மறுபதிப்பு : செப்டம்பர் 1986 மவ்லவி பீ.ஜே. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது(ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் “பாஅத்’ என்னும் பரிந்துரை செய்பவர்களாகவும், “மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாக வும்அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.
ஆயிரம் மாதங்களைவிட சிறப்புப் பெற்ற ஒரு நாளையுடைய ரமழான் மாதம் நம்மை விட்டுக் கடந்து செல்கிறது. மனித குலத்திற்கே இறுதி வழிகாட்டல் நெறி நூலான அல்குர்ஆன் இந்த ரமழான் மாதத்தில் தான் குறிப்பாக ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய கத்ருடைய நாளில்தான் முதன்முதலாக வஹி மூலம் இறங்கியது. இந்த குர்ஆன் மனித குலத்திற்கு முழுமையான வழகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், நன்மை எது? தீமை எது? எனத் தெளிவாகப் பிரித்தறிவிப்பதுமாகவும், இருக்கிறது என்பதை 2:185 இறைவாக்கு உறுதி […]
தொடர் : 38 அபூ அப்திர் ரஹ்மான் “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்”
ஐயம் : நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று மிஸ்ரில் உள்ளதாக குறிப்பிட்டு, அதனது ஜெராக்ஸ் காப்பி ஒரு நூலில் காணப்பட்டது. இது உண்மையான செய்திதானா?
புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்., இறைவனால் நேசிக்கப்படும் நேசர்களே இறைநேசர்களாவர்! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்புக்கு உகந்தவர்கள் யார் என்பது இறுதித் தீர்ப்பு நாளில் அன்றோ தெரியும்! இவர், இவர் தாம் இறைநேசச் செல்வர்கள் என்னும் பட்டியலை இறுதி தீர்ப்பு நாளன்று தானே அல்லாஹ் வெளியிடுவான்.
K.M.H. அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான். அந்த வசனம் வருமாறு: (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காகவும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிக்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.) (9:60)
ஐயம் : நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று மிஸ்ரில் உள்ளதாகக் குறிப்பிட்டு, அதனது ஜெராக்ஸ் காப்பி ஒரு நூலில் காணப்பட்டது. இது உண்மையான செய்திதானா? A. ஜலாலுத்தீன், துபை.
A. கமால் உசேன் காலங்காலமாக திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. விருந்துகள் பரி மாறப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் திருமணச் சடங்கு முறைகள் விருந்து முறைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன. தமிழகத்திலேயே பல ஊர்களில் வெவ்வேறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் தவ்ஹீது முழக்கங்களினால், இஸ்லாமிய நபிவழித் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இன்னும் அனாச்சாரச் சீரழிவுகளில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம்களையும் கண்டு கொண்டு தான் இருக்க வேண்டிய நிலை.
குர்ஆன் ஹதீஸில் அதாவது மார்க்கத்தில் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்க அந்நஜாத் எப்போது பார்த்தாலும் இடைத்தரகர்கள் என்றும் புரோகிதர்கள் என்றும், மதகுருமார்கள் என்றும், பூசாரிகள் என்றும் மவ்லவிகளையும், ஆலிம்களையும், மார்க்க அறிஞர்களையும் இழித்துப் பழித்து விமர்சிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.