குர்ஆனின் நற்போதனைகள்
நாங்கள் முஸ்லிம்கள் Dr.A.முஹம்மது அலி, Ph.D.,
1. இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்: தவிர, ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்: நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகும். (2:208)
2. இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் தெளிவுரையாகவும், நேர்வழியாகவும், அருட்கொடை (ரஹ்மத்)யாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்தோம். (16:89,102)
3. நீங்கள் முஸ்லிம்களாகிவிட்ட பின், நிராகரிப்போர்களாகி விடுங்கள் என்று (எந்த நபியாவது) உங்களுக்குக் கட்டளையிடுவாரா? (3:80)
4. (நூஹ்(அலை) கூறியது.)
நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை எனக்குரிய நாள் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்மலை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் இருக்கமாறே ஏவப்பட்டுள்ளேன். (10:72)
5. இப்றாஹீம் யூதராகவோ, அல்லது கிறித்துவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்கு (இணை வைப்பவர்)களில் ஒருவராக இல்லை. (3:67)
6. (இப்றாஹீம்(அலை) கூறியது)
அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். நான் முஸ்லிம்களில் முதன்மையானவன். (6:163)
7. (இப்றாஹீம், இஸ்மாயில்(அலை) கேட்ட பிரார்த்தனை):
எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக. (2:128)
8. (லூத்(அலை) அவர்களது சமூகத்தாரில்) முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை. (51:36)
9. (யாஃகூப்(அலை) அவர்களது உபதேசம்) : என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாத்தை) தேர்ந்தெடுத்துள்ளான்: நீங்கள் முஸ்லிம்களாகவேயன்றி மரணிக்காதீர்கள். (2:132)
10. (யாஃகூப்(அலை) அவர்களது குமாரர்களின் பதில்) : உங்கள் இரட்சகனை – உங்கள் மூதாதையர் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்லாக் ஆகியொரின் இரட்சகனை ஒரே இரட்சகனை – நாங்கள் வணங்குவோம். அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருப்போம். (2:133)
11. (யூசுப்(அலை) கூறியது): இம்மையிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்: முஸ்லிமாக என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக: இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்திடுவாயாக! (12:101)
12. (ஸபாவை ஆண்ட பெண்ணாசிக்கு): சுலைமான்(அலை) எழுதிய மடலில்): நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக என்னிடம் வாருங்கள். (27:31)
13. (மேலும் சுலைமான்(அலை) வினவியது) பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் (இறைவனுக்கு வழிப்பட்ட) முஸ்லிம்களாக வருமுன்: உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டு வருவார்கள்? (27:38)
14. (மூஸா, ஹாரூன்(அலை) அவர்களின் பிரார்த்தனை): எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! முஸ்லிம்களாக எங்களை மரிக்கச் செய்வாயாக! (7:126)
15. (ஈஸா(அலை) அவர்களின் சிஷ்யர்களின் கூற்று) : நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கின்றோம்: நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டுள்ளோம்: நிச்சயமாக நாங்கள் (அவனுக்கு முழுமையாக வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம். (3:52)
16. ‘என் மீதும், என் தூதர் மீதும் ஈமான்(நம்பிக்கை) கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சிஷ்யர்)களுக்கு கூறியபோது, அவர்கள், “நாங்கள் ஈமான்(நம்பிக்கை) கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். (5:111)
17. (முஃமின்களே) “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப் இன்னும் அவர் சந்ததிகளுக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கு, ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், மேலும் நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து அருளப்பட்டதையும், நம்புகிறோம். அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம். இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடு(ம் முஸ்லிம்களா)கிறோம்” என்று கூறுவீர்களாக. (2:136, 3:84)
18. மேலும்(இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: நாங்கள் இதை நம்புகிறோம்: நிச்சயமாக இது நமது இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வேத) மாகும்: இதற்கு முன்னரே, நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம் என (வேதத்தையுடையோர்) கூறுகின்றார்கள். (28:53)
19. வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசையான) ஒரு பொது விஷயத்தின் பால் வாருங்கள். (அது என்னவெனில்) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்கமாட்டோம். அவனுக்கு எதனையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும் (முஃமின்களே! இதற்கு பின்னரும்) அவர்கள் புறக்கணித்து விட்டால் “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நிங்கள் சாட்சியாக இருங்கள்” எனக் கூறிவிடுங்கள். (3:64)
20. (ஜின்கள் கூறுகின்றன) : நிச்சயமாக நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர்: நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர்: எவர் முஸ்லிம்களாகிவிட்டார்களோ அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர். (72:14)
21. அவனுக்கே முற்றிலும் (வழிப்பட்ட) முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கும்படியும், (இந்த) குர்ஆனை ஓதி வரும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே எவர் நேர்வழி அடைகிறாரோ – அவர் நேர்வழியடைவது அவரது நன்மைக்கேயாகும். அன்றியும் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிப்பவன். (27:91,92)
22. நபியே! கூறுவீராக : முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன். (39:12)
23. நம்பிக்கை (ஈமான்) கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்: மேலும், முஸ்லிம்களாகவேயன்றி மரிக்காதீர்கள். (3:102)
24. (அல்லாஹ்) அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்: இந்த மார்க்கத்தில் (தீனில்) உங்களுக்கு எந்த சிரமமுமில்லை. இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவன் தான் இதற்கு முன்னரும் இ(வ்வேதத்)திலும் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22:78)
25. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களை செய்து கொண்டு நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவன் எனக் கூறுகிறாரோ, அவரை விட அழகிய சொல் சொல்பவர் யார்? (41:33)
26. தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டும் என்று இறை மறுப்பாளர்(காஃபிர்)கள் (மறுமையில்) ஆசைப்படுவார்கள். (15:2)
27. இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு முஸ்லிம்களாக இருந்தனர் (சுவனவாதிகளைப் பற்றியது) (43:69)