அறியாமையின் ஆட்டம் யாருடையது?
அபூ ஃபாத்திமா
“அறியாமையின் ஆட்டமும் அரஃபா நாள் மாற்றமும் என்று ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் தலையங்கம் தீட்டியுள்ளனர். அயோக்கியர்களே தங்களைப் போல் யோக்கியர்கள் உண்டா? என பீற்றுவார்கள். கோணல் வழி செல்பவர்களே நாங்கள் தான் நேர்வழி நடக்கிறோம். ஏகத்துவவாதிகள் – தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவார்கள். நாங்கள் தான் தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவோரே தவ்ஹீதுக்கு மாற்றமாகச் செயல்படுவார்கள். உண்மையில் தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் ஒருபோதும் தங்களை தவ்ஹீத்வாதிகள் என சொல்லிக் கொள்ளமாட்டார்கள். காரணம் அவர்களே அல்லாஹ்வை முறைப்படி அஞ்சி அவனுக்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பவர்கள். அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் அன்னிஸா 4:49, மற்றும் அந்நஜ்ம் 53:32 கட்டளைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு நாங்கள்தான் தவ்ஹீத்வாதிகள், நாங்கள்தான் தவ்ஹீத் ஜமாஅத் தூய்மையான ஏகத்துவவாதிகள் என்று ஒருபோதும் பீற்றிக் கொள்ளத் துணியமாட்டார்கள்.
தங்களை தவ்ஹீத்வாதிகள் என அறிமுகப்படுத்துகிறவர்கள் ஒருபோதும் தவ்ஹீத்வாதிகளாக இருக்க முடியாது என்பதை 4:49, 53:32 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைக் கொண்டு உணர்வு பெறமாட்டார்கள். மனோ இச்சைக்கு அடிபணிந்து ஷைத்தானைப் பின்பற்றி நடப்பவர்கள் எப்படி அல்குர்ஆனின் போதனையை ஏற்பார்கள்?
அவர்கள் அறியாமையிலும், ஆணவத்திலும் ஆட்டம் போட்டுக்கொண்டு மற்றவர்களை அறியாமையில் ஆட்டம் போடுவதாக ஆர்ப்பரிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் தர்கா முடச் சடங்குகளிலிருந்து விடுபட்டு அதற்கு அடுத்தபடிக்கு வந்துவிட்டால் அதனை மார்க்கத்தில் முன்னேறுகிறான் என்று சொல்ல முடியும். அவனைப் பாராட்டலாம். ஆனால் தர்கா மூடச்சடங்குகளிலிருந்து விடுபட்டு ஒருபடி மேலே ஏறியவன் மீண்டும் கீழிறங்கி தர்கா மூடச் சடங்குகளில் ஈடுபட்டால் அவன் பாராட்டப்படவேண்டியவன் அல்ல; இழிவுபடுத்தப்படவேண்டியவனே.
அந்த அடிப்படையில் தத்தம் பகுதி தலைப்பிறை என்ற மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டு சர்வதேச தலைப்பிறையை ஒப்புக் கொண்டு 1997 நவம்பர் அல் ஜன்னத் இதழில் தனது பெயரிலேயே அறிவிப்பு வெளியிட்ட ததஜ புரோகிதரைப்பாராட்டினோம். ஆனால் அடுத்த சில வருடங்களிலேயே மேலே இருந்து கீழ்ப்படிக்கு இறங்கி மீண்டும் தத்தம் பகுதி தலைப்பிறை என்ற மூட நம்பிக்கைக்கு வக்காலத்து வாங்கியவர் அறியாமையில் ஆட்டம் போடுவதாக ஆர்ப்பரிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் தர்கா மூடச் சடங்குகளிலிருந்து விடுபட்டு அதற்கு அடுத்தபடிக்கு வந்துவிட்டால் அதனை மார்க்கத்தில் முன்னேறுகிறான் என்று சொல்லமுடியும். அவனைப் பாராட்டலாம். ஆனால் தர்கா மூடச் சடங்குகளிலிருந்து விடுபட்டு ஒருபடி மேலே ஏறியவன் மீண்டும் கீழிறங்கி தர்கா மூடச் சடங்குகளில் ஈடுபட்டால் அவன் பாராட்டப்படவேண்டியவன் அல்ல; இழிவுபடுத்தப்படவேண்டியவனே.
அந்த அடிப்படையில் தத்தம் பகுதி தலைப்பிறை என்ற மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டு சர்வதேச தலைப்பிறையை ஒப்புக்கொண்டு 1997 நவம்பர் அல் ஜன்னத் இதழில் தனது பெயரிலேயே அறிவிப்பு வெளியிட்ட ததஜ புரோகிதரைப் பாராட்டினோம். ஆனால் அடுத்த சில வருடங்களிலேயே மேலே இருந்து கீழ்ப்படிக்கு இறங்கி மீண்டும் தத்தம் பகுதி தலைப்பிறை என்ற மூட நம்பிக்கைக்கு வக்காலத்து வாங்கியவர் அறியாமையில் ஆட்டம் போடுகிறாரா? அல்லது சர்வதேச தலைப்பிறையை மாதாமாதம் புறக்கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து முன்னேறி இஸ்லாமிய மாதங்களின் தலைப்பிறையை அதாவது பல வருடங்களின் நாள்காட்டியை கணினி கணக்கீட்டின் முலம் முன்கூட்டியே அறிய முடியும். அதன் மூலம் பல வருடங்களுக்குப் பின்னர் இடம் பெறும் சூரிய, சந்திர கிரகணங்களை முன்கூட்டியே ஆண்டு, மாதம், தேதி, கிழமை, மணி, நிமிடம், வினாடி என மிகச்சரியாக துல்லியமாக கணக்கிட்டு முஸ்லிம்களும் முறையாக சரியாக வருட நாட்காட்டி அச்சடிக்க முடியும் என்று கூறுகிறவர்கள் அறியாமையில் இருக்கிறார்களா? அறியாமையும் தடுமாற்றமும் யாரிடம் இருக்கிறது? மாதா மாதம் தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே முதல் பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்பவர்கள் ஒருமாத நாள் காட்டியையே அச்சிட முடியாதே? இந்த நிலையில் ஒரு வருட நாள்காட்டி அச்சிட்டு காசாக்குகிறவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடுடையவர்கள் – நயவஞ்சகர்கள், அறியாமையில் ஆட்டம் போடுகிறவர்கள் என்றால் அது தவறா?
ததஜ புரோகிதர் சர்வதேச தலைப்பிறை என்ற உயர் நிலையிலிருந்து தத்தம் பகுதி தலைப்பிறை என்ற கீழ்நிலைக்கு இறங்கக் காரணமாக அன்று சொன்னது.
பிறை பார்த்த வாகனக் கூட்டத்தார் மறுநாள் மாலை நபி(ஸல்) அவர்களிடம் வந்து நாங்கள் நேற்று பிறை பார்த்து விட்டோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சந்தேகம் கேட்க வந்தார்கள். அவர்களது நோன்பை விடும்படியும் அவர்களது தொழுமிடம் சென்று பெருநாள் தொழுகை தொழும்படி அவர்களுக்கே கட்டளையிட்டார்கள். நோன்பு நோற்ற நிலையிலிருந்த நபி தோழர்களுக்கு கட்டளையிட வில்லை என பிதற்றினார்.
அக்கட்டளை நபி தோழர்களுக்கல்ல, வாகனக் கூட்டத்தாருக்கே என்றால் அதில் பத்து சந்தேகங்கள் எழுகின்றனவே; அவற்றிற்கு பதில் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். வருடங்கள் பல உருண்டோடிவிட்டன. இன்றுவரை பதில் அளிக்க முடியாமல் பே பே என முழித்துக் கொண்டிருக்கிறார். வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஸையும் இப்போது சொல்லாமல் இருட்டடிப்புச் செய்து விட்டார் ததஜ புரோகிதர். பின்னர் ஒரு மாதம் கழித்து வந்த சிரியா தேசத்து தகவல். 2ம்பிறை, முன்றானம் பிறை பற்றிய சர்ச்சை ஹதீஸ் போன்ற ஹதீஸ்களை திரித்து வளைத்து தத்தம் பகுதி தலைப்பிறை அதாவது மாதத்தின் முதல் நாள் இரண்டு நாளும் இருக்கலாம். மூன்று நாளும் இருக்கலாம் என மடமை வாதத்தை அரங்கேற்றினார். அவற்றிற்கும், உரிய விளக்கத்தைக் கொடுத்த பின்னர் வாயடைத்துப் போனார்.
இப்போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையங்கள். (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்:புகாரீ 1900
இந்த ஹதீஸைத் தந்து தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மாதத்தைத் தீர்மானிப்பது கட்டாயம் என நிலைநாட்ட முற்பட்டுள்ளார். மார்க்கத்தைப் பிழைப்பாக் கொண்டவர்கள் கோணல் வழிகளையே நேர் வழியாகக் காட்டுவார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவதை உறுதிப் படுத்தியுள்ளார்.
இந்த ஹதீஸ் மேகமூட்டாக இருந்தால் வானில் பிறை இருக்கும் என்று ஒரு கோஷ்டியும் சச்சரவிடாதீர்கள். சந்தேகத்தின் பேரில் நோன்பை ஆரம்பிக்காதீர்கள். மாதம் பிறப்பதைத் திட்டமாக அறிந்து செயல்படுங்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார்களே அல்லாமல், தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது கட்”டாயம் நோன்புக்கும் பெருநாளுக்கும் ஷர்த்து – நிபந்தனை என்ற அடிப்படையில் அல்ல. அப்படி கட்டாயமாக ஷர்த்தான இருந்தால் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்களே தலைப்பிறையைத் தமது கண்ணால் பார்த்து அதன்படி செயல்படுங்கள் என வழிகாட்டி இருப்பார்கள். அப்படி ஒரேயொரு ஆதாரத்தையும் ததஜ புரோகிதர் காட்ட முடியாது. ஆக இந்த ஹதீஸும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகாது.
அடுத்து ஒரு ஹதீஸை குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு.
“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜு பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜு பெருநாள் ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) நூல்:திர்மிதீ.
ததஜ புரோகிதர் ஜகாத்துடைய கடமையில் ஓர்ஆண்டு நிறைவானால்தான் ஜகாத் கடமையாகும்” என்ற ஹதீஸையும் தன்னிடம் தேங்கியிருக்கும் பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸையும் பலகீனம் என தள்ளுபடி செய்கிறாரே அந்த ஹதீஸ்களைவிட தரத்தில் தாழ்ந்தது இந்த ஹதீஸ். தனது சொத்தை வாதத்தை நிலைநாட்ட தள்ளுபடியான ஹதீஸை தூக்கி நிறுத்துகிறார். ததஜ புரோகிதர் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை பலவீனமானவை என்றும் பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரபூர்வமானவை என்றும் தனது சூன்யப்பேச்சால் நிலைநாட்டும் மாபாதகர். சிறிது கூட அச்சமின்றி ஹதீஸ்களில் விளையாடும் அசகாய சூரர்.
பலமான ஹதீஸ்களை பலவீனமானவை என்றும் பலவீனமான ஹதீஸ்களை பலமானவை என்றும் துணிந்து சொல்லுங்கள். பின்னால் பார்த்துக் கொள்வோம் எனத் தனது கைத்தடிகளுக்கு துர்போதனை செய்பவரே ததஜ புரோகிதர் என்பதை அவரது முன்னாள் சீடர்களே அம்பலப்படுத்துகிறார்கள்.
ஆனால் அப்படித் தூக்கி நிறுத்தினாலும் இந்த ஹதீஸ் அவரது தத்தம் பகுதி தலைப்பிறை என்ற மூடக் கொள்கைக்குத் துணை போகாது. ஒரு வாதத்திற்காக அந்த ஹதீஸை எடுத்து அவரது மூடக் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று பார்ப்போம்.
நபி(ஸல்) சொல்லக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் தெள்ளத் தெளிவாக இப் புரோகிதர்களின் மேல் விளக்கம் எதுவும் தேவை இல்லாத நிலையில் விளக்கமாகக் கூறக் கூடியவர்கள். ததஜ புரோகிதர் கூறுவது போல் தத்தம் பகுதி தலைப்பிறைக்கு இது ஆதாரம் என்றால், அவரவர்கள் பகுதியில் பார்க்கும் அவரவர்கள் பிறையே அவர்களுக்குத் தலைப்பிறை என்றே நேரடியாகக் கூறி இருப்பார்கள்.
அப்படி கூறி இருக்கிறார்களா? இல்லையே! “நீங்கள்” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். “நீங்கள்” என’றால் குறிப்பிட்ட ஓர் ஊராரா? இல்லையே! குறிப்பிட்ட ஒரு நகரத்தினதா? இல்லையே! குறிப்பிட்ட ஒரு மாநிலத்தினரா? இல்லையே! குறிப்பிட்ட ஒரு நாட்டினரா? இல்லையே! இங்கு நபி(ஸல்) அவர்கள் “நீங்கள்” என குறிப்பிடுவதோ ஒட்டுமொத்த தமது சமுதாயத்தினரையே அன்று உலக முழுவதும் முஸ்லிமகள் இருந்தனரா? என்று கேள்வி கேட்டு தனது பக்தர்களை ஏமாற்றத் துணிவார் ததஜ புரோகிதர் புரோகிதர்களின் புத்தி கோணல் புத்திதானே!
அன்று வேறு எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் இல்லாமல் அரபு நாட்டிலிருந்த முஸ்லிம்களை மட்டுமே நபி(ஸல்) குறிப்பிட்டுச் சொல்லி இருந்தாலும். இன்று உலக முழுக்க உள்ள முஸ்லிம்களை “நீங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள் என்றே கொள்ள வேண்டும். ஆக முஸ்லிம் உம்மத்தினர் அனைவரும் ஏகோபித்து முடிவு செய்யும் நாளே நோன்பு நோன்புப் பெருநாள். ஹஜ்ஜு பெருநாள் என்பதே மிகச் சரியாகும். அதற்குள்ளே ஒரே வழி கணினி கணக்கீட்டின்படி முன்கூட்டியே கணக்கிட்டு நாள் காட்டி தயாரித்து உலகம் முழுவதும் இஸ்லாமிய காலண்டரை – நாள்காட்டியை நடைமுறைப்படுத்துவதே முறையாகும். உலகம் முழுக்க ஒரே நாளில் வெள்ளிக்கிழமையில் ஜும்ஆ தொழுவது போல், உலகம் முழுக்க ஒரே நாளில் நோன்பு ஆரம்பம். நோன்பு முடிவு. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்று மட்டுமே இருக்க முடியும் என்ற சாதாரண அற்ப அறிவும் இல்லாத ததஜ புரோகிதர் தன்னைப் பெத்தப் பெரிய மேதை, அறிஞர் என்று எண்ணுவது தான் வேடிக்கை. அறீவீனம்.