மர்ஹூம் (ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது. ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?”
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் மவ்லவி P.M.S.காசிமிய்யி, மன்யகரடிக்குளி, ஸ்ரீலங்கா வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக் கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: சவூதி அரேபியாவில் பெண்கள் கண்களைத் தவிர பிற பாகங்கள் அனைத்தையும் துணியினால் மறைத்து ‘ஹிஜாப்’ முறையை பேணி வருகிறார்கள். “முகத்தையும், கைகளையும் மறைக்க தேவையில்லை” அவ்வாறு மறைப்பது கண்டிப்பாக ‘பித்அத்து’தான் (அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள்) என்று தவ்ஹீது சகோதரர்கள் சிலர் வாதிடுகின்றனர்.இது சரியா? விளக்கம் கோருகின்றேன்.
A.H. நஸீர் அகமது, குன்னூர். அல்லாஹ் ஜல்லஷானஹுதஆலாவுடைய மாபெரும் கிருபையாக உள்ளது, பல முறை பல நபிமார்கள் மூலம் ஷரீஅத்துடைய சட்ட திட்டங்களை கொடுத்தும், வேதத்தைக் கொடுத்தும் அருள் செய்தான். ஆனால், ஷைத்தான் அவன் சூழ்ச்சியில் மனிதர்களை ஆட்டிப் படைத்து, மாசற்ற தூய்மையான முறையில் அல்லாஹ் கொடுத்த மார்க்க ஞானத்தை, தீனின் உண்மையை கலங்கப்படுத்தி பலவகையாக மனிதர்களை பல பிரிவினர்களாகப் பிரித்து, பல கோளாறுகளை உண்டாக்கி, பல இன்னல்களை மனிதர்களை சந்திக்க செய்து அல்லாஹ்வும் அவன் […]
மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார் நாங்கள் , எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
K.M.H. நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 1 1/4 லட்சம் நபிமார்கள், செய்து வந்த தூய பணியான அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. சுமார் 1 1/4லட்சம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும். நிலையில் அவர்களைத தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள்.
சகோதரர் அ. அப்துல் அஜீஸ் அவர்கள் 30-11-1989ல் தினமணி நாளிதழுக்கு எழுதிய கடிதம் அந்த நாளிதழில் இடம் பெறவில்லை. எனவே அதனை இங்கு இடம் பெற செய்கிறோம்.
விமர்சனம்: (sep.’96-26-27) கிணறு, குளம் போன்றவற்றில் “குளிப்பு கடமையானவர்” குளிக்கலாம் என்று கூறியுள்ளீர். அந்த ஹதீஸ் தண்ணீரின் தன்மையைப் பற்றித்தானே கூறியுள்ளது.ஏனெனறால்,
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-8 அடுத்து 3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கணப்படி ஆராய்வோம்: எந்த மொழியாக இருந்தாலும் இலக்கண அடிப்படையில் ஒரு வாக்கியம் முற்றுப் பெற எழுவாய், பயனிலை இன்றியமையாததாகும். எனவே நாம் இப்போது 3:7 வசனத்தை எழுவாய் பயனிலை தெரியும் நிலையில் பிரித்து எழுதுவோம்.
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மிகவும் முக்கியமான ரமழானுடைய மாத மாகிய லைலத்துல் கத்துருடைய மாதம் மிக, மிக அருகில் வந்துவிட்டது. போன வருடம் இரண்டு நாட்கள் விடுபட்டது போல் இவ்வருடமும் ஆகிவிடக் கூடாது.ரமழான் வருவது கியாமத் நாளைப் போல் இரகசியமாக இல்லை. வேறு தேதிகளை கணிப்பது போல் ரமழானின் முதல் தேதியை முன் கூட்டியே சரியாக கணிக்க முடியும். அதற்காகத்தான் அல்லாஹு தாலா சூரியனையும், சந்திரனையும் நமக்காக வசப்படுத்தி தந்துள்ளான். நமது உலக காரியங்கள் எல்லாம் சந்திரனின் தேதிப்படி […]
இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: ஆகஸ்ட் (1996) வெளிவந்த அந்நஜாத் இதழில் ஐயமும் தெளிவும் என்ற பகுதியில் அறவே ஆதாரம் கிடையாது என்று எழுதியிருந்தீர்கள். ஆனால், அதற்கு தக்க ஆதாரம் ஸஹீஹுல் புகாரி பாகம்-1, மூலம் தமிழாக்கம், வெளியீடு நாள் 17.7.94 என்ற கிரந்தகத்தில் 48 மைல்களுக்கு அப்பால் அதாவது சுமார் 72 கி.மீ.க்கு மேல் கஸ்ர், மற்றும் 19 நாட்களுக்குள் தங்கியிருந்தால் கஸ்ர் தொழுகை கடமை என்று எழுதப்பட்டுள்ளது. கஸ்ர் என்ற பகுதியில் பக்கம் 818, […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: மாற்று மதத்தவர் என்னைப் பார்த்து காலையில் ஒவ்வொரு நாளும் “வணக்கம்” என்கிறார். நான் பதிலுக்கு “வணக்கம்” என்று கூறலாமா?
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : குளிப்பு கடமையானவர் – குளத்தில் – குளிக்கலாமா? எந்த முறையில் குளிக்க வேண்டும்? ஹதீஸ் ஆதாரத்துடன் விபரம் தேவை? குளத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும ஆடு – மாடுகள் (மிருகங்கள்) குளிக்கின்றன. மேற்கொண்டு பெண்கள் மாதவிடாய் துணிகள் உட்பட கழுவுகின்றனர். E. ஜாபர் அலி, கத்தார்.
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-7 விளக்கத்தை அறிவது என்றால் என்ன? தமிழ் அகராதியில் விளக்கங்காணுதல் என்பதற்கு ஆராய்ந்தறிதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. புரியாதிருந்த ஒருவிஷயத்தை சுய ஆய்வுக்குப் பிறகோ அல்லது பிறரது விளக்கத்திற்குப் பிறகோ புரிந்து கொள்ளுவதை “விளங்குதல்” அல்லது “விளக்கத்தை அறிதல்” என்று சொல்லப்படும். அறியாதிருந்த ஒருவிஷயத்தை அறிந்து கொள்ளுவதைக் கூட விளங்குதல் என்று சொல்லப்படுவதில்லை.
அபூபக்கர், பேட்டவாய்த்தலை ” எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?) திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறி பிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான்…”. (அல்குர்ஆன்’ 35:8)
நபித் தோழரின் வாழ்க்கையில் நடந்தவை….
எம்.பீ.ரபீக்அஹ்மத். நபிமொழிகள் மற்ற மனிதர்களின் மொழிகளை விட முற்றிலும் மாறபட்ட, வேறுபட்ட மொழிகளாக இருக்கின்றன. நபிமொழிகள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும், அது தனி மொழியாக, தனிமை வாய்ந்த தனிப்பட்ட மொழியாக பளிச்சிடுகின்றது.
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : என் அகவை 70. என் பள்ளிப் பருவத்திலிருந்தே பல இஸ்லாமியத் தோழர்களுடன் ஆத்மார்த்தமாகப் பழகி இருக்கிறேன். அரசுப் பணியிலிருந்த காலத்திலும், பணியின் நிமித்தம் நெல்லை பேட்டை தொடங்கி சென்னை இராயப்பேட்டை (அமீர் மகால்) வரை எனக்குத் தோழர்கள் இருந்தனர், இருக்கின்றனர். மனித நேயத்திற்கும் மத நல்லிணக்கத்துக்கும் அந்த இஸ்லாமிய நண்பர்கள் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றனர். அவர்களுடன் நான் மசூதித் தொழுகைக்குச் சென்றுள்ளேன். என் இஸ்லாமியத் தோழர்கள் பலர் எங்களுடன் ஆலயங்களுக்கு வந்து […]
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-6 3:7 வசனத்தின் சரியான பொருள்: அவன்தான் (இந்) நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (ஒரே பொருள்)வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும் எஞ்சியவை பல்பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடு, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத்தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் இவற்றின் உண்மைக் கருத்துக்களை (முடிவு-Final Verdict) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார். அறிவில் தேர்ந்தவர்களோ “நாங்கள் இவற்றில் […]