">

Dr.A.முஹம்மது அலி, Ph.D., நமது மூலம் மண்ணே! நிச்சயமாக அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 35:11) ஆதி மனிதனின் படைப்பு மண்ணிலிருந்து ஆரம்பமாகிறது. (அல்குர்ஆன் 32:7)

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: பெண் பிள்ளைகள் பெற்றெடுப்பதற்கு மனைவியை மட்டும் குறை கூறும் ஆண் ஆதிக்க வர்க்கத்தின் வாயடைக்க நல்லதொரு பதிலை தாருங்கள். பாத்திமா, திருவான்மியூர்.

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: ஹிந்துமத பண்டிகைகள் வந்தால் அவர்கள் பலவிதமான பலகாரங்கள் செய்து அதை அவர்களின் இணை தெய்வங்களின் முன்னால் வைத்து படைத்து, பின்னர் பூஜை செய்து, அதன் பின்னர் அந்த பலகாரங்களை எங்கள் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.இத்தகைய பலகாரங்களை ஏற்றுக் கொள்ளலாமா? அதை உண்ணலாமா? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும்.

 அபூ உ வைஸ் ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர்களே! என்று உண்மையை உணரப் போகிறீர்கள்!

மவ்லவிகளால் “தராவீஹ்’ என்று அறிமுகப் படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இரவில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை அனுமதித்ததும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களை அந்நஜாத், 1986-லிருந்து  மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது.   ரமழான் இரவுத் தொழுகையும்[PDF]

M. முஹம்மது இப்ராஹீம் பாகவி,                                         பேராசிரியர், மதரஸா காஷிபுல்  ஹுதா, சென்னை.             இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான். தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

   எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக!     எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக!     இறை மறுப்பான (காஃபி)ரான இம்மக்கள் மீது     (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (2:250)     இந்தப் பிரார்த்தனையை பனூ இஸ்ரவேலர்களில் தாலூத்துடைய மக்கள் ஜாலூத்தை எதிர்கொண்டு போர் புரிகையில் கேட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான்.     மூஸா(அலை) அவர்களின் மறைவுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் வீழ்கின்றனர். அவர்களை நேர்வழிப் படுத்திச் செல்ல பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான். நேர்வழி செல்பவர்களுக்கும் வழிகேட்டிலிருப்பவர்களுக்குமிடையில் […]

அபூஅஹ்மத். பொட்டல் புதூர். (கேம்ப் K.S.A) முகல்லிது முல்லாக்கள் இட்டுக்கட்டப்பட்ட-பலவீனமான செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் சுய சிந்தனை இல்லாமல் அவைகளை நபிமொழி என்று நம்பியும் ஆதாரப்புர்வமான நபிவழிச் செய்திகளுக்கு அர்த்தம் என்ற பெயரில் பல அனாத்தங்களைச் சொல்லியும் மத்ஹபை நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றி வந்தார்கள்! வருகிறார்கள்!!

இஸ்லாமிய இறை நம்பிக்கை!  இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க நெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம். இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் […]

அபூ ஃபாத்திமா     அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்( மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க) கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின் வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை)  அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.”  (அல்குர்ஆன் 42:21)

பிரார்த்தனை (துஆ): (எங்களிறைவனே! உனது ஆணைகளை நாங்கள் செவி மடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே (பாவ) மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீள்வதும் உன்னிடமே.   (அல்குர்ஆன் 2:285) (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம் “ஓசை தரும் கருப்பான மண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகிறேன்” என்றும், (15: 28) (நபியே! நினைவுகூறுவீராக!) நிச்சயமான நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; (38:71) “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, […]

M. நிஃமத்துல்லாஹ், பூச்சிக் காடு.  “(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும்  கட்டளையிட்டிருக்கிறான்.(17 :23)

1.முஸ்லிமை காபிஃர் என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை 2.இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அனுமதி இல்லை 3.ஏன் நீங்கள் அனைத்து ஆலிம்களையும் வசைபாடுகிறீர்கள்?

எம்.பி.ரபீக் அஹ்மத்     உலகில் பிரபலமாக இருக்கும் மதங்கள் ஐந்து.     1.கிறிஸ்துவ மதம் 2. இஸ்லாமிய மார்க்கம் 3.யூத மதம் 4. இந்து மதம் 5. புத்த மதம்

பிரிவினையை உண்டாக்காதீர்கள் என இறைவன் குர்ஆனில் கூறுவதைக் கண்டும் நீர் ஏன் “ஜாம அத் அல் முஸ்லிமீன்” என்ற புதிய பிரிவை உண்டாக்கி விட்டீர். உங்கள் ஊரில் முஸ்லிம்கள் இல்லையா? உங்களுக்கு ஜமாஅத் இல்லையா? அங்கே தலைவர் இல்லையா? [PDF]

 அபூயாசிர்,உடன்குடி அறிவுக்குப் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் ஆகும். ஆயினும் இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

மதங்களாலேயே நஷ்டம்! நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் […]

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் பகலில் நோன்பு நோற்பது கடமையாகவும், இரவில் நின்று வணங்குவது ஏற்றம் தரும் செயலாகவும் இருக்கிறது. நன்மைதரும் செயல்கள் என்றால் நிச்சயமாக அச்செயல்கள் அல் அஹ்ஜாப் 33:21, 36 இரு இறைவாக்குகளில் குறிப்பிட்டிருப்பது போல் கண்டிப்பாக அவை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களால் நடை முறைப்படுத்திக் காட்டித் தந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும்.

இறை மறையின் குறையற்ற பிறை![PDF]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-10 அவர்கள் கூறுகிறார்கள்: “இபாததுல் வலீ” என்ற அரபி பதத்திற்கு இறைநேசரை வணங்குதல், இறைநேசர் வணங்குதல் என்று இருபொருள் எடுக்கலாம். தமிழ் மொழியில் வேற்றுமை உருபு (ஜகாரம்) பளிச்சென்று வெளியில் தெரிவதால் எந்தக் குழப்பமும் இல்லை. நேசர், நேசர்+ஐ= நேசரை என்று தமிழ் மொழி வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. அரபி மொழியில் இந்த தெளிவு இல்லை” என்று அவர்கள் எழுதி இருப்பதும் இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.