விடை தெரியாத கேள்விகளா… இவை?
Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம்.
1. அல்லாஹ் உம்மத்தன் வாஹிதா என்று இரு இடங்களில் கூறும் (பார்க்க. 21:99, 23:52) வசனங்களுக்கு விளக்கம் என்ன?
2. 3:105, 6:159, 30:32, போன்ற வசனங்களில் பிரிவுப் பெயர்கள் கூடாது என்று சொல்வது மத்கப்(பிரிவு) பெயர்களை மட்டுமா? அல்லது இயக்கப் பிரிவுகளையுமா?
3. தக்லீது என்றால் என்ன? எவ்வித அரபி ஞானமும் இல்லாத முஸ்லிம்கள் 7:3, 33:21,36, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முரணாக யாரைப் பின்பற்ற வேண்டும்?
4. நபி(ஸல்) அவர்கள் கருப்பு நிற அடிமை உங்களுக்கு அமீராக (கட்டளையிடுபவராக) இருந்தாலும் அவருக்கு கட்டுப்படுங்கள் என்றார்கள். நாம் அமீர் என்ற பதமே நமக்குப் பொருந்தாது; இஸ்லாமிய அரசில் மட்டுமே அமீர் என்ற சொல் அமையும் என்றால் யாரிடம் உள்ளது அறிவுக்குருடு?
5.வெவ்வேறு இயக்கங்களாக (பிரிவுகளாகச்) செயல்வடுவதால் 3:105, 6:159, 30:32, 42:14 இறைக் கட்டளைகளை நிராகரித்து ஒற்றுமைக்கு வேட்டு வைப்பது யார்?
6. “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” நபி(ஸல்) சொல்லே அன்றி மனித கற்பனை பிரிவுப் பெயரா? (புகாரீ(ஆ) 4/803, 9/206)
“நீ “ஜமாஅத் அல் முஸ்லிமீன்”யும் அதன் இமாமையும் பற்றிப் பிடித்துக் கொள்!” என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளை இல்லையா!
7. மவ்லவிகளை பின்பற்றியே ஆக வேண்டுமா? அப்படி அவர்களை பின்பற்றாவிட்டால் அது மார்க்க அடிப்படையில் குற்றமா? (பார்க்க 7:3, 33:36,66,67,68)
8. “ஜமாஅத் அல் முஸ்லிமீனும் ஒரு பிரிவுப் பெயர் என்றால் ஆதாரமான ஹதீஸை குறை கணுகிறீர்களா? (புகாரீ(ஆ)4/803, 9/206)
9. ஜைனுல் ஆபிதீன், ரஹ்மத்துல்லாஹ் போன்றே 22:78, 41:33 இறைக் கட்டளைகள்படி இடுகுறி பெயரான “முஸ்லிம்” “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” பெயர்களையும் அப்படியே உச்சரிக்க வேண்டுமா? அல்லது தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டுமா?
10. அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்பதற்குப் பல குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் உண்டு. நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்பதற்கும் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உண்டு. அதே போல் அரபி கற்ற மவ்லவிகளின் கட்டளைப்படியே நடக்க வேண்டும் என்று கூறும் ஒரேயொரு குர்ஆன் வசனமோ, ஹதீஸோ இருக்கிறதா?
11. அப்படி இல்லை என்றால், 42:21க்கு முரணாக இறைவனுக்கு இணையாளர் ஆகும். அப்படியொரு விதியை மார்க்கத்தில் நுழைந்தது யார்? அவர்கள் சுயநலமிக்கவர்களா? இல்லையா?
12. அப்படியானால் அல்லாஹ்வை விட, அல்லாஹ்வின் தூதரைவிட இந்த மவ்லவிகளின் அந்தஸ்து உயர்வானதாக ஆகிவிடுகிறதே? இது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் குற்றம் இல்லையா?
13. அரபி மொழ ஆணவம் பேசும் இந்த மவ்லவிகள் 42:21 இறைக் கட்டளைப்படியும், 49:16 இறைக் கட்டளைப் படியும் இன்னும் பல குர்ஆன் வாக்குகளின் கட்டளைப்படியும் அல்லாஹ்வுக்கு இணையாளர்கள் ஆகிறார்கள். அவர்களின் வழிகாட்டல்களை அப்படியே எடுத்து நடப்பவர்கள் 42:21 மற்றும் 9:31 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் – ஷிர்க் செய்யும் கொடிய பாவிகளாக ஆகிறார்களா? இல்லையா?
14. மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள், அமைப்புகள் போன்ற பிரிவகளில் இருப்பவர்கள் மேலே கண்ட அனைத்து குர்ஆன் வசனங்களையும் 25:30 கூறுவது போல் நிராகரித்துப் புறக்கணிப்பதால், மறுமையில் 2:39,159-162, 33:36, 66-68 இறை எச்சரிக்கைகள் படி நரகை விட்டு தப்ப முடியுமா?
மேலை கூறப்பட்ட அனைத்து கேள்விகளையும் குர்ஆன், ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அறிந்தவர்களிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள். யாருடைய உள்ளத்தில் நோய் உள்ளதோ அவர்களே இவற்றை வளைத்து வயிறு வளர்ப்பவர்களாகும். தயவு செய்து அந்நஜாத்தையும் “தக்லீது” செய்ய வேண்டாம். உண்மையை உள்ளது உள்ளபடி விளங்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
விடை தெரியாத கேள்விகளா… இவை?
Previous post: விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
Next post: ஜமாஅத் அல் முஸ்லிமீன்