விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
விமர்சனம்: 2009 ஆகஸ்ட் இதழ் பக்கம் 2 மற்றும் 23-ல் ரமழான் 21.8.09 முதல் ஆரம்பமாகிறது என்று தவறான தகவல்களை தந்துள்ளீர்கள். சௌதி உட்பட உலகம் முழு வதும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 22.8.09 முதல் ஆரம்பமாகியுள்ளது. நீங்கள் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். உலகம் முழுவதும் யாரும் கணிக்காததை நீங்கள் மட்டும் எந்த கணினியின் மூலம் துல்லியமாக கணித்தீர்கள். விரிவான விளக்கம் தரவும். அபூ நதீர். நாகர்கோவில்.
விளக்கம்: சந்திரனின் ஓட்டம் அல்லாஹ் வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அல்குர் ஆன் 55:05, 10:05, 17:12, 2:189, 9:36, 35:13, 36:39, 25:61, 14:33, 16:12, 6:96, 21:33 போன்ற எண்ணற்ற வசனங்கள் கூறுவதை விட 1430 வருடங்களுக்கு முன்னர், அறிவியல் முன்னேற்றம் அறவே இல்லாத அக்காலத்தில், வேறு வழியே இல்லாத நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத் துவக்கத்தை அறியவேண்டிய கட்டாய நிலையில் மக்கள் இருந்ததை நமது கவனத்தில் கொள்ள வேண்டும். சந்திரனில் மனிதர்களின் கண்பட்டால் தான் அது சுழலும். மனிதக் கண்கள் படும் வரை சந்திரன் அதே இடத்தில் நிற்கும். சந்தி ரனின் ரீமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் தான் என்ற எண்ணத்திலுள்ள நீங்கள் குறிப் பிடும் நாடுகளில் உள்ளவர்களுக்கு ரமழான் தலைப்பிறை 22.8.09 ஆகத்தான் இருக்க முடியும். மற்றபடி கணினி கணக்கீட்டின்படி துல்லியமாக மாதம் பிறப்பதை அறிய முடியும் என்பதை விளங்கியுள்ள முஸ்லிம்கள் உலகம் முழுக்க 21.8.09 அன்று ரமழான் நோன்பை ஆரம்பித்து விட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் 21.8.09 ரமழான் நோன்பை ஆரம்பித்தவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். இன்றும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து 22.8.09-ல் ரமழான் நோன்பை ஆரம்பித்தவர்கள் எண்ணிக்கையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அதிகமாக இருக்கிறார்கள். இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
அல்லாஹ் அல்குர்ஆன் 6:116-ல் திட்ட மாகத் தெளிவாக நேரடியாக என்ன கூறி இருக்கிறான்? அதிகமான மக்கள் வழிகேட் டில்தான் இருப்பார்கள். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் அல்லாஹ்வுடைய நேர்வழியிலிருந்து கோணல் வழிகளில் மக்களை வழிநடத்துவார்கள். ஆதார மற்ற யூகங்களையே பின்பற்றுவார்கள். பொய் யான கற்பனையிலேயே மூழ்கி இருப்பார்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கவில்லையா? அது மட்டுமா? அல்குர்ஆனில் எண்ணற்ற இடங்க ளில் அதிகமான மக்கள் கூட்டம் நேர வழிக்கு வரமாட்டார்கள். கோணல்வழிகளிலேயே செல்வார்கள் என்று அல்லாஹ் சொல்லவில் லையா? மிகமிகச் சொற்பமான மக்களே குர் ஆன், ஹதீஃதை பற்றிப்பிடித்து நேர்வழி நடப் பார்கள் என்று தெளிவுபடுத்தவில்லையா?
இத்தனை குர்ஆன் வசனங்களையும் புறக் கணித்துவிட்டு-நிராகரித்துவிட்டு உலகம் முழுவதும் பெரும்பான்மையினர் தலைப் பிறையை புறக்கண்ணால் மட்டுமே பார்த்துத் தீர்மானிக்க வேண்டும் என்று வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதைப் பெரிய ஆதாரமாகக் கூறுகிறீர்களே! சரியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங் கள். கணிப்பிற்கும் கணக்கீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்.
விமர்சனம்: 2009 ஆகஸ்ட் இதழ் பக்கம் 23-ல் 19.9.09 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று எழுதியுள்ளீர்கள். தாங்கள் மேற்படி தேதியில் பெருநாள் தொழுகை தொழுதீர்களா? இல்லை சமுதாயத்தைப் எக்காரணமும் இன்றி பிளவுபடுத்தக் கூடாது என்பதற்காக 21.9.09 திங்கட்கிழமை தொழுதீர்களா? விமர்சனத்தை இருட்டடிப்புச் செய்யாமல் பதிலளிக்கவும். நதீர், நாகர்கோவில்.
விளக்கம்: அக்டோபர் 2009 விமர்சனப் பகுதியில் உங்களின் இந்த விமர்சனத்திற்குப் பதில் இருக்கிறது. கடமையான நோன்பின் நிலை பற்றியும், பெருநாள் தொழுகையின் நிலை பற்றியும் தெளிவு படுத்தியுள்ளோம். பேணுதலற்ற தொழுகையாளிகள், வார முஸ்லிம்கள், வருட முஸ்லிம்கள், பேர் புகழை நாடக் கூடியவர்கள், இத்தரத்தினர் தான் பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்ததற்கு மாறாக சமுதாய ஒற்று மையை விடப் பெரிதாக எண்ணிச் செயல் படுவார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தோம். மீண்டும் படித்துத் தெளிவு பெறுங்கள். அல்லாஹ் அல்குர்ஆன் அல்ஃபுர்கான் 25:63-ல் கட்டளையிட்டிருப் பதற்கு அடி பணிந்து மூடர்களுடன் வாதிடவும் நாம் முற் படமாட்டோம். மூடர்களின் மூடத்தனமான கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க முற்படவும் மாட்டோம். மற்றபடி விளக்கம் தேவைப்படும் விமர்சனமாக இருந்தாலும், கேள்வியாக இருந்தாலும் அவற்றிற்கு மதிப்புக் கொடுத்து பதில் அளிக்கவே செய்வோம். ஒருபோதும் இருட்டடிப்புச் செய்ய மாட்டோம்.
விமர்சனம்: உலகில் ஒரே நாளில் பெருநாள் என்று கூறுகிறவர்கள், இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத் தொழுகையை உலகில் உள்ளவர்கள் அனைவரும் தொழ வேண்டும் என்பார்களா? உலகில் ஓரிடத்தில் பிறை பார்த்தால் போதும் என்பவர்கள் விளக்குவார்களா?என்று 3.6.09 இதழ் உணர்வு பக்கம் 13ல் வினாத் தொடுத்துள்ளனர். விளக்கவும். A.ஷகீல், மதுரை
விளக்கம்:சுமார் 10 ஆண்டுகளாகத் தெளிவு படுத்தியும், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்கள் அனைவரிடமும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது என்ன தான் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கொடுத்தாலும் அதைப் பார்க்கமாட்டார்கள். காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கூறி வரும் வழிகேட்டுப் போதனைகளையே மீண்டும் மீண்டும் ஓயாது கூறிக் கொண்டிருப்பார்கள். அதனால் கொயபல்ஸ் தத்துவப்படி, இல்லை இல்லை பீ.ஜை. தத்துவப்படி பெரும்பாலான மக்கள் அவர்களின் வசீகர வலையில் சிக்கிச் சீரழிகிறார்கள். இந்த உண்மையை அல்குர்ஆன் 2:42, 9:34, 31:6, 7:175-179 இறை வாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள் விளங்க முடியும்.
சூரியகிரகணம் அது முழு சூரிய கிரகண மாக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு மணி நேரமே நீடிக்கும். எனவே ஒரு நாளில் 24 மணி நேரங்களையுடைய உலகின் ஒரு பகுதியில் மட்டுமே தெரியும். 24 மணி நேரமும் உலகம் முழுக்க தெரியும் வாய்ப்பே இல்லை. அதற்கு மாறாக 36:39-ல் அல்லாஹ் கூறுவது போல் பிறைக்குப் பல நிலைகளைக் கொடுத்து அதை ஒரு மாதம் 30ஒ24ஸ்ரீ720 மணி நேரம் நீடிக் கச் செய்கிறான். அதாவது 720 மணிநேரம் நீடிக்கும் பிறையை அதிகபட்சம் சுமார் 2 மணி நேரமே நீடிக்கும் சூரிய கிரகணத்துடன் ஒப் பிட்டுக் கேள்வி கேட்பவர்கள், அதுவும் விடாது கேட்டுக் கொண்டிருப்பவர்கள் உண்மையை-சத்தியத்தை அறிய முடியாத அறிவிலிகளா? அல்லது அல்லாஹ் 2:42-ல் கூறுவதுபோல் உண்மையை நன்கு அறிந்து கொண்டே அதை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டும் பொய்யர்களா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
நவீன அறிவியல் நுட்பங்கள் நிறைந்த இக் காலத்தில் உலகில் எங்குமே பிறை பார்க்கும் கட்டாயம் இல்லை. நூரல்ல, இருநூரல்ல, ஐநூருல்ல, ஆயிரமல்ல அதைவிட அதிகமான ஆண்டுகளுக்குரிய ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள், அரஃபா தினம் இவை அனைத்தையும் இன்றே கணக்கிட்டுச் சொல்ல முடியும்.
விமர்சனம்: UT யும் GMT யும் பற்றி மேலும் விளக்கம் தருக. என்.சாதிக் அஹ்மது, பல்லாவரம், சென்னை.
விளக்கம் :
UT யுனிவர்சல் டைம்-சர்வதேச நேரம் என்றும், GMT கிரீன்விச் மைய நேரம் என்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் UT யும், GMT யும் ஒரே நேரம்தான் என்று இன்றைய விஞ்ஞானிகள் முதல் அனைத்துத் தரப்பினரும் கூறி வருகின்றனர். முஸ்லிம் விஞ்ஞானிகளும், அறிவு ஜீவிகளும் கூட இதே நம்பிக்கையில் தான் இருக்கின்றனர். இதற்குக் காரணம் வெள்ளையன் தனது ஆட்சிக் காலத்தில் தந்திரமாக இங்கிலாந்திலுள்ள கிரீன்விச்சை மையமாக வைத்து அதை 0° ஆகவும் கிழக்கு எல்லையை 180° என்றும் மேற்கு எல்லையை 180° என்றும் நேரத்தை லண்டனிலிருந்து கிழக்கே + என்று 1,2,3 என ஏறுவரிசையிலும், மேற்கே_ என்று 11,10, 9,8 என இறங்கும் வரிசையிலும் தற்காலிகமாக இப்படி வைப்போம் என்று சொல்லிச் செய்ததையே நிரந்தரமாக ஆக்கிக் கொண்டதாகும்.
உண்மையில் கிழக்கில் தேதிக் கோட்டில் (Date Line) 0 என்று ஆரம்பித்து மேற்கில் தேதிக் கோட்டில் 360° என்று அமைவதுதான் மிகமிகச் சரியாகும். ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பிறக்கும்போது 0 நேரம் என்றும் பின்னரே வினாடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் எனக் கணக்கிடுவோம். இதை யாருமே மறுக்க முடியாது. இது போல் நாள் ஆரம்பிக்கிறது கிழக்கில் தேதிக் கோட்டில் என்பதை யாருமே மறுக்க முடியாது. அங்கு 0°, 0 நேரம் என்று ஆரம்பித்து வினாடி, நிமிடம், மணி என 360° யில் 24 மணி நேரம் என ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் 0°, 0 நேரம் என வளர வேண்டும். இதுவே அல்லாஹ்வின் அல்பகரா 2:189 கட்டளைப்படி முன்வாசல் வழியாக நாளில் நுழைவதாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த கிரீன்விச்சை 00 ஆகக் கொண்டு நேரத்தை ஆரம்பிப்பது 2:189 இறைக் கட்டளைக்கு முரணாக பின்வாசல் வழியாக நாளை ஆரம்பிப்பதாகும். இது அல்லாஹ்வைக் கோபப்படுத்தும் தீய செயலாகும். இது யூத, கிறித்தவர்களின் பெரும் சூழ்ச்சியாகும். முஸ்லிம்களும் அவர்களைப் பின்பற்றி நாளை 2:189 இறைக் கட்டளைக்கு முர ணாக பின் வாசல் வழியாக அதாவது நாளை அதிகாலை பஜ்ரிலிருந்து ஆரம்பிப்பதற்கு முர ணாக நாளை மஃறிபிலிருந்து ஆரம்பித்து யூத, கிறித்தவர்களைப் போல் வழிகெட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். (பார்க்க 1:7)
அல்லாஹ்வின் கட்டளைப்படி நாளை கிழக்குப் பகுதியில் தேதிக் கோட்டிலிருந்து முன் வாசல் வழியாக ஆரம்பிக்கும் போது 0°, 0 நேரம் என ஆரம்பித்து வினாடி, நிமிடம், மணி என 24 மணி நேரத்தை அடைந்து நாள் முழுமை அடைகிறது. இதையே UT யுனிவர் சல் டைம் _சர்வதேச நேரம் என்று நாம் சொல்லுகிறோம்.இதுவே அல்லாஹ்வின் 2:189 கட்ட ளைக்கு அடிபணிந்து நாளின் முன்வாசல் வழியாக நுழைவதாகும்.
இந்த அடிப்படையில் நடப்பு மாதமான துல்கஃதா மாதம் 19.10.2009 திங்கள் பிறந்ததாக நாம் கணக்கிடுகிறோம். அதற்கு முன்னைய நாள் 18.10.2009 ஞாயிறன்று UT சர்வதேச நேரம் 05.34.10க்கு கன்ஜங்சன் (Conjuntion) ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த கன்ஜங்சன் ஏற்பட்ட இடம் இன்னும் 5 மணி 34 நிமிடம் 10 வினாடிகளில் 18 ஞாயிறிலிருந்து 19 திங்களாக மாறும் என்பதே அதன் சரியான பொருளாகும்.
அதே சமயம் இன்றைய முஸ்லிம் விஞ் ஞானிகளும் அறிவுஜீவிகளும் சரி காண்பது போல் UTயும், GMTயும் ஒன்று என்ற அடிப்படையில் 05.34.10+12=17.34.10 நேரத்திற்குப் பின்னர் கன்ஜங்சன் ஆன இடம் 18 ஞாயிறிலிருந்து 19 திங்களாக மாறும். அதாவது இன்னும் 17 மணி 34 நிமிடம் 10 நொடி இருக்கிறது தேதி மாற என்ற தவறான கருத்தைத் தரும். இது கூட பரவாயில்லை. அதே சமயம் அடுத்த மாத கன்ஜங்சன் ஆகும் நேரம் (துல்ஹஜ் மாதம்) 16.11.2009, 19.14.47 என்றுள்ளது. அத்துடன் 12 மணியைக் கூட்டும் போது 19.14.47 +12=31:14.47 அதாவது அடுத்த நாள் காலை 7:14.47 ஆகிவிடுகிறது. தெளிவாகச் சொன்னால் அடுத்த நாள் பஜ்ரைக் கடந்து காலை 7:15 am ஆகிவிடுகிறது அவர்கள் அன்று காலை பஜ்ரிலிருந்து நோன்பை ஆரம்பிக்க முடியாது என்று கூறுவர். ஆனால் உண்மையில் அந்த இடம் 19 மணி 14 நிமிடம் 47 நொடியில் அடுத்த நாளை அடைந்து விடுகிறது. அவர்கள் பஜ்ரிலிருந்து நோன்பை ஆரம்பிக்க எந்தத் தடையுமில்லை. UTயும், GMTயும் ஒன்று என்று யூத கிறித்தவரின் சதிப் பின்னணியை விளங்காமல் UTயும், GMTயும் ஒன்று என்று நம்பிச் செயல்படுகிறவர்களே இந்தத் தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். UT 12 என்றால் GMTயும் 12 என்பது உண்மை தான். கன் ஜங்சன் 12.00UT என்றால் கன்;ஜங்சன் கிரீன் விச்சுக்கு நேராக இடம் பெறுகிறது என்பது மட்டுமே உண்மை. கிரீன்விச் இன்னும் 12 மணி நேரத்தில் தேதிக் கோட்டை அடைந்து அடுத்த நாளில் புகுந்து விடும். அதாவது அப்போது 12+12=24 சரியாக தேதிக் கோட்;;டில் தேதி மாறும் இடத்தில் இருக்கும்.
UTயும், GMTயும் ஒன்று என்ற அடிப்படையில் கணக்கிடும்போது கன்ஜங்சன் ஏற்படும் போது உலகம் கிழக்கிலிருந்து மேற்கு வரை ஒரே தேதி ஒரே கிழமையில் ஒருபோதும் இருக்காது. இரு தேதி இரு கிழமைகளில் இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
லண்டன் அல்லாத உலகின் வேறு எந்தப் பகுதியில் கன்ஜங்சன் இடம் பெற்றாலும் அந்த இடம் பகல் 12 மணியாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் UTயும், GMTயும் ஒன்றே என்று தற்போது கணக்கிடுவதால் உலகின் எந்தப் பகுதிக்கு நேராக கன்ஜங்சன் இடம் பெற்றாலும் அப்போது அந்தப் பகுதி பகல் 12-ல் இருக்கும் என்ற மிகத் தவறான எண்ணம் ஏற்படுகிறது. உதாரணமாக ஹிஜ்ரி 1431 ஜமாதில் ஆகிர் மாதம் கன்ஜங்சன 14.05.2010 வெள்ளி 01.05.28 UT நேரப்படி பிறக்கிறது. அதாவது 15.05.2010 ஜமாதில் ஆகிர் முதல் பிறையாகும். கன்ஜங்சன் நடந்த இடம் அதிலிருந்து 1 மணி, ஐந்து நிமிடம் 28 நொடியில் வெள்ளியிலிருந்து சனியாக மாறுகிறது.
UTயும், GMTயும் ஒன்று என்றால் 01.05.28 + 12=13.5.28 நேரத்திற்குப் பிறகே வெள்ளி சனியாக மாற முடியும். இது சரியாக இருக்க முடியுமா என சிந்தியுங்கள். உண்மையில் கன் ஜங்சன் நடக்கும் இடம் 01.05.28 UT எனும் போது அதன் GMT நேரம் 10.54.32pm ஆகவே இருக்க முடியும். 10.54.32pm ஆக இருந்தால் தான் அந்த இடம் இன்னும் 01.05.28-ல் வெள்ளியிலிருந்து சனிக்கு மாற முடியும்.
UT யும்,GMTயும் ஒன்றே எனக் கணக் கிடும்போது கிரீன்விச்சைத் தாண்டி மேற்கே இடம்பெறும் கன்ஜங்;சன் அனைத்திலும் சந்திரமாதம் கழியும் பழைய மாதமும், வரும் புதிய மாதமும் கலந்து இருப்பது போல் கிரிகோரி யன் ஆங்கில தேதியும் கிழமையும் கழிவதும் புகுவதும் கலந்தே இருக்க முடியும் அதனால் தலைப்பிறை இரு நாட்கள் இருக்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது.
அடுத்து இன்னொரு பெரும் தவறையும் சிலர் செய்கின்றனர். அதாவது சூரிய கிரகணம் அல்லது அமாவாசை முழுவதும் கன்ஜங்சன் நிகழ்கிறது என தப்புக் கணக்குப் போடுகிறார்கள். சூரியகிரகணம் பிடித்தல் மற்றும் விடுதல் என ஒரு சில மணிகள் எடுக்கலாம். உதாரணமாக ஜூலை மாதம் இடம் பெற்ற முழு சூரியகிரகணம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதேபோல் அமாவாசையும் தேய்பிறை வளர்பிறை என சில மணிகள் எடுக்கலாம்.
உதாரணமாக உலகின் மேற்கில் 23.50 UT யில் கன்ஜங்சன் நிகழ்ந்தால் அந்த சமயத்தில் இடம்பெறும் அமாவாசையாக இருந்தாலும் சூரிய கிரகணமாக இருந்தாலும் அதற்கு அடுத்து வரும் நாளிலும் நீடிக்கலாம். இந்த அடிப்படையில்தான் 2003 நவம்பர் 23-ல் 23. 20.14.6 UT இல் இடம் பெற்ற சூரிய கிரகணம் நவம்பர் 24 வரை நீடித்தது. ஆனால் அதனால் தலைப்பிறை இரண்டு நாள் வர முடியும் என்ற வாதம் தவறாகும். அல்லது நவம்பர் 24 வரை சூரிய கிரகணம் நீடித்ததால் நவம்பர் 25 அன்றுதான் தலைப்பிறை என்பதும் தவறான எண்ணமாகும்.
காரணம் அமாவாசையோ, சூரிய கிரக ணமோ மாதம் ஆரம்பிப்பதைத் தீர்மானிப்பதில்லை. அமாவாசை ஆரம்பித்து, முடியும் மாதத்தின் தேய்பிறை முடிந்து வரும் மாதத்தின் வளர்பிறை ஆரம்பிக்கும் இடம் தான் நமக்குக் கணக்காகும். அதையே கன்;ஜங்சன் என்கிறோம். கன்ஜங்சன் இடம் பெறுவது 2003 நவம்பர் 23, 23.20.14.6 UT என்று குறிப்பிடுவதி லிருந்தே மிகமிக வேகமாக சுழலும் சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரு நேர் கோட்டில் இருப்பது ஒரு வினாடி கூட இல்லை. வினாடியின் ஒரு பகுதியே என்பதை அறியலாம். அதுவே கன்ஜங்சனாகும். அந்த வினாடி யின் ஒரு பகுதியிலேயே பழைய மாதம் முடிவுற்று புதிய மாதம் ஆரம்பித்து விட்டது என அறிய முடியும். ஆனால் அன்றைய தினம் கடந்து செல்லும் மாதத்தின் இறுதிப் பகுதியும், வரும் மாதத்தின் ஆரம்பப் பகுதியும் கலந்து இருப்பதால் அதை முதல் பிறையாக எடுக்க முடியாது. எனவே கன்ஜங்சன் நடந்த அடுத்த நாள் தலைப்பிறை என்பதில் நடு நிலையாளர்கள் மத்தியில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இரவு 11.59.59.9pm ஆன நொடியின் 10-ல் ஒரு பகுதியிலேயே நாள் மாற்றம் ஏற்படுவதை அறிந்தவர்கள் மாத மாற்றம் அதே போல் ஏற் படுவதை மறுக்க மாட்டார்கள்.
வேறு சிலர் கன்ஜங்சன் இடம் பெறும் இட த்தின் மைய நேரத்தை (LMT) அறிந்து அதை UTயும்,GMTயும் ஒன்று எனக் கணக்கிட்டுக் கொண்டு தடுமாறுகின்றனர். நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் மைய நேரத்தை கணக்கிட்டு சூரிய உதயத்தை அதன்படி கணக்கிட்டுச் செயல்பட வேண்டுமே அல்லாது, வேறு நாடுகளின் மைய நேரத்தை (LMT) போட்டுக் குழப்பக் கூடாது.
உதாரணமாக நம் தாய்நாடான இந்தியா வின் வடகிழக்கிலுள்ள கல்கத்தா தேதிக் கோட்டிலிருந்து மேற்கே சுமார் 91.670யில் அமைந்துள்ளது. எந்த மாதத்தில் கன்ஜங்சன் ஏற்பட்டாலும் அதன் நேரம் 91.67×4=366.68 நிமிடங்கள். அதாவது 6 மணி 6 நிமிடம் 41 வினாடி. அதே சமயம் வடமேற்கிலுள்ள குஜரா த்தின் கடற்கரை பகுதி தேதிக்கோட்டிலிருந்து மேற்கே சுமார் 110.55° யில் உள்ளது.
எந்த மாதத்தில் கன்ஜங்சன் ஏற்பட்டாலும் அதன் நேரம் 110.55×4=442.2 நிமிடங்கள். அதாவது 7 மணி 22 நிமிடம் 12 வினாடி. ஆக நமது நாட்டின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் சர்வதேச (UT) நேரப்படி நேர வித்தியாசம் 7.22.12-6.6.41=1.15.31. ஆனால் அப்போது நமது இந்திய நாட்டின் மைய நேரம் LMT என்ற IST, UT படி 6.30 GMT படி 5.30pm ஆகும். எனவே ஒரு நாட்டின் மைய நேரத்தை (LMT) சர்வதேச நேரம் UT என்றும் அந்த UT யே GMT என்றும் போட்டுக் குழப்பினால் தடுமாற்றமும் வழிகே டும்தான் மிஞ்சும். அமெரிக்காவின் சில பகுதி களில் இரவு 8.45pm க்கு சூரியன் மறைந்து அங்கு மஃறிபு தொழுகை நடைபெறுகிறது.
இப்படி ஒரு நாட்டின் கிழக்கு மேற்கு எல் லையைக் கணக்கிட்டும், அந்த நாடு அமைந் திருக்கும் வட துருவம், தென் துருவத்தின் நெருக்க நிலையைக் கணக்கிட்டும் அந்த நாட்டின் மைய நேரம் (LMT) குறிப்பிடப்படு கிறது. வடதுருவ தென் துருவ நாடுகளில் சில பருவங்களில் ஒரே பகலாகவும், ஒரே இரவாக வும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம். எனவே பிற நாடுகளின் மைய நேரத்தை (LMT) நாம் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
அதற்கு மாறாக உலகம் முழுவதும் 360° ஆகும். அந்த அடிப்படையில் உலகின் கிழக்கும் பகுதியிலிருந்து அதாவது தேதிக் கோட்டின் மேற்கிலிருந்து ஒரு டிகிரிக்கு (1°) நான்கு நிமிடங்கள் எனக் கணக்கிட்டு நேரத்தைக் குறிப்பிடுவதே சர்வதேச நேரம் UT ஆகும். அந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 முஹர்ரம் மாதம் பிறக்கும் 16.12.2009 புதன் கிழமை UT 12.03.18-ல் கன்ஜங்சன் இடம் பெறுகிறது. அப்போது அங்குGMTவு நேரம் 11.56.42am ஆக இருக்கும். அப்போது உலகின் கிழக்கே தேதிக்கோட்டின் மேற்கு பகுதி 0.0.0 UT ஆகவும் உலகின் மேற்கே தேதிக் கோட்டின் கிழக்குப் பகுதி 24.0.0 UT ஆகவும் இருக்கிறது. அப்போது இந்திய IST நேரம் 5.30 pm UT நேரம் 6.30 ஆகும். சவுதி நேரம் 3.00pm UT நேரம் 9 ஆகும். இப்படி கன்ஜங்சன் ஆகும்போது தேதிக்கோட்டின் மேற்கே 0 UT என்றும் கிழக்கே 24 UT என்றும் இருக்கும். அதேபோல் உலகின் கிழக்கே, மேற்கேயுள்ள அனைத்துப் பகுதிகளும் ஒரே தேதி ஒரே கிழமையில் மட்டுமே இருக்கும். அதற்கு மாறாக சந்திர கணக்குப்படி அந்நாளில் முடியும் மாதத்தின் இறுதிப் பகுதியும், ஆரம்பிக்கும் மாதத்தின் முற்பகுதியும் (தேய்பிறை, வளர்;பிறை) இருக்கும். எனவே அடுத்த நாள் தேதிக்கோட்டிலிருந்து சந்திர மாதத்தின் முதல் பிறை – முதல் நாள் – முதல் கிழமை ஆரம்பமாகிறது.
தேதி, கிழமை மாறும்போது தேதிக்கோட் டில் நடுநிசி 12 மணியாகவும், கிரீன்விச்சில் பகல் 12 மணியாகவும் இருந்தால் மட்டுமே அல்லாஹ்வின் 2:189 கட்டளைப்படி நாளை முன்வாசல் வழியாக துவங்குகிறோம். அதற்கு மாறாக அப்போது கிரீன்விச்சில் இரவு 12 மணியாகவும் தேதிக்கோட்டில் பகல் 12 மணியாகவும் இப்போது கணக்கிடுவது போல் இருந்தால் நாளை பின்வாசல் வழியாக துவக்குகிறோம் என்பதுதான் அதன் பொருளாகும். ஆனால் கிரீன்விச்சில் இரவு 12 மணியாக இருக்கும்போது மக்காவில் இரவு 3 மணியாக இருப்பதைக் கொண்டு முஸ்லிம்கள் இப்போதைய நிலையை சரி காண்கிறார்கள். ஆனால் இரவு 3 மணி நாளின் முடிவுப் பகுதியே அல்லாமல் ஆரம்பப் பகுதி இல்லை. நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே தேதி மாறும்போது கிரிகோரியன் கால ண்டர்படி தேதிக்கோடு நடு இரவு 12 மணியில் இருக்க வேண்டும் என்பதே மிகச் சரியாகும்.
மிகச் சரியான மனிதக் குல காலண்டர் நடை முறையில் வரும்போது நாளை தேதிக் கோட்டில்; அதிகாலை பஜ்ரிலிருந்து ஆரம்பித்து தேதிக்கோட்டிலேயே முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். நாளை மக்காவில் ஆரம்பித்து மக்காவில் முடிக்கும் வாய்ப்பு அறவே இல்லை என் பதையும் முஸ்லிம்கள் உணர வேண்டும்.
விமர்சனம்: டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் சவுதியில் ரமழான் நோன்பு முப்பதையும் (30) பூர்த்தி செய்துவிட்டு ஷவ்வால் இந்தியாவி லுள்ள தனது குடும்பத்தாருடன் பெருநாள் கொண்டாடும் நோக்கத்துடன் அன்று இரவே விமானத்தில் ஒருவர் தாயகம் வந்துவிட்டார். இங்கு அவரது ஊரிலுள்ளவர்கள் ரமழான் 28 நோன்புகளை முடித்து 29-ம் நோன்பை ஆரம் பிக்கும் நிலையில் உள்ளனர். அந்த நிலை யில் 30 நோன்புகளை நிறைவு செய்த அவர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, டாக்டர் ஜாகிர் நாயக், அவர் 31 நோன்பும்; 32 நோன்பும் வைக்கலாம் என பதில் அளித்த தாக, அவரது கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பதில் சரியா? விளக்கவும். M.அப்துல்காதிர், மதுரை.
விளக்கம்: டாக்டர் ஜாகிர் நாயக் மக்களி டையே மிகவும் பிரபலமானவர். ஹிந்து அறி ஞர்களுடன், கிறித்தவ அறிஞர்களுடன் அவர்களின் வேதங்களில், பைபிளில் இருப்பவற் றை எல்லாம் அத்தியாயம் வசன எண். என விரல் நுனியில் வைத்து விவாதம் செய்து வெற்றி வாகை சூடியுள்ளார். அவற்றில் எல்லாம் சம்பந்தப்பட்ட அந்த மதங்களின் அறிஞர்களை விட திறமைமிக்கவர், ஆற்றல் மிக்கவர் என உலகமே பாராட்டும் திறமையுள்ளவர் என்பதை மறுப்பதற்கில்லை. முஸ்லிம் களிடையே மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற பிரிவுகளுக்கு அனுமதியே இல்லை, பிரிவுகளை ஏற்படுத்துவது பெரும் பாவம் என பகிரங்கமாக சொல்லி வருகிறார். தங்களை முஸ்லிம்கள் என்று மட்டுமே சொல் லிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இஸ்லாத்தை நிலைநாட்டுவதில் பெரும் சேவையாற்றுகிறார் என்பதையும் நாம் ஒப்புக் கொள்கிறோம்.
அதே சமயம் மாற்று மதத்தாரிடம் காணப் படும் வழிகேடுகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் டாக்டர் ஜாக்கிர் நாயக் முஸ்லிம்களிடையே காணப்படும் வழிகேடுகளை தீவிர மாக ஆராய்ந்தவராகவோ, அவற்றைத் துணி வாக எடுத்து வைப்பவராகவோ தெரியவி ல்லை. காலம் சென்ற பெரியவர் அஹ்மது தீதாதைப்போல் கிறித்தவ, ஹிந்து மத அறி ஞர்களை மண் கவ்வச் செய்வதிலேயே குறியாக இருக்கிறார். மற்றபடி முஸ்லிம்களிடையே காணப்படும் வழிகேடுகளைத் தெளிவாக அடையாளம் காட்டும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே அவை பற்றிய தெளிவு அவரிடம் இல்லாமல் இருக்கலாம்.
குறிப்பிட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியைக் கேள்விப்படுகிறவர்கள் எளிதாக இது விடயத்தில் அவரது அறியாமையைப் புரிந்துகொள்ள முடியும். ஹிந்துக்களுடைய மாதங்களில் 31, 32 வருவது போல் முஸ்லிம்களின் மாதங்க ளில் 31, 32 ஒருபோதும் வராது. காரணம் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் மாதம் 29 மற்றும் 30 மட்டுமே என திட்டமாக அறிவித் துள்ள ஆதாரபூர்வமான ஹதீஃத்;கள் இருக்கின்றன. ஷவ்வால் பிறை 1 பெருநாளுடைய நாள் எனத் திட்டமாக, துல்லியமாக அறிந்துள்ள அவர் எப்படி அன்று 31ம் நாளில் நோன்பு நோற்க முடியும்?
டாக்டர் ஜாக்கிர் நாயக் பிறை விடயத்தில் இந்த அளவு அறியாமையில் இருக்க முடியுமா? என்ற சந்தேகமே மிகைக்கிறது. கடந்த 10 வருடங்களாக இது போன்ற பல கேள்வி களை நாம் அந்நஜாத்தில் தொடர்ந்து கேட்டு வந்துள்ளோம். அதற்கு அரபி மொழி அறிந்த வர்கள், மார்க்கம் தெரிந்தவர்கள், மார்க்கத் தில் அதிகாரம் பெற்றவர்கள் என ஆணவம் – தற்பெருமை பேசும் எந்த ஒரு மார்க்க அறிஞ ரும்(?) இப்படியொரு அபத்தமான பதிலைச் சொல்ல துணிவு பெறவில்லை. மௌன விர தமே கடைபிடித்து வருகின்றனர். அவருக்கு இந்த மார்க்க சட்டங்கள் தெரியாது என்பதை விட பல மார்க்க அறிஞர்களைப் போல்;, நன்கு அறிந்த நிலையில் உண்மையை மறைக்க முயன்றுள்ளார் என்று எண்ணவே தோன்றுகிறது. மாதங்களை முன்பின் ஆக்குவது குஃப்ர் – இறை நிராகரிப்பு என அத்தவ்பா 9:37 இறைவாக்கு எச்சரிக்கும் நிலையில், இதை அவரும் அறிந்த நிலையில் எப்படி இப்படிச் சொல்ல அவருக்குத் துணிச்சல் ஏற்பட்டது?
அவர் இன்று அதிகமாகத் தொடர்பு வைத் துள்ள ஸலஃபி, அஹ்ல ஹதீஸ், முஜாஹித் மார்க்க அறிஞர்கள்(?) தலைப்பிறையைப் புற க்கண்ணால் கண்டே தீர்மானிக்க வேண்டும் என்ற அறியாமையில் மூழ்கி இருப்பதால், அவர்களைப் பகைத்துக் கொள்ள விருப்பம் இல்லாமல், 31லும் 32லும் நோன்பு வைக்கலாம் என்ற தவறான தீர்ப்பை அளித்திருக்கலாம் என்றே நினைக்கிறோம். விரும்புகிறவர் கள் இந்த விமர்சன விளக்கத்தை அவரிடமே காட்டி அவரது சரியான ஆதாரபூர்வமான விள க்கத்தைப் பெற்றுத் தரலாம். வரவேற்கிறோம்.
விமர்சனம்: அமாவாசைக்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் முதல் நாள் என்கிறீர்கள். அன்று நபி(ஸல்) அவர்களது காலத்திலும் அமாவாசை இடம் பெற்றுள்ளது. அரபியில் அமாவாசையை ‘முஹாக்’ என்று கூறுகின்றனர். எனவே அன்றே நபி(ஸல்) அவர்கள் முஹாக் என்ற அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பிறை எனக் கூறி இருப்பார்களே! அப் படி கூறாதிருக்க இன்று நீங்கள் அமாவாசை க்கு அடுத்த நாள் முதல் பிறை என்று எப்படி சுயமாகச் சொல்ல முடியும்? சுய அபிப்பிராய த்திற்கு மார்க்கத்தில் இடமில்லை என்று ஊரு க்கு உபதேசம் செய்து கொண்டு நீங்கள் உங்கள் சுய அபிப்பிராயத்தை மார்க்கத்தில் புகுத்துகிறீர்களா? M. அப்துல்லாஹ், சென்னை.
விளக்கம்: அல்லாஹ் பாதுகாப்பானாக! மார்க்கத்தில் எமது சுய அபிப்பிராயத்தை என்றுமே புகுத்த முற்பட்டதில்லை. மார்க்கத்திற்கு உட்படாதவற்றைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டு மார்க்கத்திற்கு உட்பட்டவற்றில் மத்ஹபு, தரீக்கா, தர்கா, இயக்கம், கழகம், ஜாக், ததஜ, முஜாஹித், மஸ்லக், கத்தம் ஃபாத்திஹா, மௌலூது, கூடு, கொடி, கந்தூரி இத்தியாதி, இத்தியாதி என புதுமைகளை – பித்அத்களை புகுத்தும் புத்தி மார்க்க அறிஞர் கள் என்று பீற்றிக் கொள்பவர்களிடமே காணப்படுபவையாகும்.
அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பிறை என்று நாம் ஒருபோதும் கூறியதில்லை. சில மாதங்களில் அமாவாசை முதல் நாளில் ஆரம் பித்து அடுத்த நாள் முடியும். அப்படியானால் எந்த நாளை அமாவாசையாகக் கணக்கிட்டு அடுத்த நாள் முதல் பிறை என்பது? மேலும் அமாவாசை இந்து, யூத மதங்களிலுள்ள பஞ் சாங்கம் என்ற சோதிட (Astrology)அடிப் படை யில் தோராய கணிப்பீட்டின் மூலம் குறிப்பிடு வதாகும். இதை நபி(ஸல்) ஏற்கவில்லை, நிராகரித்தார்கள் என்பதை நாமும் அறிவோம். நாம் இன்று கூறுவது, வான்கோள்களின் ஆய் வியல் (Astronomy)அடிப்படையில் துல்லிய மாகக் கணக்கிடப்பட்ட (கணிப்பிடப்பட்ட அல்ல) அடிப்படையில் சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் (Conjunction) ஒரு வினாடியின் ஒரு சிறு பகுதியில் நிகழும் நிகழ்வின் அடிப்படையி லேயே அதற்கு அடுத்த நாள் தலைப்பிறை என்கிறோம். இந்த கன்ஜங்சன் அமாவாசை போல் சமயங்களில் இரண்டு நாளும் வராது, ஒரு நாளும் வராது. ஒரு மணி நேரமும் வராது, ஒரு நிமிடமும் வராது, ஒரு வினாடி முழுமையாகவும் வராது, ஒரு வினாடியின் சிறிய பகுதி யில் மட்டுமே நிகழ்வதாகும். இதுவே பழைய மாதம் முடிந்து புதிய மாதம் ஆரம்பிக்கும் மைய இடமாகும். நாள் இரவு 11 மணி 59 நிமிடம் 59.9 வினாடியில் மாறுவது போல் மாதமும் மாறிவிடும். இந்த விண்ணி யல் அறிவு நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருக்க வில்லை. இதையே நபி(ஸல்) அவர் கள் ‘லாநக்த்துபு வலா நஹ்ஸுபு’ எனக் குறிப்பிட்டார்கள். ஆனால் அன்று இல்லாத அந்த விண்கோள்கள் பற்றிய அறிவு (Astro nomy) அல்லாஹ்வின் கிருபையால் நமக்குக் கிடைத்துள்ளது. எனவே அந்த கணக்கீட்டின் படி பழைய மாதம் முடிந்து புதிய மாதம் ஆரம்பித்துவிட்டதை மிகமிகத் துல்லியமாக அறிந்த நிலையில், அன்று போல் இன்றும் அதுவும் வானம் பலமாக மாசடைந்துள்ள (Pollution) நிலையில் தலைப்பிறையைப் புறக் கண்ணால் கண்டே மாதத்தைத் தீர்மானிப் போம் என்பதை விட பேதமை இன்று இருக்க முடியாது.
அன்று பிறையைப் புறக்கண்ணால் பார்த் தது மார்க்கத்திற்கு உட்பட்ட மாற்ற முடியாத ஒரு கடமை இல்லவே இல்லை. மாதம் பிறந்ததை அன்று அறிந்து கொள்ள இருந்த ஒரு சாதனமே அல்லாமல் வேறில்லை. தொலை தூர பிரயாணத்திற்கு ஒட்டகம் சாதனமாக இருந்ததுபோல், தூரத்து மரணச் செய்தியை அறிய ஆள் நேரில் வந்து சொல்வது சாதன மாக இருந்தது போல், ஐங்கால தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள சூரிய ஓட்டம் அதாவது பூமியின் சுழற்சி சாதனமாக இருந் தது போல், மாதத்தை அறிந்து கொள்ள பிறையைக் கண்ணால் பார்ப்பது ஒரு சாதன மாக மட்டுமே இருந்தது. இவை அனைத்திற் கும் மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்கள் தவிர வேறு சாதனங்கள் அன்று இல்லவே இல்லை. ஆனால் இவை அனைத்திற்கும் மிக வலுவான துல்லியமாகச் செயல்படுத்தும் நவீன விஞ் ஞான சாதனங்கள் இன்று கிடைத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்த மார்க்கத்தில் தடை ஒன்றும் இல்லை. ஆனால் மார்க்க அறிஞர் கள் எனப் பீற்றிக் கொள்வோர், ஒட்டகம், சூரிய ஓட்டம், ஆள் நேரில் வந்து சொல்வது இவற்றைப் புறக்கணித்து விமானம், நேரம் காட்டி (கடிகாரம்), தொலைத் தொடர்பு இன்ன பிறவற்றை ஏற்பவர்கள், நவீன மிகத் துல்லிய கணினி கணக்கீட்டை ஏற்பதை மறுப்பதுதான் விந்தையிலும் விந்தை.
விமர்சனம்: 29.10.1430 (17.10.2009) சனி யன்று சென்ளையில் நடந்த பிறை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியின் இறுதியில் பெரும் குழப்பமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அதற்கு அபூ அப்தில்லாஹ்வே கார ணம் என இங்குள்ள ஜாக் சகோதரர்களில் சிலர் செய்தி பரப்பினர். உண்மை நிலவர த்தை அறியத்தாருங்கள். அபூ ஆயிஷா அல் உம்ரா, நெல்லை, ஏர்வாடி.
விளக்கம்:எதார்த்தவாதி பொதுஜன விரோதி என்பது ஊரறிந்த உண்மை. சத்தியத்தைச் சொல்வோர் சொல்லடி கல்லடி பட்டுத்தான் தீர வேண்டும். நபிமார்கள் பற்றிச் சொல்லப்படாத அவதூறுகளா? சொல்லடி கல்லடியா நாம் பட்டு விட்டோம். சில நபிமார்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். சில ஊர்களில் கூட்டத்தினர் எம்மை அடிக்கப்போய் விட்டனர் என்றும் அவதூறு பரப்பியுள்ளனர்
நடந்த உண்மை இதுதான். பொதுவாக நாம் ஆரம்பத்திலிருந்து சொல்லி வரும் ஒன்றைத்தான் அன்றும் சொன்னோம். அதாவது அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் – சொல், அதே போல் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் (Astronomy) அல்லாஹ் வின் ஃபிஅல்-செயல், எனவே அல்லாஹ்வின் சொல்லும் செயலும் ஒருபோதும் முரண்படாது. எனவே சந்திரனின் சுழற்சியை கணினி கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்வது, அதன்படி செயல்படுவது குர்ஆனுக்கும் ஆதாரபூர்வ ஹதீஃத்களுக்கும் முரண் அல்ல என்றே கூறினோம்.
இதை சகோதரர் பிஸ்மில்லாஹ்கான் தவ றாகப் புரிந்து கொண்டு இவ்வாறு கூறுவது குஃப்ர்ளூ அபூ அப்தில்லாஹ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மேடையேறி கூறினார். அவரது கூற்று தவறு என்பதை சகோதரர் சிரா ஜும், சகோதரர் அப்துர்ரஷீதும் தெளிவாக விளக்கிய பின்னரும் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தார். உடனே சகோதரர்கள் சிராஜும், அப்துர்ரஹீமும் அத ற்கு குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைக் கேட்டனர். தனது தவறான வாதத்திற்கு குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் கொடுக்க முடியாத சகோதரர் பிஸ்மில்லாஹ்கான் வஹ்தத்துல்வுஜூது- அத்வைதம் என பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இதைக் கேட்டதும் சபையிலிருந்தவர்கள் கொதிப்படைந்து விட்டனர். சிலர் வேகமாக மேடை நோக்கி வந்து அவரிடம் கேள்விகள்; கேட்டுத் துளைத்துவிட்டனர். மேடையை விட்டு இறக்கி பலர் சேர்ந்து, அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டு அவரை சொல்லடிகளால் தாக்கத் துவங்கினர். 1969லிருந்து நமது நீண்டகால நண்பர், அந்நஜாத்திற்கு பல ஆக்கங்களை எழுதித் தந்தவர், சில ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தந்து பெரும் சேவையாற்றிய சகோதரர் என்ஜினியர் H.அப்துஸ்ஸமது அன்று காலை மரணமடைந்து விட்டபடியால், அங்கு உடனடியாகச் செல்லும் கட்டாயத்தில், எந்த நிலையிலும் கைகலப்புக்கு இடம் கொடுத்து விடாதீர்கள் என நம் சகோதர்களிடம் கூறிவிட்டு நாம் சென்று விட்டோம். அதன் பின்னரும் வாக்குவாதங்கள் முற்றி நீடித்துள்ளது. கைகலப்பு ஏற்படவில்லை. இதுதான் நடந்தது.
அன்று காலை 9.30லிருந்து இரவு 9 மணி வரை இடம் பெற்ற பல கண்காட்சிகள், குறிப்பாக சூரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வந்து கன்ஜங்சன் (Conjunction) ஏற்படும் காட்சி இவை அனைத்தும் தத்ரூபமாகக் காட்டப்பட்டதாலும், தலைப்பிறை ஒரு நாள் 24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும் என்ற பலரின் மிக மிகத் தெளிவான, அப்பட்டமான உரைகளாலும் ஜாக் அமீர் தடுத்த நிலையிலும் ஜாக், ததஜ சகோதரர்களே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களில் பல தெளிவு பெற்ற தாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சகோதரர் ஆத்திரப்பட்டிருக்கலாம். மேலும்
அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தரகர்களாக, புரோகிதர்களாக எத்தகைய மவ்லவியும்(?) வரமுயாது. அப்படி எந்த மவ்ல வியையும் ஒருவர் தனது பாதுகாவலராக எடுத்துக் கொண்டால் அவரின் இருப்பிடம் நரகம் என்று 5:3, 3:19,85, 7:3, 18:102-106, 33:36,66,67,68 போன்ற இறை வாக்குகளைக் கூறி நாம் முஸ்லிம்களை இந்த புரோகித மவ்லவி வர்க்கத்தினரின் வசீகர, சூன்யப் பிடியிலிருந்து விடுபடச் செய்து, சுயமாக குர்ஆன், ஹதீஃதைப் படித்து சிந்தித்து விளங்கி அதன் படி நடக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்திப் பேசியதால் அதை தாங்க இயலாது சகோதரர் பிஸ்மில்லாஹ்கான் நிதானமிழந்து மேடையேறி அப்படி சம்பந்தமே இல்லாதவற்றைக் கூறி அவமானப்பட்டார் என்றே தோன்றுகிறது.