இரவிலும்!  பகலிலும்! …

in பொதுவானவை

அபூமுஹமத் நஜ்ம் – ஓமன்

இரகசியமாகவும், பகிரங்கமாகவும், அல்லாஹ்வுக்காக! அல்லாஹ்வு டைய தூதர் நபிஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக! அல்லாஹ் தனக்கு தந்ததிலிருந்து உதவுபவர்கள் யார்? யாருக்காக? தன் சுயநலத்திற்காகவா? அல்லது தான் மக்களால் புகழப்பட வேண்டும். பெரு மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற் காகவா? பெரும் செல்வந்தர்களே நல் உள்ளம் கொண்டோர்களே, எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று சொல்லக்கூடிய அன்புள்ளம் கொண்ட முஸ்லிம்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனக்காக கோடி கோடியாக, இலட்ச இலட்சமாக தந்துகொண்டு இருக்கிறானே! இந்த உலகத்தின் அதிபதியான வல்ல ரஹ்மானுக்காக மட்டும் அவனின் பொருத் தத்தை நாடியவர்களாக மட்டும், ஏழைகளின் பங்கை ஏழை-எளியவர்களுக்காக கொடுத்து விடுகிறார்களோ அவர் களுக்கு அவர்களுடைய சிறந்த கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் நிச்சய மாக இருக்கிறது; என்பது மட்டும் உறுதியிலும், உறுதி. அவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். கவலைப் பட தேவையும் இல்லை.

அல்லாஹு ரப்புல் ஆலமீனால் பொருந்திக் கொள்ளப்பட்டு, நபி ஸல்ல ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர் களால் சிறந்த முறையில் வழிகாட்டப் பட்ட உலகளாவிய மாபெரும் அமைப்பே சத்திய இஸ்லாம் என்பதை விருப்பு, வெறுப்பு இன்றி நடுநிலை யோடு சிந்தித்து இஸ்லாமிய சமுதாயம் நேசம், பிறர் நலம் பேணுவது என்ற அடிப்படையின் மீது நிர்மாணிக்கப்பட்ட தாகும். இஸ்லாம் நேர்மை, உண்மை மற்றும் உதவிகள், அதாவது அல்லாஹ் வும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித்தந்த பிரகாரம் வருடா வருடம், ஜ காத், தொடர்ந்து செய்யக்கூடிய தான, தர்மங்கள் (சதக்கா) செய்வதை முஸ்லிம்கள் மீது விதியாக்கி உள்ளது என்பதை நல் உள்ளம் கொண்ட முஸ்லிம் கோடீஸ் வரர்களும், லட்சாதிபதிகளும் உணரவும் வேண்டும், செயல்படவும் வேண்டும். அப்போதுதான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் தன் சத்திய நேர்வழி காட்டல் நூலில் சொல்வதுபோல், இம்மையிலும், மறுமையிலும், அச்சமில் லாதவர்களாக, கவலை இல்லாதவர் களாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி உத்தரவாதம் தருகிறான் நீதியாளன் அல்லாஹ்.

 நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தொழுகை யைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகிறார்களோ அவர் களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை; அவர் கள் கவலைப்படவும் மாட்டார் கள். (அல்-குர்ஆன் 2:277)

முஸ்லிம் செல்வந்தர்களே. நீங்கள் நிலையான மறு உலகிலும் மரணம் நம்மை வேகமாக துரத்தி வரும், நிலையற்ற இவ்வுலகிலும் நீங்கள் எந்தவிதமான பயமும், கவலையும் இல்லாமல் மன நிம்மதியோடு இருக்க விரும்புகிறீர்களா? அல்லது அல்லாஹ் வுடைய சொல்லையும், அல்லாஹ் வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கட்ட ளைகளையும் புறக்கணித்து – இப்போது புதிய தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் தலைவர்களின், ஷைத்தானிய வார்த்தை களைக் கேட்டு – தங்கள் தங்கள் மன இச்சைப்படி செயல்பட்டு நரகத்தில் – எரிக்கப்படும் எரிகட்டைகளாக ஆக விரும்புகிறீர்களா? முடிவு செய்யுங்கள்; அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டித்தந்த பிரகாரம் உங்களுடைய ஜகாத்தை(உங்களுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீனால் அளிக் கப்பட்டுள்ள செல்வத்திலிருந்து) வருடா வருடமும்(ஸதக்காவை) தான, தர்மத் தை, ஏழைகளுக்கு, தொடர்ந்து கொடு த்து கொண்டே இருந்து அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனின் சத்திய நேர் வழி காட்டல் நூலில் சொல்வதுபோல் இம்மையிலும், மறுமையிலும், அச்ச மில்லாதவர்களாகவும், கவலைகள் இல் லாதவர்களாகவும் இருக்க விரும்பு கிறீர்களா? அல்லது குர்ஆன் ஹதீஃத் என்கின்ற (தவ்ஹீத்) போர்வையில் அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளைகளுக்கு முரணாக கட்டாயக் கடமையான ஜகாத்தை வருடா, வருடம் கொடுக்காமல் இருந்து இந்த ஷைத்தானிய வழியில் தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் வார்த்தை களுக்கு கட்டுபட்டு நாளை மறுமையில் 

“……… அவர்களுடைய முகங்கள் நரகத்தில் (போட்டுப்) புரட்டப்படும் நாளில் “அல்லாஹ் வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே! இன்னும் (அவனு டைய) தூதருக்கும் நாங் கள் கீழ்ப்படிந்து இருக்க வேண்டுமே! “என்று அவர்கள் கூறுவார்கள். (அ ல்குர்ஆன்  33:66)

அதன்பின் தங்களின் தலைவர் களுக்கும் புரோகித மவ்லவிகளுக்கும் கட்டுப்பட்டு நடந்தவர்கள், அல்லாஹ் வையும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் வீதியில் நிறுத்தி விட்டு, அல்லாஹ் தந்த செல்வத்தில் இருந்து வீடு வாசல்களைக் கட்டி அந்த வீடுகளில் புரோகித மவ்லவிகளையும், தலைவர்களையும் வைத்து அழகு பார்த் தார்களே. அப்படிப்பட்ட கோடீஸ்வரர் களும், செல்வந்தர்களும் நாளை அல்லா ஹு ரப்புல் ஆலமீனிடம் யாஅல்லாஹ் உன்னால் அளிக்கப்பட்ட செல்வத்தில் இருந்து வீடு வாசல் களையும், மாட மாளிகைகளையும் கட்டி அழகு பார்த்து, அதிலே எங்களுடைய தலைவர் களையும், புரோகித மவ்லவி களையும் வைத்து அழகு பார்த்து, உன்னையும் உனது தூதரையும் வீதியில் நிறுத்தி உனக்கு கட்டுபடாமல் உனது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்படாமல், இந்த புரோகிதர்களுக்கும், தலைவர்களுக்கும் கட்டுப்பட்டோமே, இது எங்களுக்கு கேடாக அமைந்து விட்டதே! இது எங்களுக்கு ஏற்பட்ட கைசேதமே! என்று நிச்சயம் கதறவே செய்வார்கள். எப்படிக் கதறுவார்கள்? அல்லாஹ்வே பதில் அளிக்கிறான்;

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலை வர்களுக்கும் எங்கள் பெரியவர் களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். எங்களுடைய இறைவனே! (எங்களின் தலைவர்களாகிய) அவர்களுக்கு வேதனையில் இருமடங்காகக் கொடுப்பாயாக! இன்னும் பெரும் சாபமாக அவர் களைச் சபிப்பாயாக!” (என்றும் கூறுவார்கள்) (அல் குர்ஆன் 33:67,68)

அன்புள்ளம் கொண்ட முஸ்லிம்களே, செல்வந்தர்களே என்ன செய்யப் போகிறீர்கள்? புரோகித மவ்லவிகளின் வார்த்தைகளில் மயங்கி அதுவும் ஷைத் தானிய வழியில் உலக இன்பத்தில் மூழ்கி, புரோகித மவ்லவிகள் உங்களை நரக நெருப்பின்பால் அழைக்கிறார்களே அங்கு சென்று கதறப்போகிறீர்களா? அல்லது அன்பாளனும், அருளாளனும், நீதியாளனுமாகிய அல்லாஹ்வின் அழை ப்பை ஏற்று சுவர்க்கத்தின் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறானே அவனுடைய கட்டளைக்கும் அவனுடைய நபி ஸல் லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளைக்கும் செவிசாய்த்து “கட்டுப்பட்டோம் அடிபணிந்தோம்” என்று சொல்லி, அச்சமில்லாதவர்களாக, கவ லைகள் இல்லாதவர்களாக “தாருஸ்ஸ லாம்” (10:25) என்கின்ற அமைதி வீடு நோக்கி வரப்போகிறீர்களா? முடிவு செய்யுங்கள். மேன்மை பெருங்கள். புரோகித மவ்லவிகளை உங்களின் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தி ஓட, ஓட இச்சமுதாயத்தில் இருந்தே விரட்டு ங்கள். அல்லாஹ்வையும், அல்லாஹ் வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் உங்களுடைய (நம் எல்லோருடைய) வீடுகளிலும் வைத்து, உண்மை முஸ்லிம் களாகிய நம் உள்ளங்களிலும் வைத்து அழகு பாருங்கள். கட்டுப் படுங்கள். அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்திய அழைப்பை ஏற்று, ஏற்றம் உள்ளவர்களாக, மகிழ்ச்சி யோடும், இன்பத்தோடும் அமைதிவீடு நோக்கி வாருங்கள். நீதியாளன் அல்லாஹ் அவன் தன் சத்திய நேர்வழி காட்டல் நூல் வழியாக தெளிவுபடுத்து வதை பாருங்கள், படியுங்கள், சிந்தனை செய்யுங்கள், செயல் படுங்கள்.

“அல்லாஹ் (உங்களை) தாருஸ்ஸலாமை (அமைதி வீடு) நோக்கி அழைக்கிறான்; அவன் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.  (அல்குர் ஆன் 10:25)

ஆனால் புரோகித மவ்லவிகளோ – அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் புறக்கணித்தவர்களாக, இந்த புனிதமான சத்திய இஸ்லாத்தை (உம்மத்தன் வாஹிதாவை) ஷைத்தானிய வழியில் கூறுபோட்டு குர்ஆனையும், ஹதீஃதையும், தங்கள், தங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து, திரித்து, மார்க்கத்தில் இல்லாததை எல்லாம் “மதமாக்கி” நபி ஸல்லல் லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காலம் தொட்டு இன்று வரை எந்த கருத்து மோதலும் இல்லாத வருடா வருடம், ஜகாத் என்கின்ற உறுதியான ஆதாரங்கள் இருந்தும், அதையும் மறுத்து முஸ்லிம்களையும், முஸ்லிம் செல்வந்தர்களையும் வழிகெடுத்து, நரக நெருப்பின் பக்கம் கூவிக் கூவி அழைக்கிறார்களே-அப்படிப்பட்ட தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் அழைப்பை ஏற்று நரகத்தின் படுகுழிகளுக்காச் செல்லப்போகிறீர்கள்? எச்சரிக்கை. எச்சரிக்கை,

(புரோகிதர்களாகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின்பால் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவனே தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

ஆதலால்முஸ்லிம்செல்வந்தர்களே, கோடீஸ்வரர்களே-உங்களை எந்த ரப்புல் ஆலமீன் தன் அருளால், செல்வந்தர்களாகவும், கோடீஸ் வரர்களாகவும், உயரச்செய்து, சீமான் களாகவும் ஆக்கினானோ – அவன் தந்த பொருளாதாரத்தில் இருந்தே – ஏழைகளில் பங்கை. அதாவது ஜகாத்தாக, (ஸதக்கா)தான, தர்மங்களாவும் கொடுத்து விடுங்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் தந்த பொருளாதாரத்தை அவனின் கட்டளை பிரகாரம் கொடுத்து விடுங்கள். அதில் மோசடி செய்யாதீர்கள், நீங்கள் மோசடி செய்வீர்களானால்

… இன்னும் எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்து அவற்றை அல்லாஹ் வுடைய பாதையில் செலவு செய்ய வில்லையோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! நரக நெருப்பில் அவை பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றி களும் அவர்களுடைய விலாப்புறங் களும், அவர்களுடைய முதுகுகளும் சூடுபோடப்படும் நாளில், “இது (தான்) உங்களுக்காக நீங்கள் சேமித்து வைத்தது; நீங்கள் சேமித்து வைத்திருந்ததை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்) (அல்குர்ஆன் 9:34,35) இங்கே அல்லாஹ் தங்கத்தையும், வெள்ளியையும், என்று தானே சொல் கிறான்; ஆனால் என்னிடமோ பணமாக வும், தோட்டங்களாகவும், வாடகை தரும் கட்டிடங்களாகவும், மாடாமாளி கைகளாகவும், வருமானத்தை அள்ளித் அள்ளி, தரும் வாகனங்களாகவும் அல்லவா இருந்தன – என்று சொல்லி அல்லாஹு ரப்புல் ஆலமீனை ஏமாற்றி விடவும் முடியாது. அவன் அறியாது எதுவும் நடப்பதில்லை. அதே நேரத்தில் அந்த ரப்புல் ஆலமீன் கணக்கு கேட் பதில் மிக மிக தீவிரமானவன் என்பதை செல்வந்தர்களே, கோடீஸ்வரர்களே மறந்து விடாதீர்கள். நாம் மறக்கலாம் – அல்லாஹ் மறதியாளன் இல்லை, நல்லதையும், கெட்டதையும் பார்த்து கொண்டு நம்மை எல்லாம் விட்டு வைத்துள்ளான். அவனது நாட்டப்படி அந்த தவணை வந்து விட்டால் அவனு டைய பிடியில் இருந்து யாரும் விடு படவும் முடியாது என்பதையும் நல் உள்ளம் கொண்டோர் உணரவே செய்வார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ் வுடைய தூதர் நபி ஸல்லல் லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிரகாச மிக்க சத்திய போதனையால் வழிகாட் டப்பட்ட உண்மை முஸ்லிம் நிச்சயமாக தர்ம சிந்தனை உடையவராக இருப் பார். எல்லா சூழ்நிலைகளிலும் அவரது இரு கரங்களும் விரிந்த நிலையில் சமூகத்தின் மீது நன்மைகளைப் பொழி ந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த செல்வந்தர் அல்லாஹ்வின் வழி யில் செலவிடும்போது, அச்செல்வங்கள் வீணடிக்கப்படுவதில்லை. எல்லாவற்றை யும் அறிந்த ரப்புல் ஆலமீனிடம் அவை பாதுகாக்கப் படுகின்றன என்ற உணர்வு செல்வந்தர்களிடம் இருந்தால் அல்லாஹ் தங்களுக்கு தந்ததிலிருந்து எளியவர் களுக்கும் (வறியவர்களுக்கும்) ஏழை களுக்கும் கொடுத்து கொண்டே இருப்பார்கள் அல்லாஹ் சொல்கிறான்.
 
..(இத்தகையோருக்காக) நல்லதிலிருந்து எதனை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை முற்றும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 34:39)நீங்கள் எதை தானம் செய்த போதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்போரில் மிக்க மேலானவன். . (அல்குர்ஆன் 34:39)கொடையளிப்போரில் மிகமிக மேலானவன் அல்லாஹ்வை தவிர நிச்சயமாக வேறு யாருமே இல்லவே இல்லை. அந்த ரப்புல் ஆலமீன் தனக்கு தந்த செல்வத்தை வைத்துக் கொண்டு, அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டித்தந்த பிரகாரம் ஜகாத்தாக, ஏழைகளுக்கும், எளியவர் களுக்கும் கொடுக்க மறுப்பவர்கள் மோசடியாளர்களே – இந்த மோசடி யாளர்களுக்கு அல்லாஹ் நிச்சயமாக மறுமையில் மிகவும் மோசமான ஒரு இடத்தை தயார் செய்து வைத்துள்ளான்; அது எப்படிப்பட்ட இடம் என்பதை அல்லாஹ் அறியத் தருகிறான்.அவ்வாறல்ல! ‘ஹுதாமா’வில் திண்ணமாக அவன் தூக்கியெறியப் படுவான். ‘ஹுதாமா’ என்னவென்று (நபியே!) உமக்கு அறிவித்தது எது? அ து எரிக்கப்படுகின்ற அல்லாஹ் வின் நெருப்பாகும்.. (அல்குர்ஆன் 104 :4,5,6,7)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஏழைகளுக்கும், கஷ்டப்பட்டவர்களுக்கும் (உதவி) செல விடுவது பற்றி இந்த “உம்மத்தன் வாஹிதாவான” முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த முறையில் வழிகாட்டியதோடு, இந்த அற்ப உலகில், லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் அதிபதிகளான செல்வந் தர்களுக்கு தண்டனையாகவும், சோத னையாகவும் ஆகிவிடக்கூடாது என் பதை வலியுறுத்தியதோடு அல்லாமல், இது விசயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்திருந்தார்கள் என்பதை லட்சங்களுக்கும், கோடிக ளுக்கும் சொந்தமுள்ளவர்கள் புரிந்து கொள்வார்களா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் (பகீஃக்கு) சென்று கொண்டிருந்தபோது அபூதர் (ரழி) அவர்களும் இணைந்து கொண் டார்கள். அவ்விருவரும் நடந்துகொண்டி ருக்கும் போது அபூதர்(ரழி) அவர் களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அதிகமாக சேமிப் பவர்கள் மறுமையில் (நன்மையால்) மிகக்குறைந்தவர்களாக இருப்பார்கள். சத்தியத்திற்காக இப்படி இப்படி செய்த வர்களைத் (தர்மம் செய்தவர்களை) தவிர” என்றார்கள். பின்பு உஹது மலையை இருவரும் கண்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் “அபூதர்ரே!” என்று அழைத்தார்கள் அவர் “அல்லாஹ்வின் தூதரே உங்களுக்கு அடிபணிந்தேன்; நான் உங்களுக்கு அர்ப்பணமாகி விட்டேன்” என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இந்த உஹது மலை முஹம்மதின் குடும்பத்தாருக்கு தங்கமாகி (அனைத்தும் தர்மம் செய்யப் பட்டபின்) மாலையில் அவர்களிடம் ஒரு தீனார் அல்லது ஒரு மிஸ்கால் மிஞ்சி இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி யளிக்காது” என்று கூறினார்கள். (நூல்:புகாரி, முஸ்லிம்)

மற்றொரு நபிமொழி செய்தி பேழையிலிருந்து அல்லாஹ் தனக்கு தந்த செல்வத்திலிருந்து – ஜகாத்தை கொடுக்க மறுப்பவர்களின் நாளை (மறுமை) நிலைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள்.

அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஜகாத்தை அவர் செலுத்தவில்லை யாயின் (மறுமையில்) அவனது செல்வம் தலை வழுக்கையான கொடிய நஞ்சுடைய பாம்பாக அவனுக்கு காட்சி தரும்; அதன் நெற்றியில் இரு கருப்பு புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது அவனுடைய கழுத்தில் மாலையாக சுற்றிக்கொள்ளும்; பிறகு அந்த பாம்பு அவனது தாடையைப் பிடித்துக் கொண்டு, நான் தான் உன் செல்வம்; நான் தான் உன் கருவூலம் என்று சொல்லும். (நூல்: புகாரி)

இப்போது உள்ள காலத்தில் லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் அதிபதியான செல்வந்தர்கள், தங்களுக்குக் கடமையான ஜகாத்தை மட்டும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொன்ன பிரகா ரம் நிறைவேற்றினாலே சமுதாயத் திலிருந்து வறுமை முற்றிலும் துடைத் தெறியப்பட்டுவிடும்; இருந்தாலும் லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் அதி பதிகளான செல்வந்தர்கள் தங்களின் மீது சத்திய இஸ்லாம் ஜகாத்தை கடமையாக்கியுள்ளது. அது இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்று என் பதை நன்கறிந்தும் தங்களது கரங்களை இறுக மூடிக் கொள்கிறார்கள் என்பது தான் உண்மை, உங்களின் பேராசையின் காரணத்தாலும், மன இச்சையின் காரணத்தாலும், புதிதாக கிளம்பியுள்ள தவ்ஹீது புரோகித மவ்லவிகளின், தலைவர்களின், ஷைத்தானிய வழி மதத் தீர்ப்பை ஏற்று செயல்பட்டால், உங்கள் உடம்பையே நரகம் மறுமையில் இறுக மூடிக் கொள் ளும் என்பதை சத்திய நேர்வழி காட்டல் நூலிலிருந்தே அல்லாஹ் எச்சரிக்கிறான் –செல்வந் தர்களே விழித்துக் கொள்ளுங்கள்!

அது எத்தகையதென்றால், இதயங்கள் மீது சென்றடையும். நிச்ச யமாக அது அவர்கள் மீது (சூழ்ந்து) மூடப்பட்டதாயிருக்கும் நீட்டப்பட்ட (நெருப்புத்) தூண்களில் (அவர்கள் கட்டப்பட்டிருப்பார்கள்) (அல்குர்ஆன் 104:7,8,9)

எனவே அல்லாஹு ரப்புல் ஆலமீனால் – உங்களுக்கு அள்ளி அள்ளித் தந்து லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் உங்களை சோதி ப்பதற்கு தந்தானே. அவன் வழியிலும் அவனுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழியிலும் வருடா, வருடம் ஏழை, எளியவர்களின் பங்கை ஜகாத்தாக சமுதாயத்தில் கஷ் டப்பட்ட எல்லா மக்களுக்கும் கொடுத்து இம்மையிலும், மறுமையிலும், அச்சமில்லாதவர்களாகவும், கவலைகள் இல்லாதவர்களாகவும் வாழுங்கள்;

எவர்கள் தங்களுடைய பொருட்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அ வர்களுடைய (நற்)கூலி அவ ர்களுடைய இறைவனிடத்தில் இருக்கிறது, அவர்களுக்கு எந்தவித பய மும் இல்லை. அவர்கள் கவ லைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:274)
*****************************************

சந்தாதாரர் கவனத்திற்கு:
சந்தா முடிந்த சகோதர, சகோதரிகள் தங்களின் சந்தாக்களைப் புதுப்பிப்பதோடு, உங்களின் நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் சந்தாதாரராக்கி தீன்பணி தொய்வின்றி தொடர உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம். அந்நஜாத்தின் வளர்ச்சி கலப்படமில்லா தூய இஸ்லாத்தின் வளர்ச்சி என்பதை மறக்காதீர்கள்.
***********************************
பரிசீலனைக் கூட்டம்:

மாதாந்திரப் பரிசீலனைக் கூட்டம் பிரதிமாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை 54-F, இரண்டாவது மாடி, ஜாஃபர்ஷா தெரு, திருச்சி – 620 008-ல் நடைபெறும் இன்ஷா அல்லாஹ். எந்தக் கொள்கையுடையவர்களும் கலந்து கொள்ளலாம்.

இணையத்தில் அந்நஜாத்:

மாதந்தோறும் அந்நஜாத்தில் வரும் கருத்தோவியங்களை இனி இணையத்திலும் பார்வையிடலாம். தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம். டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுக்கலாம். மக்களிடையே பிரசுரமாக விநியோகிக்கலாம்.

Previous post:

Next post: