ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2009 ஜூலை,பொதுவானவை,பொதுவானவை

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

M.T.M. MUJEEBUDEEN  DHARGA TOWN, SRI LANKA

ஜூன் 2009 தொடர் : 2
ஓசை தரக்கூடிய கறுப்பான களிமண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (ஜின்களை படைத்ததை பின் வருமாறு குறிப்பிடுகிறான். அதற்கு)
முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கொடிய நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (அலகுர்ஆன் 15:26-27)
முன்னைய வேதங்களிலும் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என விபரிக்கப்படுவதை அவதானிக்கலாம். அவதானியுங்கள்.
ஆதத்தையும், ஹவ்யவாட்டியையும் விஷ;ணு(இறைவன்) மண்ணிலிருந்து படைத்தார். (பவிஷ்ய புராணம்)
அல்குர்ஆன் மனித படைப்பின் வளர்ச்சி பற்றி பின்வருமாறு விளக்குகிறது.
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும்; பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்;, பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் உங்களுக்கு விளங்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்) மேலும் நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படி செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்;  இன்னும், நீங்கள் (தரி சாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க் கின்றீர்கள் அதன்மீது நாம்(மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமை யாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடி யாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கின்றது.(அல்குர்ஆன்: 22:5)
இறைவன் மறுமை நாளில் இறந்துபோன மனிதன் எவ்வாறு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்றான் என்பதை பின்வரும் உதாரணம் மூலம் விளக்குகிறான். அதாவது வரண்ட பூமியில் தாவரங்கள் இறந்த பின் இறைவன் மழையைப் பொழியச் செய்து மீண்டும் பூமியில் தாவரங்களை முளைக்கச் செய்வது போல் மனிதனை உயிர்ப்பிப்பதாக இறைவன் விளக்குகிறான். இவ்வசனத்தில் முதல் மனிதனை மண்ணிலிருந்தும், அவர் பரம் பரையை இந்திரியத்தின் மூலமும் படைத்ததாக விவரிக்கிறான். அன்று ஒவ்வொரு இறைத் தூதரும் மனிதன் இறந்த பின் மறுமை வாழ்க்கைக்காக அல்லாஹ்வினால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டனர். இதனை அல்லாஹ்வின் வல்லமையை அறியாத மக்கள் மறுத்தனர். முஹம்மது நபி(ஸல்) மறுமை வாழ்வு பற்றி குறிப்பிட்டபோது சில அரபு மக்கள் மறுத்தனர். இதற்கமைய அல்குர்ஆன் தாவரங்களை உதாரணமாக முன்வைத்து இறந்த மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என விளக்குகின்றது.
அல்லாஹ் தான் படைக்க இருக்கும் மனித சமுதாயத்தின் அறிவு ஆற்றலை வானவர்களுக்கு விளக்குகின்றான். இதனை அறியாத மனிதன் இறைவனுக்கு இணைவைத்து மடமையில் வீழ்ந்து கிடந்தான். இந்நிலையைப் போக்க 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி(ஸல்) மூலம் அல்லாஹ் அல்குர்ஆனைக் கொண்டு வெளிப்படுத்துவதைப் பாருங்கள். வானவர்களுக்கு கற்றுக் கொடுக்காத சில பெயர்களை ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்து, வானவர்கள் மத்தியில் ஆதமின் அறிவுத்திறனை இறைவன் வெளிப்படுத்தி மேன்மைப்படுத்துகிறான். இதனை அல்லாஹ்(இறைவன்) அல்குர்ஆன் மூலம் பின்வருமாறு விவரிக்கின்றான். இச் செய்திகள், முன்பு வானவர்களிடம் அல்லாஹ் மனிதனின் படைப்பு பற்றி கருத்து கேட்டபோது வானவர்கள் கொடுத்த பிழையான விளக்கத்திற்கான அல்லது கருத்துக்கான, செயற்பாடு மூலம் கொடுக்கும் மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்தும் பதிலாக அமைகிறது.

இன்னும்(இறைவன்) எல்லாப்(பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக் காட்டி, நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள் என்றான். (அல்குர்ஆன் 2:30)

இறைவன் வானவர்களுக்கு அப்பொருட்களின் பெயர்களை கற்பிக்கவில்லை. இதனால் இறைவனின் கேள்விக்கு வானவர்களினால் விடைகொடுக்க முடியவில்லை. ஆனால் ஆதம் அப்பெயர்களை இறைவனிடம் இருந்து கற்றதனால் அவரால் விடைகொடுக்க முடிந்தது. இதுபோல் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளில் இறைவன் நாடியோரைத் தேர்ந்தெடுத்து இறைநெறிநூலை வழங்கினான். அத்தூதர்கள் தமக்கு வழங்கப்பட்ட இறைச் செய்திகளை கூடுதல் குறைவின்றி அக்கால மக்களுக்கு எடுத்து வைத்தனர். ஆனால் அத்தூதர்களுக்கு பின் வந்த குருமார்களில் பலர் ஷைத்தானின் தூண்டுதலால், அந்நெறிநூல்களினுள் இறைவனின் கற்பித்தல் இன்றி தமது சுய கருத்துக்களை உட்புகுத்தினர். இவையும் இறைவன் தமக்கு கனவின் மூலம் கற்பிக்கப் பட்டவை என்றனர். இதனால் மௌட்டீகம் வேதங்களில் உட்புகுந்து இறை நெறிநூல்கள் சிதைந்தன. ஆகவே இறைக் கட்டளைகளுக்கு மட்டுமே இறைவனின் படைப்புகள் அல்லது மனிதர்கள் கீழ்ப்படிதல் வேண்டும். மீறுவது, இறைவனின் கோபத்திற்கும், தண்டனைக்கும் காரணமாகும். இறை கட்டளையை மறுப்பது, இறைவனின் கற்பித்தல் அறிவை பெற்ற தூதர்களை நிராகரிப்பது, இவர்களை தன்னை விட குறை பிறப்பாக தூற்றுவது, பெருமை கொண்டு இறைகட்டளையை மறுப்பது இறைவனின் சாபத்தினையே பெற்றுக் கொடுக்கும். இந்நிலையே ஷைத்தான்களின் தலைவனான ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸுக்கு ஏற் பட்டது. இதனை மனித குலத்திற்கு படிப்பினைக்காக இறைவன் இறைநெறிநூலான அல்குர்ஆனில் பின்வருமாறு வெளிப்படுத்துகிறான். முன்னைய வசனத்துக்கமைய தொடர்ந்து அவதானியுங்கள். இறைவனின் கேள்விக்கு வானவர்கள் கொடுத்த பதில் இதுவாகும்.

(வானவர்களான) அவர்கள் (இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கவன் எனக்கூறினார்கள். (அல்குர்ஆன் 2:32)

ஆகவே வானவர்களினால் பொருட்களின் பெயர்களை கூற முடியவில்லை. அதன்பின் இறைவன் பொருட்களின் பெயர்களை கூறும்படி ஆதமிடம் பணிக்க, அவர் கற்றுக் கொடுத்தபடி பெயர்களைக் கூறுகிறார். பின் இறைவன் தன் வல்லமையை வானவர்களிடம் பின் வருமாறு வெளிப்படுத்துகிறான்.

ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக! என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்ப வற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன். என்றும் உங்க ளிடம் நான் சொல்லவில்லையா? என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன்2:33)

இதன் பின், இறைவனிடம் பொருட்களின் பெயர்களை கற்று அறிந்துள்ள ஆதம்(அலை) அவர்களுக்கு கீழ்ப்படியும்படி, அங்கிருந்த வானவர்களை நோக்கி இறைவன் கட்டளை யிட்டான். அங்கிருந்த இப்லீஸைத் தவிர மற்றவர்கள் சிரம் பணிந்தனர். இதனை இறுதி நெறிநூலான அல்குர்ஆனில் இறைவன் பின் வருமாறு குறிப்பிடுகின்றான்.

பின் நாம் மலக்குகளை(வானவர்களை) நோக்கி, ஆதமுக்கு பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள் என்று சொன்னபோது இப்ல ஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர் அவன்(இப்லீஸு) மறுத்தான் ஆணவமும் கொண்டான் இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகிவிட்டான். (அல்குர்ஆன்:2:34)

இறைக் கட்டளையை மறுத்து இப்லீஸ் சொன்ன வார்த்தைகளை இறைநெறிநூல் பின் வருமாறும் விபரிக்கின்றது.
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்கு(வானவர்)களிடம் ஓசை தரும் கறுப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகிறேன்|| என்றும், அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியும், அவருக்கு சிரம் பணியுங்கள்| என்றும் கூறியதை(நினைவு கூறுவீராக)

அவ்வாறே மலக்குகள், அவர்கள் எல்லோரும் சிரம் பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர அவன் சிரம் பணிந்த வர்களை விட்டும் விலகிக் கொண்டான்.

இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல்(விலகி) இருந்ததுக்குக் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ் ஓசை தரும் கறுப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதில்லை! என்று கூறினான். (அல்குர் ஆன்15:28-33)

இப்லீஸ் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்த மனிதனைப் போன்ற ஓர் உயிரினம் ஆவான். மனிதன் கருத்த மண்ணால் படைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மனித இனத்தையே இழிவுபடுத்தினான். இந்த வளர்ச்சி பெற்ற காலத்திலும் மனிதனை கருப்பர் வெள்ளையர் என இனம் பிரித்து, நிறத்தின் பெயரால் குறைத்து மதிப்பிடும் மக்கள் வாழ்கின்றனர். இறைவன் ஒருபோதும் மக்களை சாதியின் பெயரால் அல்லது நிறத்தின் பெயரால் பிரிக்க வழிகாட்டவில்லை. இது ஷைத்தானிய வழியில் செல்லும் மதகுருமார்களின் வேலை ஆகும். இந்த மட்டமான செயலை அல்குர்ஆன் சாடுகின்றது. இதனால் இறைவனிடம் இப்லீஸ் அடைந்த இழிவை இச்சம்பவம் பின் வருமாறு உணர்த்துகின்றது. இறைவன் இப்லீஸை நோக்கி பின்வருமாறு கட்டளையிட்டான்.

அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளி யேறி விடு நிச்சயமாக நீ விரட்டப்பட்ட வனாக இருக்கிறாய்.

மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவ தாக! என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 15:34-35)

இறைவன் இப்லீஸை நியாயத் தீர்ப்பு நாள் வரை சாபமிட்டதினால், அவன் மனித சமுதாயத்தை வழி கெடுப்பதாக சபதம் செய்தான். இறைவன் அவனுக்கு நியாயத் தீர்ப்பு நாள் வரை அவகாசம் அளித்துள்ளான். இன்ஷாஅல்லாஹ் தொடரும்….

DVD, நூல்

29.5.2009 கோட்டாறு இஸ்லாமிய கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட

இயக்கங்களால் சமுதாயத்திற்கு பலமா? பலவீனமா?

சர்வதேச தலைப்பிறை|

அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளங்குமா? அல்லது மவ்லவிகளுக்கு மட்டும் விளங்குமா?

மார்க்கப்பணிக்கு கூலி(சம்பளம்) அனுமதிக்கப்பட்டுள்ளதா? மற்றும் கேள்வி பதில் உரைகள் 2 DVDகளில் பதிவாகியுள்ளது. மேற்படி நான்கு தலைப்புகளிலும் முஸ்லிம் மத குருமார்களின் புரோகித மாயை மற்றும் லீலைகள்| என்ற நூலும் வெளி வந்துள்ளது. அதல்லாமல் அபூ அப்தில்லாஹ்வின் ஜும்ஆ உரைகள் மற்றும் சில உரைகள் முக்கியமான கேள்வி பதில் அடங்கிய ஒரு ACD இவை அனைத்தையும் பெற ரூபாய் 85/-அனுப்பி குரியரில் பெற்றுக் கொள்ளலாம். நூல் மட்டும் ரூபாய் 15/-அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.


BSNL               94439 55333

AIRCEL            97101 22152

RELIANCE      93451 00888

 (அலுவலகம்)
முஸ்லிம் பதிப்பகம்,
51/1 ஜாஃபர்ஷா தெரு,
திருச்சி-8.

Previous post:

Next post: