அல்லாஹ் தேவையற்றவன்!

in 2014 ஜூன்

அல்லாஹ் தேவையற்றவன்!
(அல்லாஹு ஸ்ஸமத் )
முஹிப்புல் இஸ்லாம்
இறை ஒருமையின் தனித்துவம் :
படைத்தவன் ஏகன் அல்லாஹ், படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன், வேறுபட்டவன்.
அல்லாஹ் ஒருவன் எனத் துவங்கும் அல்லாஹ்வின் ஒருமை. ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கு நிகராய், ஒப்பாய், இணையாய் எவனும், எதுவும் இல்லை என்று நிறைவு பெறச் செய்திருப்பது (காண்க.அல்குர்ஆன்:112:1,4) அல்லாஹ்வின் அருளுரை இதை மானுடத்துக்குக் கற்றுத் தருகிறது.
ஏற்றோர் இவ்வத்தியாயத்தைக் கசடறக் கற்பதும் அதன் பிரதிபலிப்பாய் வாழ்வை அமைத்துக் கொள்வதும் கட்டாயக்கடமை. கோடிட்டுக் கொள்க. வினாடியும் மறந்திட லாகாது.

அல்இஹ்லாஸ் துவக்கம் அல்லாஹ்வை ஒருமையாகக் காட்டுவதோடு நின்றுவிட வில்லை. அல்லாஹ்வோடு தொடர்புடைய எதுவாயிருப்பினும் ஒருமையில் தனித் தரத்தோடு நிலைநிறுத்தப் பட்டிருப்பதைத் தெளிவுப்படுத்துகிறது. எவரிடத்தும் எதனிடத்தும்.

அல்லாஹ் எத்தேவையும் இல்லாதவன்; அனை வரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
அல்லாஹுஸ்ஸமத் (அல்குர்ஆன் : 112: 2)

மனிதக் கற்பனையில் உருவான போலித் தெய்வங்கள் தேவைகளைச் சார்ந்தே சித்தரிக் கப்பட்டுள்ளன.
கற்பனைக் கடவுள்கள் :
தெய்வத்துக்குத் தெய்வம், கடவுளுக்குக் கடவுள் மாறுபட்டத் தேவைகள் திணிக்கப்பட் டுள்ளன. சர்வதேச அளவில் அறிஞர்கள், இலக்கியவாதிகள், மதவாதிகள், இறை மறுப் பாளர்கள் என்று இதிலிருந்து எவரும் விடுபட வில்லை.

கடவுள்கள் பெயரால் நன்மை, புண்ணியம், வணக்கம், வழிபாடு என உலா வரும் வழிகேடு கள், மாபாதகங்கள், ஒழுக்கக் கேடுகள் அனைத் துக்கும் காரணகர்த்தாக்கள் இவர்களே.

சிலவற்றில் மனிதக் கற்பனை மிதமாய்ச் செல்கிறது. பலவற்றில் எல்லைத் தாண்டி விடுகிறது.
மனிதக் கற்பனையில் தெய்வங்கள் வேகத் தடையற்ற அசுர வேகத்தில் பாய்ந்து விடுகின் றன. தமிழ் இலக்கியங்களில் மண்டிக் கிடக்கும் சான்றுகள் இதற்குக் சாட்சிகளாய் காட்சியளிக் கின்றன.
மனிதர்கள் கற்பனைச் செய்த தெய்வக் கற்பிதங்களை, ஜீவியல்புக் கூறுகள்  (Super Natural Elements) என இலக்கியங்கள் குறித்துக் காட்டு கின்றன. இலக்கியங்களில் இடம் பெறும் ஜீவியற்கைக் கூறுகள் கற்பனையின் பாதிப்புக்கு உட்பட்டவை என்ற உண்மைக்கு ஒப்புதல் அளித்துள்ள முனைவர் க.காந்தி, என்றாலும் அவை முழுவதும் கற்பனையானவை என்று கூறமுடியாது என்கிறார். (நூல் : தமிழர் பழக்க வழக்கங்களும், பக்: 259, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, மூன்றாம் பதிப்பு 2008)
“முழுவதும் கற்பனை அல்ல’ என்பதன் அளவு கோல் என்ன?

கற்பனைப் பெருங்கடலில் எங்கோ, எப் போதோ, யாரோ சொட்டும் உண்மை துளியிலும் துளியே! கற்பனைப் பெருங்கடலில் சொட்டும் துளித் துளியான உண்மை இல்லாமல் அடித்துச் செல்லப்படுவதும் இயல்பானது தானே!

மண்டிக் கொண்டிருக்கும் மாபாதகங்கள் :
மற்றவற்றைக் கூர்ந்து கவனித்து அணு அணு வாய் விமர்சிக்கும் ஆய்வாளர்கள், திறனாய் வாளர்கள், இலக்கியவாதிகள், இலக்கியங்கள் வலிந்து திணிக்கும் கற்பனைக் கடவுள்களில் மண்டிக் கிடக்கும் மாபாதகங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது ஏனோ?

கற்பனைத் தெய்வங்கள் கடவுள் பெயரால் கற்பிக்கப்படும் மாபாதகங்களுக்கு நியாயம் கற்பிப்பது ஏன்? அப்படிக் கற்பிக்கப்படும் நியாயங்களால் மானுடம் ரணமாகிக் கொண்டி ருக்கிறதே! சிந்திக்க வேண்டாமா? கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா?

அறியாமைக் காலத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள் விளைவித்த அநியாயங்களுக்கு இந்த அறிவியல் யுகத்தில் கற்பிக்கப்படும் நியாயங்கள் கருத்தியல் அராஜகமல்லவா?

மனிதக் கற்பனை உருவாக்கும் தெய்வங் களில் மாபாதகங்கள், வழிகேடுகள் மிகைத்துள் ளன. கொள்ளத்தக்கவை அரிதிலும் அரிதா னவை. ஒதுக்கித் தள்ள வேண்டிய குப்பைகளே மிகுதியானவை. அரிதானவற்றை மிகுதியா னவை காணாமல் கரைத்து விடுகின்றன. தள்ளத் தக்கவை மிகுதியாகும்போது, மிக குறைந்த அளவு கொள்ளத்தக்கவை இயல்பாக மதிப்பிழந்து செல்லாக் காசாகி விடுகின்றன.

இறையின் தனித்த இயல்பு :
இந்திய தேச பெயரளவு ஓர் இறைநெறி, வாழ்வியல் நடைமுறைகளால் தரை மட்டமாக் கப்பட்டு வருகின்றன. அஸ்தஃபிருல்லாஹ். அல்லாஹ் காத்தருள்வானாக.

இயற்கை வழிபாட்டின் அடிப்படையில் தோன்றிய இறை வழிபாடு.
காலப்போக்கில் பல தெய்வக் கோட்பாடு கள் வளர்ந்த நிலையில் சிறு தெய்வம், பெரும் தெய்வம் என்ற பாகுபாடும் தோன்றியது. இத னைச் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது,
என்று பல தெய்வ ஆராதனையாளர் முனைவர் க.காந்தி எடுத்துக் காட்டுவதை நோக்குக : மேற்படி நூல் : பக் : 263)

படைப்பினங்களை விட்டு எல்லா நிலை களிலும் உயர்ந்து தனித்த இயல்போடு தனித் திலங்கும் ஒப்பற்ற இறைவனைக் காட்டுவது இஸ்லாமிய ஓர் இறைநெறியின் தனித்துவம்.

சர்வதேச அளவிலும், குறிப்பாக இந்தியாவிலும் அங்கொன்றும் இங்கொன்றும், எப் போதோ யாரோ காட்டும் சரியான இறை ஒருமைக் கருத்துக்கள், இஸ்லாம் இந்த மண் ணில் நிலைப் பெற்றிருந்ததைத் தெளிவாய் படம் பிடித்துக் காட்டுகிறது. காலப் போக்கில் அது பன்மை மயமாக்கப்பட்டு விட்டது.

ஒருமையைத் தனித்த இயல்பாக்கிக் கொண்ட அல்லாஹ் மட்டுமே நிறைவுகளின் ஒரே உரிமையாளன். அதனால் அல்லாஹ் மட்டுமே ஒரே இறைவனாய்த் திகழ்கிறான். இறை ஒருமையை அல்லாஹ் மட்டுமே துல்லியமாய் காட்ட முடியும்.

அறுதியிட்டு உறுதி செய்தல்:
அல்லாஹ்வின் ஒருமையை அறுதியிட்டு உறுதி செய்யும் அசைக்க முடியாத அத்தாட்சி யாக அல்லாஹ் அல்குர்ஆனை அருளச் செய் துள்ளான். இணைகளோடு படைக்கப்பட்ட படைப்பினங்களின் மாறாதத் தன்மை இருமை, பல்கிப் பெருகும் பன்மை.

பன்மையைத் தன்மையாகக் கொண்ட படைப்பினங்கள் தேவைகளைச் சார்ந்தே வாழ வேண்டிய நிர்பந்தம். தேவையைச் சாராத எந்தப் படைப்பினமும் எங்குமே இல்லை.

முற்றிலும் தேவைகள் சார்ந்து பல்கிப் பெருகும் பன்மை மயமாகுதல் மாறாதத் தன்மை யாக இருந்திடும் போது, ஒருமையின் தனித்த இயல்பினன்தான் ஒரே இறைவன், அல்லாஹ் தேவை உடையோன் அல்லன்.
தேவை உள்ளவன் உண்மை இறைவனாய் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அப்படி யிருக்க வேண்டும் என எவரும், எதுவும் உண்மை இறைவனை நிர்பந்திக்க முடியாது. அப்படி இருப்பதாய் மனிதக் கற்பனைக் காட் டும் எதுவும், எவரும் திண்ணமாய்க் கடவுளும் அல்ல, தெய்வங்களும் அல்ல. கடவுளாய் தெய் வங்களாய் இருக்கும் அருகதை அதில் எவர்க் கும், எதற்கும் இல்லை. இல்லை இல்லவே இல்லை என அறுதியிட்டு உறுதி செய்துள்ளான் ஒரே இறைவன் அல்லாஹ்.

ஒரே இறைவன் அல்லாஹ் மட்டும்தான் ஒருமையின் தனித்த இயல்பினன். ஒருமையா ளன் உண்மை இறைவன், அல்லாஹ் படைப் பினங்கள் அனைத்தை விட்டும் உயர்ந்து தனித்திலங்குகிறான். தன்னிகரற்றத் தனித் தன்மையாளன் அல்லாஹ், தேவைகள் தேவை யற்றவன். அல்லாஹ்வைத் தேவையற்றவன் (னாய்) ஒளிரச் செய்கிறது அல்லாஹு ஸ்ஸமத். (இது அல்லாஹ் வகுத்துத் தந்த இறை ஒருமை யின் இறையிலக்கணம்.

மனிதக் கற்பனை உற்பத்திச் செய்யும் பொய் தெய்வங்கள் உண்மை இறைவனுக்குக் இம்மியும் பொருந்தாதவை. அவை மனிதத் தன்மையின் அப்பட்டமான பிரதிபலிப்பு. மனி தத் தன்மை இறைமையை முறித்து விடும் கொடிய விஷம்.

மானுடத்துக்குத் தலைகுனிவு:
அவரவர் கற்பனையில் தோன்றிய தேவை களின் அதீதத் திணிப்பு, தெய்வங்களைத் திக்கித் திணறித் திக்கு முக்காடச் செய்கிறது. தெய்வத் தன்மை முற்றாக பறிமுதல் செய்யப்படுகிறது. தெய்வத் தன்மை வீழ்த்தப்படுகிறது. மனிதர் களை விட இழிந்தவைகளாய் தெய்வங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
மனித கற்பனைக் காட்டும் தெய்வங்களின் கேடு கெட்டத்தனம் தெய்வ அவமதிப்பு. அதன் பாதிப்பு மானுடத்துக்குத் தலைகுனிவு. நெறி பிறழ்ந்த மானுடத்தின் ஒழுக்க வீழ்ச்சி. உணர்க. பல தெய்வ ஆராதனையாளர்களுக்கு உணர்த்துக.

மனிதக் கற்பனைப் பிரசவித்த தெய்வங் களின் கேடுகெட்டத்தனம் கூடுதலாய் சிந்திக் கும் சில மனித சிந்தனைக்கும், கடும் விமர்சனங் களுக்கும் ஆளாகி வருகின்றன. கேலியாக, கிண்டலாக, இழிந்தக் கண்ணோட்டத்துடன் நாத்திகர்கள், தெய்வங்களை மறுப்பதற்கும் நிராகரிப்பதற்கும், கடுங் கண்டனக் கணைகள் தொடுப்பதற்கும் இதுவே பிராதனக் காரணம்.

மனிதக் கற்பனைக் கற்பித்த தெய்வங் களுக்கு நாத்திகர்கள் விமர்சனம் ஒரு தவிர்க்க இயலாத கண்டனமே! எங்கிருந்து வந்தாலும் உண்மை உண்மையே! இது உண்மையின் ஒரு பக்கம். இரு பக்க இணைவால்தான் நாணயம் செல்லுபடியாகும். ஆனால் அதன் மறுபக்கம் வேறொரு உண்மையைத் தகர்த்துக் கொண்டி ருப்பது சரிதானா? முறைதானா?

நாத்திகக் கற்பனை:
போலித் தெய்வங்களோடு ஏகனான உண்மை இறைவனையும் இணைத்து விமர்சிக் கும் நாத்திகர்களின் வெறித்தன அடாவடித்தன மும் கடுங்கண்டனத்திற்குரியதே! நாத்திகர் களுக்கும் அல்குர்ஆனிலிருந்து நாம் பயின்று ணர்ந்த உண்மைகளை எடுத்துக் காட்டுதல் கட்டாயக் கடமை; செய்திடுக.
எப்படி பல தெய்வ ஆராதனை மனிதக் கற்பனையோ, அதுபோல் அதற்குச் சற்றும் குறைவில்லாத மனிதக் கற்பனைத்தான் நாத்தி கம். உண்மை இறைவன் ஏகனை மறுப்பதும், நிராகரிப்பதும் நாத்திகக் கற்பனையின் உச்சம்.

போலித் தெய்வங்கள் பெயரால் உருவாக் கப்பட்டிருக்கும் மாபாதகங்களுக்குச் சற்றும் குறைவில்லாத மெகா மெகா மாபாதகங்களை நாத்திகம் விளைவித்து வருவதும் கண்கூடு. இதற்கு ஆதாரம் தேடி வேறெங்கும் அலைய வேண்டியதில்லை. தமிழகம் அதற்கோர் அசைக்க முடியாத ஆதாரம். இன்றளவும் நாத்தி கத்தின் மெகா பாதிப்புகளால் தமிழகம் அல்லல் பட்டு வருகிறது. அதனால்தான் தோன்றியதி லிருந்து அந்நஜாத் துணிவோடு நாத்திகத்தின் மெகா மாபாதகங்களை உடனுக்குடன் கடுங் கண்டனத்துக்கு உள்ளாக்கி வருவது காண்க. உந்துதல் பெறுக. கவனத்தில் கொள்க!

கற்பனைத் தெய்வங்கள் பெயரால் மானு டத்துக்கு மாபாதகங்களை விளைவித்து வரும் ஆத்திகர்கள் போல், கற்பனைத் தெய்வங்க ளோடு உண்மை ஒரே இறைவனைக் கற்பனை யாக மறுக்கும் நிராகரிக்கும் நாத்திகர்களும் மானுடத்திற்கு கேடு விளைவிப்பவர்களே!

இரு சாரார் விளைவிக்கும் கேடுகள் விகிதாச் சாரம் வேறுபடலாம். தாங்கிக் கொள்ள இய லாத இருபக்கக் கேடுகளால் மானுடம் தலைக் குனிந்து நிலை குலைந்து சீர் கெட்டு சீரழிந்து வருகிறது. இரண்டு கால் மிருகமாகி வருகிறது.

தேவைகளின் கொள்ளளவு, தாங்க முடியாத தொய்வடைந்த தெய்வங்கள் ஆத்திகர்கள் கற்பனை! அதைக் காரணமாக்கி உண்மை இறைவன் ஒருவனை மறுப்பதும், நிராகரிப் பதும் நாத்திகர்கள் கற்பனை. அதிலும் பெருத்த வேடிக்கையான வேதனை ஓரிறைவனை மறுக்கும் நாத்திகர்கள், எண்ணற்றத் தங்கள் தலைவர்களுக்குச் சிலைகள் வடித்து கடவுள் களாக்கி வரும் நாத்திக-மனிதக் கற்பனை.

எதிர்காலத்தில் மனிதக் கற்பனை ஈன்றெடுக் கும் தெய்வ வடிவங்கள், தன்மைகள், இறை மறுப்பின் போக்குகள் மாறுபடலாம். எல் லாமே கால வேறுபாடு காட்டும் கற்பனை அன்றி வேறல்ல. கட்டுக்கடங்காத கடவுள்கள் இவ்விரு சாரார் கற்பனை, உண்மை இறைத் தன்மையை பங்கப்படுத்தி வருவதை, மனிதக் கற்பனைக் கடவுள் திணிப்பு இறைத் தன்மையை பங்கப்படுத்தி வருவதை, கடவுள் தன்மையைப் பங்கப்படுத்துவதை நிரந்தரமாய்த் தடுக்க யாரால் முடியும்? உண்மை இறைவன் அல்லாஹ் ஒருவனால் நிச்சயம் முடியும்? எப்படி?
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: