1996 பிப்ரவரி

விமர்சனம்: அபூ அப்துல்லாஹ்வும், பி.ஜே.யும் தங்கள் சொந்த ஊகங்களாலும், வாதங்களாலும் தான் மிர்ஸா குலாமை நபி இல்லை என்று சொல்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் எதுவும் அவர்கள் சொல்வதில்லை என இங்கு சில காதியானிகள் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லையா? தெளிவுபடுத்தவும்.மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்? அவர்களுடைய போலி முகத்திரையை கொஞ்சம் கிழித்துக் காட்டுங்களேன். அவர்களுடன் அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தியதில் தாங்கள் பெற்ற படிப்பினை என்ன? […]

ஐயம்: நானும் எனது நண்பனும் இங்கே அடுத்தடுத்த வீட்டில் வேலை செய்து வருகிறோம். என் நண்பனுடன் எனது அரபிக்கு ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் எனக்கு எனது நண்பனுடன் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் இருவரும் அரபிக்குத் தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்தபோது அரபி பார்த்து விட்டார். இனிமேல் நாங்கள் கதைக்க மாட்டோம் என எங்கள் இருவரிடமும் குர்ஆனைத் தொட்டு சத்தியம் செய்யச் சொன்னார். நாங்களும் கதைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டோம். […]

ஐயம்: நான் மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன்; மாற்றுமத பெண்ணை திருமணம் செய்யலாமா? அந்தப் பெண் இஸ்லாத்திற்கு வர தயாராக இருந்தும் எனது வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள். இந்நிலையில் நான் என்ன செய்வது? முஜாஹிதீன், தம்மாம்.

  21-ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சியாக இருப்பது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் செய்தித்தாள்கள் மூலம் அறியும் அவலங்களாகும்.

 அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மிகவும் முக்கியமான ரமழானுடைய மாத மாகிய லைலத்துல் கத்துருடைய மாதம் மிக, மிக அருகில் வந்துவிட்டது. போன வருடம் இரண்டு நாட்கள் விடுபட்டது போல் இவ்வருடமும் ஆகிவிடக் கூடாது.ரமழான் வருவது கியாமத் நாளைப் போல் இரகசியமாக இல்லை. வேறு தேதிகளை கணிப்பது போல் ரமழானின் முதல் தேதியை முன் கூட்டியே சரியாக கணிக்க முடியும். அதற்காகத்தான் அல்லாஹு தாலா சூரியனையும், சந்திரனையும் நமக்காக வசப்படுத்தி தந்துள்ளான். நமது உலக காரியங்கள் எல்லாம் சந்திரனின் தேதிப்படி […]