ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை!

in 2014 ஜூலை,பொதுவானவை,ஜகாத்

சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை!
– அபூ அப்தில்லாஹ்

அல்குர்ஆன் கூறுகிறது :

“”…பொன்னையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை இறை வழியில் செலவிடாதோருக்கு நோவினை மிக்கத் தண்டனையை (தூதரே) நற்செய்தி கூறும்.”

அந்நாளில் (அவர்களின் செல்வத்தை) நரக நெருப்பில் காய்ச்சி, அதன் மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகு களிலும் சூடு போடப்படும். “”நீங்கள் உங்களுக் காகச் சேமித்து வைத்தது இதுதான். எனவே நீங்கள் சேமித்தவற்றைச் சுவையுங்கள்”  (அல்குர்ஆன் : 9:34,35)அந்த ஊராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை, அல்லாஹ் வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கருக்கும் “உரியவை’. மேலும், உங்களில் செல்வந்தர்களுக்குள்ளேயே செல்வம் சுற்றிக் கொண்டிராமல் இருப்பதற்காகவே ஆகும். தூதர் உங்களுக்குக் கொடுப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சய மாகத் தண்டிப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமை யானவன். (அல்குர்ஆன் : 59:7)

அவர்களுடைய செல்வத்தில் யாசிப்பவர் களுக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு (அல்குர்ஆன் 51:19) அவர்களுடைய பொருள் களில் யாசிப்போருக்கும், வறியோருக்கும் நிர்ணயிக்கப்பட்டப் பங்கு உண்டு. (குர்ஆன் 70:24,25) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்” (உங்கள் தேவை போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக.
(குர்ஆன் 2:219)

மேலும் ஜகாத் பற்றிக் கூறும் 2:43,83,110, 177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5,11,18,71, 17:29, 18:81, 19:13,31,55, 21:73, 22:31,78, 23:4, 37,56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 58:13, 73:20, 98:5 வசனங்களையும் கவனமெடுத்துப் படித்துப் பாருங்கள். இவற்றில் “தொழுகையை நிலைநிறுத்துங்கள், ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள்” என்று எத்தனை வசனங்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றன என்பதையும் ஆழ்ந்து சிந்தியுங்கள்.

அப்படிச் சிந்தித்தால் எவரொருவர் ஐங்கால தொழுகைகளைத் தினசரி தவறாமல் பேணி ஜமாஅத்துடன் தொழுது வருகிறாரோ அதாவது தொழுகையை நிலைநிறுத்துகிறாரோ அவரே ஜகாத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை அறிய முடியும். தொழுகையைப் பேணாதவர் உயிருக்குப் பயந்து ஜமாஅத்தையும், தொழுகையையும் பாழ்படுத்துகிறவர் ஜகாத் கொடுப்பதையும் தடுத்துப் பாழ்படுத்துவார் என்பதைத் திட்டமாக அறிய முடியும்.

ஒருவருக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. வரும் வருமானத்தைக் குறிப்பிட்ட நிசாபிற்கு அதிகமாக சேமித்து வைக்காமல் செலவழித்தும் விடுகிறார். அவர் மீது ஜகாத் கடமையாவதில்லை என்பதே 9:34, 35, 59:7 இறைவாக்குகள் நேரடியாகக் கூறும் உண்மை. வெளியில் செல்வோம் என்ற செல்வத்தை அப்படி வெளியே செல்லவிடாமல் தடுத்து வைத்திருப்பவர்கள், அப்படி ஒரு வருடம் தடுத்து வைத்துக் கொண்டால், அப்பொருளின் மீது ஜகாத் கடமையாகிறது.

அவ்வருடத்திற்குரிய ஜகாத்தைக் கணக் கிட்டுக் கொடுத்துவிட்டார். அடுத்த வருடத் திற்குள் அப்பொருளைச் செலவிட்டு வெளியே செல்ல விட்டுவிட்டார். இப்போது அப் பொருளுக்கு அவர் மீது ஜகாத் கடமை இல்லை. அதற்கு மாறாக அடுத்த வருடமும் அப்பொருளை வெளியே செல்லவிடாமல் தடுத்துச் சேமித்து வைத்திருந்தால் அவ்வருட மும் அப்பொருள் மீது அவருக்கு ஜகாத் கடமையாகிறது. இப்படி அப்பொருளை வெளியே செல்லவிடாமல் தடுத்துச் சேமித்து வைத்திருக் கும் காலமெல்லாம் அவர் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது கட்டாயக் கடமையாகும்.

பொன்னையும், வெள்ளியையும், கட்டிடங்களையும், ரொக்கத்தையும் குறிப்பிட்ட நிசாபிற்கு அதிகமாகச் சேமித்து வைத்துக் கொண்டு வருடாவருடம் ஜகாத் கொடுக்கத் தவறுகிறவர் நாளை மறுமையில் 9:35 குர்ஆன் வசனம் கூறும் கடுந் தண்டனையை அனுப விக்க வேண்டும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்து விட்டால் அப்பொருள் சுத்தமாகி விடும் மீண்டும் மீண்டும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுப்பது கடமை இல்லை என்பவர் மூளை வரண்ட மூடனாகவும், “”(தூதரே) அவர்களின் செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுப்பதன் மூலம் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவீராக….” என்ற 9:103 குர்ஆன் வசனத்தை 2:39 வசனம் கூறுவது போல நிராகரித்து குஃப்ரிலாகும் பெரும் பாவியாகவும் இருக்கிறார் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

இந்த 9:103 இறைவாக்கில் அல்லாஹ் நேரடி யாக ஜகாத் கொடுப்பவரை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துகிறது என்று கூறி இருக்கும் நிலையில் அதை நிராகரித்து ஜகாத் கொடுப்ப தன் மூலம் அப்பொருள் சுத்தமாகிவிடுகிறது. அதன்பின் அப்பொருளைச் சுத்தப்படுத்தத் தேவை இல்லை; அதனால் அதற்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார் ததஜ மத்ஹப் இமாம்(?).

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. அதற்கு முரணாக சந்திரன் மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று வலியுறுத்திச் சொல்லும் அறிவு சூன்யத்திடம் இப்படிப் பட்ட மூடத்தனமான ஃபத்வாவைத்தான் பெறமுடியும்.

“”தமது செல்வத்தின் ஜகாத்தைப் பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர் இறை நம்பிக்கையின் ருசியை சுவைத்துக் கொள்வார்” (அபூதாவூது 1349)

இந்த ஹதீஃதையும் நடுநிலையுடன், சுய சிந்தனையுடன் நேரடியாகப் படித்து அறிகிறவர் கொடுத்த பொருளுக்கே ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதை நேரடியாக விளங்க முடியும். ததஜ மவ்லவிகளின் தடு மாற்றம் இதுதான். அதாவது, இன்று நடை முறையில் இருக்கும் வருமானத்திற்கு வரி என்பது போல் ஜகாத்தையும் எண்ணிக் கொண்டார்கள். அதனால்தான் வருமானம்

வந்தவுடன் ஜகாத் கொடுத்துவிட வேண்டும். அதன் பின்னர் அதற்கு ஜகாத் கடமை இல்லை என்ற பிதற்றலாகும். ஜகாத் வருமானத்திற்குரிய வரி இல்லை. ஒருவருக்கு ஐந்து கோடி வருமானம் வந்து அந்த ஐந்து கோடியையும் செலவழித்துவிட்டால் அவர் மீது ஜகாத் கடமையே இல்லை. 9:34 குர்ஆன் வசனம் செலவழிக்காமல் சேமித்து வைக்கும் பொருள்களுக்கு அவற்றிற்குரிய ஜகாத் கொடுக்கவே கட்டளையிடுகிறது.

நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாத மக்களின் அத்தியாவசியத் தேவையான பயிரி டப்படும் உணவுப் பொருள்களுக்கு மட்டும் அறு வடையானவுடன் தானாக விளைந்தால் 10%, நீர் பாய்ச்சி விளைந்தால் 5% ஜகாத் கொடுக்க மார்க்கம் கட்டளையிடுகிறது.
(பார்க்க 6:141 புகாரீ 1483))

மற்றபடி தங்கம், வெள்ளி, ரொக்கம் மற்றும் வருமானத்தை நோக்கமாகக் கொண்டு முதலீடு செய்யப்படும் பலவகை வியாபாரங்கள், கட்டி டங்கள், நிலங்கள் இவை அனைத்தையும் வெளியே செல்ல விடாமல் தடுத்து சேமித்து வைத்திருக்கும் காலமெல்லாம் அவற்றிற்கு வருடா வருடம் தவறாமல் ஜகாத் கொடுத்து வருவது கட்டாயக் கடமையாகும்.

இதை வருடாவருடம் ஜகாத் கொடுத்த பொருளுக்கே கடமை என்று உமர்(ரழி) அவர்களும், ஒரு வருடம் பூர்த்தியானால் தான் சேமித்து வைக்கும் பொருள்களுக்கு ஜகாத் கடமை என்று அலீ(ரழி) அவர்களும் கூறுவது உறுதிப்படுத்துகிறது. ஆனால் உமர்(ரழி), அலீ (ரழி) இந்த இரண்டு பேரும் அவர்களின் சொந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். அதை ஆதாரமாக எடுக்க முடியாது என்று ததஜ மவ்லவிகள் அறிவீனமாகக் கூறி வருவது அவர் களின் சுய நலத்தையும், செல்வந்தர்கள் விட்டெறியும் அற்பக்காசையும் ஆசைப்பட்டுப் பிதற்றுவதையுமே அம்பலப்படுத்துகிறது.

உமர்(ரழி) நபி(ஸல்) அவர்களின் பெண் கொடுத்த மாமனார்; அலீ(ரழி) நபி(ஸல்) அவர் களின் மகளை முடித்த மருமகன். நிறைவு செய்யப்பட்ட இஸ்லாம் அறிமுகமான ஆரம்பக் காலக் கட்டத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் கூடவே இருந்து மார்க்கத்தைக் கற்ற வர்கள். சுவர்க்கத்து நன்மாராயம் பெற்றவர்கள்.

பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படக் காரணமான பத்ர், உஹது யுத்தங்களில் கலந்து கொண்டவர்கள். ஹிஜ்ரி 2லிருந்து 11 வரை, 10 ஆண்டுகளாக நபி(ஸல்) அவர்கள் எப்படி ஜகாத் வசூலித்தார்கள் என்று நேரடியாகப் பார்த்தவர்கள். நபி(ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பின்னர் ஆட்சியாளர்களாக (கலீஃபாக்கள்) இருந்து மக்களிடமிருந்து ஜகாத்தை வசூலித்து உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தவர்கள். இப்படி ஜகாத் பற்றி அனைத்தையும் முற்றிலுமாக அறிந்தவர்கள், சேமித்து வைக்கும் பொருள்களுக்கு வருடா வருடம் ஜகாத் கடமை, சேமித்து வைக்கும் பொருள்கள் ஒரு வருடம் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந் தால்தான் ஜகாத் கடமை என்ற அடிப்படை யில் நடைமுறைப்படுத்திக் காட்டியது இன்று வரை 1435 வருடங்களாக நடைமுறையில் இருப்பது தவறாம் – வழிகேடாம்.

2:159 குர்ஆன் வசனம் கூறுவது போல் இன்று இவர்களின் ஆய்வில் வெளிப்படுவதே நேர்வழியாம். இப்படிச் சுய விளக்கம் கொடுப் பவர்கள் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபத்தைப் பெறுவதோடு (2:161, 162) பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார் கள் என்று கூறும் 33:36 போன்ற குர்ஆன் வசனங்களையும் உணர முடியாமல் அவர்களின் உள்ளங்கள் ஹராமான வருமானம் காரணமாக கற்பாறைகளை விடக் கடினமாகி விட்டன என்பதையே உறுதிப்படுத்துகிறது.

கண்ணுக்குத் தென்படும் 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கூறுவதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் அவர்களின் சுயநலத்தையும், அற்ப உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டிருப்பதையும் அம்பலப்படுத்துகின்றன.

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நபி(ஸல்) அவர்களுடன் நேரடியாகப் பழகி, அவர்கள் எப்படி ஜகாத்தை வசூலித்தார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்த உமர்(ரழி), அலீ(ரழி) இரண்டு பிரபல்யமான கலீஃபாக்கள் கூறும் வருடா வருடம் ஜகாத் கொடுத்த பொருளுக்கே கொடுக்க வேண்டும், சேமித்து வைக்கப்படும் பொருளுக்கு ஒரு வருடம் பூர்த்தியானால்தான் ஜகாத் கடமையாகிறது என்று கூறுவதை ஆதாரப்பூர்வமான செய்தியாக  ததஜவினர் ஏற்கமாட்டார்களாம். அவை அந்த கலீஃபாக்களின் சொந்தக் கூற்றாம்.

அதே சமயம் 3-ம் பிறையை 1-ம் பிறையாக நிலைநாட்ட, நபி(ஸல்) அவர்களோடு நேரடியாகப் பழகியவர்களுமில்லை. ஏன்? நபி(ஸல்) அவர்களைப் பார்த்தவர்களுமில்லை; நபி தோழர்களில் சிலரைப் பார்த்த தாபியீன்களைச் சேர்ந்தவர்களுக்கு(ரழி) என்ற அடை மொழியை இட்டு, அவரது பக்தகோடிகள் அவர்களை நபிதோழர்களாக எண்ணி ஏமாற, நாட்டுப்புற அரபிகள் கூறும் செய்தி, மற்றும் வாகனக் கூட்டத்தார் செய்தி, சிரியா தேசத்துச் செய்தி இவற்றை ஆதாரபூர்வமான செய்தியாக முரட்டுப் பிடிவாதமாகத் தொடர்ந்து கூறி வருவது எதை உணர்த்துகிறது?

ஆம்! 7:146 குர்ஆன் வசனம் கூறுவது போல், அவர்களின் மவ்லவி-ஆலிம் என்ற ஆணவம்-பெருமை, அல்லாஹ்வாலேயே குர்ஆன் வசனங்களை விட்டும் தூரப்படுத்தப்படுகிறார் கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார் கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்பார்கள். அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக் களை நிராகரித்து குஃப்ரிலாவதுதான் அவர் களின் கொள்கை என்பதையே குன்றிலிட்டத் தீபமாக-உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகிறது. நடுநிலையுடன் சிந்தியுங்கள்!

சகோதர சகோதரிகளே, செல்வந்தர்களே! வீண் பெருமையடிக்கும் இந்த மவ்லவிகளை நம்பி நீங்கள் மோசம் போகாதீர்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு அம்மவ்லவி களைச் சபிக்கும் நிலைக்கு ஆளாகாதீர்கள். (பார்க்க: 7:35-41,146, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45) உங்களை வழிகெடுத்து நரகில் தள்ள முற்படும் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளை முற்றிலும் நிராகரித்து, புறக்கணித்து, 3:103 குர்ஆன் வசனம் கட்டளையிடுவது போல் ஒரே ஜமாஅத்தாக நேரடியாகக் குர்ஆனைப் பற்றிப் பிடியுங்கள். 9:34,35 இறை எச்சரிக்கைகளைப் படித்து உணர்வு பெறுங்கள். சேமித்து வைக்கும் பொருள்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து 9:103 இறைவாக்குக் கூறுவது போல் உங்களைச் சுத்தப்படுத்துவது கொண்டு நேர் வழி பெற்று சுவர்க்கம் செல்ல முற்படுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: