1992 மார்ச்

                    K.M.H. அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான். அந்த வசனம் வருமாறு: (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காகவும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிக்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.)  (9:60)