தலையங்கம் : ஹலாலும் – ஹராமும்!! ஆதி மனிதனின் தேடுதல் அன்று உணவாக மட்டுமே இருந்தது. அவனுக்கு அன்று எது கிடைத்ததோ அதுவே போதுமானதாக இருந்தது. பின்பு நாகரிகமும், அறிவும், ஆற்றலும், விஞ்ஞான வளர்ச்சியும் வளர, வளர விதவிதமான உணவுகளை தேட ஆரம்பித்தான். இன்னும் தேடிக் கொண்டேயிருக்கின்றான், முடியவில்லை. நாகரிக போதையில் மனிதனின் கண்டுபிடிப்புகளான பல்வேறு உணவுகள், பல்வேறு பெயரில் உலா வருகின்றது. அவற்றில் எது நல்லது? எது கெட்டது? என்று தெரியாத அளவிற்கு இப்போது உணவுகளே […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 செப்டம்பர் மாத தொடர்ச்சி… அவர்கள் வெறும் கற்பனையைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார்கள்: “அவர்கள் கற்பனைகளைத் தவிர இறை நூலைப் பற்றி வேறு எதையும் அறியமாட்டார்கள்.”. (2:78) அவர்கள் தமது வாயால் கூறுகின்ற சில பொய்யான தகவல்களைத் தவிர வேறு எதையும் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், பொய்களைத் […]
முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் உள் சண்டைகள்! அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : முஸ்லிம்களின் இன்றைய இழிநிலை ஏன்? முஸ்லிம்களின் இன்றைய இழிநிலைக்கு ஒன்று அவர்கள் குர்ஆனைக் கைவிட்டது. இரண்டாவது முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் உள் சண்டைகள் என்று 1920ல் அறிஞர், ஷைகுல் ஹிந்த் என்று அழைக்கப்பட்ட மஹ்மூத் அல்ஹஸன் அவர்கள் கூறிச் சென்ற இந்த இரண்டு கருத்துக்களும் நூற்றுக்கு நூறு உண்மை. முஸ்லிம்கள் குர்ஆனை கைவிட்டதின் பேரழிவுகளை பிரிதொரு கட்டுரையில் விளக்கி இருக்கிறோம். இங்கு முஸ்லிம்களிடையே நடைபெறும் உள் சண்டைகள் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன? அப்துல்முத்தலீப். ஆதாரம்: அர்ரஹுகுல் மக்தூம். நூல். பக்கம் 72 2. அப்துல் முத்தலீப் அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? 10 ஆண் பிள்ளைகள், 6 பெண் பிள்ளைகள். 3. நபி(ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? அப்துல்லாஹ். பக்கம் 72 4. அப்துல் முத்தலீப் அவர்களுக்கு அப்துல்லாஹ் எத்தனையாவது பிள்ளை? 4ஆவது பிள்ளை. 5. அபூதாலிப் என்பவர் யார்? நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை […]
உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 செப்டம்பர் தொடர்ச்சி… தந்தையின் நண்பரை மகன் ஆதரிப்பதும் நன்மைகளில் மிகப் பெரிய நன்மையாகும் : ஒரு மனிதன் தனது தந்தையின் நண்பரை ஆதரிப்பது நன்மைகளில் மிகப்பெரிய நன்மையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள், (முஸ்லிம் :2552, ரியாளுஸ்ஸாலிஹீன் : 341) அப்துல்லாஹ் பின் […]
பிஸ்மில்லாஹ் சொல்வோம்! சையது A. முபாரக், நாகை. படைத்த உம் இரட்சகனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) இந்த வசனத்தைக் கொண்டே இறை நூல் (அல்குர்ஆன்) இறங்க ஆரம்பித்தது. நாம் எந்தச் செயலையும் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டே தொடங்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம் என்பதை இது உணர்த்துகிறது. ஆகவே, மார்க்க கட்டளையாக இதனை நாம் கடைபிடிக்க வேண்டும். நாவினால் மொழியும்போதே இலக்கிய நயமும், செழிப்பும் மிக்கதாக பிஸ்மில்லாஹ் மிளிர்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நாம் கருத்தில் கொள்ளும்போது, பிஸ்மில்லாஹ் சொல்லி […]
சாந்தி! மண்ணிலா? விண்ணிலா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனித மனம் ஏதோ ஒன்றை எப்போதும் தேடிக் கொண்டேயிருக்கும். ஏன் என்றால் வாழ்வின் அர்த்தமே தேடலில் (Search-ல்) தான் இருக்கிறது. (Mobileலில்) சர்ச்(Search) செய்வது போல, தேடலில் மூன்று வகை இருக்கிறது : 1. அறிவது 2. ஆராய்வது 3. அடைவது என்று தேடலில் மனிதனது வாழ்க்கை இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இது ஒன்றும் தவறு அல்ல, ஏன் என்றால், தேடல்தான் உயிரோட்டமுள்ள மனிதனின் அடையாளமாகும். ஆனால் இந்த தேடல் […]
“ரபியுல் அவ்வல் மாத சிறப்பு கட்டுரை” (WORLD’S THE MOST IMPRESSED MAN) உலக மக்களை கவர்ந்த முன்மாதிரியான மாமனிதர் உலக வரலாற்றில் சில மனிதர்கள் பல்வேறான காரணங்களால் மக்களால் ஈர்க்கப்பட்டு அவரை பின் தொடரக் கூடியவர்கள் (FOLLOWERS) பல லட்சம் பேர், அல்லது பல ஆயிரக்கணக்கான பேர் இருப்பவர்கள்/ இருக்கின்றார்கள். உதாரணமாக: அமெரிக்க அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சுமார் 150 ஆண்டுகளில் சுமார் 150 ஆண்டுகளில் ஆப்ரஹாம் லிங்கனும், ஜான் கென்னடியும் அந்நாட்டு மக்களை […]
ஹதீத்கள் பற்றிய ஒரு விளக்கம்… அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : குர்ஆனுடைய வழக்கிலும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறை வழக்கிலும் “ஹதீத்‘ என்ற பதம் புழக்கத்திலிருப்பதையே நம்மால் அறியமுடிகிறது. அல்குர்ஆனில் “ஹதீத்‘ என்று 18 இடங்களிலும் “ஹதீஸன்‘ என்று 5 இடங்களிலும் “அஹாதீஸ்‘ என்று பன்மையில் 5 இடங்களிலும் வந்துள்ளது. அவற்றை ஆராயும்போது விசயம் (4:42, 78, 77:80, 4:140, 79:15, 8:68, 7:185) வேத அறிவிப்பு (18:6, 39:23) வரலாறு 51:24, 20:9 (வீணான) பேச்சு (31:6) […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (30.10.1984) அன்று மர்ஹும் அபூ அப்தில்லாஹ் (எ) K.M.H. ஷாஹுல் அமீது அவர்கள் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் & என்ஜினியரிங் வியாபாரிகள் திருச்சி சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் “சமயங்களால் சமூகத்தில் ஏற்படுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் மர்ஹும் அபூ அப்தில்லாஹ் ஆற்றிய பேருரை பின்பு நூல் வடிவத்தில் “பல்சமயச் சிந்தனை‘ என்ற பெயரில் வெளி வந்து தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி உண்டாக […]
இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் மக்கிய பின்பும் உயிருடன் எழுப்பப்படும் மனிதன்! S.H. அப்துர் ரஹ்மான் அணி அணியாய் நிற்போர் மீது சாத்தியமாக! கடுமையாக விரட்டுவோர் மீது சத்தியமாக! அறிவுறையைக் கூறுவோர் மீது சத்தியமாக! உங்கள் இறைவன் ஒருவன் மட்டுமே! (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன், உதிக்கும் திசைகளுக்கும் இறைவன் முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் (இறைவனாகிய) நாம் அலங்கரித்துள்ளோம். வரம்பு மீறிய ஒவ்வொரு சாத்தானிட மிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்). […]
நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்தல்! K.M. காஜா மொஹிதீன் மறு பதிப்பு : அகிலத்துக்கோர் அருட்கொடையாக (பார்க்க: அல்குர்ஆன் 21:107) அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது ஒவ்வொரு மூஃமின் மீதும் கடமையாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான் இந்த நபி மூஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார். (அல்குர்ஆன் 33:6) “எனது உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அந்த இறைவன் மீது ஆணையாக உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது […]
பொறுமை (சப்ர்) M. ரஹ்மத்துல்லாஹ் மறுபதிப்பு : 1. காலத்தின் மீத சத்தியமாக, 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலிருக்கிறான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான(நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள்– நஷ்டத்திலில்லை) (அல்குர்ஆன் அல்கரீம் 103:1-3) மேற்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் உணர்த்துவதைப் பாருங்கள். நஷ்டத்திலில்லாதவர்களை பட்டியலிடுகின்றான். 1. ஈமானுடன் சாலிஹான நல்லமல்கள் செய்வது, 2. (குர்ஆன், ஹதீத்) […]
தலையங்கம் : அர்ரூம்! முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு முன்பு (மக்காவில் இருந்த போது) உலகில் இரு வல்லரசுகள் மட்டுமே இருந்தன. அவைகள் : ஒன்று : கிறிஸ்தவர்கள் ஆட்சி புரிந்துவந்த ரோமபுரி பேரரசு. மற்றொன்று : நெருப்பை வணங்கிக் கொண்டிருந்த பாரசீக சாம்ராஜ்யம். அதாவது நெருப்பை கடவுளாக வணங்கும் அன்றைய பாரசீகர்கள் இன்று ஈரானியர்கள். கிறிஸ்துவத்தை சமயமாக ஏற்றுக்கொண்ட அன்றைய ரோம பேரரசு இன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகும். நபி(ஸல்) அவர்களை கி.பி.610ல் […]
அல்குர்ஆனுக்கு மொழியாக்கம் – விளக்கம் – சுயவிளக்கம் அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எல்லாம் வல்ல இறைவன் உலகின் எல்லாப் பகுதி மக்களுக்கும் அவர்களிலிருந்தே அவனது தூதரைத் தேர்ந்தெடுத்து அவரவர்கள் பேசக்கூடிய மொழியிலேயே அவனது நேர்வழி அறிவிப்புகளை வஹீ மூலம் இறக்கி அம்மக்களை நேர்வழிப்படுத்தினான். இறுதியாக வாழ்க்கை நெறிமுறைகளை முழுமைப்படுத்தி, பூமியின் மையப் பகுதியான அரபு நாட்டில், அரபி மொழி பேசும் அம்மக்களிலிருந்தே தனது இறுதித் தூதரைத் தேர்ந்தெடுத்து, அவரும் அந்த மக்களும் பேசும் அரபி […]
அறிவியல் மனப்பான்மை ஆபத்தானதா? அவசியமானதா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இன்றைய உலகம் தகவல்களால் நிரம்பி வழிகிறது. அதாவது பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப், இன்ஸ்டாகிராம், எஃஸ்(யீ) என சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மேற்கண்ட சமூக வலைதளங்களில் (Social Media)வில் இளைஞர்களும், முதியோர்களும், சிறுவர்களும் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரும் பயனிருந்தும் பயனில்லாமலும் நேரத்தை செலவிடுகிறார்கள். சமூக வளைதலங்களில் அறிவியல், அரசியல், ஆன்மீகம், வரலாறு, மருத்துவம், மனநலம், உணவு […]
வெற்றி (நஜாத்) என்பது எது? A.N. TRICHY. எல்லோரும் விரும்புவது வெற்றிகரமான வாழ்க்கையைத்தான். இதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது. ஆனால் பெரும்பாலோர் வெற்றி என்னும் முயற்சியில் முழுமையாக முயலாமல் விரக்தியுற்று, சலிப்படைந்து, அல்லது பிரச்சனைகளை சந்திக்க பயந்து வெற்றியை அடைய முடியாமல் பெரும்பாலோர் தோல்வியை தழுவுகிறார்கள். அதுவே யாரெல்லாம் எடுத்த காரியத்தில் எப்படியும் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்களோ அவர்களே “வெற்றி‘யை (நஜாத்தை) அடைகிறார்கள். ஆனாலும் வெற்றியை அடைய கடுமையாக முயற்சி […]
முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 ஏப்ரல் தொடர்ச்சி…. எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன்தான்‘ என்பதுதான். ஆகவே நீங்கள் அவனுக்கு (முற்றிலுமாக) வழிப்பட்டு (முஸ்லிம்களாக) நடப்பீர்களா? (என்று நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: 21:108) அதாவது, இக்கட்டளைக்கு முழுவதுமாக இணங்கி அடிபணிந்து முஸ்லிம்களாக இருப்பீர்களாக. (தஃப்சீர் இப்னு கஸீர்: 5:947-950) இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் […]
வாசிப்பவருக்கு மாற்றம் ஏற்பட வழிகாட்டும் இறைநூல்! M. சையது முபாரக், நாகை 2024 ஏப்ரல் தொடர்ச்சி…. 1. உறுதியான இறைநம்பிக்கை, இறையச்சம் இருக்கவேண்டும்: நம்மைப் படைத்து பரிபாலிக்கும் எஜமான். அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் அல்குர்ஆன் என்ற ஆழமான, உறுதியான நம்பிக்கையுடன் வாசிக்கவேண்டும். இம்மை மறுமை வெற்றிக்கான திறவுகோல் அல்குர்ஆன் என்பதை இறையச்சத்துடன் அழுத்தமாக அடிமனதில் பதிய வைத்து படிக்கவேண்டும். (பார்க்க : 2:2, 8:2) 2. தூய்மையான எண்ணம் வேண்டும்: நம் எஜமானன் அல்லாஹ்விடம் நமது […]
ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையிலும், காட்சியின் அடிப்படையிலும் அமைந்ததுதான் எமது ஹிஜ்ரி காலண்டர் எனச் சொல்லிக்கொண்டு காட்சியைக் கண்டுகொள்ளாமல் வெறும் கணக்கீட்டிற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்துப் பயணிப்பதுதான் எமது ஆதங்கம். ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்: 1. இது எமது இறுதித் தீர்மானம் அல்ல. ஆய்வு நூல்தான்; உங்கள் பரிசீலனைக்கானது அவற்றில் மாற்றம் ஏதேனும் இருந்தால் எமக்கு அறியத் தாருங்கள் நாம் மறுபரிசீலனைக்கு எடுப்போம் என்று கூறித்தான் அவர்களது […]