:191) குழப்பம் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் உரிய தென ஆகும் வரை அவர்களுடன் போராடுங்கள்…  (2:193)

இப்னு ஹத்தாது அந்நஜாத் 1986 ஏப்ரலில் ஆரம்பித்ததிலிருந்து மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என பெருமை பேசும் மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அவர்களைப் பற்றிய விமர்சனங்களே அந்நஜாத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுவருகின்றன. கடந்த 27 வருடங்களாக இந்நிலையே நீடித்து வருவதால் அந்நஜாத் வாசகர்களில் சிலர் விரக்தியுற்று, எப்போது பார்த்தாலும் ஒரே புரோகிதர், இடைத்தரகர் என்று முஸ்லிம்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மவ்லவிகளை மிகக் கடுமையாக விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கி றீர்களே! மார்க்கத்தில் சொல்வதற்கு வேறு விஷயங்களே […]

அபூ அப்தில்லாஹ் அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நட்டத்தில் இருக்கிறான்; ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற் செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொரு வர் அறிவுரைக் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (103:1-3)

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!  ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

விமர்சனம்: அந்நஜாத் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக (கால் நூற்றாண்டு) சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுகிறது. ஆயினும் இது நாள் வரைக்கும் அதன் இலக்கை அடைய முடியவில்லை. எனவே தான் ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இயக்கங்கள், சங்கங்கள், கழகங்கள் என்ற பெயர்களில் பிளவுபட்டுக் கிடக்கிறோம். உதாரணத்திற்கு பிறை விஷயத்தில் 1. கணினி கணக்கீடு அடிப்படையிலும் 2. சர்வதேச அடிப்படையிலும் 3. நேரடியாக (Naked eye) பார்த்து

அபூ அப்தில்லாஹ் குர்ஆன், ஹதீஃதில் அணுவளவும் ஆதாரமில்லாமல் தங்களைத் தாங்களே மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க விற்பன்னர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக தம்பட்டம் அடிப்பவர்கள், இந்த வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடு கெட்டவர்கள், அதிலும் குறிப்பாக மற்ற மதங்களின் குருமார்களை விட கேடுகெட்டவர்கள் என்பதற்கு வாழ்வியல் வழிகாட்டி இறுதி நெறிநூல் அல்குர்ஆனிலிருந்தே பல வசனங்களை எடுத்துக்காட்டி 1984லிலிருந்து நிலைநாட்டி வருகிறோம். பெருங்கொண்ட முஸ்லிம்களால் எமது இந்தக் கூற்றை […]

இதுதான் புரோகிதம்! அல்லாஹ் அன்றே இட்ட ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் செயல்பட முடியாது என்பதற்குத் தெள்ளத் தெளிவான, பல நூல்களில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்றை அந்நஜாத் 93 மார்ச் இதழ் பக்கம் 38-ல் அரபி மூலத்துடன் வெளியிட்டிருந்தோம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூற வழியில்லாமல் ஹதீஸை திரித்து எழுதிவிட்டு, நாம் ஒரு முடிவை முன்னரே எடுத்து கொண்டு அதற்கேற்ப ஹதீஸின் தமிழாக்கத்தை வளைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். […]

  மார்ச் இதழ் தொடர்: 3 மதகுருமார்களின் பித்தலாட்டம்! அல்குர்ஆன் 39:9, 58:11, 35:19,20,21,22,28 இறைவாக்குகளை ஓதிக்காட்டி (படித்துக் காட்டி அல்ல) தங்களுக்கு உயர் அந்தஸ்து இருப்பதாகப் பிதற்றுவார்கள் மதகுருமார்கள். ஆனால் இந்த இறைவாக்குகள் அனைத்தும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்க அறிஞர்களாக ஆகவேண்டும் என ஆர்வமூட்டுகின்றனவே அல்லாமல் ஒன்றுபட்ட சமுதாயத்தை ஆலிம் அவாம் எனக் கூறுபோட்டு, இந்த மதகுருமார்கள் அது கொண்டு வயிறு வளர்க்க அனுமதிக்கவில்லை.

இப்னு ஹத்தாது                            தொடர்: 7   நேர்வழி நடக்க அல்குர்ஆன் மட்டும் போதும், நபியின் நடைமுறைகளைச் சொல்லும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்போரும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி, ரசூல் வரமுடியும் என்ற நம்பிக்கை உடையோரும் நேர் வழியை தவர விட்டு, பல கோணல் வழிகளில் சென்று நரகிற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.

M.S. கமாலுத்தீன் புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே! அபூ அப்தில்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் அவற்றிலுள்ள வற்றையும், ஜின் மனிதப் படைப்புகளைச் சோதனைக்காகப் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். இந்தப் பேருண்மைகளை அந்த இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் 1:1-7, 62:14, 67:1-3, 51:55-58, 8:26, 16:72, 30:40, 40:64, 22:28. 20:132, 6:151, 17:31, 34:24, 35:3, 67:21, 29:60, 5:114, 2:60 போன்ற எண்ணற்ற இறை வாக்குகளை நேரடியாகப் […]

  அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட அறிவாற்றல் மிக்கவர்களா மவ்லவி புரோகிதர்கள்? மனிதனைப் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ், மனிதனின் இவ்வுலக வாழ்க்கை நெறியை, பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி மூலம் கற்றுக் கொடுத்தான். இறைத் தூதர்கள் அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். அவற்றில் இறைத்தூதர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளைப் புகுத்தவில்லை. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.